பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 21, 2007

ராமதாஸ் கேள்விகளுக்கு கருணாநிதி திணறல் - வைகோ

திமுக ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். ஆட்சிக்கு எதிராக நித்தம் போர்க்கொடி தூக்கி சவுக்கடி கொடுக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் கருணாநிதி திணறுவதாகவும் அவர் கூறினார். முழு பேச்சி கீழே...

வைகோ பேச்சு:
ஏழை, எளிய நடுத்தர மக்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறு கிறது. பத்திர பதிவு வழிகாட்டு மதிப்பை உயர்த்தியிருப்பதன் மூலம் பெரும் பணக்காரர்களும், கருப்பு பண முதலைகளும் லாபமடைய இந்த அரசு வழி செய்திருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினரின் துணையுடன் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளம் அழியும் அபாய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தின் அனைத்து உரிமை களும் இந்த ஆட்சியில் பறிபோய் கொண்டிருக்கின்றன. காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய நதிநீர்ப் பிரச்சனைகளில் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கேரள அரசாங்கம், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் நமக்கு நியாயமாக தண்ணீர் விட மறுக்கிறார்கள். ஆனால் இங்கிருந்து கேரளாவுக்கு அரிசி, பால், காய்கறி போன்ற உணவுப் பொருட்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி வருகிறார். இதனை மதிமுகவும் ஆதரிக்கிறது.

மணல் கொள்ளை உள்ளிட்ட இந்த அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நித்தமும் போர்க்கொடி தூக்கி பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் சவுக்கடிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் கருணாநிதி திணறி வருகிறார். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கப் போவதில்லை

2 Comments:

Boston Bala said...

உங்க வாசகர்களிடம் பாஜக-விற்கு அமோக ஆதரவு போல :P

IdlyVadai said...

பாபா நான் பாத்த போது, பாஜக-விற்கு 32 இருந்தது இப்ப 33 இருக்கு :-)