பாடிகாட் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்.
அன்புள்ள இ.வ.
கடந்த ஒரு வாரமா சிரிக்கிற வேலை அதிகம், அதனால் பதிவு எழுத முடியல. யார் சொன்னது தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லைன்னு ? அதுவும் தமிழ் பதிவுகள் படிச்சு படிச்சு வயிறு புண்ணா போச்சு. Tamil blogs are human zoo.
சேலம் ரயில்வே கோட்டத்துக்காக திமுக ரயில் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பார்த்தியா ? மத்திய அரசில் அதிகார அங்கம் வகிக்கும் திமுக இப்படி போராட்டம் நடத்தலாம் ஆனால், ராமதாஸ் மாநிலத்தில் போராட்டம் நடத்தினால் கலைஞருக்கு கோபம் வருது. நல்ல கூத்து. ரயில்வே இணை அமைச்சர் பதவி திமுகவிடம் இருந்திருந்தால் இப்படி போராட்டம் நடத்தியிருக்க மாட்டாரோ என்னவோ. சோனியாவை பார்த்தால் சொல்லனும். லாலுஜி கேட்டுக்கொண்ட பின் மறியலை முடித்துக்கொண்டிருக்கிறார் கலைஞர். ஆனால், கட்சிகாரர்கள் தண்டவாளத்தின் மீது மண்ணையும் கல்லையும் கொட்டிவிட்டு, சிக்னலை சேதபடுத்திவிட்டு தான் போயிருக்கிறார்கள். திராவிட குஞ்சுகளின் குணம். நாம என்ன செய்யமுடியும். தலைவர் 8 அடி பாய்ந்தால் தொண்டன் 16 அடி பாயுகிறான். வாழ்க வளர்க.
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் பாரிஸில் நடத்திருக்கு. அதன் படங்கள் இங்கே இருக்கு பாரு. அங்கும் பெரியாரின் தொண்டர்கள், நோட்டிஸ் கொடுத்து, பகுத்தறிவை வளர்த்திருக்கிறார்கள். இந்தியர்களை இன்றும் ஒன்றாக இனைத்திருப்பது இந்த இந்து மதம் தான், இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் அதை ஒன்னும் பண்ண முடியாது. இது என் அறுவாளின் மீது சத்தியம்.
மன்மோகன் சிங் சோனியாவின் ஆசியோடு அமைச்சர் பதவியிலிருந்த சுபுசோரன் இப்ப மேல் முறையீட்டில் விடுதலை ஆகிவிட்டார். புலனாய்வுத் துறை ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்று நீதிபது கண்டனம் வேறு தெரிவித்திருக்கிறார். புலனாய்வு என்பது ஆளும் கட்சியின் ஒரு அங்கம் என்று நீதிபதிக்கு தெரியாது போல.
காங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க, போதிய உறுப்பினர்கள் இல்லாதது ஒரு விதத்தில் நல்லது, இப்ப தான் புதுசா டேபிள் சேர், லைட், ஃபேன் எல்லாம் போட்டிருக்காங்க. கூட்டம் வந்திருந்தால், கோஷ்டி சண்டையில் திரும்பவும் உடைந்திருக்கும். நல்ல வேளை, கூட்டம் வரலை. ( கோடிட்ட இடங்களை நீயே நிரப்பிக்கோ )
சென்னையின் பில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட போர்டுகளை உன் வலைப்பதிவு சைடில பார்த்தேன். இந்த மாதிரி போர்டுகளை பற்றி சரத்குமாரும், விஜயகாந்தும் ஆளும் கட்சியை வறுத்தெடுக்கிறார்கள். மொத்தம் சென்னையில் எவ்வளவு போர்டுகள் இருக்கு தெரியுமா ? 5000க்கு மேல். ஒரு போர்ட் ஈட்டும் வருமானம் வருடத்திற்கு 18 லட்சம் ரூபாய். ஆக ஆண்டு ஒன்றுக்கு 900 கோடி ரூபாய் பிஸ்னஸ் இது. என்ன ஆச்சரியமா இருக்கா ?
நேற்று சென்னை ரத்தனா கபே போயிருந்தேன். ஆகா என்ன சூப்பரான சாம்பார். ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் சாம்பார் செய்கிறார்கள் தெரியுமா ? 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் ? விடை தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லு பார்க்கலாம் ?
இந்த செய்தியை படிக்கும் போது, கோபமாக வந்தது, பிரிட்டிஷ் ராணுவம் நம் இந்தியர்களை குரங்கு, நாய் போல ஆரய்ச்சிக்கு உபயோகபடுத்தியுள்ளது. இன்று இவர்கள் ஜார்ஜ் புஷுடன் சேர்ந்து திவிரவாதிகளுக்கு எதிராக பேசுகிறார்கள். நல்ல கூத்து.
கொஞ்ச நேரத்துக்கு முன் வந்த செய்தி. 25 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இதய நோய் கருத்தரங்கில் கலந்து கொள்ள இத்தாலியை சேர்ந்த 46 வயது பெண் கார்டியாலஜிஸ்ட் ஒருவரும் வந்திருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போன அவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் சிகிச்சை அளித்து அவரை ஒரளவு சகஜநிலைக்கு கொண்டு வந்தனர். பின் அவசரம் அவசரமாக அவரை வியன்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது நிலை மீண்டும் மோசமாகி, பின்னர் இறந்து விட்டார். 25 ஆயிரம் சிறப்பு கார்டியாலாஜிஸ்ட்கள் கூடி இருந்தும், இன்னொரு கார்டியாலாஜிஸ்ட்டையே காப்பாற்ற முடியாமல் போனது.விதி ரொம்ப வலியது என்பதை புரிந்துக்கொள் !
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தன் அதிகரப்பூர்வ படத்தை தேர்வு செய்ய செலுத்திய கவனம் சூப்பர். இப்படி அல்லவா இருக்க வேண்டும் ஒரு ஜனாதிபதி. முதலில் எடுத்த படம் அவருக்கு பிடிக்கவில்லையாம், அதனால் அதை திரும்ப பெற்றார் ( நம்ம வரி பணம் தான் ). பல்வேறு புகைபட நிபுணர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார்கள், பிரதீபா பாடீல் பல்வேறு கோணங்களில் பிரதீபா `போஸ்' கொடுக்க பெரும்பாலான போஸ்களில் திருப்தி இல்லாததால், மீண்டும் மீண்டும் எடுக்கும்படி பிரதீபா உத்தரவிட்டார். அந்தவகையில், 3 டஜன் படங்கள் எடுத்து தள்ளப்பட்டதாம். பிறகு அதிலிருந்து ஒரு படத்தை தற்போது அரசு அலுவலகங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சோனியா பார்த்து ஒப்புதல் தந்தாரா என்று தெரியவில்லை. missiles are guided, madam's are misguided.
சிரித்துக்கொண்டே விடைபெறும்,
பாடிகாட் முனீஸ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 04, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 04-09-07
Posted by IdlyVadai at 9/04/2007 03:25:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
//காங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க, போதிய உறுப்பினர்கள் இல்லாதது ஒரு விதத்தில் நல்லது, இப்ப தான் புதுசா டேபிள் சேர், லைட், ஃபேன் எல்லாம் போட்டிருக்காங்க. கூட்டம் வந்திருந்தால், கோஷ்டி சண்டையில் திரும்பவும் உடைந்திருக்கும். நல்ல வேளை, கூட்டம் வரலை. ( கோடிட்ட இடங்களை நீயே நிரப்பிக்கோ )//
Amazing Humour.
//இந்தியர்களை இன்றும் ஒன்றாக இனைத்திருப்பது இந்த இந்து மதம் தான், இந்த மாதிரி நோட்டீஸ் எல்லாம் அதை ஒன்னும் பண்ண முடியாது. இது என் அறுவாளின் மீது சத்தியம்.//
விநாயகர் ஊர்வலத்தை நடத்தியவர்கள் ஈழத்தவராம். அவர்களை ஏன் இந்தியா ஒன்றிணைக்கவில்லை.
////காங்கிரஸ் தலைமையகமான சத்திய_______ பவனுக்கு, மிகுந்த ஆவலுடனும் சென்ற முதல்வர் கருணாநிதியை வரவேற்க,//
என்னங்க இது பம்மல். உவ்வேக். சம்பந்தம் ரேஞ்சுக்குக் கொண்டு போயிட்டீங்க!! :))
//சென்னை ரத்தனா கபே போயிருந்தேன். ஆகா என்ன சூப்பரான சாம்பார். ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் சாம்பார் செய்கிறார்கள் தெரியுமா ? 3000 லிட்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு பருப்பு உபயோகபடுத்திகிறார்கள் ? விடை தெரிந்தால் பின்னூட்டதில் சொல்லு பார்க்கலாம் //
ரத்னா கபே ஓனரை பார்த்து யாரும் ஈஸியா சென்னை ஸ்லாங்லே "நீ என்ன பெரிய பருப்பான்னு?" கேட்டுட முடியாது :-))
With regard to sri lanka tamils; why not india, even the vinayaka could not united them;m
Post a Comment