பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 31, 2007

வானிலை அறிவிப்பு

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது அனைவருக்கும் தெரிந்தது. தமிழர்களுக்கு அவ்வப்போது தலை காட்டிய மழை நேற்று அடை மழையாக விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து சென்னையில் மற்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இது தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை கொட்டும் என்று எதிர்பாக்கபடுகிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு மழை வந்ததால் சென்னை வாசிகள் ஆனந்தமாக இருக்கிறார்கள். பருவகால மாற்றம் காரணமாக சென்னையில் வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கி உள்ளது. இரவில் லேசான குளிர் வாட்டுகிறது. எதிர்பாராமல் வந்த மழையினால் சென்னை நகர சாக்கடைகள் நிரம்பி வழிகிறது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Comment:

Anonymous said...

ஏகப்பட்ட உள்குத்துக்களை கொண்ட டிரேட் மார்க் இட்லி வடையார் பதிவு இது தான்.

'சென்னை'யில் மழை? ம்.. நடத்துங்க.