பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 20, 2007

நோ டைட்டில்

என்ன டைட்டில் வைக்கலாம் என்று ரொம்ப குழம்பி போயிருக்கேன். அதனால் இந்த பதிவுக்கு நோ டைட்டில் :-)

2500
இது வெறும் எண் இல்லை
இருக்கும் இனங்கள்
இன்று வந்தவைகள்
நாளை இருப்பதில்லை
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை
நம்மை -
நிம்மதியாக இருக்கவிடுவதுமில்லை
கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால்
வலது, இடது என்று பார்க்காமல்
கடித்து வைக்கும் ரத்தக் காட்டேரிகள்
மணம் வீசும் இடத்தில்
தேன் வழியும் இடத்தில்
திறந்த வெளியில்,
பூங்காக்களில்,
கடற்கரை ஓரத்தில்...பரவியிருக்கும்
தண்ணீரை பார்த்தால்
கூட்டம் சேர்ந்துக் கும்மி அடிக்கும்
தன் இனக் குஞ்சுகளைப் பெருக்கும்.
காதருகில் கேட்க சகியா கானம் பாடும்
பட்டை அடித்துக் கொள்பவர்களைக் குறிவைக்கும்
கும்மி முடிந்தபின் காற்றுவாக்கிலேயே
நோய்கள் பரவிக் கொல்லும்
மரத்தடி என்றால் மலேரியா
காப்பிக் கடையில் டெங்கு
அன்புடன் இடங்கொடுத்தால் உங்களுக்கு - சிக்குன்குனியா
பெண்ணுக்கு வாய் நீளம்
அதனால் கடித்து வைக்கும்
சொறிந்து கொண்டால் அரிப்பு அடங்கும்
ரொம்பச் சொறிந்தால் தடித்துப் போகும்
அலறிப் புடைத்து அத்தனை பேரும்
வீட்டுக் கதவுகளை அடைக்கின்றனர் தினந்தோறும்
எப்படியும் சிலது
வலைக்குள்ளே வந்தும் பாடுபடுத்தும்
அடிக்காமல் விட்டால் டைனோசர் ஆகும்
கடிப்பது அதன் சுபாவம்
அடிப்பது நம் சுபாவம்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று
பாஸ்போர்ட் இல்லாமல் எங்கும் இருக்கும்
சோதனைக்கூடத்தில் ஒரிஜினலை விரட்ட
போலிகளை உருவாக்க ஆராய்ச்சி
கட்டுப்படுத்த
Do's and Don'ts நிறைய இருந்தாலும்
என்றுமே நமக்கு இது தொடர்கதை தான்

ஒரு "கொசு" றுச் செய்தி: இன்று உலக கொசு தினம்

கடிக்க விரும்பும் கொசுக்கள் பின்னூட்டத்துக்கு செல்லவும்

9 Comments:

உண்மைத்தமிழன் said...

அண்ணே.. நச்சுங்கண்ணேன்.. நீங்களே இப்படி கொசு மாதிரி கடிச்சுப்புட்டு கடிக்குறதுக்கு எங்களைக் கூப்பிட்டா எப்படி? எங்களால உங்களை அடிச்சுக் கொல்லத்தான் முடியும்.. நேர்ல வாங்க..

Mathi said...

:)))

Anonymous said...

கொசுக்கடிக்கே இப்படி என்றால் தேள் கடிக்கு எப்படி இருக்கும் :-)

மடல்காரன்_MadalKaran said...

நல்ல கடி..
மருந்து அடிச்சு கொல்ல துடிக்குது மனசு - இருந்தும்
அது பறந்து வந்து கடிக்குது என்ன பண்ண?

யோசிப்பவர் said...

//'மரத்தடி' என்றால் மலேரியா
'காப்பிக் கடை'யில் டெங்கு
//
யாரையாவது குறிவச்சு கடிச்சிருக்கீங்களா?;-))

IdlyVadai said...

யோசிப்பவர் இது கொசுவை பற்றி எழுதியது. யாரையும் குறி வைத்து எழுதவில்லை.

தறுதலை said...

வந்தேறிகள் என்றால் உலகில் பரவிக்கிடக்கும் அத்தனை மணிதர்களும் வந்தேறிகள்தாம். நகர முடியாமல் முடங்கிக் கிடந்தால் மனித இனம் ஆப்பிரிக்காவைவிட்டு (தற்போதைய தரவுகளின்படி) வெளியே வந்திருக்காது. எனவே யாரும் யாரைப் பார்த்தும் வந்தேறிகள் என்று விளிப்பதற்கு உரிமை இல்லை.

ஆனால்.... ஆனால்....
வந்தேறிய இடத்தில் அங்கிருக்கும் சூழலுக்கு ஏற்ப மாறாமல் தான் கண்டதே வேதம், கொண்டதே கோவணம் என்று இருந்தால் கொசுக்கடி, தேள்கடி, பாம்பு அடி எல்லாம்தான் வாங்க வேண்டியிருக்கும்.

-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Anonymous said...

//உலக கொசு தின வாழ்த்துக்கள் //

அடடா! நமக்கெல்லாம் கூட தினம் இருக்கா, தெரியாம போச்சே..

Anonymous said...

//சோதனைக்கூடத்தில் ஒரிஜினலை விரட்ட
போலிகளை உருவாக்க ஆராய்ச்சி
கட்டுப்படுத்த
Do's and Don'ts நிறைய இருந்தாலும்
என்றுமே நமக்கு இது தொடர்கதை தான்//

இது மேட்டரு!!