பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 19, 2007

சண்டே சாயு(ம்)ங்காலம்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டில்லி அரசியலில் பெரும் புயல் கிளம்பியுள்ளது. இடதுசாரிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டுக்கு 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. டில்லியில் இதனை தெலுங்கு சேம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

* இந்தி நுழைந்து விடக் கூடாது என்று பயந்து ஆங்கிலத்தை வரவேற்றோம். ஆனால் 'இன்றோ ஆங்கிலம், தமிழை விரட்டி விட்டு விட்டது'

* அரசின் கேபிள் டிவி நிறுவனம் குறித்து ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியான அரசாணையில் குழப்பம் இருப்பதாகவும் அதுபற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்

இவை இரண்டையும் சொன்னது வேறு யார் நம்ம டாக்டர் ராமதாஸ் தான்.


அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட முடியாது, இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும் என்று சவால்விட்டு, மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய மன்மோகன் சிங், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவராஜ் பாடீல், அல்லது சோனியா காந்தி பெயர் அடிபடுகிறது.

2 Comments:

Anonymous said...

this is the saddest day of my life. if ever the left and sonia get what they want let us this is the beginning of the end.all teh oterh vultures like bjp, third front are waiting eagerly to destroy the country...

Hariharan # 03985177737685368452 said...

தமிழ்க்குடிதாங்கி தைலாபுரப் பெரிய மருந்து தினசரி தினசரிகளுக்கு நாலு பத்திச் செய்திக்காக பத்தி கூட்டணி பத்திஎரியற மாதிரி பெரிய பெரிய வெடிமருந்தா அடிச்சுவிடுறாரு.

வாழப்பாடி,சுப்பிரமணியசுவாமி மாதிரி பேப்பர் புலியா உறுமுகிறார் தினமும் பெரிய மருந்து!

2003 ஆம் ஆண்டில் தியாகி பட்டம் பெற்ற அன்னை சோனியா மீண்டும் பிரதமர் பதவிக்கு ஆசை? என்ன ஒரு அப்பழுக்கற்ற தியாகம்!

சிவ்ராஜ் பாடீல்??? படீல்ல்ன்னு விழுந்தா எழுந்திரிக்க முடியாத காங்கிரசு கிழம் கட்டைகள் கூத்து தாளலீங்க...

பெத்தப்பெருசு அர்ஜீன் சிங்கு எங்கே போனாரு? பேராண்டியோட வரதட்சிணைக்கொடுமை வழக்கை பைசல் செஞ்சிட்டு இருக்காரா...

கொடுமைடா சாமி!

//அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட முடியாது, இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும் என்று சவால்விட்டு, மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய மன்மோகன் சிங், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தில்லி அரசியல்//

ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தானா ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் பெருமைன்னு மன்மோகன்(அ)சிங்கம்
சீறி பிரதமர் பதவியை (தியாகி சோனியா காந்திக்கு )ரப்பர் ஸ்டாம்ப் பெருமை உடையதாக்கிய ஆற்றலை வியந்து போற்றி மெச்சத்தான் வேண்டும்!

சிங்கம் ஒரு Wild cat..
நம் மன்மோகன் சிங் ஒரு Mild Cat..