பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 08, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 08-08-07

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க!.

அன்புள்ள முனீஸ்வரனுக்கு

சனிபெயர்ச்சி முடிந்து நல்ல வாரம் என்று போட்டிருந்தது. சரி, நல்ல செய்தி கிடைக்குமா தேடியதில் நோ சான்ஸ். 10% குறைவாக தான் நல்ல செய்தி இருக்கிறது.
தற்கொலை, சினிமா கிசுகிசு, விபத்து, விவாகரத்து, பாலியல், திருட்டு, அறிக்கை பதில் அறிக்கை இவை எல்லாவற்றையும் எடுத்துவிட்டால், பத்திரிக்கை/செய்தி தாள் தலைப்பு மட்டும் தான் மிஞ்சும்.

இருந்தாலும் சில நல்ல விஷயங்கள் இந்த மடலில்.

யாரோ ஒரு புண்ணியவான் கட்டாய ஹெல்மெட் உத்தரவு ஏன் பிசு பிசுத்து விட்டது என்று வழக்கு தொடர்ந்து இப்ப ஐகோர்ட்டு தமிழக அரசை கேள்வி கேட்டுள்ளது.

"முருகா பாட ஆரம்-பிச்சிட்டா போதும்... இப்ப-வும் பல்லுல பச்சைத்-தண்ணிகூடப் படாம தொடர்ந்து அஞ்சு மணிநேரம் பாடுவார்" இந்த மகான் வேறயாரும் இல்லை பித்துக்குளி முருகதாஸ் தான். ரொம்ப அபூர்வமாக விகடனில் இவர் பேட்டி வந்திருக்கிறது. இவர் பாடிய "அலைபாயுதே கண்ணா " ரொம்ப பிடிக்கும். வித்தியாசமா பாடியிருப்பார். இவருக்கு முருகனை தவிற பிடித்த மற்றொன்று ஐஸ் க்ரீம்" :-)

வாகிங் போவது பற்றி வைரமுத்து எழுதிய சில வரிகள் "இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்குமேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள். 60 ரூபாய் செலவழித்து ஏன் 70 ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்?" உண்மை தானே!. காலை ஹோட்டலுக்கு சென்றால் வாக்கிங் சென்று விட்டு இட்லிவடையை அமுக்கும் கூட்டம் தான் அதிகமாக இருக்கும்.

ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹேலோஸ் புத்தகம் 24 மணி நேரத்தில் மட்டும் 83 லட்சம் புத்தகங்களை விற்றிருக்கிறார்கள்!. "தத்தக்கா புத்தக்கா" இது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஒரு புத்தகம். இதில் பெருபாலும் ஆட்டோ சம்பந்தபட்ட மீட்டர் சாரி மேட்டர் இருந்தாலும், "'சந்தா' மாமா" என்ற கதை சூப்பர். ஏனோ புத்தகத்தோடு ஒட்டவில்லை. கதையில் நிறைய பாக்கியம் ராமசாமியின் சிறுகதை சாயல் இருந்தது. ஏ.என்.எஸ். மணியன் எழுதிய "ஜெமினி கேண்டீன்" என்ற புத்தகமும் ரொம்ப சூப்பர். சாந்தி பதிப்பகம். விகடன் பதிபகத்தில் வெளியிட்டுயிருக்கலாம், ஏனோ போடவில்லை.


மொகல் கார்டனில் விளைந்த ஒரு ஆப்பிளை, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் ஒரு நாள் கொடுத்தார்கள் மாளிகையின் பணியாட்கள். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவர், "மிகவும் ருசியாக இருக்கிறதே..." என்றபடியே அதன் விதைகளைக் கொடுத்து, "தோட்டத்தில் விதையுங்கள்" என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

'ஏதோ சொல்கிறார்... சரி இதையும் விதைத்து வைப்போம்' என்றபடியே விதைத்திருக்கிறார்கள் பணியாட்கள்.

ஒரு வாரம் கழித்து, "நான் ஆப்பிள் விதைக்கச் சொன்னேனே... எங்கே அந்தச் செடி... எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?’’ என்றபடியே தோட்டத்துக்குள் வந்து அப்துல் கலாம் நின்றுவிட... பணியாளர்களுக்கு தாளாத ஆச்சர்யம்! இதை படிக்கும் போது எனக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

கலைஞர் கேட்ட இந்த கேள்வி ரொம்ப ஹாட் "இன்னமும் கை ரிக்ஷாவை அனுமதித்துக் கொண்டிருக்கிற மாநிலமாகவும், குடிமனைப் பட்டா அனைவருக்கும் வழங்காத நிலையில் உள்ள மாநிலமாகவும் தான் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்கு வங்கமும், கேரளாவும் இருக்கின்றன" ஏன் என்று யார் விளக்க போகிறார்கள்.

தமிழ் சினிமாவால் சாதனையா, சோதனையா?'' சிங்கப்பூரில், நட்சத்திர பட்டிமன்றம் 11-ந் தேதி நடக்கிறது இந்த நிகழ்ச்சி பற்றி சிங்கபூரிலிருந்து யாராவது சொல்லுவார்களா ?

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளிவந்த `லகான்' என்ற படத்தை தமிழில் என்னை வைத்து தயாரிப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் வந்தார். படத்தை டைரக்ட் செய்யப் போகிறவர் யார்? என்று கேட்டேன். அவர் ஒரு டைரக்டரின் பெயரை சொன்னார். இந்தப் படத்தை பெரிய டைரக்டர் டைரக்ட் செய்தால்தான் பொறுத்தமாக இருக்கும் என்றேன். சில பெரிய டைரக்டர்களைத் தேடினோம். அவர்கள் பிசியாக இருந்ததால், அந்தப் படத்தை பண்ண முடியவில்லை சொன்னவர் ரஜினி. நல்ல வேளை பெரிய டைரக்டர்கள் பிசியாக இருந்தார்கள்.


மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க அனைத்து அரசு பள்ளிகளிலும் மொழி ஆய்வு கூடம் தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லியிருப்பது இந்த வாரத்தின் மிக நல்ல செய்தி.அன்புடன்,
இட்லிவடை

3 Comments:

Anonymous said...

Abdul Kalam - apple seed matter puriyalai. Konjam explain pls...

Boston Bala said...

பத்தி எழுதுவதன் இலக்கணமாக, தெரியாத செய்திகளையும் தோன்றாத எண்ணங்களையும் இணைத்துத் தருவது என்று சொல்லலாம்.

இந்தப் பதிவில் வந்த தகவல் எதுவுமே நான் அறியாதவை. மேற்சொன்ன axiom-இன் இரண்டாம் பாதி, பாதிக் கிணறு தாண்டுகிறது.

அப்புறம், ரைட் ஹாண்ட் சைட் மேட்டர் செம ஹாட்!

IdlyVadai said...

பாபா நன்றி :-)