பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 30, 2007

மலேசிய தமிழனின் சாதனை !

சாதனைகள் பலவிதம்...

மலேசியத் தமிழரான ராதாகிருஷ்ணன் வேலு ஒரு சாதனைப் பிரியர். பல சாதனைச் செயல்களை நிகழ்த்தியுள்ள அவருக்கு ரயிலை பற்களால் கடித்து இழுக்கும் புதிய சாதனையைப் படைக்கும் ஆர்வம் எழுந்தது.

இதையடுத்து கோலாலம்பூர் பழைய ரயில் நிலையத்தில் தனது சாதனையை நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் நிகழ்த்தினார். 7 பெட்டிகள் கொண்ட ரயில் இதற்காக வரவழைக்கப்பட்டது. அந்த ரயிலின் எடை 297.1 டன் ஆகும்.

பின்னர் அந்த ரயிலை தனது பற்களால் இழுத்து சாதனை படைத்தார் வேலு. இந்த சாதனையை கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

1 Comment:

Anonymous said...

//மலேசிய தமிழனின் சாதனை ! //

சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்றியே இட்லிவட.. எப்பிடி உன்னால மட்டும்.... :-)