பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 23, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-08-07

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

மைடியர் பாடிகாட் முனி,

"கெட்டவன், பொல்லாதவன், பொறுக்கி" உங்களை திட்டவில்லை. இவை எல்லாம் வர போகும் தமிழ் படங்களின் பெயர்கள். தமிழ் பெயர்கள் என்பதால் கேளிக்கை வரிசலுகை உண்டாம். நல்ல கூத்து. கெட்டவன் லிட்டில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம். 'கெட்டவன்' என்றால் என்ன ? ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம் என்று விளக்கம் கொடுக்கிறார் சிம்பு. முன்பு சூப்பர் ஸ்டார் நடத்த படம் பொல்லாதவன் அப்ப சொல்லாத எதிர்ப்பை இப்ப சொன்னா ? என்று இதன் தயாளிப்பாளர் சொல்லியிருக்கிறார்.நியாயம் தானே. `பொறுக்கி என்றால், சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்ற அர்த்தத்தில்தான் அந்த தலைப்பை சூட்டியிருந்தோம் என்று சொல்லுகிறார்கள்.

இனிமே இதே போல நிறைய தமிழ் பட டைடில்களை எதிர்பார்க்கலாம். 'ரோக், ராஸ்கல் என்று பெயர் வைத்தால் வரிசலுகை கிடையாது, அதை டிரை பண்ணாதீர்கள்.

பொல்லாத பசங்க, பெயர்களை எப்படி பொறுக்கி எடுக்கிறார்கள் இவங்களை கெட்டவர்கள் என்று சொல்லலாமா ?

கலைஞர் விபூதி, குங்குமம் பூசுவது பற்றி பகுத்தறிவு பேச்சை பார்த்தீர்களா ? இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குக் கூட எடுத்துச் சென்றது பிள்ளையார் சிலை மற்றும் பகவத் கீதை. அறிவு, திறமை, உழைப்பு இருந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் தான் உயரத்தை, சிகரத்தை எட்ட முடியும். பகுத்தறிவு பழங்களாக இருக்கும் இவர்கள் திரை மறைவில் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். திராவிட இயக்கதில் ஹனுமான் பக்கதர் யார் தெரியுமா ? முர.மா தான்.

சிவாஜியில் மெலடியான பாடல் 'சகாரா' இந்த டியூனை கேட்டுவிட்டு ஷங்கர் டியூன் மிகவும் ‘மெதுவாக இருக்கிறது படத்தின் ஸ்பீட் குறையும் என்றவுடன் அதற்கு வேகம் கொடுத்தேன் என்று ரஹ்மானிடம் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் படம் என்றாலும் பாடல்கள் நல்லா இருக்கனும், இல்லை வெளியே கெண்டீன் பக்கம் போய்விடுவார்கள் நம்ம மக்கள்.

ஃபாரன்ஹீட் 9/11 புகழ் மைக்கேல் மூர் ‘சிக்கோ’ என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் மருத்துவம் என்பது எப்படி ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத் தினருக்கும் எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் ‘சிக்கோ’ தோலுரித்துக் காட்டுகிறது. என்னை கலங்கடித்தது ஒரு விபத்தில் இரண்டு விரல்களை இழந்த தொழிலாளி டாக்டர் ஃபீஸுக்கு ஏற்ப ஒரு விரலைத்தான் ஆபரேஷன் மூலம் பொறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் எந்த விரல் குறைவான கட்டணமோ அதை பொருத்திக் கொண்டு இன்னொரு விரல் ? குப்பையில்!. WTC கோபுர தாக்குதலின் போது தங்களுடைய இன்னுயிரையும் பார்க்காது பலரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் இன்று மரணப் படுக்கையில் மருத்துவச் செலவை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதையும் அவர்களை கியூபா விற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது என்ற விஷுவல் சூப்பர். அதே போல் லண்டன் சென்று அங்கு "Cashier" என்று பலகை போட்டிருக்கும் இடத்தில் போக்குவரத்து செலவுக்கு நோயாளிகளுக்கு பணம் தருகிறது. லண்டனில் மருத்துவர்கள், ஊழியர்கள் மருத்துவமனை பணம் வாங்குமா என்ற கேள்விக்கு சிரிக்கிறார்கள். மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை அளிக்கும் நாடுகளாக லண்டன், கியூபாவையும், ஃபிரான்ஸையும் சொல்கிறார் மூர். அமெரிக்க கனவுகளுடன் அங்கே போகிறவர்கள் பார்க்க வேண்டிய படம்.

படம் பார்த்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை கிளிப்பிங்ஸ்
1. மைகேல் மூர் CNN-IBN லைவ் பேட்டி ( சும்மா அதிருதில்ல )
2. மைகேல் மூர் CNN-IBN பேட்டியின் இரண்டாம் பாகம்
3. லாரி கிங் நிகழ்ச்சியில் மைகேல் மூர்
4. டாகடர் சன்ஜய் குப்தாவிற்கு வைக்கும் ஆப்பு


‘தம்மிடமுள்ள பத்திரிகையையும் ஒரு நடிகரையும் வைத்து அரசு கேபிள் டி.வி. எதிர்ப்புச் செய்திக்காகவே பயன்படுத்துகிறார்கள். அரசு தொடங்கிடும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் அமைப்பைத் தகர்த்தால்தான் தமது ஏகபோக ஆதிக்கத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத் தலாமென திட்டமிடுகிறார்கள்’ இது கலைஞர் அறிக்கையின் ஒரு பகுதி. இதில் சன் டிவியை சாடியிருக்கிறார் சரி. 'நடிகர்' என்று யாரை சொல்லியிருக்கிறார் ? உனக்கு தெரியுமா ?

அமெரிக்காவுடனான புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தின் விளைவு எப்படி இருக்க போகிறது ? முன்பு அப்துல் கலாம் ‘வெளிநாட்டுப் பெண்மணி’ என்ற ஒரு பாயின்ட்டைச் சொல்லி சோனியாவிற்கு முட்டுக் கட்டை போட்டார். ஆனால் இப்ப பிரதீபா பாட்டீல் என்பதால் சோனியா பிரதமர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை. அதனால் ‘யார் என்ன சொன்னாலும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை’ என்று பிரதமர் மன் மோகன் சிங் சொன்னதை வைத்து பார்த்தால் கூடிய சீக்கிரம் சோனியா பிரதமர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே ? இல்லை இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வந்துவிடுமா ?

ராமதாஸ் ரொம்ப காட்டமாக தான் அறிக்கை விடுகிறார். மக்கள் நலனில் இவ்வளவு அக்கரையா ? என்று நினைக்க வேண்டாம். மணல் திருட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அரசின் மெத்தனம் என்று விமர்சனம் எல்லாம் எதற்கு தெரியுமா ? கொஞ்ச நாள் முன் அமைச்சர் துரைமுருகன் டாக்டர் ஐயாவை ஏதோ கிண்டலாக பேசியதின் விளைவாம். அதனால் யாரும் டாக்டரை மக்கள் நலனில் அக்கரை உள்ளவர் என்று தப்பாக நினைக்காதீர்கள்.

"சத்தியமூர்த்தி பவனிற்கு வந்து ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பது, ராஜீவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறார். இப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.

ஜெயின் கமிஷன் திமுக பற்றி கூறியதும், உடனே திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள்விழாவில் கலைஞர் பங்கேற்பது ராஜிவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும்" :-)

ராமதாஸ் நேற்று:
டாஸ்மார்க் கடைகளே இருக்கு கூடாது

ராமதாஸ் இன்று:
நான் தமிழக அரசுக்கு ஒன்றை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மணல் விற்பனையில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. "டாஸ்மாக்' கடையில் சாராயம் விற்பதைப் போல் அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். ( ஆக அரசு சாராயம் விற்றால் ஓ.கே )

உஷா அக்கா லெமன் ரைஸ் சாப்பிட்டால் தலைவலி வருகிறது என்று எழுதியிருக்கிறார். கடைசியாக லெமன் காரணம் இல்லை சொன்னாலும், லெமன் சாப்பிட்டால் சிலருக்கு மைக்ரேன் வரும் என்பது உண்மை. ( சொந்தகாரர்கள் வீட்டில் வேறு தலைவலிகள் இருப்பதால், இந்த லெமன் ரைஸ் தலைவலி அவருக்கு தெரியலை என்று நினைக்கிறேன்). அங்கே கிடைக்காத விழிப்புணர்வு இந்த பதிவில் இருக்கு என்று நினைக்க வேண்டாம்.


உங்கள் நண்பன்,
இட்லிவடை.

7 Comments:

Anonymous said...

B.Muneeswara, Kindly also clarify the below:-

1. Ramadoss says "We will always support the DMK Govt., but we'll raise our voice whenever the Govt fails fails to deliver the apt things". How is this possible?

2. What happened to the BSNL scandal raised by Raja against Dayanidhi Maran?

3. What is the fate of two-wheelerists of Chennai? Should they wear helmet or not? Will they be penalised or not, if they don't wear?

4. Will Manmohan Singh fail to compromise the "Headless Chickens" in the N-Deal? If yes, will the Govt fall or will Sonia or Pawar come to power? If no, how did the Left compromise?

So many questions for you. Please provise your Arul Vakku on these...

இலவசக்கொத்தனார் said...

உஷாக்கா ரேஞ்ஜ் எங்கயோ போயிடுச்சே. (அம்புட்டுக் காமெடி பண்ணறாங்கன்னு பதில் சொல்லி நம்மளை மாட்டி விடக் கூடாது!! ) :)))

இலவசக்கொத்தனார் said...

//கலைஞர் விபூதி, குங்குமம் பூசுவது பற்றி பகுத்தறிவு பேச்சை பார்த்தீர்களா ? //

இது என்ன மேட்டர்? கொஞ்சம் டீட்டெயில்ஸ் குடுங்களேன்....

IdlyVadai said...

இதை படியுங்க http://idlyvadai.blogspot.com/2007/08/blog-post_535.html

ramachandranusha(உஷா) said...

இ.வ! விவரங்களுக்கு நன்றி

இலவசம் ........

IdlyVadai said...

உஷா இன்னும் ஒன்று, நட்ஸ் ( coconut or cashew nut ) சாப்பிட்டாலும் சிலருக்கு தலைவலி வரலாம். உங்க விசிட்டுக்கு நன்றி :-)

வெங்கட்ராமன் said...

//////// அதனால் யாரும் டாக்டரை மக்கள் நலனில் அக்கரை உள்ளவர் என்று தப்பாக நினைக்காதீர்கள்

சே சே அப்படி எல்லாம் தப்பா நினைக்க மாட்டோம்.