பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 30, 2007

FLASH: பந்த் - உச்ச நீதி மன்றம் அதிரடி

சேது சமுத்திர திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (1ம் தேதி) முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பந்த்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.என்.அகர்வால் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பந்த் நடத்த தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து முழு அடைப்புக்கு பதிலாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். திருவல்லிக்கேணியில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எத்தனை நந்திகள் குழுக்கே வந்தாலும் சேது திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Public right is superior to individual political party's right - SC
We cant tolerate these types of activities by political parties - SC

உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சபாஷ்.

விவாதத்தின் விவரம்...


நீதிபதிகள்:- பந்துக்கும், வேலை நிறுத்தத்துக்கும் என்ன வித்தியாசம்?

வக்கீல் அல்டாப் அகமது:- பந்த் என்றால் முழுவதுமாக மூடுவது. வேலை நிறுத்தம் என்றால் விருப்பப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்வது.

நீதிபதிகள்:- சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்துவதாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உங்கள் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை.

நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, அக்டோபர் 1-ந் தேதி அன்று அனைத்து பணிகளும், செயல்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அது பந்த் அல்ல என்று எப்படி சொல்கிறீர்கள்? அன்று பொதுக்கூட்டம் எதற்காக நடத்துகிறீர்கள்? அன்றைய தினம் எல்லா பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று உங்கள் தீர்மானம் சொல்கிறது. பிறகு எப்படி உங்கள் பொதுக்கூட்டத்துக்கு ஆள் பிடிப்பீர்கள்?

கல்வி நிறுவனங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏன் அடைக்க சொல்கிறீர்கள்? திட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதை விட, தங்கள் பலத்தை காட்டுவதுதான் கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. உங்கள் செல்வாக்கை காட்டவே விரும்புகிறீர்கள்.

யாருக்கு எதிராக பந்த் நடத்தப்படுகிறது? சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவா? மத்திய அரசுக்கு எதிராகவா? அல்லது இந்த கோர்ட்டுக்கு எதிராகவா?

வக்கீல் அல்டாப் அகமது:- சேது சமுத்திர திட்டத்தை விரைவில் அமல்படுத்த வற்புறுத்தி பந்த் நடத்துகின்றனர். அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுவழியில் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வற்புறுத்தி தான் நடக்கிறது.


நீதிபதிகள்:- மாற்றுவழி கண்டறிய தான் சுப்ரீம் கோர்ட்டு 3 மாத அவகாசம் கொடுத்து உள்ளது.

வக்கீல் அல்டாப் அகமது:- மாற்று வழி என்றாலும் உடனே அமல்படுத்த வேண்டும், தாமதம் வேண்டாம் என்றுதான் நடத்துகின்றனர்.

நீதிபதிகள்:- இந்த வழக்கில் நாம் மாற்று வழி பற்றி விசாரிக்கவில்லை. பந்துக்கு அழைப்பு விடுப்பது சரிதானா? என்றுதான் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 3 மணி நேரமாக விவாதம் நீடித்தது.

அதன்பிறகு முழு அடைப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த பரபரப்பான தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் பந்த் சட்ட விரோதமானது என்று கூறியதை ஏற்கிறோம். ஆனால் மற்ற தீர்ப்புகளை ஏற்க முடியாது. சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. எனவே, சென்னை ஐகோர்ட்டு பந்துக்கு தடை விதித்திருக்க வேண்டும். அக்டோபர் 1-ந் தேதி நடக்க இருப்பது வேலை நிறுத்தம் அல்ல, பந்த் தான் என்று சென்னை ஐகோர்ட்டே கூறியுள்ளது.

பந்த் என்றால் அரசியல் சட்ட சீர்குலைவு ஏற்பட்டதாகவே கருதப்பட வேண்டும். பந்த், பொதுமக்கள் வாழ்க்கையை சீர்குலைக்கிறது. அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுரிமை, வாழ்வுரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே, பந்த் சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

பந்த் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டுக்கு கவலை இல்லை. மத்திய அரசுக்கு எதிராகவா? அல்லது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டதற்காக போராட்டம் நடத்தப்படுகிறதா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொதுமக்களுக்கு எதிராக பந்த் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.

அரசியல் கட்சிகளின் உரிமைகளை விட, தனிப்பட்ட மக்களின் உரிமைகள் மேலானது. எனவே, அரசியல் கட்சிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை சகித்து கொள்ள முடியாது.

நாட்டில் இதுதான் பிரச்சினை. இந்த நாட்டில் எல்லாவற்றையும் இரும்பு கரம் கொண்டு தான் கையாள வேண்டி உள்ளது. இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. பாராளுமன்றமோ, அரசு நிர்வாகமோ, நீதித்துறையோ எதுவாக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு செயல்பட வேண்டி இருக்கிறது.

பந்த் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பை கடந்த 1998-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டின் முழு பெஞ்ச் அளித்துள்ளது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஆனால் கோர்ட்டு உத்தரவுகள் மீறப்படுவது வருந்தத்தக்கது. நாட்டில் எல்லாவற்றையும் கோர்ட்டுகள்தான் கண்காணிக்க வேண்டிய- தடுத்து நிறுத்த வேண்டிய- உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமைக்கு நாம் இன்று வந்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகள் கூட கவனிக்கப்படுவது இல்லை. ஐகோர்ட்டுகளின் 99 சதவீத உத்தரவுகள் அமல்படுத்தப்படுவது இல்லை.

பந்த் சட்ட விரோதமானது என்ற உத்தரவை நாங்கள்தான் அளித்தோம். இதுவே இறுதியானது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால், அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரித்து முடிவு செய்ய வேண்டும்.

எனவே, பந்த் நடத்துவது சட்ட விரோதம். பந்த் நடத்துவதாக தி.மு.க. கூட்டணி நிறைவேற்றிய தீர்மானம் சட்ட விரோதம் என்று அறிவித்து, அதை ரத்து செய்கிறோம்.

தி.மு.க. கூட்டணி அக்டோபர் 1-ந் தேதியோ, வேறு எந்த நாளிலோ பந்த் நடத்தக்கூடாது. இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, எந்த அரசியல் கட்சியும் பந்த் நடத்தக் கூடாது.

Read More...

Friday, September 28, 2007

கிரிக்கெட் சாம்பியன் யார் ?

டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது பழைய கதை. நாளை துவங்க உள்ள ஏழு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நிஜ சாம்பியனை அடையாளம் காட்டும், '' என்று கூறி இந்தியாவை சீண்டி பார்க்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.

மக்களே நீங்க என்ன நினைக்கிறீங்க வழக்கம் போல் சைடுல இருக்கு ஓட்டு பெட்டி :-)

கிழே இருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள் :-)

2006 (பழைய) படம்:


2007 (புதிய) படம்:

Read More...

பந்துக்கு தடை இல்லை - தீர்ப்பு விவரம்

முழுஅடைப்பு அல்லது பந்துக்கு தடையில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது !

கலைஞர் என்ன சொல்லுகிறார் ?

அக்டோபர் 1ந் தேதி திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தமிழ் மக்களுக்காக ஒரு கோரிக்கையை முன்வைத்து கவனத்தை கவரும் வகையில் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இது அரசு அறிவிப்பு அல்ல


தீர்ர்பு விவரம் கீழே...

அரசியல் கட்சிகள் விடுத்துள்ள இந்த பந்த்துக்கு அடிப்படை ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. அரசியல் கட்சிகள் கூறியிருப்பது பந்த். அதை வேலை நிறுத்தம் என்றோ, கடையடைப்பு போராட்டம் என்றோ கூறுவதை ஏற்க முடியாது.

வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 24.10.2007க்கு தள்ளிவைக்கப்படுகிறது. பந்த் நடைபெறும் நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்றும், மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு இராது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதன்படி மாநில அரசு, காவல்துறை டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அக்டோபர் 1ந் தேதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ கட்டாயப்படுத்தி குடிமக்களின் அன்றாட வேலையில் குறுக்கிட்டால், அப்படி குறுக்கிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து உட்பட எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அன்றைய தினம் இயல்பாக செயல்பட அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதை தடுக்க யாராவது முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகளில் விளம்பரம் வாயிலாக இதனை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ள தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. கம்ïனிஸ்டு, கட்சிகள் உள் ளிட்டோர் பதில் மனு தாக் கல் செய்ய உத்தர விடப்படு கிறது. இவ்வாறு அவர்கள் அந்த இடைக்கால தீர்ப்பில் கூறியிருந்தனர்

Read More...

கணவன் - மனைவி

"நாளைக்கு எனக்கு பர்த்டே!, என்ன பரிசு ?" இது மனைவி கணவனிடம்
"செல்லமே உனக்கு இல்லாத பரிசா, என்ன வேண்டுமோ கேள்"
"Clue தான் கொடுப்பேன், நீங்களே கண்டுபிடித்து வாங்கிவர வேண்டும்"
"சரி, என்ன Clue"
"அந்த பொருள் 4 செகண்டில் 0-100க்கு போகும்"
(கணவன் யோசிக்கிறான்)
"ஓ, எனக்கு தெரியுமே" என்று வேகமாக ஓடி சென்று வாங்கி வருகிறான் அந்த பொருள் கீழே....

மனைவி நினைத்த பொருள் இங்கே
கணவன் வாங்கி வந்த பொருள் இங்கே

தற்போது ICUல் கணவன். டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறார். பார்க்கலாம்

Read More...

பந்த் பற்றி நீதிபதி கவலை

சட்டத்தில் ஓட்டை என்று நேற்று எழுதியிருந்தேன். விவாதத்தின் முழு விவரத்தை இப்போது டான் படித்தேன். நாம் நினைக்கும் அளவுக்கு நீதிமன்றம் அவ்வளவு மோசம் இல்லை.

நீதிபதி அரசிடம் சில நச் கேள்விகளை கேட்டுள்ளார். இன்று தீர்ப்பு என்ன வரும் என்று தெரிந்தாலும், அரசுக்கு பகுத்தறிவு இருந்தால் நீதிபதி சொல்லுவது புரியும்.

மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மட்டும் தான் இருக்கு என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

விவரம் கீழே...


நேற்று இவ்வழக்கில், தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய `முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க., சார்பில் வக்கீல் என்.ஜோதி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி, `டிராபிக்' ராமசாமி ஆகியோர் ஆஜராயினர்.

கோர்ட்டில் நடந்த வாதம்

வக்கீல் என்.ஜோதி: பந்த் அறிவிப்பு தொடர்பாக மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவைப் போல் இந்த வழக்கிலும் பிறப்பிக்க வேண்டும். (மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக ஏ.பி.ஷா பணியாற்றிய போது, `பந்த்' அறிவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருந்தார்) இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. கேரள ஐகோர்ட்டும் `பந்த்'க்கு தடை விதித்துள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

சுப்ரமணிய சாமி: அரசியல் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே `பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளார். `பந்த்' சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இங்கே சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறுகின்றன.

தலைமை நீதிபதி: அரசை நடத்தும் கட்சி தலைமையில் `பந்த்'க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் நிலை என்ன என்பதை தலைமைச் செயலர் தெரிவிக்க வேண்டும். எத்தகைய காரணங்கள் இருந்தாலும், மக்களின் உரிமைகள் பாதிக்கும் வகையில் ஆளுங்கட்சியே `பந்த்'க்கு அழைப்பு விடுப்பது முறையாக இருக்குமா?

அட்வகேட்-ஜெனரல் விடுதலை: சட்ட ஒழுங்கை அரசு பாதுகாக்கும்.

தலைமை நீதிபதி: சட்ட ஒழுங்கை எப்படி பேணப் போகிறீர்கள்? அரசியலுக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. அரசியல் சட்ட பொறுப்பு வகிப்பவர்கள் இப்படி நடந்தால், நாம் எங்கே போகிறோம்? சட்டத்தின் ஆட்சி எங்கே?

அட்வகேட்-ஜெனரல்: அரசு வேறு, அரசியல் கட்சிகள் வேறு. அரசைப் பொறுத்தவரை சட்ட ஒழுங்கை பேணுவோம்.

தலைமை நீதிபதி: பொது மக்களுக்கு இது பெரிய வேதனையாக இருக்கும். மக்களின் நிலையைப் பற்றி நாங்கள் அக்கறை கொள்கிறோம். இந்த `பந்த்' சட்ட விரோதமானதா, இல்லையா என்பதை மாநில அரசை கேட்கிறோம்.

அட்வகேட்-ஜெனரல்: அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தலைமை நீதிபதி: மக்கள் சகஜமாக செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமைகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதும் பிரச்னை தான்.

அட்வகேட்-ஜெனரல்: வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், மற்றவர்களின் உரிமைகளை மீறாமல் அது இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் உறுதி செய்யப்படும். அனைத்து தரப்பு மக்களின் நலன்களை அரசு கருத்தில் கொண்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். தமிழக அரசு இந்த `பந்த்'தை நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் தான் நடத்துகின்றன.

தலைமை நீதிபதி: கடந்த முறை `பந்த்' அறிவிக்கப்பட்ட போது, கோர்ட்டுக்கு ஒரு சில வக்கீல்களே வந்தனர்.

அட்வகேட்-ஜெனரல்: எந்த அசம்பாவிதமும் நடக்காது. தலைமை நீதிபதி: அப்படியென்றால், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் விதத்தில் செய்தி ஊடகங்கள் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் எங்கும் செல்லலாம், யாராவது தடுத்தால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர் என்றும் தெரியப்படுத்த வேண்டும்.

தலைமை நீதிபதி: பொது மக்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசைப் பொறுத்தது.

அட்வகேட்-ஜெனரல்: மக்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

தலைமை நீதிபதி: நாங்கள் முன்கூட்டியே தடை விதிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், பொது மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

வக்கீல் ஜோதி: கோர்ட்டில் தெரிவிக்கும் இந்த கருத்துக்களை எப்படி ஏற்க முடியும்? இந்த போலீஸ், அதிகாரிகளை நாங்கள் நம்பவில்லை. எந்த அரசியல் கட்சியும் `பந்த்' நடத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்ட நாங்கள் தயங்க மாட்டோம்.

சுப்ரமணிய சாமி: முழு வேலை நிறுத்தம் என்பதும் சட்ட விரோதமானது தான். இது நடக்காமல் கோர்ட் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அட்வகேட்-ஜெனரல்: சட்டம்-ஒழுங்கு பேணப்படும். பொதுமக்கள் எங்கும் செல்ல உறுதி செய்யப்படும். வன்முறையில் யாரும் ஈடுபட்டால் அவர்களை கடுமையாக அணுகும்.

பிகு: `பந்த்' நடத்த கேரள ஐகோர்ட் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. அரசியல் சட்டப்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு அரசியல் கட்சிகள், தலைமைச் செயலர், டி.ஜி.பி., ஆகியோர் கட்டுப்பட வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள `பந்த்'தை தடுக்க வேண்டிய பொறுப்பு தலைமைச் செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும் உள்ளது. செய்வார்களா ?

Read More...

Thursday, September 27, 2007

பந்த் - முழு அடைப்பு என்ன வித்தியாசம்

அக்டோபர் 1ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என்று திமுக அறிவித்தது. இதை தொடர்ந்து பந்த் நடத்துவது சட்டவிரோதம் என்று ஜெ, சுப்பிரமணிய சாமி, டிராபிக் ராமசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தர்கள்.
அந்த பதிவு இங்கே

உயர்நீதி மன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வக்கீல் நீதிபதியிடம் இவ்வாறு சொல்லியிருக்கிறார்

அக்டோபர் 1ம் தேதி அரசு சார்பில் பந்த் நடக்கவில்லை. தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம்தான் நடக்கிறது. மக்கள் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


தலைமை நீதிபதி ஏ.பி.ஷா :
பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஆளுங்கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுவது முறைதானா? எப்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவீர்கள். அரசியல் அமைப்பின் கீழ் பொறுப்பு வகிப்பவர்களே ஒருவிதமான நிலையை உருவாக்கலாமா? பொதுமக்கள் எங்கே போவார்கள். நான் அரசியலுக்குள் நுழையவில்லை.

முழு அடைப்பால் பொதுமக்களுக்கு மனவேதனை ஏற்படும் என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும். இதற்கு இடைக்கால விதிக்கவில்லை. பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.


வேலைக்கு வருபவர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அரசை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிகிறதா ?

Read More...

கிறுக்குத்தனமான கிரிக்கெட் கூத்து

T20 கிரிக்கெட் முடிந்து இரண்டு நாள் ஆகியும் அதன் தாக்கம் இருந்துகொண்டே தான் இருக்கு. இன்று எல்லா செய்திதாள்களிலும் முதல் பக்கம் படங்களுடன் இந்த நியூஸ் தான். நேற்று இந்திய அணி வந்து இறங்கியதை எல்லா நியூஸ் சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு (கேமராவுக்கு ரெயின் கோட் எல்லாம் போட்டு) நேரடி ஒளிபரப்பு செய்தது.

இதோ வந்திவிட்டார் தோனி, இதோ திரும்பி பார்க்கிறார், இதோ நடக்கிறார் நேரடி வர்ணனை வேறு. "Can you explain the mood of the people over there" அதான் பார்த்து கொண்டிருக்கிறோமே.

இதே கிரிக்கெட் டீம் போனவருஷம் ஏர்போர்ட் பின் பக்க கதவு வழியாக வந்தவர்கள் இந்த முறை மெயின் கேட் வழியாக வந்தார்கள். சரி வந்தார்கள், ஏர்போர்ட்டில் முக்கியமானவர்கள் வரவேற்றார்கள் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அதுவும் மாநில முதல் அமைச்சர், துணை முதலமைச்சர் ஏர்போர்ட் செல்வது டூமச். போகட்டும் அதை விடுங்க, பஸ்ஸில் ஊர்வலம், பின் பாராட்டு விழா எல்லாம் கொஞ்சம் ஓவராகவே எனக்கு தெரிகிறது. வந்திறங்கிய இந்திய அணி் டாயிலட் கூட போயிருக்க மாட்டார்கள்.

மீடியா இரண்டு நாட்களாக "Dhoni’s Devils", "Bravehearts", "Welcome Warriors" என்று புகழாரம். கிரிக்கெட்டில் என்ன வீரம் இருக்கிறது. பந்தை போட வேண்டும், அல்லது அடிக்க வேண்டும், சில சமயம் புல் தரையில் விழுந்து பிடிக்க வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர், இந்திய அணியை சக்கரபதி சிவாஜி போன்றவர்கள், பிரிட்ஷை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றவர்கள், பாக்கிஸ்தானுடன் போர் புரிந்த இந்திய ராணுவத்தினர் போன்றவர்கள் என்றார். மும்பையில் Zoo இருக்கான்னு தெரியலை, இல்லை இவரை அங்கு கொண்டுபோய் வைக்கனும்.

"சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் மும்பை இன்று அப்படியே நின்றது" என்றார் தோனி. அடுத்த முறை தோல்வியை சந்தித்தால் அப்படியே நின்ற கூட்டம் சுறுசுறுப்பாக அடிக்க வருவார்கள்.

பிகு: இந்திய வந்த ஆஸி அணி கேப்டன் ரிக்கி பாண்டிங்(கூத்தை எல்லாம் பார்த்திருப்பார்), T-20 வெற்றி எல்லாம் பழைய கதை என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பயமாக தான் இருக்கு. இவர்கள் நேற்று செய்த கூத்து அடுத்த மெட்ச் இவர்கள் தொற்றால் நன்றாக இருக்கும் என்று கூட தோன்றுகிறது.

Read More...

யார் இந்த பிரபலம் ? - 1

பிரபலமான மனிதரின் அனுபவம் கீழே. யார் என்று பின்னூட்டதில் தெரிவிக்கலாம்.

கடந்த 1960 என்று நினைக்கிறேன்... ராஜேஸ்வரி தியேட்டர் இருக்கும் இடத்தில் இருந்த வீட்டில்தான் வசித்து வந்தோம். அப்போது நான் என் வீட்டில் இருந்தவர்களுடன் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது 20, அல்லது 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ''முத்துலட்சுமியைப் பார்க்கணும். நான், அவங்களோட கிளாஸ்மெட்'' என்றார். உடனே நான், ''அவர் எந்த ·ப்ளோரில் இருப்பார் என்று எனக்கு தெரியாது. நீங்க ஸ்டூடியோ உள்ளே போய் விசாரியுங்க'' என்று கூறி அனுப்பிவிட்டேன். அந்தப் பெண் ஏற இறங்க என்னை முறைத்துப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

பிறகு சிலநாள் கழித்து போஸ்ட்மேன் ஒருவர் வந்தார். ''சார், முத்துலட்சுமிக்கு யூனிவர்சிட்டி ஆ·ப் மெட்ராஸ்லேர்ந்து ரிஜிஸ்தர் தபால் வந்திருக்கு'' என்றார். ''அந்த பேர்ல இங்க யாரும் இல்லையேப்பா'' என்றேன். முகவரியை வாங்கிப் பார்த்தேன். அது மிகச் சரியாக எங்கள் வீட்டு முகவரிதான். சரியென்று எங்க ஜெனரல் மானேருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவர் தயக்கத்துடன், ''சார், அம்மா பேரு முத்துலட்சுமிதானேங்க. டிகிரி கான்வோகேஷன் வந்திருக்கும்'' என்றார். 'லட்சுமி! லட்சுமி!' என்றே என் மனைவியை அழைப்பதால் முத்துலட்சுமி என்னும் பெயர் என் மனத்தில் பதியவில்லை. பிறகு இதை என் மனைவியிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தேன்.

Read More...

சோமபானம் சோ பாணம் - துக்ளக் தலையங்கம்

துவேஷம் தொடர்கிறது ! என்ற தலைப்பில் துக்ளக் தலையங்கம். ராமர் குடிகாரன் என்று வால்மீகி சொன்னதாக கலைஞர் சொன்னது சும்மா கப்ஸா என்று சொல்லுகிறார்.

துவேஷம் தொடர்கிறது !
"ராமன் குடிகாரன் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்' – இது தமிழக முதல்வரின், ஹிந்து மத துவேஷப் பேச்சுக்களின் சமீபத்திய வெளியீடு.

ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை – என்பதை அவருக்கு யார் சுட்டிக்காட்டினார்களோ, தெரியாது; டெலிவிஷன் சேனல்களினால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு விட்ட இந்த அட்டூழியமான பேச்சை, கொஞ்சம் மாற்றி, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில், "ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' என்று மட்டுமே முதல்வர் கூறியதாக, அவருடைய
பேச்சு "திருத்தி' அமைக்கப்பட்டது.

இந்த திருத்தமும், பிதற்றலே. வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்திலும் ராமர் ஸோமபானம் அருந்துகிறவர் என்று எழுதப்படவில்லை.

ஸோமபானமும் அருந்தவில்லை !

ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

ஆனால், மேலே கூறியுள்ளபடி, "ராமர் ஸோமபானம் அருந்தினார்' என்று கூட, வால்மீகி தனது இராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதாவது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி கூறியிருக்கிறார்' என்ற முதல்வரின் பேச்சும் பிதற்றல்; "ராமர் ஸோமபானம் என்கிற மதுபானம் அருந்துகிறவர்' என்று வால்மீகி எழுதியிருப்பதாக, முதல்வர் கூறியிருப்பதும் அபத்தம்.

சரி, ஏன் இப்படி முதல்வர், தப்பும் தவறுமாக பேசியிருக்கிறார்? "பட்டாபிஷேகத்திற்கு வஸிஷ்டர் குறித்த தினம் மட்டமான தினமாகி விட்டது, ஏன்?' என்றும்; "ஸீதை மீது ராமர் மரவுரியை கட்டாயமாகத் திணித்தார்' என்றும் ஏற்கெனவே கலைஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. அந்தத் தவறுகளை அப்போதே நாம் சுட்டிக்காட்டினோம். ராமாயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, பிதற்றியே தீருவது என்று, அவருக்கு என்ன வைராக்கியமோ தெரியவில்லை – இப்போது மீண்டும் அந்த வேலையைச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் கூட, முதல்வர் ஆயிற்றே! அதனால், அவருடைய பதவியை நினைத்தாவது – அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, கொஞ்சமாவது நாம் முனைய வேண்டாமா?

"மது' என்றால் "குடி'தானா ?

திரைப்பட காமெடி சீன்களில், காமெடியன் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, "கெக்கே... புக்கே... மக்ர டொக்கே... ஜிக்ல மக்கோ...
திங்கன கும்பாரே... அஜாகினி பஜோகினி...' என்று ஏதாவது பேசுவார்; அவர் பக்கத்தில் இருப்பவர், இந்த உளறலுக்கு ஒரு அர்த்தம் சொல்வார். அந்த மாதிரி, முதல்வரின் பேச்சுக்கு, நாம் ஒரு பொருள் காண்போம்.

ராமாயணத்திலிருந்து, ராமர் "மது' உண்டதாக தெரிய வருகிறது என்று யாரோ முதல்வரிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு, "ஆஹா! மது! மதுபானம்! சாராயம்!' என்று அவர் முடிவுகட்டி விட்டார் போலிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன.

"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' – "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது.

ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல
அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது.

குடிப்பழக்கத்திற்கு, ராமர் கண்டனம் !

இன்னமும் சொல்லப்போனால், போதை தருகிற பானங்களை அருந்துவதை ராமர் வெறுத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வாலி வதத்திற்குப் பிறகு, ஸுக்ரீவன், தான் ராமருக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்; இப்படி யுத்த முஸ்தீபுகள் செய்யப்படாமல், இருப்பதைப் பார்த்த ராமர் கோபம் அடைகிறார். ஸுக்ரீவன் கேளிக்கைகளிலும், போதை பானங்கள் அருந்துவதிலும் நேரம் கழித்துக் கொண்டிருப்பதை சாடி, அவர் லக்ஷ்மணனிடம் பேசுகிறார்.

அந்த இடத்தில் ராமர் கண்டிக்கிற பழக்கம் "பானம் அருந்துவது'; "பானமேவோபஸேவதே' – "பானம் அருந்துவதிலேயே குறியாக இருக்கிறான்' என்று ராமர் கூறுகிறார். அந்தப் பழக்கத்தைக் கண்டிக்கிறார். ஆனால், குடிப் பழக்கத்தை, "மது அருந்துவது என்றோ, ஸோமபானம் அருந்துவது' என்றோ சொல்லவில்லை;

லக்ஷ்மணன் சுக்ரீவனை சந்திக்கச் செல்கிறான்; முதலில் தாரை (வாலியின் மனைவியாக இருந்தவள்; பின்னர் சுக்ரீவனோடு இணைந்தவள்) வந்து வரவேற்கிறாள். "பானம் அருந்தியதால் லஜ்ஜை விலகியவளாக' என்று அவள் வர்ணிக்கப்படுகிறாள். "பானயோகாச்ச நிவ்ருத்தலஜ்ஜா' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது; "மது
அருந்தியதால் வெட்கத்தை விட்டாள்' என்றோ, "ஸோமபானம் அருந்தியதால் லஜ்ஜையை விட்டாள்' என்றோ, சொல்லப்படவில்லை. <

ராமர் சுக்ரீவனுக்கு விடுத்த எச்சரிக்கையையும், அவர் கூறியதையும் தாரையிடம் எடுத்துரைக்கிற லக்ஷ்மணன், "வாழ்வில் நலம் பெறவும், தர்ம நெறிப்படி நடக்கவும் விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி குடிப்பது தகாது; அறம் பொருள் இன்பம்
மூன்றையும் குடி அழிக்க வல்லது' என்கிறான். அதாவது ராமரும், அவர் சொல்படி பேசிய லக்ஷ்மணனும் குடியை நிந்தித்தனர். இந்த இடத்திலும் குடிப்பழக்கம் "மது அருந்துவது' என்று குறிப்பிடப்படவில்லை. "பானம்' என்றுதான் கூறப்படுகிறது.

மீண்டும், ஸுக்ரீவனை சந்திக்கிறபோது, பசுவதை செய்பவன், திருடன், விரதத்தை மீறுபவன், ஆகியோருக்கு இணையாக குடிப்பவனைப் பேசுகிறான் லக்ஷ்மணன். அப்போதும் "மது, ஸோமபானம்' என்றெல்லாம் சொல்லவில்லை. "கோக்னே சைவ ஸுராபேச சௌரே பக்னவ்ரதே ததா' – என்று சொல்லி, குடிப் பழக்கத்தை "ஸுராபே' – ஸுராபானம் அருந்துவது, என்றுதான் லக்ஷ்மணன் கூறுகிறான்.

ராமரும், லக்ஷ்மணனும், குடிப்பழக்கத்தை இவ்வாறு கண்டனம் செய்திருக்க, ராமர் குடிகாரர் என்றோ, குடிப்பழக்கம் உடையவர் என்றோ கருத வால்மீகி ராமாயணத்தில் இடமே இல்லை.

மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்வது தகும் என்பதால், "ஸோமபானம் என்பது போதை தருகிற பானம் அல்ல' என்பதையும், அதையும் ராமர் அருந்தியதாக வால்மீகி கூறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

நேருஜி – தவறான விலாசம் !

"நேரு சொன்னார், சொன்னார்...' என்று மீண்டும் மீண்டும் முதல்வர் பேசி வருகிறார். மேலைநாட்டு விமர்சனங்களை அப்படியே ஏற்ற நேருஜியின் கருத்துகளைப் படித்து, ஹிந்து மதம் பற்றி தெளிவுபெற முடியாது. பார்லிமென்டின் நடைமுறைகள், சோஷலிஸ நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் பற்றி
தெரிந்துகொள்ள, நேருவின் கருத்துகளும் உதவும். ஆன்மீகம் பற்றியோ, தெய்வ நம்பிக்கை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமானால், அனந்தராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்; அல்லது தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஆகியோரை அணுக வேண்டும். முதல்வர் விலாசம் தெரியாமல், நேருவிடம் போனது அவருடைய தவறு. உதாரணமாக – ரம்ஜான் நோன்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் – முதல்வரிடம் போனால், அந்த நோன்பு பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றி விவரம் இல்லாவிட்டாலும் – "குல்லாய் அணிவது, கஞ்சி குடிப்பது' என்ற விவரங்களாவது தெரியவரும். ஆனால் விநாயகர் சதுர்த்தி பற்றி கேட்டால், "கொழுக்கட்டையை வாயில் திணிப்பேன்' – என்பார். கிருத்திகை விரதம் பற்றி அவரிடம் கேட்பதில் என்ன பயன் இருக்கும்? "அன்று நான் நிறைய சாப்பிடுவேன்' என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்கு மேல் அவருக்குத் தெரியாது.

ஆகையால் விலாசம் தவறி அவரிடம் போய் இந்த மாதிரி விஷயங்கள் பற்றி கேட்டால், அது நம் தவறு. இவ்விஷயத்தில், நேருஜி சமாச்சாரமும் அப்படித்தான். இருந்தாலும், அவர் மனித நாகரிகத்தை மதித்தவர் என்பதால், "கொழுக்கட்டை திணிப்பேன்' என்றெல்லாம் சொல்லாமல், "எனக்கு அது பற்றியெல்லாம் நம்பிக்கையும் இல்லை; தெரியவும் தெரியாது' என்று சொல்லியிருப்பார்.

இதையெல்லாம், முதல்வரின் கவனத்திற்காக நாம் சொல்லவில்லை. கலைஞர் "ராமன் குடிகாரன்... ஸோம பானம் அருந்தும் பழக்கமுடையவர்' என்றெல்லாம் பேசியதற்கு மறுதினமே, திரு. சரத்குமார், திரு.குருமூர்த்தி ஆகியோர் என்னிடம் இதுபற்றி அபிப்ராயம் கேட்டபோது, வால்மீகி ராமாயணத்தில் உள்ள மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். அவர்களைப் போல நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறினால், ஓரளவாவது உண்மைகள் பலரிடையே பரவும்; கலைஞர் போல துவேஷ மனம் கொண்டவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று என்ன பயன்? துவேஷத்தில் மூழ்கியிருக்கிற அவரால், உண்மையை கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமற் போய்விட்டது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், வாசகர்களில் யாராவது, முதல்வரின் பேச்சைப் பற்றிய செய்தியைப் படித்து, சற்று மனம் குழம்பியிருந்தால், அவர்கள் "தெளிவுபெற வேண்டும்' என்கிற எண்ணத்தில்தான், இவ்வளவு விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அரசியல் சட்டம் !

"ராமர் பற்றி பேசக்கூடாது என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்று ரொம்ப புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டிருக்கிறார். "ஹிந்து மதம் நீங்கலாக மற்ற மதத்தவர்கள் வழிபடுகிற தெய்வங்கள் பற்றியோ, இறைத் தூதர்கள் பற்றியோ எதுவும் பேசக் கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? அப்போது அவை பற்றியெல்லாம், யாராவது தாறுமாறாகப் பேசினால், அதில் தவறு இல்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமா? அதுதான் முதல்வரின் வாதமா? அதை விடுவோம்.

"அரசு மேற்கொள்ளும் திட்டம் பற்றி யாரும் எதுவும் பேசினால் அது சதி' என்று
அரசியல் சட்டம் சொல்கிறதா? இல்லையே! பின் ஏன், சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகிறவர்கள் செய்வது சதி என்று முதல்வர் சாடுகிறார்? சில ஆண்டுகளுக்கு முன்பு "என்னை கருணாநிதி' என்று குறிப்பிடுகிறார்களே? தமிழக அரசியல் அவ்வளவு தாழ்ந்துவிட்டது!' என்று முதல்வர் வேதனைப்பட்டாரே? ஏன்? அரசியல் சட்டத்தில் "கருணாநிதியை, கருணாநிதி என்று சொல்லக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறதா? சமீபத்தில், "என் குடும்பத்தினர் பற்றி விமர்சனம் செய்கிறார்களே' என்று வருத்தப்பட்டாரே – "கருணாநிதி குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா?

அரசியல் சட்டம், எல்லா மதத்தினருக்கும் இடர்பாடு, குறுக்கீடு இன்றி தங்கள் நம்பிக்கையைத் தொடர்கிற உரிமையைத் தந்திருக்கிறது; வழிபாட்டு உரிமை உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதை மதிக்காமல் ஒரு ஆட்சியாளர் பேசுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே!

கிரிமினல் குற்றம் !

இது ஒருபுறமிருக்க – முதல்வர் தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் மனம் புண்படுகிறபடியும், ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்தும் பேசி வருவது – அரசியல் சட்டம் கூறுகிற மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல; இந்திய தண்டனைச் சட்டம் (இந்தியன் பீனல் கோட்) பிரிவுகள் 295ஏ, 298 ஆகியவற்றின்படி கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு, அந்த இருபிரிவுகளில், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை' என்று முதல்வர் கூறலாம்.

ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது.

இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வருகிறவர், ஆட்சியில் எப்படி தொடரலாம்? ஒரு மதத்தினர் தொழும் தெய்வங்களை நான் இகழ்ந்தே தீருவேன் என்று செயல்படுகிறவர் – மதச்சார்பின்மையின்படி ஆட்சி நடத்துபவரும் அல்ல; அப்படிப்பட்டவர் பதவியில் தொடர்வது, அரசியல் சட்டத்திற்குப் பெருமையும் அல்ல.

(நன்றி: துக்ளக் )

Read More...

Wednesday, September 26, 2007

கருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ

கருணாநிதிக்கு கமிஷன் கிடைக்காத ஆத்திரம்-ஜெ பேச்சு

மைனாரிட்டி அரசின் முதலமைச்சர் கருணாநிதி தனது பொறுப்பு மற்றும் கடமையை மறந்து உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை ஆழமாக காயப்படுத்தியுள்ளார்.

ராமரை அவமானப்படுத்தி பேசியதோடு ஒருமையில் இழிவுபடுத்தி பேசி வருவதும் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும்.

இல்லையென்றால் மத்திய அரசு கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தில் 5 மாற்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 6-வது திட்டம்தான் ராமர் பாலத்தை இடிக்கும் திட்டம். மற்ற 5 திட்டங்களை கைவிட்டு விட்டு பாலத்தை இடிக்கும் திட்டத்தை மட்டுமே கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.

நான் தொடர்ந்த வழக்கு காரணமாக உச்ச நீதிமன்றம் தற்போது தடை ஆணை விதித்ததையொட்டி தமக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணாநிதி ராமரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

ராமர் பாலத்தை கட்டியது யார், ராமர் என்ற ஒருவர் இருந்தாரா, அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் கேட்டு வருகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் கல்லணையை கட்டிய கரிகாலன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜசோழன், உலக அதிசயமான தாஜ் மகாலை கட்டிய ஷாஜகான் எந்த கல்லூரியில் படித்தார்கள் என்பதை கருணாநிதி கூறுவாரா. இவற்றுக்கெல்லாம் ராமாயணத்தில் பதில் உள்ளது.

கருணாநிதி ராமாயணத்தை ஒழுங்காக படித்துள்ளாரா ராமாயணத்தில் தேவ தச்சனான விசுவகர்மா என்பவரது மகன் நளன் என்பவர்தான் ராமாயணத்தில் ராமர் பாலத்தை கட்டியதாக வருகிறது.

இதை புரிந்து கொள்ளாத கருணாநிதி அர்த்தமற்ற, தேவையற்ற, கண்டிக்கத்தக்க பேச்சுக்களை பேசி இந்து மக்களையும், மதநம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தி, காயப் படுத்தி வருகிறார்.

இதுபோன்று மத துவேஷத்தை ஏற்படுத்தினால் இ.பி.கோ. 295ஏ பிரிவின்படி 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம். அதேபோல் 298வது பிரிவின்படி ஓராண்டு சிறை தண்டனையும், 505சி பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கலாம்.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருக்க கூடிய கருணாநிதி அரசியல் சட்டத்தை மதிக்காமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேசுவது தண்டனைக்குரியது.

இவர் மீது வழக்கு தொடர்ந்தால் 3 பிரிவுகளின் கீழ் கருணாநிதிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை உண்டு.

குற்றமென தெரிந்தும் இதுபோன்று பேசி வரும் மைனாரிட்டி திமுக முதலமைச்சர் கருணாநிதி தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு திமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

அதுவரை அதிமுக சார்பில் நாடு முழுவதும் தொடர்ந்து இது போன்ற போராட்டங்கள் நடைபெற்று கொண்டே இருக்கும்.

Read More...

எங்களுக்கு மரியாதை இல்லை - ஹாக்கி வீரர்கள் உண்ணாவிரதம்

கிரிக்கெட்தான் உசத்தியா?-உண்ணாவிரதத்தில் குதிக்கும் ஹாக்கி வீரர்கள்!!
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகளை கோடி கோடியாக் கொட்டிக் கொடுப்பதையும், ஹாக்கி விளையாட்டை முற்றிலும் புறக்கணித்தும் வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய ஹாக்கி வீரர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் இது எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே பெரிய கேள்விக்குறி. அந்த அளவுக்கு இந்திய அரசு ஹாக்கி விளையாட்டுக்கு நல்ல மரியாதை கொடுத்து வருகிறது.

அதேசமயம், எங்கிருந்தோ வந்த கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப் பெரும் முக்கியத்துவத்தை நமது நாடு கொடுத்து வருகிறது.

சாதாரண ஒரு போட்டியில் வென்றால் கூட வானத்துக்கும், பூமிக்குமாக குதிப்பது நம் நாட்டில் மிகச் சாதாரண விஷயமாகி விட்டது.

அதிலும் தற்போது 20-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகி விட்டதை, ஏதோ, உலகப் போரில் இந்தியா அபார வெற்றி பெற்று, அனைத்து நாடுகளையும் அடித்துக் காலி செய்து விட்டதைப் போன்ற உணர்வை ஊதிவிட்டு வருகின்றனர்.

பல்வேறு மாநில அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கு கோடி கோடியாக பரிசுகளைக் கொட்டிக் கொடுக்கின்றன. கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம், ஒரே ஒவரில் 6 சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்குக்கு ரூ. 1 கோடி பரிசையும், மிக விலை உயர்ந்த காரையும் பரிசாக அளித்துள்ளது.

இது இந்திய ஹாக்கி வீரர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்கு காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காட்டாதது அவர்களை மிகவும் விரக்தி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையைக் கண்டித்து ஹாக்கி வீரர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ஜோக்கிம் கார்வல்ஹோ சென்னையில் கூறுகையில், ஆசிய கோப்பைப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது (இப்போட்டி சென்னையில் நடந்தது - இப்போட்டியைக் காண மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு வரலாறு படைத்தனர்)

ஆனால் இந்த வெற்றியைத் தேடிக் கொடுத்த இந்திய வீரர்களை மத்திய அரசும் சரி, சம்பந்தப்பட்ட வீரர்கள் சார்ந்த மாநில அரசுகளும் சரி கண்டு கொள்ளவே இல்லை.

மத்திய அமைச்சர் பிரபுல் படேல் (மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்) மற்றும் ஜார்க்கண்ட், ஹரியாணா, கர்நாடகா, மகாராஷ்டிர ஆகிய மாநில அரசுகள் இப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பரிசுகளை அள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

ஹாக்கி வீரர்கள் அனாதைகள் போல நடத்தப்படுகிறோம். தேசிய விளையாட்டான ஹாக்கியை ஏன் நமது அரசியல்வாதிகள் இப்படிக் கேவலமாக நடத்துகிறார்கள்?

ஆசிய போட்டியில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் ஆகினோம். இதற்காக குடியரசுத் தலைவர் பாராட்டி செய்தி அனுப்பினார். அதை நாங்கள் மதிக்கிறோம்.

அதேசமயம், கிரிக்கெட் என்றால் ஒரு பார்வை, ஹாக்கி என்றால் இன்னொரு பார்வை என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை எதிர்த்து ஒரு பயிற்சியாளரும், நான்கு வீர்ரகளும் கர்நாடக முதல்வரின் வீட்டு முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.

கர்நாடக அரசு ஹாக்கி வீரர்களை சாதாரண தூசு போல நினைத்து விட்டது. அதேசமயம், கிரிக்கெட் வீர்ரகளுக்கு மட்டும் பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளது (ராபின் உத்தப்பா மற்றும் பந்து வீச்சது பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கு ரொக்கப் பரிசுகளை கர்நாடகம் அறிவித்துள்ளது)

ஆசிய கோப்பையை வென்றதற்காக இந்த நிமிடம் வரை கர்நாடக முதல்வர் வாழ்த்து தெரிவிக்கவே இல்லை என்றார்.

பயிற்சியாளர் ரமேஷ் பரமேஸ்வரன், மேலாளர் ஆர்.கே.ஷெட்டி மற்றும் வீரர்கள் விக்ரம் காந்த், ரகுநாத், சுனில், இக்னேஸ் திர்க்கி ஆகியோர் கர்நாடக முதல்வர் வீடு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பயிற்சியாளர் கார்வல்ஹோ அறிவித்துள்ளார்.

CNN-IBN
(செய்தி: தட்ஸ் தமிழ் )

Update:

ஆசிய ஹாக்கி போட்டியில் கலந்து கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்க்கு பரிசுத் தொகையை முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். ஆசிய கோப்பையை வென்ற தங்களுக்கு, கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகையோ அல்லது கவுரவமோ வழங்கப்படவில்லை என கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் குற்றம்சாட்டினர். மேலும், முதல்வர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் குமாரசாமி வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தலா 2 லட்சம் வீதம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்

Read More...

திமுக பந்த்-எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அக்டோபர் 1ம் தேதி நடத்தவுள்ள பந்த்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் அட்லீஸ்ட் ஒரு தில்லான குடிமகன் இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

டெல்லிக்கு சென்று சோனியா காந்தி வீட்டு முன் மறியல் செய்ய வேண்டியது தானே ? அல்லது ஆதரவு வாபஸ் பூச்சாண்டி காமிக்கவேண்டியது தானே, அதை விட்டுபுட்டு ஒரு நாள் பந்தில் என்ன சாதித்துவிட முடியும் ? பந்துக்கு அடுத்த நாள்
"முழு அடிப்பு வெற்றி" ( சாக்கடைகள் ஓடவில்லை எல்லா இடத்திலேயும் அடைப்பு என்று படிக்கவும்)
"தமிழகமே எதிர்ப்பை காட்டியது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு" (எல்லோரும் டிவி சினிமா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நல்லா தூங்கினார்கள், விட்டை சுத்தம் செய்தார்கள் என்று படிக்கவும்)

இந்த வழக்கில் வரும் தீர்ப்பு அரசியல் தலைவருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
Leaders have responsibility இது டிராபிக் ராமசாமிக்கு மட்டும் பொருந்தும்.
செய்தி கீழே...

பல்வேறு பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதில் பிரபலமானவர் டிராபிக் ராமசாமி. இவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற சட்டம் வந்தது.

மேலும் முக்கிய சாலைகளில் ஊர்வலம் நடத்தவும் இவர் தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்தே, முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக பந்த்தை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ராமசாமி.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக கூட்டணி அக்டோபர் 1ம் தேதி கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கடையடைப்பினால் தமிழகத்தில் ரூ. 700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். மேலும் இந்தக் கடையடைப்பு சட்டவிரோதமானதாகும்.

அக்டோபர் 1ந் தேதி நடைபெற உள்ள பந்த் போராட்டத்தை தடை செய்யும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு கடந்த 25ந் தேதி தந்தி அனுப்பினேன். இந்த பந்த் போராட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் ஆகியவை வேலை நிறுத்தப் போராட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்கி உள்ளன.

இந்தநிலையில் அக்டோபர் 1ந் தேதி நடைபெற இருக்கும் பந்த் போராட்டத்தால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும். சேது சமுத்திர திட்டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தி இந்த பந்த் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பந்த் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

ஏற்கனவே தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அக்டோபர் 1ந் தேதி நடைபெற உள்ள பந்த் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த கடையடைப்பு மற்றும் பந்த் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசாமியும் பந்த் போராட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

Read More...

என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை - ராமதாஸ் பேட்டி

பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கபட்டது, சேலம் ரெயில்வே திமுக போராட்டம் பற்றி...


கேள்வி:- நில சீர்திருத்தம் தமிழ்நாட்டில் முறையாக செயல்படுத்தவில்லை என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- தமிழ்நாட்டில் நில சீர்திருத்தம் முறையாக செயல்படுத்தவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எல்லா அரசும் நில சீர்திருத்தத்தை மீறி உள்ளன.


கேள்வி:- சேலத்தில் அமைச்சர் தலைமையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மணலை கொட்டி உள்ளனர். ரெயில்வே சிக்னலை உடைத்துள்ளனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் அல்லவா?

பதில்:- நான் நிறைய சொல்லி சொல்லி என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை.

கேள்வி:- பாரதீய ஜனதா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து...?

பதில்:- என்னை பொறுத்தவரை பொதுமக்களை காக்க வேண்டியது அரசு மற்றும், போலீஸ் கடமையாகும். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பும் அரசின் கையில் இருக்கிறது. காவல் துறையின் கையில் இருக்கிறது.

Read More...

Tuesday, September 25, 2007

கருணாநிதி பேச்சு - குமாரசாமி கருத்து

குமாரசாமி பேச்சு
ராமர் பற்றியும் ராமர் பாலம் குறித்தும் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். மாண்டியாவில் ஆதிசுஞ்சுனகிரி மடத்தை சேர்ந்த ஷ்ரீ பாலகங்காதர சுவாமியின் பட்டாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், குமாரசாமி கலந்து பேசுகையில், மூத்த கட்சி அரசியல் தலைவரும் மாநில முதல்வர் பதவியை வகிக்கும் கருணாநிதி இது போன்ற கருத்துக்களை (ராமர் பற்றிய விமர்சனம்) தெரிவிப்பதை தவிர்த்திருக்கலாம். அவருடைய கருத்துக்கள் சமுதாயத்தில் ஏராளமானோரின் உணர்வை புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன் இரண்டு மூன்று தடவை யோசித்து இருக்க வேண்டும். மத சம்மந்தமான விவகாரங்களை அரசியல் மேடைகளில் பேசுவது தவறு. இது பல்வேறு சமுதாயத்தினரிடையே தவறான கருத்தை உருவாக்கி விடும்.

கடவுளின் மறு அவதாரம் ராமர் - கவுடா

"கடவுளின் மறு அவதாரம் தான் ராமர்; கற்பனை கடவுள் அல்ல" என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவ கவுடா (போன வாரம்) பெங்களூரில் நிருபர்களிடம் "என்னை பொறுத் தவரையில் ராமர் என்பது கற்பனை அல்ல. அவர் கடவுளின் மறு அவதாரம். இதற்கு சான்றாக பல ஆதாரங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சாதாரணமாக பேசிவிடக் கூடாது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் அல்லது சீக்கியம் ஆகிய அனைத்து மதங் களிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. மத வழிபாட்டு கூடங்கள் பலவற்றுக்கு சென்று வழி பட்டுள்ளேன்"

Read More...

ராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு!

ராமர் பாலத்தைக் காப்பதே பகுத்தறிவு! என்ற தலைப்பில் கல்கி தலையங்கம்

கண்ணகி என்கிற சிலப்பதிகாரக் கதாபாத்திரத்தை ஏற்கவும்,
மதிக்கவும், போற்றவும் தயாராக இருக்கிற கருணாநிதி, ராமாய ணத்தை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்துக் கூறுபோடுவதில் மகிழ்ச்சி கொள்கிறார். இந்த முரண்பாட்டை மக்கள் கவனிக்காமல் இருந்து
விடப் போவதில்லை.

தி.மு.க.வினர், அவர்களுடைய தனிப்பட்ட கட்சிக் கொள்கை யைச் சார்ந்து நின்று திருப்தி கொள்ளட்டும். ஆனால், ராமர் நிஜ மாகவே வாழ்ந்தாரா என்கிற ஆராய்ச்சியும் நிரூபணமும் இந்தி யாவுக்கும், இறையுணர்வுள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களுக் கும் அவசியம்
இல்லை.

உணர்வுபூர்வமாகவும், அதையும் தாண்டிய ஆன்ம தேடலின் முடிவாகவும் விளங்கும் ராம பக்தியையும், நம்பிக்கையையும் எப்பேர்ப்பட்ட
சக்தியாலும் அசைக்க முடியாது. எனவே, ராமர் பாலத்தைத் தகர்க்காமலிருப்பதே அறிவுடைமை; பகுத்தறிவும் பட்டறிவும் கூட.

‘ராமர் சேதுவைத் தகர்க்கக் கூடாது என்கிற எதிர்ப்பு, சேது சமுத்தி ரத் திட்டம் தொடங்கி நீண்ட காலத்துக்குப் பிறகு திடீரென எழுந்துள்ளது; பணியைப் பாதியில் நிறுத்துவது பண விரயத்துக்கே வழி வகுக்கும்’ என்கிற தி.மு.க. தரப்பு வாதமும் தவறானது.

ராமர் சேது குறித்த ஆட்சேபணை, அந்தத் திட்டம் அறிவிக்கப் பட்ட
நிலையிலேயே எழுந்தது. அப்போது அதனைப் புறங்கையால்
தள்ளிவிட்டுத் திட்டத்தைத் தொடர்வதில் பிடிவாதம் காட்டியது தி.மு.க. அரசு, மத்திய தி.மு.க. அமைச்சா¢ன் துணையுடன்.

உணர்வுபூர்வமான காரணங்கள் மட்டுமின்றி, இயற்கை
சமச்சீர்நிலையின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்படும் என்பதாலும் ராமர் பாலத்தைத் தகர்க்க வேண்டாம் என்று வல்லுநர்கள் குரல் கொடுத்தார்கள். சுனாமி தாக்கியபோது, ராமர் பால அமைப்பு பாதுகாப்பு அரணாக விளங்கி பெருமளவுக்குச் சேதத்தைக் குறைத்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். பகுத்தறிவுக்கு உட்பட்ட இந்தக் காரணத்தைக்கூட ஏற்க தி.மு.க. அரசு தயாராகயில்லை.

ஆக, இந்த விஷயத்தில் மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் சுயநலமே ஆதாரமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், “பா.ஜ.க.
வினர் இவ்விஷயத்தை அரசியலாக்கிப் பொ¢து படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டுவது வேடிக்கை! ராமர் பால விஷயத்தில் பிடிவாதம் காட்டுவது பா.ஜ.க.வுக்கு அரசியல் ஆதாயமாக முடியும் என்கிற அனுபவ அறிவு ஆரம்பக் கட்டத்திலேயே கலைஞருக்கு இல்லாமல் போய்விட்டது ஆச்சர்யமே!

மேலும், இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம், உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தை வரைவதில் தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலுவின் அரசியல் தலையீடு, பின்னர் அதனை அமைச்சர் பரத்வாஜ் வாபஸ் பெற்றதில் அரசியல், அம்பிகா சோனி பதவி விலக வேண்டுமென மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குரல் கொடுத்து, பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டதில் அரசியல் என்று
இவ்விவகாரத்தை ஆளும் கூட்டணியும் எவ்வளவு அரசியல் பண்ண முடியுமோ பண்ணிவிட்டது!

வோட்டுக் கேட்க வந்தபோது, ஸ்டாலின் கோயில் பா¢வட்டத்தை மா¢யாதையுடன் ஏற்றுக் கொண்ட அரசியல் ஸ்டன்ட்டைத் தமிழகம் மறந்து விடவில்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அதிகார பலம் தி.மு.க.வின் கண்ணை மறைக்கிறது.

சிறுபான்மையினர் உண்மைகளை மட்டுமின்றி, உணர்வுகளையும்
மதிக்கத் தயாராயிருக்கும் பகுத்தறிவு அரசியல்வாதிகள், ஹிந்துக்களின் உணர்வுகளை மட்டும் உதாசீனப் படுத்துவதுடன் கீறிப் புண்படுத்துவது, பி¡¢வினை உணர்வுகளையே வலுப்படுத்தும்.

மக்களுடைய உணர்வுகளை மதியாத பகுத்தறிவு வாதம் எடுபடாது.

பாபர் மசூதி தகர்ப்பின் பின்விளைவுகளிலிருந்தே நாம் இன்னும்
மீளவில்லை. ராமர் பால விவகாரத்தை, அதை விடவும் பொ¢யதொரு
பிரச்னையாக்கிவிடாதீர்கள்!

Read More...

பா.ஜ., முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

கடந்த 2001ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவர் ஜனா.கிருஷ்ணமூர்‌த்தி (வயது 80). உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலியானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக முன்னாள்

Jana.Krishnamoorthi1928ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. சட்டம் பயின்ற ஜனா, வக்கீலாக பணியாற்றினார். பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் ஜனதாக் கட்சி மற்றும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

பாஜக தலைவராகவும் ஜனா. கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டுள்ளார். காமராஜருக்குப் பிறகு தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக பதவி வகித்த ஒரே தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரும் அவர்தான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை இழந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் ஜனா. கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நெல்லை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, சென்னை வந்து ஜனாவைப் பார்த்தார். இந்த நிலையில் இன்று காலை ஜனா கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவருக்கு மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More...

T20 இ.எஸ்.பி.என் சேனலுக்கு லாபம் எவ்வளவு ?

