பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 03, 2007

சிறை என்னும் பள்ளிக்கூடம்

புனேக்கு அருகில் உள்ள எரவாடா சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டார்.

ஆர்தர் சாலை ஜெயில் விசாரணை கைதிகளை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடுங்காவல் தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை இந்த சிறையில் இருந்து மாற்ற சிறை அதிகாரிகள் ஒரு மனுவை தடா கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். பாதுகாப்பு உள்பட 5 காரணங்களை அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

அதே சமயம் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே இருக்க வேண்டும் என்ற தன்னுடைய மனுவை சஞ்சய் தத் திரும்ப பெற்று கொண்டார். இதையடுத்து அவரை புனேயில் உள்ள எரவாடா ஜெயிலில் அடைக்க நீதிபதி பி.டி.கோடே உத்தரவிட்டார். அதன்படி நேற்று இரவு ஆர்தர் ரோடு ஜெயிலில் இருந்து ஒரு வேனில் சஞ்சய் தத் பலத்த பாதுகாப்புடன் எரவாடா ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் பின்னர் அடைக்கப்பட்டார்.

பிகு: எரவாடா ஜெயிலில் 1930 ஆம் ஆண்டு காந்தியடிகள் அடைக்கபட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா ?

0 Comments: