பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 13, 2007

ஸ்ரீகாந்த், வந்தனா சமரசம்

ஸ்ரீகாந்த் வந்தனா ஆந்திராவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடக்க இருந்த நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன் மீது எழுந்த பல கோடி மோசடி புகாரால் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்தை தள்ளி போட்டனர்.

வந்தனா வீட்டாரிடம் பேசுவதையும் தவிர்த்தனர். எங்கே ஸ்ரீகாந்த் நமக்கு கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற பயத்தில் அதிரடியாய் ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் புகுந்தார் வந்தனா. மேலும் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் பதிவு திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


வந்தனா, தனது வீட்டில் குடித்தனம் புகுந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்தும், அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், ஓட்டல்களிலும் தங்கி உள்ளனர். இதற்கிடையே இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். கோர்ட்டிலும் நிறைய மனு செய்தனர். சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. சில வழக்குகள் விசாரணையில் உள்ளது.

ஜாமீன் பெற்று வடபழனி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்த ஸ்ரீகாந்த் போலீசாரிடம் வந்தனாவிடம் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் அவரது சினிமா இமேஜும் பாதிக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் வாழாமல் ஓடி ஒளிகிறாறே என பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பட வாய்ப்புகளும் குறைந்தது.

இதையடுத்து வந்தனா விவகாரத்தில் தெளிவான நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்ரீகாந்த் தள்ளப்பட்டார். கோர்ட்டில் முன் ஜாமீன் மனு விசாரணையின் போதும் ஸ்ரீகாந்தும்- வந்தனாவும் கலந்து பேசி சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீகாந்த்- வந்தனா இருவரும் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர். கடந்த 1 மாத காலமாக இருவரும் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து ஒருவருக்கொருவர் செல்போனில் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது காதலித்த போது ஏற்பட்ட சுகமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த் மனம் மாறியது. வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்தின் வக்கீல் ஜி.கே.ஆர். பாண்டியன் இருவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்தார். வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, ஸ்ரீகாந்தின் பெற்றோர் கிருஷ்ணமாச்சாரி- ஜெயந்தி ஆகியோர் கலந்து பேசினர்.

வந்தனாவின் திருமண விவகாரம் உலகம் அறிந்த ஒன்றாகி விட்டதாலும், அவர் ஸ்ரீகாந்த் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான காதலாலும்தான் வீட்டில் குடி புகுந்தார். மற்றப்படி அவரை அவமானபடுத்தும் எண்ணமெல்லாம் இல்லை என்றும எங்கள் மகளுக்காக எந்தவித தியாகத்தை செய்யவும் தயாராக இருப்பதாக வந்தனா பெற்றோரும் உருக்கமாக தெரிவித்தனர்.

ஸ்ரீகாந்த்தும் வந்தனா மீது உண்மையான அன்பு வைத்திருப்பதால் அவர்களை சேர்த்து வைக்க அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து ஸ்ரீகாந்தும்- வந்தனாவும் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க பேசினர். இதில் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு தீர்ந்தது. சேர்ந்து வாழலாம் என முடிவு செய்தனர்.

இருந்தாலும் இரு தரப்பினரும் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் வாங்கும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இன்னும் 2 தினங்களில் சேர்ந்து வாழ போகும் தகவலை பத்திரிகைகளுக்கு அளிக்க உள்ளனர். அதன் பிறகு ஊரறிய திருமண வரவேற்பு நடத்தவும், ஸ்ரீகாந்த் முடிவெடுத்துள்ளார்.


4 Comments:

AANANTHAM said...

Its good for srikanth and vanthana joins together. Keeps on writing.
if u never mind will u send me a tamilfonts link.

R.Subramanian@R.S.Mani said...

With God's grace let them have a long and happy married life
suppamani

Anonymous said...

kaagitham, Tamil fonts Download
link - http://www.geocities.com/csd_one/fonts/

if you can view it you can type it too. I use Apple Mac OS X. So Most windows users should be able to type in Tamil. All the best.

ஸ்ரீகாந்த் வந்தனா படம் சுபம் என்று முடிய எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

இது அதிக நாள் நீடிக்காது. வந்தனா ஸ்ரீகாந்தை திட்டமிட்டு வளைத்ததை ஸ்ரீகாந்த்தால் எளிதாக மறக்க முடியாது. இது ஒரு மிரட்டல்/ஏமாற்று திருமணம். மீண்டும் பிரச்சினையில் முடியும்