பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 07, 2007

என்ன கொடுமை சரவணன் இது?

சாப்ட்வேர் துறையில் அதிக சம்பளம் கிடைப்பதால் டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தும் அதில் சேராமல் 107 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

மருத்துவபடிப்பு சேவைப்படிப்பு ஆகும். அதனால் தான் மருத்துவம் படிக்கும் செலவுகளில் பெரும்பகுதியை அரசு ஏற்கிறது. குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் மருத்துவம் படித்தால் 6 வருடம் கழித்துதான் வேலையில் சேரமுடியும். அதுவும் எம்.பி.பி.எஸ். படித்தால் மட்டும் போதாது. பட்டமேற்படிப்பு படித்தால் தான் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலும் டாக்டர்களாக இருக்கும் பெற்றோர்கள்தான் தங்களுக்கு பிறகு தங்கள் ஆஸ்பத்திரியை நடத்த தனது மகள் அல்லது மகன்களை மருத்துவம் படிக்க வைக்கிறார்கள்.

ஆனால் என்ஜினீயரிங் (பி.இ.) படிப்பு 4 வருடகாலம் தான். நன்றாக படித்தால் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பல தொழில் நிறுவனங்கள் வேலைக்கு மாணவர்களை தேர்வு செய்து விடுகிறார்கள். குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மாதச்சம்பளம் பெறுகிறார்கள்.

இப்படி சம்பளம் அதிக அளவில் கிடைப்பதால் இந்த வருடம் மருத்துவப்படிப்பு மீதான மோகம் குறைந்து என்ஜினீயரிங் மோகம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக இந்தவருடம் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) படிக்க இடம் கிடைத்தும் 107 மாணவ-மாணவிகள் அதில் சேராமல், மருத்துவப்படிப்புக்கு `டாடா' காட்டிவிட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.


அண்ணாபல்கலைக்கழகத்தில் முதற்கட்ட என்ஜினீயரிங் கவுன்சிலிங் முடிந்தது. 25 ஆயிரத்து 368 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில் 5 ஆயிரம் பேர்வரவில்லை. வந்தவர்களில் 131 பேர் இடம் தேர்வு செய்யவில்லை. நேற்று 2-வது கட்ட கவுன்சிலிங் தொடங்கி உள்ளது. இது 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 35 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது.

இந்த கவுன்சிலிங் முடிந்தவுடன் 3-வது கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் என்ஜினீயரிங் படிக்க கிராமப் புறமாணவர்களுக்கு இடம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று நேற்று கவுன்சிலிங்கிற்கு வந்த பல கிராமப்புற மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பி.இ.படிக்கப்போவதை எண்ணி மாணவர்களைவிட அவர்களின் பெற்றோர் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

0 Comments: