பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 10, 2007

'முஸ்லிம் இந்தியன்' பெயர் மாறுகிறது!

முஸ்லிம் இந்தியன்' பெயர் மாறுகிறது! - எஸ். குருமூர்த்தி


அண்மையில் நடந்த உண்மை நிகழ்ச்சி, அதே சமயம் அனைவருக்கும் படிப்பினையாகவும் இருப்பது. கஃபீல் அகமது என்கிற மதத் தீவிரவாதி, தனது சகோதரர் டாக்டர் சபீல் அகமதுடன் சேர்ந்து பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தைத் தகர்க்க முயன்று தன்வினை தன்னைச்சுட, தானே பலியாகிவிட்டார்.

பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நமது இஸ்லாமியச் சகோதரர்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கிறது. அதே சமயம், இந்த இருவரும் தங்களுடைய செயல்களால் இந்தியாவுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நன்மையைத்தான் செய்திருக்கிறார்கள் என்றால் வக்கிரமமாகச் சிந்திப்பதுபோலத் தெரிகிறதா? மேற்கொண்டு படியுங்கள்.

முதலில், இந்தியாவையும் அதன் மக்களையும் இரண்டாகப் பிளவுபடுத்த விரும்பிய முகம்மது அலி ஜின்னா, இந்தியர்களாக இருந்த மக்களை "இந்தியர்கள்' என்றும் "முஸ்லிம்கள்' என்றும் இரண்டாகப் பிரித்தார். இந்தியர்களாக இருக்க விரும்பாதவர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டைப் பெற்றார். பிரதானமான நிலப்பகுதி இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக இங்கிருந்து போக மறுத்த முஸ்லிம்களுக்கும் தாயகமாக மாறியது. எனவே நாடு சுதந்திரம் அடைந்தபோது "முஸ்லிம்களுக்கு' பாகிஸ்தானும் "இந்தியர்களுக்கு' இந்தியாவும் கிடைத்தன.

இரண்டாவதாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசியல் தலைவர்கள் மக்களை வாக்கு வங்கிகளாக இனம் பிரித்தார்கள். மத நம்பிக்கைகளின் அடிப்படையில், ""இந்திய முஸ்லிம்கள்'' என்று ஒரு சாராரை அழைக்க ஆரம்பித்தனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த தேசப்பற்றும், ஒற்றுமை உணர்வும் மங்கிப் போனதால், மூன்றாவது கட்டத்தில் முஸ்லிம்களிடம் தங்களுடைய தேச உணர்வைவிட மத உணர்வே தூக்கலாக இருந்தது.

நாலாவது கட்டத்தில் மத உணர்வு ஆழ வேரூன்றிப் போனதால் முஸ்லிம் தலைவர்களுக்குத் தங்களை இந்தியர்கள் என்று முதலிலும் முஸ்லிம்கள் என்று பிறகும் குறிப்பிட்டு இந்திய முஸ்லிம்கள் என்று அழைப்பதே வேம்பாகக் கசந்தது.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் முதலில் முஸ்லிம் பிறகுதான் இந்தியன் என்று வலியுறுத்த ஆரம்பித்தனர். அதாவது அவர்கள் இந்தியர்களோ, இந்திய முஸ்லிம்களோ அல்ல, முஸ்லிம் இந்தியர்கள். முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து அன்னியப்படுத்தியும் உலக நாடுகளில் உள்ள பிற முஸ்லிம்களுடன் இணைத்தும் பார்க்க இந்த வார்த்தையை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம், ""இந்திய முஸ்லிம்'' அல்ல, ""முஸ்லிம் இந்தியன்''தான் என்று வலியுறுத்தியவர் இமாமோ, முல்லாவோ அல்லர். நன்கு படித்த, வெளியுறவுத்துறை சேவையில் பணியாற்றிய சையது சகாபுதீன் என்ற கனவான்தான் அவர். 1977-ல் ஜனதா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற வாஜ்பாய், சையது சகாபுதீனின் அறிவுக்கூர்மை, புலமை ஆகியவற்றால் மிகவும் கவரப்பெற்றார்.

அரசுப் பணியிலிருந்து விலகி இஸ்லாமியச் சேவையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார் சையது சகாபுதீன். ""இந்திய முஸ்லிம்'' என்ற வார்த்தையை ""முஸ்லிம் இந்தியர்'' என்று மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அதே பெயரில் பத்திரிகையையும் தொடங்கினார். முஸ்லிம் என்பது சர்வதேச அரங்கில் எந்த நாட்டைச் சேர்ந்த முஸ்லிமுடனும் நெருங்க நல்ல துணையாக இருக்கும், இந்தியர் என்ற தேச அடையாளம் இரண்டாவதுபட்சம்தான் என்று அவர் தன்னைப் பின்பற்ற நினைத்த முஸ்லிம்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார்.

இது தவறு, இது தேசப்பற்றுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமுதாயத்தில் எவரும் கண்டிக்கவில்லை. மாறாக, மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் சையது சகாபுதீனையே இஸ்லாமிய சமூகத்தின் அறிவுஜீவியாக அங்கீகரிக்க ஆரம்பித்தனர்.

இஸ்லாமிய அடையாளத்தை முன்னால் போடுவதா என்று ஆட்சேபித்தால் முஸ்லிம்கள் நமக்கு வோட்டு போடாமல் போய்விடுவார்களோ என்று அஞ்சி, மதசார்பற்ற இந்திய அரசியல்வாதிகள் வாய்மூடி மெüனிகளாக இருந்துவிட்டனர். அயோத்தி விவகாரத்தில் மற்ற இஸ்லாமியத் தலைவர்களிடமிருந்து, தலைமைப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு, சுமுகமான முடிவு ஏற்படமுடியாமல் முட்டுக்கட்டை போட்டு பிரச்சினையைத் தீர்க்க முடியாத அளவுக்குச் சிக்கலாக்கிவிட்டார். அரசியலில் அவர் செல்லாக் காசாகுவதற்கு முன்னால், என்ன தீமையைச் செய்ய நினைத்தாரோ அதைச் செய்து முடித்துவிட்டார்.

அவருடைய குறுக்கீட்டால் இந்திய முஸ்லிம்களுக்கே அதுவரை இல்லாத குழப்பம் முதல்முதலாக ஏற்பட்டது. தாங்கள் யார், "இந்தியர்களா', "முஸ்லிம்களா', எது முதலில் என்று குழம்பினார்கள்.

காஷ்மீரத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள்கூட போலி மதச்சார்பற்ற கட்சிகளால் குறைத்து கூறப்பட்டது. தங்களுக்கு முஸ்லிம்களின் வாக்கு வங்கி அப்படியே தொடர வேண்டும் என்று விரும்பி, அதற்கேற்ப பேசவும் நடக்கவும் தீவிரம் காட்டினர்.

முஸ்லிம்களின் வாக்குகளை அப்படியே கவர்ந்துவிட வேண்டும் என்ற கொள்கையால், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக்கூட அமல் செய்யாமல் இருக்க, சட்ட திருத்தமே கொண்டுவரப்பட்டு முஸ்லிம் பெண்களுக்கான ஜீவனாம்சத்தை அரசே கொடுக்க வழி ஏற்படுத்தப்பட்டது.

போலி மதச்சார்பின்மை வலுப்பெற்று வர ஆரம்பித்ததால் அரசியல் அரங்கில் அதற்கு மாற்றாக "ஹிந்துத்துவா' இயக்கமும் வளர ஆரம்பித்தது. அயோத்தி ராமர் கோயில் பிரச்னை அதற்கு உற்ற களமாக இருந்தது. 1980-களிலும் 1990-களிலும் இதே நிலைமை நிலவியது.

இக்காலகட்டத்தில், உலக அரங்கில் இஸ்லாமிய சக்திகளுக்கு எதிர் இலக்கு என்று எதுவும் இல்லாமல் இருந்தது. பனிப்போர்காலம் முடிந்து சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்துவிட்டதால், இஸ்லாமிய "ஜிகாதி'களுக்கு, அவர்களை ஊட்டி வளர்த்த அமெரிக்காவே இலக்காக அமைந்தது. 1990-களில் வளர்ந்து கொண்டே வந்த இந்த விரோதம் 2001 செப்டம்பர் 11-ல் உச்ச கட்டத்தை அடைந்து வாஷிங்டன், நியூயார்க் நகரங்களின் மீதான தாக்குதலாக உச்சகட்டத்தை அடைந்தது.

மதசார்பற்ற உலகம், பயங்கரவாதம் என்றாலே அதை இஸ்லாமுடன் தொடர்புபடுத்திப் பார்க்க ஆரம்பித்தது. இந்தியாவில் உள்ள மதசார்பற்ற அரசியல் தலைவர்களைப் போலவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூட, பயங்கரவாதத்துக்கு மத அடைமொழி எதையும் தராமல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசினார்; அதற்கும் மேலாக, இஸ்லாம் அமைதியை விரும்பும் மதம் என்று கூடப் பேசினார். இதற்காக அவரையே ""இமாம் புஷ்'' என்று உள்ளூர் விமர்சகர்கள் கிண்டல் செய்தனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது மத உணர்வும் மதப்பற்றும்தான் என்பதைச் சொல்ல ஒரு மகான் தேவையில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சரியல்ல, இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கவில்லை என்றெல்லாம் மறுப்புரைகள் ஆயிரம் வழங்கினாலும் கூட, பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும்போதெல்லாம் மதத்துடன் இணைத்துப் பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. உள்ளபடியே இதற்கு மதம் காரணம் இல்லை என்றால், உலகின் பல நாடுகளில் நடைபெறும் இத் தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்களையெல்லாம் பட்டியலிட்டு அவர்களை இணைக்கும் கயிறு எது என்று பார்த்தால் அது அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மதமாகத்தானே இருக்கிறது?

கஃபீல், சபீல் அகமதுகளின் தோல்வியில் முடிந்த தாக்குதல் முயற்சி குறித்துப் பேசுகிற பிற நாட்டவர், இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இந்திய முஸ்லிம்களும் பங்கேற்க ஆரம்பித்துவிட்டனர் என்றே பேசுகின்றனர்.

இந்தப் பேச்சுதான் இந்தியாவையும் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற தலைவர்களாலும் முஸ்லிம் தலைவர்களாலும் இந்த பாதிப்பைப் போக்கிவிட முடியாது. எனவேதான் முஸ்லிம்களின் "மத' அடையாளத்தைவிட "தேசிய' அடையாளத்தை இப்போது வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ""கஃபீலும் சபீலும் இந்தியர்கள், அவர்களை முஸ்லிம்களாக அடையாளம் பார்க்காதீர்கள்'' என்று பேச ஆரம்பித்துள்ளனர். சகாபுதீன் இப்போது, ""முஸ்லிம் இந்தியர்கள்தான்'', ""இந்திய முஸ்லிம்கள்'' அல்ல என்று இப்போது வலியுறுத்துவாரா? வீம்புக்குக்கூட செய்ய மாட்டார் என்று நம்பலாம்.

வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களை ""முஸ்லிம் இந்தியர்களாகவோ'', ""முஸ்லிம்களாகவோ'' அடையாளம் காண்பதைவிட ""இந்தியர்களாகவே'' அடையாளம் காண விரும்புகின்றனர். ஜின்னாக்களும் சகாபுதீன்களும் செய்த தவறை கஃபீலும் சபீலும் திருத்தி விட்டனர்.

அதே சமயம் ஒரு கேள்வி, இந்திய முஸ்லிம்கள் ""இந்தியர்களாகவே'' நீடிப்பதை மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் சகித்துக் கொள்வார்களா? எதிர்காலம்தான் இதற்குப் பதில் சொல்ல முடியும்.

(நன்றி: தினமணி)

7 Comments:

சீனு said...

//இது தவறு, இது தேசப்பற்றுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமுதாயத்தில் எவரும் கண்டிக்கவில்லை. மாறாக, மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் சையது சகாபுதீனையே இஸ்லாமிய சமூகத்தின் அறிவுஜீவியாக அங்கீகரிக்க ஆரம்பித்தனர்.//

அது சரி! தஸ்லிமாவை தாக்கியவர்களை கண்டித்தே ஒன்றும் சொல்லாதவர்கள்...

//இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சரியல்ல//

பயங்கரவாத இஸ்லாம் என்று சொல்லலாமா, 'முஸ்லீம் இந்தியர்' என்பது போல??? ;)

//அதே சமயம் ஒரு கேள்வி, இந்திய முஸ்லிம்கள் ""இந்தியர்களாகவே'' நீடிப்பதை மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் சகித்துக் கொள்வார்களா?//

அது எப்படி? ஓட்டு பொருக்கிகள் விட்டுவிடுவார்களா?

Anonymous said...

தேசப்பற்றை காலத்துக்கும் குத்தகைக்கு எடுத்தோர் 'சங்கத்தின்' குதர்க்க மூர்த்திகள் இப்படித்தான் எழுதுவார்கள். யதார்த்தத்தில் எல்லோருக்கும் அவரவர் இனமே (மதமே) தேசத்தை விடவும் முக்கியமானது என்பது நிதர்சனம். பார்ப்பனீய மதத்தவர்கள் உட்பட.

உதாரணமாக, பூணூல் போன்ற மதச்சின்னம் அணிய மதச்சார்பற்ற அரசு தடை விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது மதச்சின்னத்தை விட நாட்டுச் சட்டம் தான் முக்கியம் என்று பிராமணர்கள் கிளர்ச்சி செய்யாமல் இருப்பார்களா?

அதைவிடுங்கள், நாட்டை விட தன் மதம் பெரிதில்லை என்று ஃபிலிம் காட்டுகிற கு.மூ க்கள் நாடு இதனால் அவமானமடையும் என்று தெரிந்துருந்தும் பாபர் மசூதியை இடிப்பார்களா?

ஆக, நாட்டை விட மதமோ இனமோ பெரிதில்லை என்பது டகால்டி-க்காக.

துலுக்கனோ, பார்ப்பானோ, திராவிடனோ,தோழனோ, மதம்/இனமே நாட்டை விட பெரிது என்பதே யதார்த்தம்.

பெரும்பான்மை மதவெறி தன்னை நாட்டுப்பற்றாக முன்னிறுத்திக்கொள்கிறது.

Anonymous said...

Well said Navin. Unmai eppodhum kasakkum...

Anonymous said...

If a "Indian secular" govt bans wearing of "poonul" a brahmin will accept it PROVIDED the same govt removes the ban on wearing of burkha by muslim women also. You fool first understand that secular does not mean "anti-brahmin" or "anti-Hindu" as practised in India. Secular means non-interference in any faith & keeping equi distance from all faiths. Not the one practised by India's politicians (like MK) participating & drinking Ramzan Ganji & at the same breath scolding the practice of Hindu women wearing "pottu".
It seems you fellows will not rest until handing over India to Taliban.

Anonymous said...

//If a "Indian secular" govt bans wearing of "poonul" a brahmin will accept it PROVIDED the same govt removes the ban on wearing of burkha by muslim women also.//

Foolish Comparison.
Poonul is still refused for certain sect of people called 'Hindus' and make division among people, whereas burkha is on the own wishes of the wearer. But your statement proves your fanaticism in CAPITALs.


//You fool first understand that secular does not mean "anti-brahmin" or "anti-Hindu" as practised in India. Secular means non-interference in any faith & keeping equi distance from all faiths.//

Great. So, in your dictionary secular means "Anti-Muslim" or "Anti- Islam"?

If you believe in secularism, first tell them to stop poojas celebrated in GOVT OFFICES.

//Not the one practised by India's politicians (like MK) participating & drinking Ramzan Ganji & at the same breath scolding the practice of Hindu women wearing "pottu".
It seems you fellows will not rest until handing over India to Taliban.//

Talibanism need only to correct Brahmin chavanists like you

Anonymous said...

//(like MK) participating & drinking Ramzan Ganji & at the same breath scolding the practice of Hindu women wearing "pottu".//

Why M.K here?

Did he ever refused 'Kozukkattai' after you people's invitation.
As a hindu by birth, he has the right to criticize hindu pottu.
if you can, Reply/Expalin him or accept him, that's all

australian tamil muslim association said...

குருமூர்த்திய்யின் முகம் எனக்கு அரியா, அனால் அவரின் பாசிச வெறிபிடித்த எழுத்துக்கள் நமக்கு அவரின் முகத்தை படம் பிடித்து காட்டுகிறது
அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

இதை படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் 'பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?' என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.

குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.


அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.

பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். - - குருமூர்த்தி//

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.


//முதலில், இந்தியாவையும் அதன் மக்களையும் இரண்டாகப் பிளவுபடுத்த விரும்பிய முகம்மது அலி ஜின்னா, இந்தியர்களாக இருந்த மக்களை 'இந்தியர்கள்' என்றும் 'முஸ்லிம்கள்' என்றும் இரண்டாகப் பிரித்தார். இந்தியர்களாக இருக்க விரும்பாதவர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டைப் பெற்றார். - குருமூர்த்தி//

இந்திய மக்களை முகம்மது அலி ஜின்னா எப்போதைய்யா பிரித்தார்? பிரிக்கிற வேலையெல்லாம் உங்க பாப்பார ஜாதியுனுடைய வேலைதானுங்க ஐயரே! என்று மேற்கண்ட இவரின் வரிகளை படிப்பவர்களின் உள்ளம் சொல்லும்.

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப் பற்றி கேள்விப் பற்றிருக்கிறோம் ஆனால் குருமூர்த்தி ஐயரோ ஒரு பூசனித்தோட்டத்தையே சோற்றில் மறைக்கிறார். இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினைக்கு மூல காரணம் முகம்மது அலி ஜின்னா என்ற முஸ்லிமா? அல்லது வல்லாபாய் படேல் என்ற பார்ப்பனரா? என்பதை இந்திய வரலாற்றை படித்தவர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இந்தியர்களாக இருக்க விரும்பாதவர்கள் (அதாவது முஸ்லிம்களாக வாழ விரும்பியவர்களெல்லாம்) பாகிஸ்தானுக்குப் போனார்களாம், முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தான் என்று மேலும் திரிக்கிறார். இந்தியாவை அனு ஆயுத நாடாக ஆக்கியதில் இருந்து முன்னேற்றத்தை நோக்கிய இந்தியாவின் ஒவ்வொரு அசைவிலும் இந்திய முஸ்லீம்களின் உழைப்பும் வியர்வையும் உள்ளதை அவாள் வசதியாக மறைக்கிறார். இவரின் வகையராவான பிஜேபி சங்பரிவாரங்கள் கடந்த ஆட்சியில் இந்திய வரலாற்றை பொய்யாக திரித்து எழுதிவிட்டபடியால் உண்மை வரலாற்றை மக்கள் மறந்திருப்பர் என்று தப்புக்கணக்கு போட்டு அறிவிழித்தனமாக எழுதினாரா அல்லது வந்தேரி பார்ப்பன வம்சத்தில் பிறந்தமையால் இந்திய வரலாற்றை பற்றிய அறிவின்மையை வெளிப்படுத்தினாரா என்பது மேற்படியாருக்கே வெளிச்சம்.

//சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த தேசப்பற்றும், ஒற்றுமை உணர்வும் மங்கிப் போனதால், மூன்றாவது கட்டத்தில் முஸ்லிம்களிடம் தங்களுடைய தேச உணர்வைவிட மத உணர்வே தூக்கலாக இருந்தது.

அரசுப் பணியிலிருந்து விலகி இஸ்லாமியச் சேவையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார் சையது சகாபுதீன். 'இந்திய முஸ்லிம்' என்ற வார்த்தையை 'முஸ்லிம் இந்தியர்' என்று மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அதே பெயரில் பத்திரிகையையும் தொடங்கினார்.- குருமூர்த்தி//

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதற்கு உமக்கு என்னய்யா தகுதியுள்ளது? இந்திய மக்களிடம் இருந்த ஒற்றுமை உணர்வை சைவசித்தாந்தம், வர்ணாசிரமம் என்று தத்துவங்கள் கூறி பிரித்ததே உங்க ஆத்துக்காரங்க தானாய்யா ஐயரே! என்று மேற்கண்ட அவரின் புழுகலைப் படிக்கும் சிந்திக்கும் திறன் கொண்ட மக்கள் பதிலிளிப்பர்.

'சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்த தேசப்பற்றும், ஒற்றுமை உணர்வும் மங்கிப் போனதால்' என்று அக்கன்னா வைத்து எழுதியுள்ளார் ஐயர்வால். அதாவது பிரிட்டனிலிருந்து நம் நாட்டிற்குள் ஊடுறுவிய ஆங்கிலேயர் தங்களது பிரித்தாலும் சூழ்ச்சியால் இந்தியாவை ஆண்டனர். அவ்வெள்ளையர்களை (பார்பன வந்தேரிகளைத் தவிர) இந்தியர்களாகிய நாம் தேசப்பற்றோடும் ஒற்றுமை உணர்வோடு எதிர்கொண்டு விரட்டி அடித்தோம்.

அது போல, இந்திய மக்களை உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், வேசியின் மகன் என்றெல்லாம் பிரித்து வேற்றுமைப் படுத்தியுள்ள இந்த நவீன வெள்ளையர்களான பிராமனர்களை வந்த வழியிலேயே விரட்டி அடிக்கவேண்டும், அதற்காக இந்தியர்களாகிய நாம் தேசப்பற்றோடும் ஒற்றுமை உணர்வோடு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகவேண்டும் என்று சூசகமாக சொல்கிறார் போலும். குருமூர்த்தி ஐயரின் அக்ரகாரத்தில் என்ன குழப்பமோ?

என்னமோ சுதந்திரத்துக்கு பார்ப்பனர்கள் தான் வித்திட்டது போல் எழுதியிருக்கின்றார் இந்த பார்ப்பனர். இந்திய சுதந்திரத்தின் முதல் வித்தை நட்டது இந்திய முஸ்லிம்கள். அந்த வித்தும் தென்னிந்தியாவில்தான் நடப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆரம்பம் என்று கருதப்படுகின்ற முதல் சிப்பாய் கலகத்தின் முன்னோடிகள் எம் முஸ்லிம்கள் என்பதை ஐயர் மறந்து விட்டாரா? இல்லை அறிந்திருந்தும் மறைக்க முற்படுகின்றாரா?

தங்களை தேச பக்தர்களாக அடையாளம் காட்டிக் கொள்ளும் வாஜ்பாய் போன்ற கோட்சேயின் கூட்டங்களான இந்த வந்தேறி பார்ப்பனர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து வழமையாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அதேநேரத்தில் பர்மாவிலும், மலேசியாவிலும் சொத்து சுகங்களோடு வளமாக வாழ்ந்து கொண்டிருந்த எம் முஸ்லிம்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் சொத்து சுகங்களை விற்று அப்பணத்தில் தியாகி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் இந்தியாவின் முதல் இராணுவத்தை உண்டாக்கினர். வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அன்றைய ராணுவத்தை தலைமையேற்று நடத்தியதும், அதற்காக தியாகங்களை செய்து உழைத்ததும் எம் முஸ்லிம் மக்கள் என்பதை மறைத்துவிட்டீரே ஐயரே!.

இப்பேருண்மையை ஐயரின் ஜாதிக்காரரான பிரபல பயங்கரவாதி துக்ளக் சோ முதற்கொண்டு ஒப்புக்கொண்ட தியாக சரித்திரத்தை மறைக்க முற்படுகின்றாரா ஐயர்? (வீடியோவை காண FOR WINDOWS MEDIA PLAYER அல்லது FOR REAL PLAYER OR TO DOWNLOAD IT AS MPG FILE (NOTE : PLEASE CLICK RIGHT MOUSE AND SELECT "SAVE TARGET AS" OPTION)

வீரசாவர்க்கர், கோல்வால்க்கர் போன்ற வந்தேறி பார்ப்பனர்கள் ஆங்கிலேயருக்கு சேவகம் புரிந்து துரோகிகளாக வாழ்ந்த அதே காலத்தில் எம்மக்கள் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களை தம் நெஞ்சிலே தாங்கி மாப்பிள்ளைமார் எழுச்சியாகவும், ஜாலியன் வாலாபாக்கிலும், வங்காளத்திலும் இன்னும் அன்றைய இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்த வீர வரலாற்றை இன்றும் வரலாறு பறைசாற்றிக்கொண்டிருப்பதை உம்மைப்போன்றவர்கள் என்னதான் செய்தாலும் மறைக்க இயலாது ஐயரே!!

இந்தியாவின் இரகசியங்களை அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானிற்கும் விற்றதாக இதுவரை கைது செய்ப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையோர் பார்ப்பன இனத்தை சார்ந்த இந்துக்களே. இன்னும் இந்திய உளவுத்துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி இந்திய ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் விற்ற பார்ப்பன துரோகி இன்றும் அமெரிக்காவில் பதுங்கியுள்ளான். அவனை கைது செய்ய இந்திய அரசு வாரண்டும் பிறப்பித்துள்ளது. இது தினமணி உட்பட பல பத்திரிகைகைளில் வந்த செய்தி அதற்காக அந்த பார்ப்பனர் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த பார்ப்பன மற்றும் இந்துக்களின் பிரதிநிதி அதனால் அனைவரும் துரோகிகள் என்று சொன்னால் ஐயர் ஏற்றுக் கொள்வாரா?

சைய்யது சகாபுதீன் ஒரு கருத்தைச் சொன்னால் அது ஒட்டு மொத்த இந்திய முஸ்லீம்களின் கருத்தாகுமா? அல்லது சைய்யது சகாபுதீன் என்பவரின் எல்லாக் கருத்தையும் இவர் ஏற்றுக் கொள்கிறாரா? இதை இவருடைய பாஷையில் கேட்பதானால், குருமூர்த்தி ஐயர் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இங்குள்ள அத்தனை பிராமனர்களும் இவர்போல விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய வேண்டும் என்று எவரும் புரிந்து கொள்வார்களா?

காஷ்மீர், ஷாபானு போன்ற வழக்குகளால்தான் இந்தியாவில் இந்துத்துவா வளர ஆரம்பித்ததாம்!! என்ன ஒரு அறியாமை!! ஐயரே இந்துத்துவ தீவிரவாதம் தனது கோர முகத்தை காட்டி பல வருடங்கள் ஆகின்றன என்பதை நாசுக்காக மறைத்துள்ள உம்மை எப்படித்தான் ஆய்வுக்கட்டுரை எழுத தினமணி நிர்வாகம் அனுமதித்ததோ?

ஐயரே ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து தீவிரவாத அமைப்புக்களின் தாயான மஹா ஜன சங்கம் 1900 த்திலேயே ஆரம்பமாகிவிட்டது என்பதை திட்டமிட்டு மறைத்துவிட்டீரே. இன்னும் இந்து திவீரவாதம்தான் இந்திய துனைக்கண்டத்தில் மற்ற தீவிரவாத்திற்கெல்லாம் வழிகோலிய முதல் பயங்கரவாத அமைப்பாகும். அதன் கோர முகத்தை மக்கள் தெளிவாக அறிந்து கொண்டது தேசபிதா மஹாத்மா காந்தியின் படுகொலையின் போதும், இந்திய சுதந்திரத்தின்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் லட்சக்கணக்கான அப்பாவி ஜனங்களின் உயிரை குடித்து ரத்தத்தை தனது முகங்களில் பூசிக்கொண்டபோது அதன் கோர முகத்தை உலகம் உணரத் துவங்கியது.

அதன் அன்மைய எடுத்துக்காட்டு ஐயரே ஒத்துக்கொண்ட இந்து தீவிரவாத அமைப்பு ஆட்சி புறியும் குஜராத்தில் வயிற்றை கீறி கருவை சூழத்தில் குத்தியெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்கியபோது இந்திய மாதாவின் முகத்தில் உலகம் காறி உமிழ்ந்தது ஐயருக்கு நிணைவில்லையோ? ஐயர் கூறுவது போல் இந்தத் தீவிரவாதத்தை முஸ்லீம்களா செய்தார்கள்? மனித உயிர்களை தீயிலிட்டு பொசுக்கிய மனிதாபிமானமே இல்லாத தீவிரவாதம் எந்த மதத்தோடு சம்பந்தப்பட்டது? மாலேகான் பள்ளிவாயிலில் தொழுது கொண்டிருந்தவர்களை ஓட்டுதாடியுடன் வந்து வெடிகுண்டு வைத்து கொன்றது எந்தத் தீவிரவாதம்? ஐயர் விளக்குவாரா?


முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?


முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

யார் இந்த குருமூர்த்தி? இவர் இந்தியரா? அல்லது இந்துவா?


ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் போயன் கனவாயிலிருந்து நமது இந்திய திருநாட்டிற்குள் ஊடுறுவியவர்கள்தான் இந்த பார்ப்பனர்கள். இவர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் போது அவர்களுக்கு அகமகிழ்ந்து அடிவருடி அவர்களின் அன்பைப்பெற்று பதவி சுகங்களை அனுபவித்தனர். சுதந்திரப் போரில் களமிறங்கி தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து போராடிய நமது அப்பன் பாட்டன்களை இப்பார்ப்பனர்கள் வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்து வெகுமதிகள் பெற்றனர். கருமமே கண்ணாக அக்காட்டிக் கொடுக்கும் தொழிலை இன்றும் தொடர்கின்றனர். அந்த பார்ப்பன பனியாக் கும்பலின் வாரிசுதான் நம்ம குருமூர்த்தி ஐயரும்.

