பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 24, 2007

அக்டோபர் 1லீவு !

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதை, மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி பந்த் நடத்த தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. ஆக ஒரு லாாாாாாாங் வீக்கெண்ட்.
கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.

பிகு: அந்த சனிக்கிழமை ஆபிஸ் வைத்துவிடுவார்கள் :-(

4 Comments:

Anonymous said...

அட இப்பதானே பின்னூட்டம் போட்டுட்டு போனேன்.. அதுக்குள்ள அடுத்த செய்தி..?
இட்லி வடையாரே.. கண்முழிச்சு செய்தியெல்லாம் போடவேண்டாம்.. உங்க உடம்பப்பாத்துக்கோங்க..
சுவர் இருந்தாதனே சித்திரம் வரையமுடியும் (வலைப்பூ போட முடியும்) என்ன நான் சொல்றது..?

-மனசு நோகடிக்காதவன்

ஹரன்பிரசன்னா said...

இவர்கள் ஸ்ட்ரைக் செய்யும் லட்சணம். ஏன் எப்போதும் ஒரு சனிக்கிழமையோ அல்லது இரண்டு நாள் விடுமுறை வரும்போது அதோடு சேர்த்தோ ஸ்ட்ரைக் வைக்கிறார்கள்? மக்கள் மகிழட்டும் என்பதற்காகவா? ஏன் ஒரு புதன் கிழமை பந்த் வைக்கக்கூடாது? அரசு அலுவலங்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் - நான்கு நாள்கள் விடுமுறை இப்போது. வெளங்குமா?

Anonymous said...

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செலுத்தும் / அங்கம் வகிக்கும் கட்சியே பந்த் நடத்துவது போன்ற கேவலம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும். இதனால் இவர்கள் சாதிக்கப்போவது என்ன. அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஒருநாள் வருமானம் போச்சு.

இலவசக்கொத்தனார் said...

தூத்தேறி...