பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 22, 2007

கூட்டமாக என்ன பார்க்கிறார்கள் ?


சென்னை மக்கள் ஆர்வமாக எதை பார்க்கிறார்கள் ? விவரம் கீழே..


சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ராஜகோபுரத்தை இடி தாக்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கபாலீசுவரர் கோவில்

சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ராஜகோபுரம் சுமார் 140 அடியில் கம்பீரமாக காட்சி அளித்துவருகிறது. இந்த கோபுரம் மொத்தம் 9 அடுக்குகளை கொண்டது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று பகலில் மேகமூட்டமாக இருந்தது. மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5.55 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி ஒன்று கபாலீசுவரர் கோவில் கோபுரத்தின் தெற்கு பகுதியை தாக்கியது. ராஜகோபுரத்தின் நாசித்தலை பகுதியில் இந்த இடி விழுந்தது.

இதில் ராஜகோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தன. ராஜகோபுரத்தின் மீது இடி விழுந்ததால் கோவிலில் இருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலைகள் விழுந்ததில் கோவிலில் பணியாற்றி வந்த பாரி என்பவர் உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கோவில் அருகே உள்ள காலணிகள் பாதுகாக்கும் கூரை மீதும் சிலைகள் விழுந்தன. இதில் லட்சுமி, முருகன், சிங்கம் ஆகிய சிலைகள் சேதம் அடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பிக்கப்படும்

தகவல் அறிந்ததும், கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லிகுப்புசாமி, வைத்தியநாதன்,கோவி லின் இணைகமிஷனர் தனபால், செயல் அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜகோபுரத்தின் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.இது குறித்து இணைகமிஷனர் தனபால் கூறியதாவது:-

ராஜகோபுரத்தின் உச்சிப்பகுதியான நாசித்தலையின் தெற்கு பகுதியை இடி தாக்கியுள்ளது.இத னால் சிறிய அளவுக்கு சிதைவு ஏற்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இடையூறு இல்லாத வகையில், இடி தாக்கியதற்கு உடனே கோவிலில் பிராயச்சித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரத்தின் சிதைந்த பகுதி புதுப்பிக்கப்படுகிறது. இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஆகும். கடந்த வருடத்தில் தாரமங்கலம், திருநாகேஸ்வரம் ஆகிய கோவில்களின் இதே போல் இடிதாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்கள் கூட்டம்

கபாலீசுவரர் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்த செய்தி காட்டுத் தீ போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். மேலும் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலுக்குள் வந்த அனைவரும் கோபுரத்தின் மீது இடி விழுந்த இடத்தை கீழே இருந்து கொண்டே பார்த்தனர். கோவிலுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கோபுரத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிற்பத்திற்கு சேதம் ஏற்பட்டதால் அது கீழே விழுந்து விடாமல் இருக்க கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.

இடி விழுந்த கபாலீசுவரர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்கனவே இடிதாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
( செய்தி, படங்கள் : தினத்தந்தி )

2 Comments:

Hariharan # 03985177737685368452 said...

கூட்டணிக் கட்சி உறவில் இடி விழுந்து கழக ஆட்சிக்கு ஆபத்து ஏதும் வந்துடக்கூடாதுன்னு பகுத்தறிவுகள் அங்கப்பிரதட்சணம் , பிராயசித்தம் வேண்டி கபாலியிடம் வருவார்கள்...

பகுத்தறிவுக்கூட்டத்தை உற்றுநோக்கினால் பெரிய குங்குமப்பொட்டும், மஞ்சள் துண்டும் தெரியும்!

முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்...முதல்வர் இன்று கபாலீஸ்வரர் தெப்பக்குளம் வழியாகச் செல்லுமாறு செல்லும் வழி மாற்றம் நியூஸ் வரும் / நிகழ்வு நடக்கும்...

கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் சேர்க்கும் :-)) மஞ்சள் துண்டு அறிவார் இதை :-))

Anonymous said...

hi anna astrology