இவர் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா' என்று அகழ்வாராய்ச்சி செய்வதற்கு முன்னர் பூலோக விதியின் படியோ அல்லது தனது வம்சாவழி பிறப்பின் அடிப்படையிலோ (குருமூர்த்தி ஐயராகிய இவர்) தான் இந்தியனா? அல்லது இந்துவா? என்பதை அவரது லாஜிக்படியே சிந்திக்கட்டும். இவரைப்பார்த்து நாங்கள் கேட்கிறோம்,

ஓ! குருமூர்த்தி ஐயரே நீர் கூறும், இந்து மதத்திற்கு முதல் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை இந்துக்கள் என்று உம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

உம்மால் முடியும் என்றால் உமது பூநூலை அறுத்து குப்பையில் வீசிஎறிந்துவிட்டு நானும் தலித்தும் சமம்தான் என்று நீர் சொல்லத் தயாரா? எமது தலித் சகோதரனுக்கு உம்குடும்பத்தில் சமபந்தி போஜனமும், சம்மந்தி போஜனமும் நீர் வழங்கத் தயாரா?

உமது வர்ணாசிரமத் தத்துவம் என்னும் தகிடுதத்தங்களை பெட்ரோல் ஊற்றி கொழுத்திவிட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரை கோயிலின் கர்பக்கிரகத்திற்குள் அனுமதித்து தீப ஆராதனைக்கு அனுமதிக்கவேண்டி நீர் பரிந்துரைக்க தயாரா?

கொலைகார செக்ஸ் சைக்கோ சங்கராச்சாரியாரை ஜெயிலுக்கு அனுப்பவும், அதே இடத்தில் ஒரு திராவிடத் தோழரையோ, அல்லது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்திலிருந்து ஒருவரையோ தலைமைப்பீட மடாதிபதியாக பதவியில் அமர்த்த இதே தினமணியில் ஒரு ஆக்கம் எழுதி நீர் வெளியிடுமே பார்க்கலாம்.

இந்து, இந்தியன் என்று வேஷம்போடும் பார்ப்பன கொலைகார கும்பல் அனைத்திற்கும் மேற்கண்ட அறைகூவலை ஒரு சவாலாகவே வைக்கிறோம் அப்போது தெறியும் இந்த வந்தேறி பார்ப்பன கும்பலின் தேசாபிமானம். தேச ஒற்றுமை என்பது, எப்போது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமில்லாமல் இந்தியாவின் தலித்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் நடத்தப்படுகின்றனரோ அன்றுதான் தேச ஒற்றுமையை பற்றியும், இந்தியர்களை பற்றியும் பேச ஐயருக்கு அருகதை வரும். சங்கரமடத்தின் மடாதிபதியாக ஒரு தலித்தை நிறுவியபிறகு ஐயர் இந்திய தேசப்பற்றை பற்றி பேசட்டும்!!

இன்னும் நான் தலையில் இருந்து பிறந்தவன் தலித் காலில் இருந்து பிறந்தான் என்று தனது பார்ப்பன குல மமதையில் திறியும் குருமூர்த்தி ஐயரின் ஜாதியினர் ஒரு தலித்தின் வீட்டில் தனது மகளுக்கு சம்மந்தம் பேசி முடிக்கட்டும் அன்று பேசலாம் இந்திய தேச பக்தியை பற்றி!! அதுவரை ஐயருக்கோ அல்லது தன்னை உயர்ந்தவன் என்று கூறித்திறியும் எந்த இந்து தீவிரவாதிக்குமோ இந்திய தேசபக்தியை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பேசுவதற்கு அருகதை இல்லை.
தினமணிக்கு இது அழகல்ல

தினமணி நாளிதலுக்கென்று தமிழக மக்களிடையே ஒரு நன்மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை கெடுக்கும் வகையில் குரு மூர்த்தி போன்ற சங்பரிவார பேர்வழிகளை எழுதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது நடுநிலை சிந்தனையுள்ளவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.