பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 10, 2007

ராமதாஸ் பேட்டி

வழக்கம்போல் ராமதாஸ் பேட்டி....

* அரசின் பொதுத்துறை மூலம் கம்பி வழி தொலைகாட்சி (கேபிள்) இணைப்பு வழங்கலாம் என முதல்- அமைச்சர் தலைமையில் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளிவந்துள்ளது.

இது வரவேற்கத்தக்கது. இந்த ஆலோசனையை முதலில் கூறியது நான் தான் என்ற முறையில் முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன்.

( நல்ல வேளை இவர் முன்பே சொன்னார், இல்ல இதை நிச்சயம் எதிர்த்திருப்பார். அது சரி, தினகரன் - தயாநிதி மாறன் விவகாரம் நடக்கவில்லை என்றால் இந்த திட்டம் வந்திருக்குமா ? )

டைட்டானியம் தொழிற்சாலை சம்பந்தமாக தூத்துக்குடி, சாத்தான்குளம், ராதாபுரம் பகுதிகளுக்கு சென்று அந்த பகுதி மக்களின் கருத்தை அறிந்து வந்துள்ளேன். அந்த கருத்தை நான் போவதற்கு முன்னாள் ஒரு மூவர் குழுவை எங்கள் கட்சியின் சார்பில் கிராமங்களுக்கு அனுப்பி அந்த அறிக்கையின் படியும் மக்களை சந்தித்து நான் கேட்டறிந்த கருத்துக்களின் படியும் ஒரு அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சருக்கு நாளை கொடுக்க உள்ளேன்.
( இதற்கு பேர் தான் நிழல் அரசாங்கமா ?


3 Comments:

வெங்கட்ராமன் said...

நல்ல வேளை இவர் முன்பே சொன்னார், இல்ல இதை நிச்சயம் எதிர்த்திருப்பார்

- ரிப்பீட்டே. . . . . .

தினகரன் - தயாநிதி மாறன் விவகாரம் நடக்கவில்லை என்றால் இந்த திட்டம் வந்திருக்குமா ?

- என்ன கேள்வி சின்ன புள்ள தனமால்ல இருக்கு.

ஜெயலலிதா இந்த விஷத்தை கையில் எடுத்த போது, கவர்னரிடம் சென்று மனு கொடுத்தாரே. அந்த மனுவின் நகல் கிடைத்தால் நன்றாக இருக்கும்....

காமெடியாக. . .:-)))))))))))

R.Subramanian@R.S.Mani said...

What Sri.Venkatrama stated is centpercent correctand not a joke; If the appeal submitted by Kalaignar to the Governer then is published, the people can understand what the situation now changed to implement the same rule now which was objected then by the same Kalaignar
suppamani

Anonymous said...

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா.