பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 20, 2007

பழைய மாமல்லபுரம் சாலை - ராஜீவ்காந்தி சாலை

கணினி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்டப்படும் என முதல மைச்சர் கருணாநிதி அறிவித் துள்ளார். நாம் அனைவரும் ஒரே சாலையில் செல்வோம்; ஜனநாயக சாலையில் செல்வோம்; சாலை மாற மாட்டோம் என்ற சத்தியத்தை சத்தியமூர்த்தி பவனில் எடுத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறினார். முழு பேச்சு கீழே...

தங்கபாலு, ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் மிஸ்ஸிங்

கலைஞர் பேச்சு :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைந்துள்ள சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று அமரர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ராஜீவ்காந்தியின் திரு வுருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெரும் பூரிப்பையும், உற்சாகத் தையும் தருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது இரண்டு நிகழ்வுகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். ஒன்று, பெருந்தலைவர் காமராஜரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி ஆசா னாகத் திகழ்ந்த தீரர் சத்தியமூர்த்தி யின் பெயர் சூட்டப்பட்டுள்ள இங்கு வருவதில் பெருமை அடைகிறேன். மற்றொன்று, உங்கள் அனை வரையும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

ராஜீவ்காந்தி நிகழ்ச்சிக்கு நான் வருவது ஒன்றும் புதிதல்ல. அண்மை யில் சோனியா காந்தியுடன் ஸ்ரீபெரும் புதூருக்குச் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தை கண்டு வணங்கும் வாய்ப்பைப் பெற்றேன். சத்தியமூர்த்தி பவனுக்கு கருணாநிதி வருகிறார் என்பதை ஏதோ சந்திர மண்டலத்திற்குச் செல்வது போல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு, இங்கு பெரும் கூட்டத்தை கூட்டியதற் காக மனமார்ந்த நன்றி தெரிவிக் கிறேன்.

தீரர் சத்தியமூர்த்தியை இளம் பருவத் திலேயே நான் அறிவேன். நான் பிறந்த திருக்குவளை மாரியம்மன் கோயில் திடலில் காங்கிரஸ் மாநாடு அப்போது நடைபெற்றது. அவ்வமயம் நான் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தேன். அந்தக் கட்சியில் இருந்த போதிலும், இந்த மாநாடு நடந்தபோது சத்தியமூர்த்தியை சந்தித்திருக்கிறேன். அன்று முதல் அவர் மீது நான் கொண்டுள்ள மரியாதை எள்ளளவும் குறையவில்லை.

தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இங்கு நடைபெறும் ராஜீவ் காந்தி பிறந்த தின விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடி யாக இசைவு தெரிவித்தேன்.

ராஜீவ்காந்தி இளம் வயதில் நாட்டுக்காக, மக்கள் ஒற்றுமைக்காக, சமூக நலனுக்காக தமது ரத்தத்துளி களை தமிழக மண்ணில் தெளித்து விட்டு சென்று விட்டார். அவ்வாறு தெளித்த குருதி சமூக ஒற்றுமையை தமிழக மண்ணில் பரப்பி வருகிறது.

நான் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தால் என் அடிப்படைக் கொள்கை களை மாற்றிக் கொள்ளப் போவ தில்லை. அதுபோல நீங்களோ அண்ணா அறிவாலயத்திற்கு வந்தா லும், உங்கள் அடிப்படைக் கொள்கை களை மாற்றிக் கொள்ளப் போவ தில்லை. அடிப்படைக் கொள்கை மாறாமல் போற்றிப் பாதுகாப்பது நமது பண்பாடாக உள்ளது.

அந்த நாகரீகப் பண்பாட்டை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. நமக்குள் ஆயிரம் கருத்துவேறுபாடு இருந்தாலும் நாம் ஒருவரையொருவர் தோழமையோடு பழக வேண்டும். தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங் களைப் பார்த்தால் அங்கு அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக கூடிப் பேசி ஒரே முடிவை எடுக்கிறார்கள்.

இங்கு தான் நவக்கிரகம் போல பரஸ்பர பாகுபாடு பார்க்கிறார்கள். ஒருவரை யொருவர் பார்த்தாலே அவரவர் அலுவலகத்திற்கு செல்லும்போது தம்மை கட்டம் கட்டி விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.அந்த நிலை மாற வேண்டும்.

எனக்கும், ராஜீவ்காந்திக்கும் நீண்ட கால நட்பு இல்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் அவர் வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் சஞ்சய் காந்திக்கும் நட்பு உண்டு. அவர் மறைந்த போது நான் மைசூரில் இருந்தேன்.

சஞ்சய்காந்தி மறைவுச் செய்தி கேட்டவுடன் ஓடோடிச் சென்று இந்திராகாந்திக்கு ஆறுதல் கூறியதை என்றும் மறக்க முடியாது. என் குடும் பத்திற்கும், இந்திராகாந்தியின் குடும் பத்திற்கும் ஒற்றுமை இருந்ததை யாராவது சந்தேகப்பட்டால் அதற்கு புகைப்பட சான்று உள்ளது.

1989ல் தமிழக சட்டசபையில் ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நான் முதல்வர்; ராஜீவ் காந்தி பிரதமர். நான் இங்கு நடந்த நிகழ்வு களை பிரதமரிடம் கூறுவதற்காக டெல்லி சென்று புகைப்படத்தைக் காட்டி நடந்ததை விவரித்தேன்.

அவர் அதைப் பார்த்துவிட்டு சொன்னது என்ன தெரியுமா? "தமிழக சட்டசபையில் இருக்கைகளை முதலில் மாற்றியமைக்க வேண்டும். ஒரு வருக்கொருவர் தொட்டுப் பேசும் படியாக இருக்கைகள் இருப்பதால்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது' என்று அவர் கூறினார்.

அதன்படி நான் சட்டசபையில் இருக்கைகளை மாற்றி அமைத்தேன். அவ்வாறு மாற்றி அமைக்கும்போது நான் சொன்னேன், இந்த யோசனை என்னுடைய யோசனை அல்ல; ராஜீவ் காந்தி சொன்ன யோசனை என்றேன். இது அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியும்.

உள்ளாட்சியில் ஜனநாயகம் பூத்துக் குலுங்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். அதன்படி தமிழகத் தில் உள்ளாட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. என்னை நீங்கள் அழைத்ததும், நான் இங்கு வந்ததும், என்னை நீங்கள் உபசரித்ததும் குடும்ப பாச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, கணினி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கையை நான் இந்த இடத்திலேயே ஏற்று, பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்டுகிறேன். நாம் அனைவரும் ஒரே சாலையில் செல்வோம். ஜனநாயக சாலையில் செல்வோம்; சாலை மாற மாட்டோம் என்ற சத்தியத்தை சத்திய மூர்த்தி பவனில் எடுத்துக் கொள்வோம்.

கிருஷ்ணசாமி பேச்சு:

முதலமைச்சர் எதைச் சொன்னாலும், அதைச் செய்ய சோனியாகாந்தி தயாராக இருக்கிறார். அது போல சோனியா காந்தி எதைச் சொன்னாலும் அதைச் செய்வதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மத்திய அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி நடந்து வருகிறது. இதனைத் தடுப்ப தற்கு நமது முதலமைச்சர் பல நல்ல யோசனைகளை சொல்லியிருப்பதால் அந்த சூழ்ச்சிகள் தவிடு பொடியாகி விடும்

1 Comment:

R.Subramanian@R.S.Mani said...

Call it either OMR or Rajiv Gandhiji Salai; what would be the condition of the road, the same old condition and traffic jam ; you could not expect any immediate improvement;
suppamani