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை இ.எஸ்.பி.என்.-ஸ்டார் கிரிக்கெட் சேனல் பெற்று இருந்தது. இ.எஸ்.பி.என். சேனலில் ஆங்கிலத்திலும், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மொத்தம் 27 ஆட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தப்போட்டியை ஒளிபரப்பியதில் இ.எஸ்.பி.என்.-ஸ்டார் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருமானம் :

மொத்த வருமானம் - 200 கோடி ( இந்திய ரூபாய் )
விளம்பரம் மூலம் கிடைத்தது - 140 கோடி ( இந்திய ரூபாய் )
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கமர்ஷியல் நேரமாக 10 வினாடிக்கு ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகை தான் தற்போது அதிகம். ( இதற்கு முன் டென்-ஸ்போட்ஸ் 5.5 விற்றது ). இப்பவே இந்திய-ஆஸி ஆட்டத்திற்கு புக்கிங் சூடுபிடிக்கிறதாம்.

இப்போது தெரிகிறது ஏன் பந்தைஇ பொறுக்கி போடும் கேப்பில் கூட விளம்பரம் வந்தது என்று :-)

Read More...

ஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு - கலைஞர் பேட்டி

சேது சமுத்திர திட்ட பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை முழு திருப்தி அளிக்கவில்லை கருணாநிதி பேட்டி.

சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கூட்ட முடிவில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் :

கேள்வி:- சேது சமுத்திர திட்டத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வேறு பாதையில் அமைப்பது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னதே ஒரு பின்னடைவு இல்லையா?

பதில்:- ஒரு `பின்' அளவுக்கு பின்னடைவு தான். அதற்காகத்தான் வேலை நிறுத்தம், முழு அடைப்பு எல்லாம் நடத்துகிறோம். உங்களுடைய உணர்வுகளை நாங்களும் பெற்றிருப்பதால் நிச்சயமாக நாங்கள் நடத்துகின்ற இந்த வேலை நிறுத்தம், கடையடைப்பு இவைகள் எல்லாம் பயன் விளைவிக்கும் என்று கருதுகிறேன்.

கேள்வி:- உச்சநீதிமன்றத்தில் தற்போது இடைக்கால தடை விதித்திருக்கிறார்கள், வேறு பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று யோசிக்கின்றார்கள். இந்த அளவில் வேலை நிறுத்தம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்?

பதில்:- `பந்த்' நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துவது, குரல் எழுப்புவது இவைகள் எல்லாம் அவர்களின் காதுகளில் விழ வேண்டும், அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.

கேள்வி:- பொதுவாக இந்த பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? ஏமாற்றம் அளிக்கிறதா?

பதில்:- எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. முழுமையான திருப்தியும் அளிக்கவில்லை. அதனால் தான் முழு அடைப்பு, வேலை நிறுத்தம்.

கேள்வி:- விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்த வேதாந்தி உங்களை பற்றி அவ்வாறு பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார், இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களே?

பதில்:- அவர் அடியோடு மறுக்கவில்லை. நான் சொல்லவில்லை, பகவத் கீதையில் இருப்பதை சொன்னேன் என்று பகவத் கீதையையும் குற்றம் சாட்டியிருக்கிறார்.


கேள்வி:- அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்றுள்ளாரே, அவர் பிரதமரை சந்தித்து இன்றைய தீர்மானங்களை வலியுறுத்துவாரா?


பதில்:- அவர் மின்சாரதுறை பற்றிய கூட்டம் ஒன்றிலே கலந்து கொள்வதற்குத் தான் டெல்லி சென்றிருக்கிறார்.

கேள்வி:- நாங்கள் தி.மு.க.வுடன் சித்தாந்த `போரை' தொடங்கியிருக்கிறோம் என்று இல.கணேசன் கூறியுள்ளாரே?

பதில்:- அவர்கள் நிலைக்கு தமிழ்நாட்டில் `போர்' (ஆழ்துளை கிணறு) தான் தொடங்க முடியுமே தவிர `போர்' தொடங்க முடியாது.


கேள்வி:- பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- தாக்கப்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. செய்தது தவறு என்பது தான் என்னுடைய கருத்து.

கேள்வி:- ராமர் குறித்தும், வால்மீகி குறித்தும் தெரியாதவர்கள் இந்தியாவில் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று பா.ஜ.க.வின் அகில இந்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே, இது எந்த வகையில் நியாயம்?

பதில்:- நான் அதை நூற்றுக்கு நூறு ஆதரிக்கிறேன். ஏனென்றால் இப்படி சொல்கின்றவர்கள் தான் வால்மீகி ராமாயணத்தையும், கம்ப ராமாயணத்தையும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதை அறியச் செய்தவர் ராஜகோபாலாச்சாரியார் போன்ற மேதைகள். இன்னும் சொல்லப் போனால் பண்டித நேருவே அது ஆரிய திராவிட போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை அறியாதவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்பது நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பர்களுடைய வாதம் என்றால் அதை நான் ஆதரிக்கின்றேன்.


கேள்வி:- மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த உமாபாரதி தமிழ்நாட்டிற்கு வந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால், அவர்களை நாங்கள் கொலை செய்வோம், உயிரை கொடுத்தாவது நாங்கள் இந்த திட்டத்தை நிறுத்துவோம், இந்த திட்டத்திற்காக பாடுபடும் அரசு அதிகாரிகளை எங்கள் ஆட்சி வரும்போது நாங்கள் தேடித் தேடி கண்டுபிடித்து ஒழிப்போம் என்று பேசியிருக்கிறாரே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- இதே உமாபாரதி மத்திய அரசில் ஒரு மந்திரியாக இருந்த போது தான், இந்த திட்டத்திற்கே அனுமதி மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அந்த அனுமதியை மத்திய அரசு வழங்கிய போது அவருக்கு உயிர் இருந்ததா? இல்லையா என்பது எனக்கு தெரியாது.

கேள்வி:- 2 நாட்களுக்கு முன்பு நீங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப்பாதை அமைத்தால் பரவாயில்லை, திட்டம் வந்தாக வேண்டும் என்று சொன்னீர்கள், ஆனால் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, இந்த திட்டத்திற்கு மாற்றுப்பாதை சாத்தியமில்லை என்று சொல்கிறாரே?


பதில்:- அவர் நேரடியாக பொறுப்பேற்று இந்த திட்டத்திற்கு பாலம் கட்டுகிறவர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறவன். என்னால் முடிந்ததை நான் சொன்னேன். கட்டுகிறவருக்கு அதைப்பற்றி அதிகமாகத் தெரியும். அதனால் அவர் அதை விளக்கி இருக்கிறார். மாற்றுப்பாதை ஒன்று அவர்களால் முடிந்து அதை கட்டினால் நான் அதை வரவேற்க தயாராக இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், வேறு பாதை மூலமாக திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது பாலுவின் வாதம். மாற்றுப்பாதையை கண்டுபிடிக்க முடியாது என்கிறார். நான் அப்படி இருந்தால் வம்பு இல்லாமல் போய்விடுமே என்று பார்த்தேன். அதுவும் இல்லை என்கிறார்கள், என்ன செய்வது?


கேள்வி:- ஆதம் பாலத்தை உடைத்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையில் 2001-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் இப்போது அவர்களுடைய நிலையை அப்படியே மாற்றிக் கொண்டிருக்கிறார்களே? பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருக்கிறார்களே, பேசுகிறார்களே?

பதில்:- பா.ஜ.க.வை ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், முதல்நாள் சொன்னதை மறுநாள் மாற்றுவது தான் அவர்களுக்கு வாடிக்கை.

கேள்வி:- பிரச்சினை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் காங்கிரசோ, மத்திய அரசோ இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்களா? ஏன் என்றால் தேர்தல் வருகிறது. ராமர் பெயரை சொன்னால் ஓட்டு போய்விடாதா என்ற அச்சம் அவர்களுக்கு வராதா?

பதில்:- தி.மு.க. அண்ணாவை இழந்த பிறகு நடைபெற்ற பொதுதேர்தலில் பெரியார் எங்களை ஆதரித்தார். அந்த நேரத்தில் பெரியாரிடம் ராமர் என்ன பாடுபட்டார் என்று உங்களுக்கு தெரியும். அதற்கு பிறகும் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க எண்ணிக்கையை பெற்றதும் உங்களுக்கு தெரியும். அவ்வளவுதான்.

கேள்வி:- வட இந்தியாவில் காங்கிரசார் அவர்களுக்கு வாக்கு குறையும் என்று நினைக்கலாம் அல்லவா?

பதில்:- எனக்கு தெரியாது. அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் இருக்கிறார்கள், ஆனால் பா.ஜ.க. தாங்கள்தான் இந்துக்களின் பிரதிநிதி என்பதை போல அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு செயல்படுவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அப்படி அவர்கள் சொல்வது இந்து மதத்தின் பெருமையை குலைப்பதாகும்.

கேள்வி:- பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து கவர்னரை சந்தித்து அந்த கட்சியினர் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களே?

பதில்:- எனக்கு முழு விவரங்கள் தெரியாது. ஆனால் கல் எறிந்ததை நான் கண்டிக்கிறேன். ஆனால் உங்களை போன்ற சில பத்திரிகையாளர் அதை சிறிய விஷயமாக விடமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

கேள்வி:- கண்ணகி மதுரையை எரித்ததை நீங்கள் நம்புகிறீர்கள், ஆனால் ராமர் பாலம் போட்டதை நம்பக் கூடாதா என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே?


பதில்:- நீங்கள் நான் எழுதிய பூம்புகார் படம் பார்த்திருக்கிறீர்களா? கடைசி காட்சியை எப்படி எழுதியிருக்கிறேன் என்று பார்த்திருக்கிறீர்களா?


கேள்வி:- அண்ணா தி.மு.க. என்று பெயர் வைத்துக் கொண்டு ஜெயலலிதா, கருணாநிதி ராமாயணத்தை எதிர்க்கிறார். இந்து மதவாதிகளின் மனதை புண்படுத்துகிறார் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அந்த பெயர் இவ்வளவு நாட்கள் கழித்தா அவர்களுக்கு பொருந்தாமல், போய்விட்டிருக்கிறது. பெயர் வைத்த அன்றைக்கே பொருந்தாதே. அப்போதே நான் இந்த பெயர் வைத்ததை பற்றி சட்டசபையிலே பேசியிருக்கிறேன். அ.தி.மு.க என்றால் அது தி.மு.க. அல்லாதது. மங்கலம் என்றால் அதற்கு ஒரு பொருள். அமங்கலம் என்றால் மங்கலம் அல்லாதது. தி.மு.க. என்றால் திராவிட இயக்க உணர்வுகளை, பகுத்தறிவு கருத்து உட்பட அனைத்தும் அடங்கியது. அ.தி.மு.க. என்றால் அதற்கு விரோதமானது. எதிரானது. நியாயம், அநியாயம் மாதிரி.

கேள்வி:- இது போன்ற இந்துத்துவா கருத்துக்களை வேரூன்ற செய்வதால், இதை எதிர்த்து ஒரு பிரசார இயக்கத்தை தி.மு.க.வும், தோழமை கட்சிகளும் நடத்த முன்வருமா?

பதில்:- அநேகமாக இந்த இந்துத்துவா அல்லது மதவெறி பிரசாரம். இதற்கு எதிராகத்தான் எங்களுடைய தோழமை கட்சிகளின் அணுகுமுறைகள் இருந்து வருகின்றன. அதை அவ்வப்போது வலுப்படுத்திக்கொள்கிற நாளாக வருகிற 30-ந் தேதி சென்னை பொதுக்கூட்டம், தோழமை கட்சிகள் கலந்துகொள்கிற பொதுக்கூட்டம் அமையும்.

கேள்வி:- நர்மதா அணைக்கட்டு பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றம் கூறும்போது, மிகப்பெரிய முதலீட்டில் நடத்தப்படுகின்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று தீர்ப்பளித்ததை மனதிலே கொண்டு, அதே அடிப்படையில் தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருமா?

பதில்:- நம்முடைய அறிவார்ந்த வக்கீல்கள் நீதிமன்றங்களில் இந்த சான்றுகளை எல்லாம் எடுத்து வைத்து வாதாடுவார்கள். நீதி வெல்லும் என்று நம்புகிறேன்.


கேள்வி:- மத்திய அரசிலே நீங்கள் அங்கம் பெற்றிருக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் வேலை நிறுத்தத்தை நடத்தலாமா?

அமைச்சர் அன்பழகன்:- மக்கள் கருத்தை வலுப்படுத்துவதற்காகத்தான் இந்த வேலை நிறுத்தம் செய்கிறோம்.

கேள்வி:- ராமர் பாலம் என்பதை அவர்கள் நம்புகிறார்கள்.

பதில்:- எப்போது நம்புகிறார்கள். உமாபாரதி மத்திய மந்திரியாக இருந்தாரே, வாஜ்பாய் அமைச்சரவையில், அப்போது இந்த திட்டத்திற்காக அனுமதி கொடுத்தார்களே. அப்போது ராமர்பாலம் தெரியவில்லையா? அப்போது கோயலே அந்த கோப்பிலே கையெழுத்து போட்டிருக்கிறாரே?

கேள்வி:- பா.ஜ.க. கடந்த முறை அயோத்தியில் ராமர் பிரச்சினை என்று கூறி அரசியல் நடத்தினார்கள். இன்றைக்கு அவர்கள் தங்களுடைய எதிர்கால அரசியலுக்கு ராமர் பாலத்தை பிடிமானமாக எடுத்துக் கொண்டு இருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்:- அப்படி முயற்சிக்கிறார்கள்.

கேள்வி:- அது வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்:- 1971-ம் ஆண்டு அனுபவம் இருக்கிறது.

கேள்வி:- வேதாந்தியின் மிரட்டலுக்கு பயப்படாமல், மக்கள் பணிகளிலே தொடர்ந்து ஈடுபடுங்கள் என்று சோனியாகாந்தி செய்தி அனுப்பி இருப்பதாக ஏடுகளில் வந்திருக்கிறதே?

அமைச்சர் அன்பழகன்:- ஆம். இணைந்து தொண்டு புரிவோம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.

Read More...

Monday, September 24, 2007

அக்டோபர் 1லீவு !

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதை, மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி பந்த் நடத்த தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. ஆக ஒரு லாாாாாாாங் வீக்கெண்ட்.
கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.

பிகு: அந்த சனிக்கிழமை ஆபிஸ் வைத்துவிடுவார்கள் :-(

Read More...

அரசியல் ராமர்

இரண்டு படங்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு வித்தியாசத்திற்கு மேல் இல்லை :-)







Read More...

T20 இந்தியா வெற்றி


20-20 உலக ‌கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. உலகமே எதிர்பார்த்த இந்த போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 157/5 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஸ்டார்கள் இல்லாமல் இந்தியா வெற்றி !

* இந்திய அணிக்கு 2 மில்லியன் பரிசு - BCCI அறிவிப்பு!

* யுவராஜுக்கு 1 கோடி பரிசு ( 6 சிக்ஸர் அடித்ததற்கு )

இறுதி போட்டி நிஜமாகவே ரொம்ப க்லோசாக இருந்தது, இதே போல் இந்திய-பாக் உறவும் க்லோசாக இருக்க பிரத்திப்போம் !

கங்கிரட்ஸ் இந்திய !

கடைசி செய்தி:
Dhoni is Special - கங்குலி
Dhoni is a very balanced character. Indian Cricket is in a safe hands now! - சச்சின்

Read More...

FLASH: ராகுல்காந்தி புதிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்


வாழ்த்துக்கள்!


காங்கிரஸ் எம்.பி.யும் சோனியாகாந்தியின் மகனுமான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் இன்று நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் இளைஞர் அணிக்கும் அவரே பொறுப்பு வகிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Read More...

T-20 கோப்பையை இந்தியா கைப்பற்றுமா?

இந்திய வீரர்களின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் பிரமாதமாக இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து இருப்பதால் கோப்பையை வெல்ல இந்தியா வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. யார் ஜெயிப்பார்கள் ? சைடில ஓட்டு பெட்டி இருக்கு :-)

Read More...

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை

தமிழர்கள் பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் - கவிஞர் வைரமுத்து
நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க - கவிஞர் மூ.மேத்தா
முழு அறிக்கை...

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.


கவிஞர் மு.மேத்தா


தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

தடைசெய்ய வேண்டும்

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி
தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read More...

Sunday, September 23, 2007

கலைஞர் டிவியில் டி.ஆர்

கலைஞர் டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பெப்ஸி உமாவுடன், டி.ஆர் :-) இப்போது நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
உங்களுக்கு பிடித்த பாட்டு வரலாம். பாருங்கள் !

கடினமான உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்று அட்வைஸ்...கையை சொடுக்கி நல்லா பேசுகிறார். நகைச்சுவை நிகழ்ச்சி பார்க்க தவறாதீர்கள்....

உங்கள் லட்சியம் என்ன என்று ஒரு நேயர் கேள்வி கேட்டார் நல்ல காமெடி

ஜூவி செய்தி:

.....விஜய டி.ஆரும் உருகிப் போய் சால்வை போர்த்தி, பதவிக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பியிருக்கிறார்! அதை வாங்க வந்த விஜய டி.ஆரிடம், ‘என்னப்பா இதெல்லாம்..? உனக்கில்லாத உரிமையா? என்னிடம் நீ போனில் பேசியிருந்தாலே போதுமே... இதையெல்லாமா கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி, பத்திரிகைகளுக்கும் சொல்லிப் பெரிதாக்குவது?’ என்று உரிமையோடு அவரைக் கடிந்துகொண்டாராம் முதல்வர்.’’.....

... உருகிய மனநிலையில் விஜய டி.ஆர். கிளம்புகையில், ‘உங்க கட்சியை இந்தக் கூட்டணியில் மதிப்பதில்லை என்று சொன்னாய் அல்லவா... வருகிற 24-ம் தேதி சேது சமுத்திரத் திட்டம் குறித்துக் கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இங்கேயே, இப்போதே உனக்கு அழைப்பு வைத்துவிட்டேன். மறக்காமல் வந்து சேரு’ என்று தோளில் தட்டி அனுப்பினாராம் முதல்வர்! ‘

Read More...

தினமணி - ராமர் சேது கார்டூன்கள்

தினமணியில் வந்த ராமர் சர்ச்சை - சிறப்புக் கார்ட்டூன்கள்




அட... தப்பா எடுத்துக்காதீங்க..! புண்படுத்தும் நோக்கமெல்லாம் எதுவுமில்லை. சொரணை இருக்குதான்னு ஒரு டெஸ்ட் பண்ணேன், அவ்வளவுதான்..!


எப்படியும் ராம பக்தர்கள் ஓட்டு இனிமே நமக்கு கிடைக்கப் போறது இல்லை..! அதனால பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி, ஐயப்பன்... இந்த சாமி எல்லாம் இருக்கறதுக்கு ஆதாரம் இருக்குதுன்னு சொல்லி மற்ற சாமி பக்தர்கள் ஓட்டுகளையாவது தக்க வச்சுக்கறதுதான் இப்போதைக்கு நமக்கு நல்லதுன்னு தோணுது தலைவரே..! நல்லா பகுத்தறிவுப்பூர்வமா யோசிச்சுப் பாருங்க..!



ராமர் காலத்துல என்ஜினீயரிங் காலேஜ் இருந்ததோ இல்லையோ, கல்விக் கட்டணம்ன்ற பெயர்ல அப்பாவி பெற்றோர்கள் கழுத்தை நெரிச்சு 30 லட்சம், 40 லட்சம், 50 லட்சம்னு வசூல் பண்ற சுயநிதிக் கல்லூரிகள் இல்லைன்றது மட்டும் நிச்சயமா தெரியும் சார். இந்த சாதனைகள் எல்லாம் திமுக, அதிமுக ரெண்டு ஆட்சிகளுக்கும்தான் சேரும்..!


வேணுமாய்யா இதெல்லாம் நமக்கு..? ராமரை பற்றி கலைஞர் திட்ட திட்ட நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு பெருசாகிகிட்டே போகுதாம்..! பேசாம சோனியாஜிக்கு "திருக்குறள்' புத்தகம் ஒண்ணு வாங்கி அனுப்பி "கூடா நட்பு' அதிகாரத்தைப் படிக்கச் சொல்லலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்பா..! என்ன சொல்றீங்க..?


சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழர்களின் நலனை கருத்தில்கொண்டு தமிழகத்தை வளப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்! இன்னும் புரியும்படியாக சொல்வதென்றால் "டாஸ்மாக்' மதுக்கடைகளைப்போல அரசுக்கும், அதன்மூலம் தமிழகத்திற்கும் பெரும் பணத்தை ஈட்டித்தரும் திட்டம் என்பதை குடிமக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்..!


சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றினாலும் சம்மதம். ஆனால் எப்படியாவது அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்னு கலைஞர் சொல்றாரு..! இதே உறுதி இவருக்கு மதுவிலக்கு, வன்முறை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, இரட்டை தம்ளர் முறை ஒழிப்பு... இதிலெல்லாம் இருந்திருந்தா இவர் 5 முறை முதல்வராக இருந்த கால கட்டத்தில் தமிழகமே புண்ணிய பூமியா மாறியிருக்குமே, சார்..!


அட... ராமர், வால்மீகி இதையெல்லாம் விடய்யா ! தலைவர் ஏதோ "சோமபானம்'னு சொன்னாரே, அது எங்கே கிடைக்கும்னு உனக்கு தெரியுமாய்யா? ரெண்டு மூணு நாளா அதையே நினைச்சு மனசு தவிச்சுட்டு கிடக்குது..!



பாருங்கள், அண்ணாவின் இதயத்தில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதற்கு என்ன ஒரு உயிரியல்பூர்வமான, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவுப்பூர்வமான ஆதாரம்..!

Read More...

திமுகவின் பண்பாடு வெளிப்பட்டது!

ராமர் பக்கதர்கள் பண்பாடு என்று சில நாட்களுக்கு முன் பேசிய கலைஞர் இன்று தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி மேயர் சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவின் பண்பாட்டை காண்பித்தார்கள்....


இன்றைய செய்தி:

தி.நகரில் பதட்டம்
சென்னையில் பிஜேபி அலுவலகத்தின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழிசை சௌந்தர்ராஜன் உட்பட நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.
திமுகவினரின் வன்முறையில் பிஜேபி அலுவலகத்தின் கண்ணாடி கள் உடைந்தன. கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. வன்முறையில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

திமுகவினர் பெரிய கற்களை எடுத்தும், உருட்டுக் கட்டைகளை கொண்டும் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இதில் சில பத்திரிகையாளர்களின் வாகனங்களும் சேதமடைந்தன. அலுவலகத் தில் இருந்த கொடிக் கம்பம் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தாததுடன், வேடிக்கை பார்த்ததாக பிஜேபியினர் தெரிவித்தனர். திமுகவினரின் இந்த வன்முறையால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல காணப்பட்டது. தி.நகரில் பெரும் பதட்டமும் நிலவியது.

கவர்னரிடம் புகார் மனு அளிக்க பா.ஜ., முடிவு

சென்னை பா.ஜ., ஆபீஸ் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநில மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது: பா. ஜ., ஆபீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பரிதி இளம் வழுதி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இவரையும் போராட்டத்தை தூண்டி விட்ட அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க., ஆட்சியை கலைக்க வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனுக்கொடுப்போம் என்றார்

ஆர்ப்பாட்டம் மட்டும் போதும் - தொண்டர்களுக்கு திமுக உத்தரவு
திமுக தொண்டர்கள் பாஜக, இந்து அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால் போதும். வேறு எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை - வேதாந்தி மறுப்பு
கருணாநிதி குறித்து நான் நேரிடையாக எதுவும் பேசவில்லை. ராமர் குறித்து பழித்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மரணத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கீதை உள்பட இந்துமத நூல்கள் கூறுகின்றன என்றுதான் சொன்னேன் ஆனால் பத்திரிகைகள் தவறாக எடுத்து கூட்டி பிரசுரித்து விட்டன. அதே நேரத்தில் ராமர் இல்லை என்றும் ராம பகவான் பற்றி இழித்து பேச யாரையும் அனுமதிக்க முடியாது . மேலும் கருணாநிதி தலையை கொணர்ந்தால் தங்க காசுகள் வழங்கப்படும் என்று நான் சொல்லவே இல்லை.

தி. மு. க.,வுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
தி. மு. க.,வுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். விஸ்வ இந்து பரிஷத் மண்டல தலைவர் ‌ராம்விலாஸ் வேதாந்தியை உட‌னே கைது செய்ய வேண்டும் ‌என விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை பெரியார் சிலை அருகே போராட்டம் நடந்தது. மேலும் வேதாந்தியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதனையடுத்து நிருபர்களிடம் பேசிய திருமாவளவன் முதல்வர் கருணாநிதியை அவமதித்து பேசிய இந்து பரிஷத் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும். மேலும் ‌கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

ஜெ அறிக்கை
சேது சமுத்திரம் திட்டம் குறித்த பிரச்னை தற்போது மிகவும் தவறான திசையில் போய்க் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நினைத்தால், ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால் கருணாநிதியும் டி.ஆர். பாலுவும் ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்தார்கள். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது கருணாநிதி, அது ராமர் கட்டிய பாலமே இல்லை என்றும், மக்கள் கடவுளாகக் கருதும் ராமரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து இழிவுபடுத்தியும் பேசி வருகிறார்.

எல்லா மதங்களையும் சமமாக மதிப்பதுதான் உண்மையான மதச் சார்பின்மை. மதச் சார்பின்மையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. முதலமைச்சர் பொறுப்பை வகிப்பவர் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கிவிட்டு, விருப்பு வெறுப்பின்றி அனைத்து மக்களையும் மதித்து, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும். மாநில அரசானாலும், மத்திய அரசானாலும் நம் நாட்டின் பெரும்பான்மையான மக்களான இந்துக்கள்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

கருணாநிதி தனது பொறுப்பை மறந்து, கடமையை மறந்து, உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நம்பிக்கையை ஆழமாகக் காயப்படுத்தி, ராமரை அவமானப்படுத்தி பேசியது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

ஆகவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்ளும் கருணாநிதி உடனே பதவி விலக வேண்டும். இல்லையெனில் கருணாநிதியின் அரசை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி, இம்மாதம் 26-ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி. கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுதில்லி, அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்

Read More...

FLASH: பா.ஜ.க அலுவலகம் மீது தி.மு.க தொண்டர்கள் தாக்குதல்

* சென்னையில் பா. ஜ., ஆபீஸ் மீது தி.மு.க., தொண்டர்கள் தாக்குதல்.
* குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பாரதீய ஜனதா கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன.


சென்னையில் உள்ள பா. ஜ., ஆபீசில் புகுந்து மீது தி.மு.க., தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ராமர் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சாமியார் பிரிவு தலைவர் வேதாந்தி, கருணாநிதி தலை‌யை கொய்து வருவோருக்கு தங்ககாசுகள் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். இது தி. மு. க., வை கடும் கோபத்தில் தள்ளியது. இதனையடுத்து வேதாந்தி பேச்சு எல்லை மீறிப்போய்விட்டது என்றும் அவருக்கு தி.மு. க., தொண்டர்கள் கைகளை கருணாநிதி கட்டி போட்டுள்ளார். எல்லை மீறி போகும் போது இந்தியா முழுவதும் தி.மு.க., வை அடையாளம் தெரிய செய்வோம் என்றார். பா. ஜ., ஆலுவலகங்களில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அறிவித்தார். இன்று ‌சென்னை திநகர் வைத்தியராம் தெருவில் உள்ள பா. ஜ., ஆபீஸ் (கமலாலயம் )முன்பு தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். ஆவேசமடைந்த தொண்டர்கள் அபீஸ் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர்.

* பாரதீய ஜனதா கொடி கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது குறித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம். போலீசிலும் புகார் செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க.வினர் கட்சி அலுவலகம் முன்பும் தலை வர்கள் வீடுகள் முன்பும் போராட்டங்கள் நடத்துவது கண்டனத்திற்குரியது.

ஒரு மூத்த அமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. அந்த அறிக்கையை பார்க்கும்போது தமிழக அரசே கலவரத்தை தூண்டுவதாக தெரிகிறது.

அமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையை பார்த்த உடன் முதல்- அமைச்சர் கருணாநிதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி இருக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களே இப்படி செய்வது கொடுங்கோல் ஆட்சியில் நடந்த செயல்போல் உள்ளது.

இந்த செயல் ஓட்டு அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து கலவரத்தை தூண்டுவதற்கு சமமானதாகும். ராமர் பாலத்தை பற்றி முதல்- அமைச்சர் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Read More...

இந்திய (இளைஞர்) கிரிக்கேட் அணி

கிரிக்கேட் பற்றி அவ்வளவாக இட்லிவடையில் எழுதுவதில்லை. இந்தியா கிரிக்கேட் மாட்ச் விளையாடினால், ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்ளும். சில சமயம், மழைவராதா என்று அல்பமாக நினைப்போம். ஆனால் தற்போது T20 விளையாட்டில் நம்ம இளைஞர்கள் விளையாடிய விளையாட்டை பார்க்கும் போது, பழைய கிரிக்கேட்(கபில் தேவ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இருந்த காலம்) பார்ப்பது போல் இருக்கிறது. சச்சின், டிராவிட், கங்குலி போன்ற அருமையான விரார்கள் இல்லாமல் இவர்கள் கலக்குவதற்கு காரணம் "Team Work". கூடவே இந்த வயசானவர்கள் இல்லாததால் தான் இப்படி கலக்குகிறார்களோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. முதல் தடைவையாக ( அல்லது ரொம்ப நாள் கழித்து ) இந்திய அணியினர்கள், கடைசிவரை வெற்றிபெருவோம் என்ற மனநிலையில் விளையாடுகிறார்கள். நேற்றைய மாட்சில் கடைசி மூன்று ஓவரில் அந்த டென்ஷனிலும் தோனி சிரித்துக்கொண்டிருக்கிறார். BCCI தோனியை கேப்டன் பதவியில் நீடிக்க வைக்க வேண்டும்.

நேற்று ஆஸ்தெரிலியாவை மஞ்சா சோறு சாப்பிட வைத்த நம் இளைஞர் கிரிக்கேட் அணிக்கு வாழ்த்துக்கள்.

பிகு: கேப்டன் பதவியை ஆவலோடு எதிர்பார்த்த முன்னணி வீரர் யுவராஜ்சிங் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார் என்று அவர் தந்தை சொல்லியிருக்கிறார். யுவராஜின் அதிரடிக்கு காரணம் இதுவா ?

Read More...

Saturday, September 22, 2007

கருணாநிதி தலை, நாக்கு - திமுக எச்சரிக்கை

ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்று சொன்னவர் - வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இதற்கு இன்று "தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்" -திமுக கடும் எச்சரிக்கை செய்துள்ளது. முழு அறிக்கை கீழே...

ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.

தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.

இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,

தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.

Read More...

Friday, September 21, 2007

முதல்வர் கலைஞர் – இல. கணேசன் சந்திப்பு நடந்தது என்ன ?

முதல்வர் – இல. கணேசன் சந்திப்பில் நடந்தது என்ன ? என்று துக்ளக்கில் வந்த கட்டுரை.
படித்துவிட்டு யார் பொய் சொல்லுகிறார்கள் என்று பின்னூட்டதில் சொல்லவும் :-)

முதல்வர் – இல. கணேசன் சந்திப்பில் நடந்தது என்ன ?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, கடந்த வாரம் அவரது இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர், சில நாட்கள் கழித்து (செப்டம்பர் 14) சேலம் சென்ற முதலமைச்சர் கருணாநிதி, அரசு விழா ஒன்றில் பேசும்போது சேது சமுத்திரத் திட்டம் – ராமர் பாலம் தொடர்பாக சில கருத்துக்களைக் கூறினார். அப்போது ""நேற்று ஒருவர் என்னை சந்தித்து, "ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது. அது உண்மையிலேயே ராமர் பாலம் அல்ல. அதில் கந்தகம் இருக்கிறது. அணுகுண்டு தயாரிக்கத் தேவையான மருந்து இருக்கிறது. அது இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை பாதுகாக்க முடியும்' என்று கூறினார்.

""நான் உடனே அவரிடம் "அப்படியானால், இந்த உண்மையை உலகறிய ஊரறிய மேடைபோட்டு கூறுங்கள். ராமர் பாலம் பிரச்சனையை நான் பேசவில்லை என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும், அவர், "அப்படியானால் நாங்கள் கட்சி நடத்த வேண்டாமா' என்று கேட்கிறார்.

""...பாரதிய ஜனதா கட்சியினர் கட்சி நடத்த, தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட்
கட்சியினர் என்ன இளித்தவாயர்களா?'' – என்று முதல்வர் கருணாநிதி
பேசியுள்ளார்.

முதல்வரின் இந்தப் பேச்சில் இல. கணேசன் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர்தான் மிக சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த பா.ஜ.க. தலைவர். எனவே, முதல்வர் பேசியிருப்பது போல, "ராமர் பாலம் என்று ஒன்று கிடையாது' என்று முதல்வரிடம் இல. கணேசன் கூறினாரா? – என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசனிடம் விசாரித்தபோது, அவர் கூறிய கருத்து :

""முதல்வரிடம் பொன். ராதா கிருஷ்ணனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கான கோரிக்கை பற்றி எடுத்துச் சொல்லிவிட்டு, சேது சமுத்திரத் திட்டம் பற்றியும்
பேசினேன். "ராமசேதுவைப் பொறுத்தவரை, ராமர் வாழ்ந்தார்; மனித முயற்சியில் உருவான ராமர் பாலம்தான் அது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது;
உங்களுக்கு இல்லை. உங்கள் கருத்தை என்னால் மாற்றவும் முடியாது. ஆனால், அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தால், நமக்கு 40 வருஷத்துக்குத் தேவையான அணுமின்சாரம்தான் கிடைக்கும். அந்த பாலமோ, 400 வருஷத்துக்குத் தேவையான அணுசக்தியை தயாரிப்பதற்கு பயன்படும் தோரியத்தை தன்னுள் சேமித்து வைத்துள்ளது. அந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் அதை பாதுகாக்க வேண்டும்'' என்று கூறினேன்.

""அப்போது முதல்வர் என்னிடம், "நீங்கள் கூறும் இந்த தகவல் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் கட்சி மேடைகளில் இதைப்பற்றி எல்லாம் பேசுவதுதானே?' என்றார். உடனே நான், "இதையும் கூறிக்கொண்டுதான் இருக்கிறோம்' என்று சொன்னேன்.

""ஆனால் முதல்வர், இந்தப் பேச்சின் ஒரு பகுதியை மாற்றிச் சொல்லி இருக்கிறார். ராமர் பாலம் இல்லை என்று நான் கூறியதைப் போல அவர் சொல்லி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை மாற்றிக்கொண்ட கோபம் காரணமாகவோ, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாலோ
முதல்வருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக நான் சொல்லாத ஒரு கருத்தை சொன்னதாக அவர் சொல்லக்கூடாது. ராமர் பாலம் இல்லை என்று இல. கணேசன் கூறுவானா என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்''.

முதல்வருக்கு இல. கணேசன் இவ்வாறு மறுப்பு கூறியபோதிலும், வழக்கமாக கட்சி நிர்வாகிகளுடன் சென்று முதல்வரைச் சந்திக்கும் அவர், தனியாகப் போய் சந்தித்து, தேவையற்ற ஒரு சர்ச்சைக்கு ஆளாகிவிட்டார். தவிர, அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க. மேலிடம் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள முயன்று வரும் சூழலில், இவர் முதல்வரைச் சந்தித்தது, அ.தி.மு.க.விலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

(நன்றி: துக்ளக் )

Read More...

யாகாவாராயினும்...

யாகாவாராயினும்... ( தினமணி தலையங்கம் )

யாகாவாராயினும்...

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் நீண்டநாள் கனவு என்பதிலும், அது நிறைவேற்றப்படுவதால் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதிலும் யாருக்குமே இரண்டு அபிப்பிராயம் இல்லை. அந்தத் திட்டம் இப்படித்தான் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பதில்தான் கருத்து வேறுபாடே தவிர, சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா வேண்டாமா என்கிற சர்ச்சையே எழவில்லை.

அது ஒருபுறம் இருக்க, ராமர் என்று ஒருவர் இருந்தார் என்பதற்கான சரித்திரபூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், ராமர் பாலம் என்று சொல்லப்படும் மணல் திட்டுகளுக்கும் ராமாயணத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்றும் மத்திய தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பிறகு திரும்பப் பெற்ற குறிப்பு வடமாநிலங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே தமிழகத்தில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார், பாலம் கட்டுவதற்கு என்பது போன்ற பேச்சுகள் விவாதப் பொருளாகி இருக்கின்றன.

ராமர் இருந்தாரா, ஏசுநாதர் இருந்தாரா, புத்தர் இருந்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்குவது அபத்தம். அதற்கான ஆதாரத்தைக் காட்டு என்று கேட்பது அதைவிட அபத்தத்திலும் அபத்தம். ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை அந்தக் குழந்தையின் தாய் சொல்வதை வைத்துத்தான் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதே தவிர, மரபணு பரிசோதனைச் சான்றிதழைக் கேட்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் சில நம்பிக்கைகளைச் சிதைக்க முயலுவதும் நம்புவோரைப் புண்படுத்துவதும் நியாயமாகாது.

மக்கள் மத்தியில் பரவலாக இருக்கும் நம்பிக்கைகளை பகுத்தறிவு என்கிற பெயரில் எள்ளி நகையாடுபவர்கள் அவரவர் குடும்பத்தினரைத் தங்களது பகுத்தறிவு வாதத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியவில்லையே? கேட்டால், அவர்களது தனிப்பட்ட உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்கிறார்கள். பகுத்தறிவுவாதிகளின் குடும்பத்தினருக்கு மட்டும்தான் தனிப்பட்ட உணர்வா? மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடையாதா?

ராமர் பாலம் என்பது வெறும் மணல் திட்டு என்றே வைத்துக் கொள்வோம். அந்த மணல் திட்டு என்பதே இயற்கை நமக்குத் தந்திருக்கும் மிகப்பெரிய தனித்துவம் அல்லவா! இங்கிலாந்தில் ஸ்டோன்ஹென்ஜ், அமெரிக்காவில் கிராண்ட் கான்யன் என்று இதுபோன்ற இயற்கையான திட்டுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றும் காட்டுகிறார்கள். ராமேசுவரத்திலேயேகூட, மீனவர்கள் படகில் ஏற்றிச் சென்று பயணிகளை இந்த மணல் திட்டில் நடக்க வைத்துக் காட்டுகிறார்கள்.

இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகிய எல்லாமே எந்தவொரு சமுதாயத்தின் அருமை பெருமைக்கும் ஆதாரமாக உள்ளவை. அவற்றை எள்ளி நகையாடுவதுதான் பகுத்தறிவுவாதம் என்றால், அவர்கள் பகுத்தறிவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். எனது மூதாதையர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வோருக்கு எந்தவித விளக்கங்கள் கொடுத்தாலும் விளங்காது. காரணம், அவர்கள் பகுத்து அறியும் திறனில்லாதவர்களாக இருப்பதுதான்.

இறைமறுப்பு இயக்கம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தோல்வியை மட்டுமே தழுவிய ஒரு விதண்டாவாதம். தமிழகத்தில், இறைமறுப்பு இயக்கம் தொடங்கிய பிறகுதான் கடவுள் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு ஜோதிடர்களும், பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தனவா என்பதை எண்ணிப் பார்த்தால் தெரியும், அந்த வாதத்தின் பலவீனம். அதுமட்டுமல்ல, இறைமறுப்பாளர்களும் சரி, இந்து மதத்தை மட்டுமே தங்களது தாக்குதல்களுக்கு இலக்காக்குவது அவர்களுடைய கொள்கைப் பிடிப்பில் காணப்படும் உறுதியின்மையின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பான்மை நம்பிக்கையைப் பழிப்பதன் மூலமும், விமர்சிப்பதன் மூலமும் மத உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்கள். மதவாதிகள் மேலும் தீவிரமடைவதற்கு இதுதான் காரணம். இதனால் பாதிப்படைவது சிறுபான்மையினர் மட்டுமல்ல, சமுதாய நல்லிணக்கமும்கூட. இந்தப் போலிப் பகுத்தறிவுவாதிகளால் இப்போது மீண்டும் மதஉணர்வு தூண்டப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதன் தொடர்ச்சிதான் நெஞ்சைப் பதறச் செய்யும் வன்முறையும் உயிர்ப்பலிகளும்.

மாற்று வழி கண்டுபிடித்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது முக்கியமா, இல்லை மதஉணர்வுகளைத் தூண்டிவிட்டு சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது முக்கியமா?

தினமணியில் வந்த சில கார்டுன்கள்
1. ராமர் பாலமும்... பகுத்தறிவுப் பாதையும்...
ராமரும் வேண்டாம்... ராம பக்தர்களும் வேண்டாம்
ராமர் அவமதிப்புப் பேச்சு

Read More...

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ ! ( துக்ளக் தலையங்கம் )

ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !

தமிழக முதல்வர், ஹிந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் மனம் புண்படும்படி பேசுவது புதிய விஷயமல்ல. ஆனால், ஈரோட்டில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் அவர் பேசியுள்ளது, அவர் காட்டி வருகிற ஹிந்துமத துவேஷத்தில், ஒரு புதிய அத்தியாயம்.

ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராய்கிறோம் – என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் வருவதை விட, ராமர் பாலம் இடிக்கப்படுவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அதனால்தான் மாற்று வழியை ஆராய்வதில் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆனால் கோபம் வந்து என்ன பயன்?

மத்தியில், காங்கிரஸிற்கு ஓட்டு பயம் வந்து விட்டதால், அதற்கு முன் தி.மு.க. காட்டக்கூடிய "ஆதரவு வாபஸ்' பூச்சாண்டி பயம் எடுபடாது என்கிற நிலை; அதனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், ராமர் மீது இருக்கிற மரியாதையை பிரகடனம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய வழியை ஆராய மூன்று மாத தவணை
வாங்கியிருக்கிறது.

முதல்வர் முப்பெரும் விழாவில், "...மூட, மௌடீக, மடத்தனமான மதவாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள்... இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிற, எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகிற ஒரு பயங்கரமான சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு, ஒரு தீர்மானத்தை உங்கள் முன் வைக்கிறேன்' என்று கூறிவிட்டு – அந்த தீர்மானத்தில் "மதவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு அஞ்சி... சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கிற முயற்சிக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்று குரல் கொடுக்கிறோம்' – என்று கூறியிருக்கிறார்.

இப்படி குரல் கொடுத்தால் போதுமா? "மூட, மௌடீக, மடத்தனமான' மதவாதத்தை காங்கிரஸும், மத்திய அரசும் பேசத் தொடங்கி விட்டனவே? மத்திய சட்ட அமைச்சர், "இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ராமர் விளங்குகிறார். விவாதத்திற்கு இடமளிக்கிற விஷயமல்ல இது. ராமர் இருந்தார் என்பதை சந்தேகிக்கவே முடியாது. இமயமலை, இமயமலையே; கங்கை, கங்கையே. அதுபோல ராமர், ராமரே! இதை நிரூபிக்கத் தேவையே இல்லை' என்று கூறிவிட்டார்.

மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து "ராமாயணம் புனிதமானது; மத்திய அரசு மதங்களை – அதுவும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பாக ஹிந்து மதத்தை – முழுமையாக மதிக்கிறது' என்று கூறிவிட்டது.

அதாவது, முதல்வர் கூறுகிற "சதித் திட்டம்' மத்திய அரசின் ஒத்துழைப்பைப்
பெற்றுவிட்டது. "எதிர்காலத்தை இருள் மயமாக்க' மத்திய அரசு முன்வந்து விட்டது. அப்படியிருந்தும் முதல்வர் மத்திய அரசுக்கு எப்படி ஆதரவு தரலாம்? எதிர்காலத்தை இருள் மயமாக்குகிற சதித் திட்டத்தை ஏற்கிற அரசில் தி.மு.க. எப்படி பதவிகள் வகிக்கலாம்? சதிகாரர்களுக்கு உடந்தையான கட்சியாகிவிட்ட காங்கிரஸின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் எப்படி அரசு நடத்தலாம்? இதெல்லாம் பெரியாருக்கு தி.மு.க. இழைக்கிற துரோகமல்லவா?

மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்? அதற்கு முதல்வர் துணியாதது ஏன்? பதவி ஆசையைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம்?

"குடிலர்கள், குள்ள நரிகள்' என்று முதல்வர் வர்ணித்துள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற முன்வந்து விட்ட மத்திய அரசினரை எதிர்க்காத முதல்வர், குடிலர் ஆதரவாளரா? குள்ளநரி போஷகரா? தன்னுடைய பதவி, தன் குடும்பத்தினரின் பதவிகள் என்றால், பெரியார் கொள்கைகளை பலி கொடுக்கத் தயங்காதவர், வெறும் சவடால் பேச்சினால், வீரத்தைக் காட்டுகிறார்! வாய்ச்சொல் வீரம் என்பது இதுதான்.

இப்படி மத்திய அரசைக் கோபிக்க முடியாமல், அவரும் அவர் குடும்பத்தினரும் வகிக்கிற பதவிகள், முதல்வரைத் தடுக்கின்றன.

சரி; முதல்வர் தன்னுடைய கோபத்தை யார் மீது காட்டுவது? இருக்கவே இருக்கிறது ஹிந்து மத நம்பிக்கைகள்.

கோபத்தில், துவேஷத்தைக் கொட்டி முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார்: "யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார் முதல்வர்.

துவேஷம் தலைக்கேறியதால், ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர் பிதற்றியிருக்கிறார்.

பாலத்தைக் கட்டியது ராமர் என்றால், அவரேதான் கற்களை எடுத்து அடுக்கி, அவற்றை ஒன்றிணைத்து, பாலத்தை தன் கையாலேயே கட்டினார் என்று அர்த்தமல்ல. ஒரு மன்னன் கோவில் கட்டினான்; சிற்பங்கள் வைத்தான் – என்றால் அவை, அவனே உளியைக் கையில் எடுத்து, செதுக்கியவை அல்ல. அவன் ஆணையின் மீது, அவன் விருப்பத்திற்கிணங்க, சிற்பக் கலை வல்லுனர்கள் செய்துள்ள பணிகள் அவை. ஆனால் அவை அந்த சிற்பிகளின் பெயரில் வழங்கப்படுவதில்லை; சம்பந்தப்பட்ட மன்னன் வைத்த சிற்பங்களாகவே அவை புகழ் பெறுகின்றன.

அதே போலத்தான் ராமர் கட்டிய பாலமும். முதல்வருக்கு ராமாயணத்தைப் பற்றி இழிவாகப் பேசத்தான் தெரியுமே தவிர, அதிலிருந்து மேற்கோள் காட்டுகிற போதெல்லாம் எதையாவது தப்பும் தவறுமாகப் பேச அவர் தவறுவதில்லை. (இதற்கு முன்பும் நாம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.)

அந்த பாலம் கட்ட, ராமருக்கு சமுத்திரராஜன் வழி கூறினான். அவனே, அதற்கு நளன் என்ற நிபுணனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் யோசனை கூறினான்.

"....நளன், தேவதச்சனாகிய விச்வகர்மாவின் மகன்; தந்தையிடமிருந்து வரமும் பெற்று, தொழிலும் கற்றவன்; நிபுணன். அவன் பாலத்தைக் கட்ட முன்வந்து, சுக்ரீவனைப் பார்த்து, "வானரர்களில் சிறந்தவரே! பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் உடனே சேகரிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான்.

நளன் கேட்ட பொருட்களை சேகரிக்க வானரர்கள் புறப்பட்டனர். (வானரர்கள் என்றால் ஆங்கிலத்தில் சொல்கிற "மங்கி' அல்ல; அவர்கள் குரங்குகள் அல்ல;
பெரும் வீரர்கள்; கற்றவர்கள்; நகரத்தில் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு
வாழ்ந்தவர்கள்.... என்கிற விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன).

"வானரர்களின் உதவியுடன், பாறைகள் தகர்க்கப்பட்டன; மரங்கள் வேரோடு
பிடுங்கப்பட்டு, கொண்டுவரப்பட்டன. இம்மாதிரி பாறைகளும், மரங்களும், மற்ற பொருட்களும் கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன. பாலம் கட்டப்படுகையில், பாறைகளை நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்க, பலமான கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. நளன் உத்திரவிட்டவாறு, பாறைகளை சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டும், மரங்களை பாறைகள் மீது நிறுத்தியும், பல வேலைகளைச் செய்தும், வானரர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். கட்டி முடிக்கப்பட்ட பாலம், வான வீதியில் தெரிகிற நக்ஷத்திர மண்டலம் போல காட்சி அளித்தது. மேல் வானத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெண்ணின் கூந்தலை, இருபுறம் விலக்கி எடுக்கப்பட்ட வகிடு போல தோற்றமளித்த அந்த பாலத்தின் மீதேறி, வானரர்களும், மற்றவர்களும் கடலைக் கடந்து சென்றனர்...'

இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில், கூறப்பட்டுள்ள விவரங்கள். ஆகையால் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு, பிதற்றியுள்ள முதல்வர், "நளன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்றாவது கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அதற்கு நம்முடைய பதில் : நளன் தனது தந்தையிடம் தொழில் கற்றவன். நிபுணன் என்று பெயர் பெற்றவன்.

அது இருக்கட்டும். "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலம்
கட்டினா(ன்)ர்?' என்று கேட்கிற முதல்வர், இதேபோல வேறு சில விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்பாரா?

"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல்வர், "தொல்காப்பியர் எந்தக் கல்லூரியில் இலக்கணம் படித்தார்? தமிழ் இலக்கணத்தையே வகுத்ததாகச் சொல்லப்படுபவருக்கு இலக்கணம் கற்பித்தது யார்?' என்று கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில், நமது சிற்றறிவுக்கு எட்டாத, பெரும் புலமையும், வல்லமையும் படைத்தவர்கள் முன் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் நாம்.

"திருவள்ளுவர், திருக்குறள் எழுதியதாகச் சொல்கிறார்களே – அவர் எங்கு செய்யுள் இலக்கணம் படித்தார்? எங்கு தமிழ் கற்றார்? எங்கு ஃபிலாஸபி என்கிற தத்துவ விசாரணையை கற்றார்?' என்றெல்லாம் கேட்பாரா முதல்வர்? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், திருவள்ளுவர் இறையருள் பெற்ற மகான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

சரி, இதெல்லாம் போகட்டும். ராமர் இருந்தாரா என்று கேட்கிற முதல்வர், இதுவரை தப்பித் தவறியாவது மற்ற மத நம்பிக்கைகள் பற்றி ஒரு சிறு விமர்சனமாவது செய்தது உண்டா? காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் (புனித ஸ்தலத்தில்) நபிகள் நாயகத்தின் தலை முடி ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டு, அது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறதே – அது பற்றி முதல்வர் பேசியதுண்டா?

"அந்த முடி, நபிகள் முடிதான் என்று எப்படித் தெரியும்? என்ன ஆதாரம்?' என்று அவர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால் மற்ற மத நம்பிக்கைகளை மதிக்கக் கற்றவர்கள் நாம்; மற்ற மதத்தவர்கள் போற்றி வணங்குகிற மகான்கள் பற்றி அவமரியாதையாகப் பேசுவது, அற்பத்தனம் என்று நம்புகிறவர்கள் நாம்.

"ஏசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு, பின்னர் உயிர்ப்பித்து வந்ததாகச் சொல்கிறார்களே? அவர் அந்தக் கலையை எந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயின்றார்? அல்லது அவரை உயிர்ப்பித்தவர் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இந்த
சிகிச்சையைக் கற்றார்? ஆதாரம் உண்டா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். மற்ற மத நம்பிக்கையையும், மற்ற மதத்தவர்கள் போற்றுகிற இறைத் தூதர்களையும் மட்டமாகப் பேசுவது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இவ்வளவு போவானேன்? "புத்தர் அணிந்த ஆடை – மஞ்சள் நிறமுடையது என்பதால், நானும் மஞ்சள் துண்டு போடுகிறேன்' என்பது முதல்வர், தன்னுடைய மஞ்சள் மகிமை பற்றி அருளிய பற்பல காரணங்களில் ஒன்று. "புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் எங்கே அந்த ஆடைக்கு சாயம் ஏற்றினார்?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அவதார புருஷர்கள் போல தோன்றிய பெரியவர்கள் பற்றி, மடத்தனமான
விமர்சனங்கள் செய்வது, சுத்த முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இராமாயணம் வெறும் கதை என்று நேரு கூறியிருக்கிறார் – என்பது முதல்வர் காட்டுகிற பெரிய ஆதாரம்! நேரு உட்பட – எந்த நாஸ்திகரும், ராமாயணம் பற்றியோ, ஹிந்துக்கள் நம்பிக்கைகள் பற்றியோ, கூறுகிற கருத்துக்கள், அவை பற்றிய தீர்ப்பாகிவிடாது.

சரி, நேரு சொன்னதை இப்படி வேத வாக்காக – மன்னிக்கவும், பெரியார் வாக்காக
– எடுத்துக்கொள்கிற முதல்வர், நேரு சொன்ன மற்றொரு கருத்து பற்றி என்ன சொல்லப்போகிறார்? "நான்சென்ஸ்' என்று தி.மு.க.வினரை நேரு வர்ணித்ததற்காக, இவர்கள் ஏன் போராட்டம் நடத்தினார்கள்? நேருவே சொல்லிவிட்டாரே? அப்புறம் ஏது அப்பீல்? "நான்சென்ஸ்' என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!

முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் – அதுவும் ஹிந்து மத நம்பிக்கைகளை பற்றி மட்டும்தான். ஏனென்றால் ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்கள் வணங்குகிற புருஷோத்தமனை, இப்படி தாறுமாறாகப் பேசுவாரா அவர்?

பணம் தருகிற கர்வம், பதவி தருகிற பித்து, அரசியல் புகழ் தருகிற ஆணவம் போன்றவை ஒன்று கூடி ஒருவரிடம் இருக்கும்போது, அவர் வாய் இப்படித்தான் பேசும். ராமரின் பொறியியல் தகுதி பற்றி பேசுகிறவர், எந்தத் தகுதி கொண்டு முதல்வர் பதவி வகிக்கிறார்? மக்கள் தருகிற ஓட்டு; அதே மக்களில் முக்காலே மூணு வீசம் பேர் ராமரை தெய்வமாக வணங்குகிறவர்கள்.

"அந்த ஓட்டு வேண்டாம்; ராமனை தெய்வமாக நினைக்கிற மூடர்களின் ஓட்டு வேண்டவே வேண்டாம்!' என்று சொல்வாரா முதல்வர்? அவர் சொல்லாவிட்டால் என்ன? நாம் சொல்வோம். ராமரையும், மற்ற தெய்வங்களையும் வணங்குகிற
ஹிந்துக்கள், இந்த முதல்வருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், இனியும் வாக்களிப்பது, வெட்கக்கேடான செயலாகத்தான் இருக்கும்.

Read More...