பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 17, 2007

சிம்புவிற்கு வந்த சோதனை


சிலம்பரசன் இப்போது `காளை,' 'கெட்டவன்' ஆகிய 2 புதிய படங்களில் நடித்து வருகிறார். அதில் `கெட்டவன்' படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், கதை-திரைக்கதை-வசனத்தையும் எழுதியிருக்கிறார். சிலம்பரசனுக்கு ஜோடியாக, புதுமுகம் லேகா வாஷிங்டன் நடிக்கிறார். கவர்ச்சிகரமான `அத்தை' வேடத்தில், சங்கீதா நடிக்கிறார்.படத்தின் இன்னொரு கதாநாயகியாக நமீதா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நமீதா தரப்பில் சில நிபந்தனைகள் விதிப்பதாகவும், அதிக சம்பளம் கேட்பதாகவும் தயாரிப்பாளர் விஸ்வநாதன் அதிருப்தி அடைந்துள்ளார்.

அதனால் பிரபல இந்தி நடிகை மந்த்ராபெடியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் விஸ்வநாதன் வந்து இருக்கிறார். மந்த்ராபெடி ஏற்கனவே `மன்மதன்' படத்தில், சிலம்பரசனுடன் நடித்து இருப்பதால், மீண்டும் சிலம்பரசனுடன் ஜோடி சேருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.

இதற்கிடையில், `கெட்டவன்' படத்தில் இப்படி ஒரு வேடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு, ஷெரீன் அந்த வேடத்தில் நடிக்க மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்காக கதாநாயகன் சிலம்பரசன், டைரக்டர் நந்து, தயாரிப்பாளர் விஸ்வநாதன் ஆகியோருக்கு போன் செய்து, ``கெட்டவன் படத்தில் நான்தான் நடிப்பேன்'' என்று பிடிவாதமாக வாய்ப்பு கேட்டு வருகிறார்.

நமீதா, மந்த்ராபெடி, ஷெரீன் ஆகிய மூன்று பேரில் யாரை நடிக்க வைப்பது? என்று சிலம்பரசன் குழம்பிப்போய் இருக்கிறார். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் ?

"கெட்டவன் படத்துக்காக, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நமீதாதான். படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஐந்து அல்லது ஆறு சீன்களில் வரும். அவருக்கு இரண்டு பாடல் காட்சிகளும் இருக்கிறது. நமீதாவைப் பொருத்தவரை, அவர் ஒரு நல்ல நடிகை. நல்ல சினேகிதி. ஆனால், அவருடைய மானேஜர் விதித்த நிபந்தனைகளால், தயாரிப்பாளர் நொந்து விட்டார்.

அதனால்தான் அவர், அவசரம் அவசரமாக மந்த்ராபெடியை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதற்கிடையில், அதே கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என்று ஷெரீன் போட்டிபோடுகிறார். எனக்கு யாரை நடிக்க வைப்பது? என்று குழப்பமாக இருக்கிறது."

இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.

சிம்புவிற்கு(கெட்டவனுக்கு) வந்த சோதனை யாருக்கும் வர கூடாது :-)

0 Comments: