பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 30, 2007

மூப்பனார் நினைவிடத்தில் கேப்டன் !

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் இன்று 6வது நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். 'காமராஜர் வழி நடந்த சிறந்த தலைவர்' மூப்பனார் நினைவிடத்தில் விஜயகாந்த் புகழஞ்சலி

மூத்த காங்கிரஸ் தலைவரும், த.மா.கா. நிறுவனருமான ஜி.கே.மூப்பனாரின் 6வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி இன்று காலை மூப்பனார் பேரவை சார்பில் அதன் மாநிலத்தலைவர் எல்.கே.வெங்கட் மூப்பனார் ஜோதியை காமராஜர் இல்லத்திலிருந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தார். அந்த ஜோதியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினர். அதோடு மாணவர் களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், ஏழைஎளியோருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கினர். இதில் வடசென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு வருகை தந்து மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் மூப்பனார் குடும்பத்தில் ஒருவனாக இருந்துள்ளேன். அவர் எனது தந்தை மாதிரி. அவரது பிறந்தநாளை நான் மறந்ததில்லை. நினைவு நாளையும் மறக்க மாட்டேன்.

அவர் மறைந்தாலும் உடனிருப்ப தாகவே நினைக்கிறேன். மரியாதை, நல்ல தன்மை, எளிமை ஆகியவற்றை மூப்பனாரிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும். அவர் உயிருடன் இருக்கும் போது அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

அவருடைய பண்பினை ஜி.கே.வாசன் பெற்றுள்ளார். மூப்பனார் உயிருடன் இருந்திருந்தால் என்னுடைய அரசியல் வேறு மாதிரியாக இருந்திருக்கும். காமராஜர் வழியை மூப்பனார் பின்பற்றினார். அவருடைய வழியை நான் பின்பற்றி வருவதால் தான் கதர்சட்டை அணிந்துள்ளேன் என்று கூறினார்.

0 Comments: