பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 16, 2007

ராஜ் டிவி, கலைஞர் டிவி குழப்பம்

சுதந்திர தினமான நேற்று மாலை கலைஞர்" டிவி'யின் சோதனை ஒளிபரப்பு துவங்கியது. கலைஞர் "டிவி'யின் நேற்றைய சோதனை ஒளிபரப்பில், தொடர்ந்து சினிமா பாடல்கள் ஒளிபரப்பபட்டது. கலைஞர் "டிவி'யின் லோகோ "டிவி' திரையில் இடதுபுறம் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது.கேபிள் சேனல்கள் வரிசையில் ராஜ் "டிவி' தூக்கப்பட்டு, அந்த இடத்தில் கலைஞர் "டிவி' வருகிறது. ராஜ் "டிவி' பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இதனால், தெளிவாக ராஜ் "டிவி'யை பார்க்க முடியாத மக்கள் பெரிதாக பாதிக்கபடவில்லை.

எஸ்.சி.வி.தான் இதற்குக் காரணம் என தங்களை நாடும் பொதுமக்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர். விரைவில் இந்தக் குழப்பம் நீங்க, கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவி ஆகிய இரண்டையும் பிரைம் அலைவரிசையில் ஒளிபரப்ப எஸ்.சி.வி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயல் இளவரசு கோரியுள்ளார்.

சுமங்கலி கேபிள் விஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.சி.வி. நிறுவனம் வழங்கி வரும் கேபிள் டி.வி. இணைப்பில் ராஜ் டி.வி. வழங்கப்பட்ட இடத்தில் நேற்று மாலை முதல் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி. நிறுவனம், ராஜ் டி.வி. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ் டி.வி. நிர்வாகம் தங்கள் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு வந்த இடத்தை கலைஞர் டி.வி.க்கு அளிக்க ஒப்புக் கொண்டது.

இதையடுத்து கலைஞர் டி.வி. நிர்வாகம் கேட்டுக் கொண்டபடி ராஜ் டி.வி. வழங்கப்பட்ட இடத்தில் தற்போது கலைஞர் டி.வி. வழங்கப்பட்டு வருகிறது.

இப்பிரச்சினையில் எஸ்.சி.வி. நிறுவனம் தன்னிச் சையாக ஒரு முடிவை எடுத்து விட்டதைபோல தவறான தகவல் பரப்பப்பட்டு வரு கிறது. எனவே ராஜ் டி.வி. நிர்வாகத்துடன் கலைஞர் டி.வி. நிர்வாகம் செய்து கொண்ட உடன் பாட்டின் படிதான் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் எஸ்.சி.வி. கேபிளில் அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

0 Comments: