பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 31, 2007

ராமர் பாலத்தை இடிக்க செப்.14 வரை தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேது சமுத்திரம் திட்டத்தில் ராமர் பாலத்தை இடிக்க வரும் 14-ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.என்.அகர்வால் மற்றும் பி.பி. நவ்லோகர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.

முன்னதாக, சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவின் கூறியிருந்தது;

135 கி.மீ. நீளம் கொண்ட சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் 35 கி.மீ. நீளம் கொண்டது. ராமர் பாலம் இந்துக்களின் வரலாற்றுப் புராண பாலமாகும். சேது சமுத்திர திட்டத்தால் இந்த பாலம் இடிக்கப்படும். இதனால், இந்துக்களின் புராண பாலம் இல்லாமல் போகும்.

அரசு திட்டமிட்டே ராமர் பாலத்தை அழிக்க முயற்சி செய்கிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
( செய்தி: தினமணி )

Read More...

வானிலை அறிவிப்பு

சென்னை நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது அனைவருக்கும் தெரிந்தது. தமிழர்களுக்கு அவ்வப்போது தலை காட்டிய மழை நேற்று அடை மழையாக விடிய விடிய பெய்தது. இன்று காலையிலும் தொடர்ந்து சென்னையில் மற்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இது தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை கொட்டும் என்று எதிர்பாக்கபடுகிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு மழை வந்ததால் சென்னை வாசிகள் ஆனந்தமாக இருக்கிறார்கள். பருவகால மாற்றம் காரணமாக சென்னையில் வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீச தொடங்கி உள்ளது. இரவில் லேசான குளிர் வாட்டுகிறது. எதிர்பாராமல் வந்த மழையினால் சென்னை நகர சாக்கடைகள் நிரம்பி வழிகிறது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More...

Thursday, August 30, 2007

மூப்பனார் நினைவிடத்தில் கேப்டன் !

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் இன்று 6வது நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். 'காமராஜர் வழி நடந்த சிறந்த தலைவர்' மூப்பனார் நினைவிடத்தில் விஜயகாந்த் புகழஞ்சலி

மூத்த காங்கிரஸ் தலைவரும், த.மா.கா. நிறுவனருமான ஜி.கே.மூப்பனாரின் 6வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி இன்று காலை மூப்பனார் பேரவை சார்பில் அதன் மாநிலத்தலைவர் எல்.கே.வெங்கட் மூப்பனார் ஜோதியை காமராஜர் இல்லத்திலிருந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தார். அந்த ஜோதியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினர். அதோடு மாணவர் களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், ஏழைஎளியோருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கினர். இதில் வடசென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு வருகை தந்து மூப்பனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் மூப்பனார் குடும்பத்தில் ஒருவனாக இருந்துள்ளேன். அவர் எனது தந்தை மாதிரி. அவரது பிறந்தநாளை நான் மறந்ததில்லை. நினைவு நாளையும் மறக்க மாட்டேன்.

அவர் மறைந்தாலும் உடனிருப்ப தாகவே நினைக்கிறேன். மரியாதை, நல்ல தன்மை, எளிமை ஆகியவற்றை மூப்பனாரிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும். அவர் உயிருடன் இருக்கும் போது அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

அவருடைய பண்பினை ஜி.கே.வாசன் பெற்றுள்ளார். மூப்பனார் உயிருடன் இருந்திருந்தால் என்னுடைய அரசியல் வேறு மாதிரியாக இருந்திருக்கும். காமராஜர் வழியை மூப்பனார் பின்பற்றினார். அவருடைய வழியை நான் பின்பற்றி வருவதால் தான் கதர்சட்டை அணிந்துள்ளேன் என்று கூறினார்.

Read More...

மலேசிய தமிழனின் சாதனை !

சாதனைகள் பலவிதம்...

மலேசியத் தமிழரான ராதாகிருஷ்ணன் வேலு ஒரு சாதனைப் பிரியர். பல சாதனைச் செயல்களை நிகழ்த்தியுள்ள அவருக்கு ரயிலை பற்களால் கடித்து இழுக்கும் புதிய சாதனையைப் படைக்கும் ஆர்வம் எழுந்தது.

இதையடுத்து கோலாலம்பூர் பழைய ரயில் நிலையத்தில் தனது சாதனையை நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் நிகழ்த்தினார். 7 பெட்டிகள் கொண்ட ரயில் இதற்காக வரவழைக்கப்பட்டது. அந்த ரயிலின் எடை 297.1 டன் ஆகும்.

பின்னர் அந்த ரயிலை தனது பற்களால் இழுத்து சாதனை படைத்தார் வேலு. இந்த சாதனையை கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

Read More...

Friday, August 24, 2007

சூடாகிறார் சோ!

இந்த வார விகடனில் வந்த சோ பேட்டி. நேற்றைய எதிரி... ஜெயா
இன்றைய எதிரி... சன் நாளைய எதிரி... மக்கள் டி.வி-யா?

( நன்றி: விகடன் ).

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இவரது அரசியல் ஆரூடங்கள் ஆதர்சம்!

மனதில் பட்டதைச் சட்டென்று போட்டு உடைக்கிற மனிதர் சோ..! தற்போதைய அரசியல் களம் பற்றி சுடச் சுட பேச ஆரம்-பித்-தார்.


‘‘தி.மு.க-வின் இன்றைய...?’’

‘‘களேபரம்! அரசுக்கு எதிராக முன்வைக்-கப்படும் குற்றச்சாட்டு-களுக்கு விளக்கம் தர முன்வராமல், அதை மறுப்பதன் மூலமே அரசாங் கத்தை நடத்திச் சென்றுகொண்டு இருக் கிறார்கள். விலைவாசி உயர்வா? ‘உயரவில்லை!’, மணல் கொள்ளையா? ‘கொள்ளை அடிக்கப்-படவில்லை!’,

தனி-யார் கல்லூரிகளில் பகல் கொள்ளையா? ‘பகலுமில்லை, கொள்ளையு-மில்லை. தடுக்க எங்களிடம் அதிகார-மு-மில்லை!’ இப்படி எல்லாவற்றையும் மறுப்பதே இந்த அரசாங்கத்தின் வாடிக்கை-யாகிவிட்டது! துணைநகரம், விமான நிலையவிரி--வாக்கம், ஹெல்மெட் சட்டம், இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தெளிவில்லாத ஒரு குழப்பமே தெரிகிறது. தவிர, தி.மு.க. ஆட்சி-க்கு வந்ததும், கிரிமினல்களுக்குக் குளிர்விட்டுப் போச்சு! தென்காசிக் கொலைகள், சிவ-கங்கை ரிமோட் வெடிகுண்டு என பக்கம் பக்கமாக ரத்தச் செய்திகள். இந்த ஆட்சியில் மட்டும்தான் இது நடக்குதுன்னு சொல்லலை. ஆனா, இந்த ஆட்சியில் வன்முறையின் தாக்கம் அதிகமா இருக்கு என்கிறேன்!’’

‘‘சாத்தான்குளத்தில் டைட்டானியம் ஆலை அவசியமா?’’

‘‘என்னைப் பொறுத்தவரையில் டைட்டானியம் தொழிற்சாலை அமை-வதில் தவறில்லை. தொழிற்சாலை-களும் பெருகினால்தான், ஒரு நாடு உண்மையிலேயே முன்னேறி-யதாக அர்த்தம். தொழில்ரீதியான முன்னேற்றம் ஏற்படும்போது, விவசாய நிலங்களுக்குச் சற்றே பாதிப்பு ஏற்படுவது இயற்கைதான். ஆனால், டைட்டானியம் தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படும்போது நிலத்துக்கு உண்டான உண்மையான மதிப்பை நில உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். டைட்டானியம் விலையுயர்ந்த தாது. டாடா நல்ல லாபகரமான நிலையில் செயல்படும் மிகப் பெரிய நிறுவனம். எனவே, ஒரு துண்டு நிலமானாலும் அதற்கு எந்தளவுக்கு அதிகபட்ச விலை கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு கொடுத்து வாங்குவதுதான் முறை. இதனைச் சாத்தியப்படுத்த அரசாங்கம்தான் முனைந்து, முன்நின்று செயல்பட வேண்டும்! அப்படிச் செய்தால் டைட்டானியம் ஆலை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். மற்றபடி யாரோ ஒரு தனியார் தொழில் அதிபரை முடக்கவே டாடாவை ஊக்குவிக்கிறார்கள் என்ப-தெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு!’’

‘‘அரசாங்கமே கேபிள் டி.வி-யைத் தொடங்கு-வதை நீங்கள் வரவேற்கிறீர்களா..?’’

‘‘ஜெயலலிதா ஆட்சியின்போது மாறன் குடும்பத்-தாரின் சுமங்கலி கேபிள் விஷன், தமிழகத்தில் அதிரடி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருந்தது. போட்டிக்கு இருந்த மற்ற நிறுவனங்களை மிரட்டி உருட்டி தங்கள் நெட்வொர்க்கை விரிவு-படுத்தி வந்தார்கள். விஜய் டி.வி-யில் செய்தி வாசிக்க முடியாமல், ராஜ் டி.வி புது சேனல்-களை ஆரம்-பிக்க அனுமதி பெற முடியாமல் பல தடங்-கல்கள் உண்டாக்-கப் பட்டன. அப்போதே நானும் சிலரும் ‘அரசாங்கமே கேபிள் டி.வி. நடத்தலாம்’ என்று குரல் கொடுத்-தோம். அதை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்-களோ... மொத்தமா எல்லா தனியார் கேபிள் சேனல்களையும் அரசு-ட-மையாக்க சட்டம் கொண்டு வந்தாங்க ஜெயலலிதா. அதை இதே கருணாநிதி எதிர்-த்தார். ஆனால், இப்போது..?

ஜெயலலிதா எல்லா சேனல்களையும் அரசாங்க கன்ட்-ரோல்ல கொண்டுவரப் பார்த்-தாங்க. ஆனால், இப்போதைய அரசாங்-கம் கொண்டுவரப் போறதா சொல்ற ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ என்பது அப்படி அல்ல. மற்ற நெட்வொர்க்குகளுடன் இதுவும் நடக்கும். ஆனால் இது, இன்னொரு சுமங்கலி கேபிள் விஷன் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அரசாங் கத்துக்கு நெருக்கமா இருந்தவங்களே மத்தவங்களை மிரட்ட-முடியும் என்கிறபோது, அரசாங்கமே கேபிள் நடத்தினால் இன்னும் அதிக மாகவே அது நடக்க வாய்ப்பு இருக்கு! ‘நேற்றைய எதிரி’யாச்சேன்னு ஜெயா டி.வி-க்குக் குடைச்சல் கொடுப்பது, ‘இன்றைய எதிரி’ன்னு சன் டி.வி. ஒளிபரப்பைக் கெடுப்பது, ‘நாளைய எதிரி’ன்னு மக்கள் தொலைக்-காட்சிக்கு தொல்லை கொடுக்குறதுனு இந்த ‘அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்’ செயல்படுகிற ஆபத்து இருக்கு.

இந்தக் குறைகள், விரோத மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான கேபிள் ஆப ரேட்டர்களையும் அரவணைத்து, குறைவான கட்டணத்துடன் அரசின் கேபிள் கார்ப்பரேஷன் செயல்பட்டால் அதை வரவேற்கலாம்!’’

‘‘புது எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள் எப்படி?’’

‘‘கருணாநிதி அவர் குடும்பத்துல இன்னும் யாரை விட்டுவைக்கப் போறார்னு தெரியலை. ஸ்டாலினுக்கு கோட்டை, அழகிரிக்கு தென் தமிழ்நாடு, கனிமொழிக்கு டெல்லின்னு ஏதோ ஒரு பேரரசர் தன் வாரிசுகளுக்கு சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டுக் கொடுக்குற மாதிரி பிரிச்சுக் கொடுத் துட்டு வர்றார்.

கொஞ்ச காலத்துக்கு முன், கனிமொழியைப் பற்றி விமர்சனம் கிளம்பியதற்கு ‘அவர் அரசியலிலேயே இல்லையே! எதற்கு அவரைப் பற்றி விமர்சிக்கிறார்கள்?’னு கேள்வி கேட் டார். அது நடந்த ரெண்டாவது வாரமே கனிமொழி எம்.பி-னு அறிவிப்பு வந்தது! ‘அரசியல் அவங்களுக்கு என்ன புதுசா? ரொம்ப நாளா பழக்கமான துறைதானே? அதனால் எம்.பி. ஆக்கப்பட்டுள்ளார்’னு கதையை மாத்தினார். தி.மு.க. தலைவர் பதவியை எந்தளவுக்கு துஷ்பிரயோகம் பண்ண முடியுமோ, அந்தளவுக்குப் பண்ணிட்டு இருக்கார் கருணாநிதி. வேறென்ன சொல்ல?’’

‘‘ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது பற்றி என்ன நினைக்-கிறீர்கள்?’’

‘‘தயாநிதி மாறன், அன்புமணி, கனிமொழி போல அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல ஸ்டாலின். அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கி முப்பது வருஷங்களுக்கு மேலாகி-விட்டன! எமர்ஜென்சி காலங்களில் சிறைத் தண்டனை அனுபவித்-திருக்கிறார். இளைஞர் அணித் தலைவர், எம்.எல்.ஏ., மேயர் எனப் படிப்படியாகத்தான் அவர் முன்னேறுகிறார். கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும், ஒரு கட்சியினால் தங்கள் ஆட்சியின் முதல்வர் என்று தேர்ந் தெடுக்கப்படுவதற்கு உள்ள வழி முறைகளின்படியே அவர் தயாராகி வருவதால், அவர் அந்தப் பதவிக்கு வந்தாலும் குற்றம் காண முடியாது.’’

‘‘அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நமக்கு பாதகமான ஒன்று என எதிர்ப்புக் குரல்கள் கிளம்-புவதை எப்படி எடுத்துக்கொள்வது..?’’

‘‘அணு தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் நம்மிடம் போதிய மூலப்பொருட்கள் கிடையாது. நம்மிடம் உள்ள தொழில்நுட்பமும் உடனடி தேவைகளுக்குப் போதுமானது அல்ல! எனவே, நமக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்டால் நாம் அணுகுண்டு சோதனை நடத்த முடியாது என்று கம்யூனிஸ்ட்டுகள் கதறுகின்--றனர். இனிமேல் அணுகுண்டுச் சோதனை நடத்தித்தான் நமது அணு ஆயுத ஆற்றலை உலகத்துக்கு உரைக்க வேண்டும் என்பதில்லை. ஏற்கெனவே இந்திரா -காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்-காலத்தில் நாம் நடத்திய சோதனை-களே நமது அணு ஆற்றலை எடுத்துக்காட்டி-யுள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து!

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!’’

‘‘கலைஞர் டி.வி. குறித்தான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?’’

‘‘அந்தப் பெயரே தப்பாகத் தோன்று-கிறது எனக்கு! டி.வி. தொடங்கப்-படுவதற்கு முன்னரே அதன்மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது போல இருக்கிறது. தமிழ் சேட்டிலைட் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் சன் டி.வி-தான். அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்-கள், பெரிய சினிமா லைப்ரரி, பக்கா புரொஃபஷனலான டீம்னு நல்லா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. அதோட போட்டி போடணும்னா, தெளி-வான திட்டங்களுடன் தயாராகணும்.’’

‘‘டாக்டர் ராமதாஸ் செய்கிற எதிர்ப்பு அரசியல் பற்றி..?’’

‘‘டெல்லியில், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் தொடர்பான சர்ச்சைகளில் அன்புமணி சிக்கிக்கிட்டு தவிச்சப்ப, ராமதாஸுக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ தி.மு.க. எதுவும் செய்ய முன்-வரவில்லை. அப்போ தன்னைக் கைவிட்டுட்டாங்க என்கிற பெரிய வருத்தத்தில்தான் இதெல்லாம் ஆரம்பிச்சது.

இன்னொரு முக்கியமான விஷயம்... விஜயகாந்த்தின் வளர்ச்சி! அரசாங்கத்தை எதிர்ப்பதால்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகள் விழுது; மக்கள் கிட்டேயும் ஆதரவு பெருகுதுன்னு ராமதாஸ் நினைக்கிறார். இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சி என்ற முறையில் அரசாங்கத்துக்கு ஆதரவா செயல்பட்டா, தங்க ளுடைய வாக்குகளில் கணிசமான அளவை விஜயகாந்த் பிடிச்சுக்கு வாரோன்னு பயம். அதனாலதான் இப்படி தினமும் அரசுக்கு எதிரா அறிக்கை மேல அறிக்கை விட்டுட்டு இருக்காரு.

மூணாவதா, கலைஞரேகூட அடுத்த தேர்தல்ல தன்னை எப்படி நடத்து வார்ங்கிற சந்தேகமும் ராமதாஸுக்கு வந்திருக்கு. இதெல்லாமேதான் காரணம்!’’

‘‘எதிர்க்கட்சித் தலைவராக வெறும் அறிக்கைகள் மூலமே அரசியல் செய்கிறாரே ஜெயலலிதா... சட்ட-சபைக்குக்கூட வருவது இல்லையே..?’’

‘‘அ.தி.மு.க-வும் ஆர்ப்-பாட்டம், போராட்டம்னு நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதெல்லாம் போதாது. ஜெயலலிதா சட்டசபைக்குத் தொடர்ந்து சென்றிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப் பட்டபோது, தன்னந்தனியாக ஜெயலலிதா சட்டசபைக்குச் சென்று பேசியது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்-கியது. அப்போது கிடைத்த வர-வேற்பை அவர் தக்கவெச்சிருக் கணும்!’’

‘‘சமீபமாக தி.மு.க-வுக்குள் ஒரு சக்தியாக அழகிரி வளர்ச்சி அடைந்து வருகிறார். இந்த அழகிரி இமேஜ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘‘கழக இமேஜ் ரொம்ப நன்றாக இருக்கிறதா என்ன..! மெயின் இமேஜே சரியில்லாம இருக்கும்போது இதைப்-பற்றிச் சொல்ல என்ன இருக்கு..?’’

- சூடாகப் பேசி முடித்து, புன்-சிரிப் போடு விடை கொடுக்கிறார் சோ!

Read More...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நாளை பிறந்த நாள் காணும்!
நாளைய முதல்வர் !
அரசியல் பழங்களை
சுவிங்கம் போல் மெல்லும்
சிங்கம் எங்கள்
கேப்டன் விஜயகாந்த்திற்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தோழர்கள் வறுமை ஒழிப்பை முடித்துவிட்டு மாலை நடக்கும் எனி இந்தியன் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்/பன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் :-)

Read More...

Thursday, August 23, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-08-07

இந்த வாரம் இட்லிவடை முனிக்கு எழுதும் கடிதம்

மைடியர் பாடிகாட் முனி,

"கெட்டவன், பொல்லாதவன், பொறுக்கி" உங்களை திட்டவில்லை. இவை எல்லாம் வர போகும் தமிழ் படங்களின் பெயர்கள். தமிழ் பெயர்கள் என்பதால் கேளிக்கை வரிசலுகை உண்டாம். நல்ல கூத்து. கெட்டவன் லிட்டில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம். 'கெட்டவன்' என்றால் என்ன ? ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம் என்று விளக்கம் கொடுக்கிறார் சிம்பு. முன்பு சூப்பர் ஸ்டார் நடத்த படம் பொல்லாதவன் அப்ப சொல்லாத எதிர்ப்பை இப்ப சொன்னா ? என்று இதன் தயாளிப்பாளர் சொல்லியிருக்கிறார்.நியாயம் தானே. `பொறுக்கி என்றால், சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்ற அர்த்தத்தில்தான் அந்த தலைப்பை சூட்டியிருந்தோம் என்று சொல்லுகிறார்கள்.

இனிமே இதே போல நிறைய தமிழ் பட டைடில்களை எதிர்பார்க்கலாம். 'ரோக், ராஸ்கல் என்று பெயர் வைத்தால் வரிசலுகை கிடையாது, அதை டிரை பண்ணாதீர்கள்.

பொல்லாத பசங்க, பெயர்களை எப்படி பொறுக்கி எடுக்கிறார்கள் இவங்களை கெட்டவர்கள் என்று சொல்லலாமா ?

கலைஞர் விபூதி, குங்குமம் பூசுவது பற்றி பகுத்தறிவு பேச்சை பார்த்தீர்களா ? இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குக் கூட எடுத்துச் சென்றது பிள்ளையார் சிலை மற்றும் பகவத் கீதை. அறிவு, திறமை, உழைப்பு இருந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் தான் உயரத்தை, சிகரத்தை எட்ட முடியும். பகுத்தறிவு பழங்களாக இருக்கும் இவர்கள் திரை மறைவில் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். திராவிட இயக்கதில் ஹனுமான் பக்கதர் யார் தெரியுமா ? முர.மா தான்.

சிவாஜியில் மெலடியான பாடல் 'சகாரா' இந்த டியூனை கேட்டுவிட்டு ஷங்கர் டியூன் மிகவும் ‘மெதுவாக இருக்கிறது படத்தின் ஸ்பீட் குறையும் என்றவுடன் அதற்கு வேகம் கொடுத்தேன் என்று ரஹ்மானிடம் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் படம் என்றாலும் பாடல்கள் நல்லா இருக்கனும், இல்லை வெளியே கெண்டீன் பக்கம் போய்விடுவார்கள் நம்ம மக்கள்.

ஃபாரன்ஹீட் 9/11 புகழ் மைக்கேல் மூர் ‘சிக்கோ’ என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் மருத்துவம் என்பது எப்படி ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத் தினருக்கும் எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் ‘சிக்கோ’ தோலுரித்துக் காட்டுகிறது. என்னை கலங்கடித்தது ஒரு விபத்தில் இரண்டு விரல்களை இழந்த தொழிலாளி டாக்டர் ஃபீஸுக்கு ஏற்ப ஒரு விரலைத்தான் ஆபரேஷன் மூலம் பொறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் எந்த விரல் குறைவான கட்டணமோ அதை பொருத்திக் கொண்டு இன்னொரு விரல் ? குப்பையில்!. WTC கோபுர தாக்குதலின் போது தங்களுடைய இன்னுயிரையும் பார்க்காது பலரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் இன்று மரணப் படுக்கையில் மருத்துவச் செலவை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதையும் அவர்களை கியூபா விற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது என்ற விஷுவல் சூப்பர். அதே போல் லண்டன் சென்று அங்கு "Cashier" என்று பலகை போட்டிருக்கும் இடத்தில் போக்குவரத்து செலவுக்கு நோயாளிகளுக்கு பணம் தருகிறது. லண்டனில் மருத்துவர்கள், ஊழியர்கள் மருத்துவமனை பணம் வாங்குமா என்ற கேள்விக்கு சிரிக்கிறார்கள். மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை அளிக்கும் நாடுகளாக லண்டன், கியூபாவையும், ஃபிரான்ஸையும் சொல்கிறார் மூர். அமெரிக்க கனவுகளுடன் அங்கே போகிறவர்கள் பார்க்க வேண்டிய படம்.

படம் பார்த்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை கிளிப்பிங்ஸ்
1. மைகேல் மூர் CNN-IBN லைவ் பேட்டி ( சும்மா அதிருதில்ல )
2. மைகேல் மூர் CNN-IBN பேட்டியின் இரண்டாம் பாகம்
3. லாரி கிங் நிகழ்ச்சியில் மைகேல் மூர்
4. டாகடர் சன்ஜய் குப்தாவிற்கு வைக்கும் ஆப்பு


‘தம்மிடமுள்ள பத்திரிகையையும் ஒரு நடிகரையும் வைத்து அரசு கேபிள் டி.வி. எதிர்ப்புச் செய்திக்காகவே பயன்படுத்துகிறார்கள். அரசு தொடங்கிடும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் அமைப்பைத் தகர்த்தால்தான் தமது ஏகபோக ஆதிக்கத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத் தலாமென திட்டமிடுகிறார்கள்’ இது கலைஞர் அறிக்கையின் ஒரு பகுதி. இதில் சன் டிவியை சாடியிருக்கிறார் சரி. 'நடிகர்' என்று யாரை சொல்லியிருக்கிறார் ? உனக்கு தெரியுமா ?

அமெரிக்காவுடனான புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தின் விளைவு எப்படி இருக்க போகிறது ? முன்பு அப்துல் கலாம் ‘வெளிநாட்டுப் பெண்மணி’ என்ற ஒரு பாயின்ட்டைச் சொல்லி சோனியாவிற்கு முட்டுக் கட்டை போட்டார். ஆனால் இப்ப பிரதீபா பாட்டீல் என்பதால் சோனியா பிரதமர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை. அதனால் ‘யார் என்ன சொன்னாலும் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை’ என்று பிரதமர் மன் மோகன் சிங் சொன்னதை வைத்து பார்த்தால் கூடிய சீக்கிரம் சோனியா பிரதமர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே ? இல்லை இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வந்துவிடுமா ?

ராமதாஸ் ரொம்ப காட்டமாக தான் அறிக்கை விடுகிறார். மக்கள் நலனில் இவ்வளவு அக்கரையா ? என்று நினைக்க வேண்டாம். மணல் திருட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அரசின் மெத்தனம் என்று விமர்சனம் எல்லாம் எதற்கு தெரியுமா ? கொஞ்ச நாள் முன் அமைச்சர் துரைமுருகன் டாக்டர் ஐயாவை ஏதோ கிண்டலாக பேசியதின் விளைவாம். அதனால் யாரும் டாக்டரை மக்கள் நலனில் அக்கரை உள்ளவர் என்று தப்பாக நினைக்காதீர்கள்.

"சத்தியமூர்த்தி பவனிற்கு வந்து ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பது, ராஜீவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சொல்லியிருக்கிறார். இப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்.

ஜெயின் கமிஷன் திமுக பற்றி கூறியதும், உடனே திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள்விழாவில் கலைஞர் பங்கேற்பது ராஜிவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும்" :-)

ராமதாஸ் நேற்று:
டாஸ்மார்க் கடைகளே இருக்கு கூடாது

ராமதாஸ் இன்று:
நான் தமிழக அரசுக்கு ஒன்றை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். மணல் விற்பனையில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது. "டாஸ்மாக்' கடையில் சாராயம் விற்பதைப் போல் அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். ( ஆக அரசு சாராயம் விற்றால் ஓ.கே )

உஷா அக்கா லெமன் ரைஸ் சாப்பிட்டால் தலைவலி வருகிறது என்று எழுதியிருக்கிறார். கடைசியாக லெமன் காரணம் இல்லை சொன்னாலும், லெமன் சாப்பிட்டால் சிலருக்கு மைக்ரேன் வரும் என்பது உண்மை. ( சொந்தகாரர்கள் வீட்டில் வேறு தலைவலிகள் இருப்பதால், இந்த லெமன் ரைஸ் தலைவலி அவருக்கு தெரியலை என்று நினைக்கிறேன்). அங்கே கிடைக்காத விழிப்புணர்வு இந்த பதிவில் இருக்கு என்று நினைக்க வேண்டாம்.


உங்கள் நண்பன்,
இட்லிவடை.

Read More...

Wednesday, August 22, 2007

கூட்டமாக என்ன பார்க்கிறார்கள் ?


சென்னை மக்கள் ஆர்வமாக எதை பார்க்கிறார்கள் ? விவரம் கீழே..


சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ராஜகோபுரத்தை இடி தாக்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கபாலீசுவரர் கோவில்

சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ராஜகோபுரம் சுமார் 140 அடியில் கம்பீரமாக காட்சி அளித்துவருகிறது. இந்த கோபுரம் மொத்தம் 9 அடுக்குகளை கொண்டது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று பகலில் மேகமூட்டமாக இருந்தது. மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5.55 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி ஒன்று கபாலீசுவரர் கோவில் கோபுரத்தின் தெற்கு பகுதியை தாக்கியது. ராஜகோபுரத்தின் நாசித்தலை பகுதியில் இந்த இடி விழுந்தது.

இதில் ராஜகோபுரத்தில் இருந்த சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தன. ராஜகோபுரத்தின் மீது இடி விழுந்ததால் கோவிலில் இருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சிலைகள் விழுந்ததில் கோவிலில் பணியாற்றி வந்த பாரி என்பவர் உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கோவில் அருகே உள்ள காலணிகள் பாதுகாக்கும் கூரை மீதும் சிலைகள் விழுந்தன. இதில் லட்சுமி, முருகன், சிங்கம் ஆகிய சிலைகள் சேதம் அடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பிக்கப்படும்

தகவல் அறிந்ததும், கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லிகுப்புசாமி, வைத்தியநாதன்,கோவி லின் இணைகமிஷனர் தனபால், செயல் அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜகோபுரத்தின் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.இது குறித்து இணைகமிஷனர் தனபால் கூறியதாவது:-

ராஜகோபுரத்தின் உச்சிப்பகுதியான நாசித்தலையின் தெற்கு பகுதியை இடி தாக்கியுள்ளது.இத னால் சிறிய அளவுக்கு சிதைவு ஏற்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டுக்கு இடையூறு இல்லாத வகையில், இடி தாக்கியதற்கு உடனே கோவிலில் பிராயச்சித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடந்து வருகிறது. நாளை (வியாழக்கிழமை) பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரத்தின் சிதைந்த பகுதி புதுப்பிக்கப்படுகிறது. இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஆகும். கடந்த வருடத்தில் தாரமங்கலம், திருநாகேஸ்வரம் ஆகிய கோவில்களின் இதே போல் இடிதாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்கள் கூட்டம்

கபாலீசுவரர் கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்த செய்தி காட்டுத் தீ போல அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவில் முன் திரண்டனர். மேலும் நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலுக்குள் வந்த அனைவரும் கோபுரத்தின் மீது இடி விழுந்த இடத்தை கீழே இருந்து கொண்டே பார்த்தனர். கோவிலுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கோபுரத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிற்பத்திற்கு சேதம் ஏற்பட்டதால் அது கீழே விழுந்து விடாமல் இருக்க கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.

இடி விழுந்த கபாலீசுவரர் கோவில் ராஜகோபுரத்தில் ஏற்கனவே இடிதாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
( செய்தி, படங்கள் : தினத்தந்தி )

Read More...

Tuesday, August 21, 2007

ராமதாஸ் கேள்விகளுக்கு கருணாநிதி திணறல் - வைகோ

திமுக ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். ஆட்சிக்கு எதிராக நித்தம் போர்க்கொடி தூக்கி சவுக்கடி கொடுக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் கருணாநிதி திணறுவதாகவும் அவர் கூறினார். முழு பேச்சி கீழே...

வைகோ பேச்சு:
ஏழை, எளிய நடுத்தர மக்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறு கிறது. பத்திர பதிவு வழிகாட்டு மதிப்பை உயர்த்தியிருப்பதன் மூலம் பெரும் பணக்காரர்களும், கருப்பு பண முதலைகளும் லாபமடைய இந்த அரசு வழி செய்திருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினரின் துணையுடன் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளம் அழியும் அபாய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தின் அனைத்து உரிமை களும் இந்த ஆட்சியில் பறிபோய் கொண்டிருக்கின்றன. காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய நதிநீர்ப் பிரச்சனைகளில் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கேரள அரசாங்கம், முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டப் போவதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் நமக்கு நியாயமாக தண்ணீர் விட மறுக்கிறார்கள். ஆனால் இங்கிருந்து கேரளாவுக்கு அரிசி, பால், காய்கறி போன்ற உணவுப் பொருட்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி வருகிறார். இதனை மதிமுகவும் ஆதரிக்கிறது.

மணல் கொள்ளை உள்ளிட்ட இந்த அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நித்தமும் போர்க்கொடி தூக்கி பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் சவுக்கடிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் கருணாநிதி திணறி வருகிறார். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கப் போவதில்லை

Read More...

கிடைத்தது விசா !

இந்திய டாக்டர் ஹனீபுக்கு விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. லண்டனில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் இந்தியடாக்டர் முகமது ஹனீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். மேலும் கடந்த மாதம் அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஹனீப் ஆஸ்திரேலிய கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஹனீபின் விசாவை ரத்து செய்தது செல்லாது என ஆஸ்திரேலிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Read More...

Monday, August 20, 2007

பழைய மாமல்லபுரம் சாலை - ராஜீவ்காந்தி சாலை

கணினி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்டப்படும் என முதல மைச்சர் கருணாநிதி அறிவித் துள்ளார். நாம் அனைவரும் ஒரே சாலையில் செல்வோம்; ஜனநாயக சாலையில் செல்வோம்; சாலை மாற மாட்டோம் என்ற சத்தியத்தை சத்தியமூர்த்தி பவனில் எடுத்துக் கொள்வோம் என்றும் அவர் கூறினார். முழு பேச்சு கீழே...

தங்கபாலு, ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் மிஸ்ஸிங்

கலைஞர் பேச்சு :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைந்துள்ள சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று அமரர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ராஜீவ்காந்தியின் திரு வுருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெரும் பூரிப்பையும், உற்சாகத் தையும் தருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது இரண்டு நிகழ்வுகளை நான் எண்ணிப் பார்க்கிறேன். ஒன்று, பெருந்தலைவர் காமராஜரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி ஆசா னாகத் திகழ்ந்த தீரர் சத்தியமூர்த்தி யின் பெயர் சூட்டப்பட்டுள்ள இங்கு வருவதில் பெருமை அடைகிறேன். மற்றொன்று, உங்கள் அனை வரையும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

ராஜீவ்காந்தி நிகழ்ச்சிக்கு நான் வருவது ஒன்றும் புதிதல்ல. அண்மை யில் சோனியா காந்தியுடன் ஸ்ரீபெரும் புதூருக்குச் சென்று ராஜீவ் காந்தி நினைவிடத்தை கண்டு வணங்கும் வாய்ப்பைப் பெற்றேன். சத்தியமூர்த்தி பவனுக்கு கருணாநிதி வருகிறார் என்பதை ஏதோ சந்திர மண்டலத்திற்குச் செல்வது போல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு, இங்கு பெரும் கூட்டத்தை கூட்டியதற் காக மனமார்ந்த நன்றி தெரிவிக் கிறேன்.

தீரர் சத்தியமூர்த்தியை இளம் பருவத் திலேயே நான் அறிவேன். நான் பிறந்த திருக்குவளை மாரியம்மன் கோயில் திடலில் காங்கிரஸ் மாநாடு அப்போது நடைபெற்றது. அவ்வமயம் நான் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தேன். அந்தக் கட்சியில் இருந்த போதிலும், இந்த மாநாடு நடந்தபோது சத்தியமூர்த்தியை சந்தித்திருக்கிறேன். அன்று முதல் அவர் மீது நான் கொண்டுள்ள மரியாதை எள்ளளவும் குறையவில்லை.

தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இங்கு நடைபெறும் ராஜீவ் காந்தி பிறந்த தின விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனடி யாக இசைவு தெரிவித்தேன்.

ராஜீவ்காந்தி இளம் வயதில் நாட்டுக்காக, மக்கள் ஒற்றுமைக்காக, சமூக நலனுக்காக தமது ரத்தத்துளி களை தமிழக மண்ணில் தெளித்து விட்டு சென்று விட்டார். அவ்வாறு தெளித்த குருதி சமூக ஒற்றுமையை தமிழக மண்ணில் பரப்பி வருகிறது.

நான் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தால் என் அடிப்படைக் கொள்கை களை மாற்றிக் கொள்ளப் போவ தில்லை. அதுபோல நீங்களோ அண்ணா அறிவாலயத்திற்கு வந்தா லும், உங்கள் அடிப்படைக் கொள்கை களை மாற்றிக் கொள்ளப் போவ தில்லை. அடிப்படைக் கொள்கை மாறாமல் போற்றிப் பாதுகாப்பது நமது பண்பாடாக உள்ளது.

அந்த நாகரீகப் பண்பாட்டை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. நமக்குள் ஆயிரம் கருத்துவேறுபாடு இருந்தாலும் நாம் ஒருவரையொருவர் தோழமையோடு பழக வேண்டும். தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங் களைப் பார்த்தால் அங்கு அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக கூடிப் பேசி ஒரே முடிவை எடுக்கிறார்கள்.

இங்கு தான் நவக்கிரகம் போல பரஸ்பர பாகுபாடு பார்க்கிறார்கள். ஒருவரை யொருவர் பார்த்தாலே அவரவர் அலுவலகத்திற்கு செல்லும்போது தம்மை கட்டம் கட்டி விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.அந்த நிலை மாற வேண்டும்.

எனக்கும், ராஜீவ்காந்திக்கும் நீண்ட கால நட்பு இல்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் அவர் வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கும் சஞ்சய் காந்திக்கும் நட்பு உண்டு. அவர் மறைந்த போது நான் மைசூரில் இருந்தேன்.

சஞ்சய்காந்தி மறைவுச் செய்தி கேட்டவுடன் ஓடோடிச் சென்று இந்திராகாந்திக்கு ஆறுதல் கூறியதை என்றும் மறக்க முடியாது. என் குடும் பத்திற்கும், இந்திராகாந்தியின் குடும் பத்திற்கும் ஒற்றுமை இருந்ததை யாராவது சந்தேகப்பட்டால் அதற்கு புகைப்பட சான்று உள்ளது.

1989ல் தமிழக சட்டசபையில் ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நான் முதல்வர்; ராஜீவ் காந்தி பிரதமர். நான் இங்கு நடந்த நிகழ்வு களை பிரதமரிடம் கூறுவதற்காக டெல்லி சென்று புகைப்படத்தைக் காட்டி நடந்ததை விவரித்தேன்.

அவர் அதைப் பார்த்துவிட்டு சொன்னது என்ன தெரியுமா? "தமிழக சட்டசபையில் இருக்கைகளை முதலில் மாற்றியமைக்க வேண்டும். ஒரு வருக்கொருவர் தொட்டுப் பேசும் படியாக இருக்கைகள் இருப்பதால்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது' என்று அவர் கூறினார்.

அதன்படி நான் சட்டசபையில் இருக்கைகளை மாற்றி அமைத்தேன். அவ்வாறு மாற்றி அமைக்கும்போது நான் சொன்னேன், இந்த யோசனை என்னுடைய யோசனை அல்ல; ராஜீவ் காந்தி சொன்ன யோசனை என்றேன். இது அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியும்.

உள்ளாட்சியில் ஜனநாயகம் பூத்துக் குலுங்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். அதன்படி தமிழகத் தில் உள்ளாட்சி மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. என்னை நீங்கள் அழைத்ததும், நான் இங்கு வந்ததும், என்னை நீங்கள் உபசரித்ததும் குடும்ப பாச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, கணினி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கையை நான் இந்த இடத்திலேயே ஏற்று, பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என்று பெயர் சூட்டுகிறேன். நாம் அனைவரும் ஒரே சாலையில் செல்வோம். ஜனநாயக சாலையில் செல்வோம்; சாலை மாற மாட்டோம் என்ற சத்தியத்தை சத்திய மூர்த்தி பவனில் எடுத்துக் கொள்வோம்.

கிருஷ்ணசாமி பேச்சு:

முதலமைச்சர் எதைச் சொன்னாலும், அதைச் செய்ய சோனியாகாந்தி தயாராக இருக்கிறார். அது போல சோனியா காந்தி எதைச் சொன்னாலும் அதைச் செய்வதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மத்திய அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி நடந்து வருகிறது. இதனைத் தடுப்ப தற்கு நமது முதலமைச்சர் பல நல்ல யோசனைகளை சொல்லியிருப்பதால் அந்த சூழ்ச்சிகள் தவிடு பொடியாகி விடும்

Read More...

நோ டைட்டில்

என்ன டைட்டில் வைக்கலாம் என்று ரொம்ப குழம்பி போயிருக்கேன். அதனால் இந்த பதிவுக்கு நோ டைட்டில் :-)

2500
இது வெறும் எண் இல்லை
இருக்கும் இனங்கள்
இன்று வந்தவைகள்
நாளை இருப்பதில்லை
எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை
நம்மை -
நிம்மதியாக இருக்கவிடுவதுமில்லை
கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால்
வலது, இடது என்று பார்க்காமல்
கடித்து வைக்கும் ரத்தக் காட்டேரிகள்
மணம் வீசும் இடத்தில்
தேன் வழியும் இடத்தில்
திறந்த வெளியில்,
பூங்காக்களில்,
கடற்கரை ஓரத்தில்...பரவியிருக்கும்
தண்ணீரை பார்த்தால்
கூட்டம் சேர்ந்துக் கும்மி அடிக்கும்
தன் இனக் குஞ்சுகளைப் பெருக்கும்.
காதருகில் கேட்க சகியா கானம் பாடும்
பட்டை அடித்துக் கொள்பவர்களைக் குறிவைக்கும்
கும்மி முடிந்தபின் காற்றுவாக்கிலேயே
நோய்கள் பரவிக் கொல்லும்
மரத்தடி என்றால் மலேரியா
காப்பிக் கடையில் டெங்கு
அன்புடன் இடங்கொடுத்தால் உங்களுக்கு - சிக்குன்குனியா
பெண்ணுக்கு வாய் நீளம்
அதனால் கடித்து வைக்கும்
சொறிந்து கொண்டால் அரிப்பு அடங்கும்
ரொம்பச் சொறிந்தால் தடித்துப் போகும்
அலறிப் புடைத்து அத்தனை பேரும்
வீட்டுக் கதவுகளை அடைக்கின்றனர் தினந்தோறும்
எப்படியும் சிலது
வலைக்குள்ளே வந்தும் பாடுபடுத்தும்
அடிக்காமல் விட்டால் டைனோசர் ஆகும்
கடிப்பது அதன் சுபாவம்
அடிப்பது நம் சுபாவம்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று
பாஸ்போர்ட் இல்லாமல் எங்கும் இருக்கும்
சோதனைக்கூடத்தில் ஒரிஜினலை விரட்ட
போலிகளை உருவாக்க ஆராய்ச்சி
கட்டுப்படுத்த
Do's and Don'ts நிறைய இருந்தாலும்
என்றுமே நமக்கு இது தொடர்கதை தான்

ஒரு "கொசு" றுச் செய்தி: இன்று உலக கொசு தினம்

கடிக்க விரும்பும் கொசுக்கள் பின்னூட்டத்துக்கு செல்லவும்

Read More...

சஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன்

நடிகர் சஞ்சய் தத்துக்கு இடைக்கால ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு -

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் தண்டனை வழங்கி மும்பை தடா கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். தடா கோர்ட்டின் முழுமையான தீர்ப்பு விவரம் கிடைக்காததால், தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாத நிலையில் உள்ளார் சஞ்சய் தத். தீர்ப்பின் முழு விவரம் தரப்படாததன் அடிப்படையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, சஞ்சய் தத் உட்பட ஐந்து பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நடிகர் சஞ்சய்தத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More...

Sunday, August 19, 2007

சண்டே சாயு(ம்)ங்காலம்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் டில்லி அரசியலில் பெரும் புயல் கிளம்பியுள்ளது. இடதுசாரிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டுக்கு 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. டில்லியில் இதனை தெலுங்கு சேம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

* இந்தி நுழைந்து விடக் கூடாது என்று பயந்து ஆங்கிலத்தை வரவேற்றோம். ஆனால் 'இன்றோ ஆங்கிலம், தமிழை விரட்டி விட்டு விட்டது'

* அரசின் கேபிள் டிவி நிறுவனம் குறித்து ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியான அரசாணையில் குழப்பம் இருப்பதாகவும் அதுபற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்

இவை இரண்டையும் சொன்னது வேறு யார் நம்ம டாக்டர் ராமதாஸ் தான்.


அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட முடியாது, இடதுசாரிகள் விரும்பினால் ஆதரவை விலக்கிக்கொள்ளட்டும் என்று சவால்விட்டு, மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய மன்மோகன் சிங், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவராஜ் பாடீல், அல்லது சோனியா காந்தி பெயர் அடிபடுகிறது.

Read More...

Saturday, August 18, 2007

கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு வார்த்தை

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வோம் என்ற இடதுசாரி கட்சிகளின் மிரட்டலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாபபு அமைச்சர் ஏகே அந்தோணி மற்றும் அகமது படேல் ஆகியோர் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தை சந்தித்து பேசினர்

பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை கீழே...மொத்த இடம் 545

காலி இடங்கள் 4
-
காங்கிரஸ் கூட்டணி -222
-

காங்கிரஸ் 150

ராஷ்ட்ரிய ஜனதாதளம் 24

தி.மு.க 16

தேசியவாத காங்கிரஸ் 11

பாட்டாளி மக்கள் கட்சி 6

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 4

லோக் ஜனசக்தி 4

போட்டி ம.தி.மு.க 2

ராஷ்ட்ரிய லோக்தளம் 3

முஸ்லிம் லீக் 1

மக்கள் ஜனநாயக கட்சி 1

-

பாஜனதா கூட்டணி -171

-

பா.ஜனதா 132

சிவசேனா 12

பிஜூ ஜனதாதளம் 11

அகாலிதளம் 8

ஐக்கிய ஜனதாதளம் 7

திரிணாமுல்காங்கிரஸ் 1

-

கம்யூனிஸ்டு கூட்டணி -59

-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 43

இந்திய கம்யூனிஸ்டு கட்சி 10

பார்வர்டு பிளாக் 3

ஆர்.எஸ்.பி 3

-

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி-48

-

சமாஜ்வாடி கட்சி 38

தெலுங்குதேசம் 4

ம.தி.மு.க 2

அசாம்கனபரிசத் 2

கேரளகாங்கிரஸ் 2

-

பிற கட்சிகள் -41

-

பகுஜன்சமாஜ் 18

தெலுங்கானா ராஷ்ட்ரசமிதி 5

மதசார்பற்ற ஜனதாதளம் 3

தேசியமாநாட்டுக்கட்சி 2

சிக்கிம் ஜனநாயக முன்னனி 1

குடியரசு கட்சி 1

தேசிய லோக்தந்திரிக் கட்சி 1

மிஜோ தேசிய கூட்டணி 1

ஏ.ஐ.எம்.ஐ.என். 1

பாரதீய நவசக்தி 1

நாகாலாந்து மக்கள் முன்னணி 1

சுயேட்சை 6

Read More...

FLASH: மீறினால் ஆதரவு வாபஸ் - கம்யூ

இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கும் மார்க்., கம்யூ., பொலிட்பீரோ கூட்டம் 2 வது நாளாக நடந்தது. கூட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற்ற கூடாது என்றும் , இது குறித்து பார்லி.,யில் விவாதிக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியாவுடன் மார்க்., கம்யூ பொதுசெயலர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது கம்யூ., கட்சியின் நிலையை எடுத்து கூறியுள்ளார். இது குறித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடார்பாக இவர் நிருபர்களிடம் பேசுகையில் இந்த ஒப்பந்தம் பெரும் ஆபத்தானது இதனை ஏற்க முடியாது என்றார். மேலும் கட்சி நிலையை தெரிவித்து விட்டோம். மீறினால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டியது வரும் என்றார். இந்திய கம்யூ கட்சியும் இதே நிலையில் இருந்து வருகிறது.
( செய்தி, அறிக்கை பார்க்க படிக்க IBNLive )

Read More...

ராமதாஸ் ( வழக்கம் போல் ) சூடான பேட்டி

எரிமலையாகிறார் ராமதாஸ்... ‘‘அரசின் தவறுக்கு ஆதாரம் இருக்கிறது!’

‘எனது இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன். கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டிருக் கிறேன். அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மன உளைச்சல் இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னைப் பற்றி முதலமைச்சர் கலைஞர் சொன்ன சில வார்த்தைகள் மனதை பெரும் பாரமாக அழுத்துகின்றன...’’

- திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் எதிரில் அமர்ந்திருந்த நம்மிடம் உணர்ச்சிவசப்பட்டுப் பேச ஆரம்பித்தார் டாக்டர் ராமதாஸ். மனதின் காயம் அவர் வார்த்தைகளின் வழியே வெளிப்பட்டது. அவருடன் உரையாடலைத் தொடர்ந்தோம்...

‘‘நீங்கள் சுட்டிக்காட்டிய அநேக பிரச்னைகளை... குறிப்பாக துணை நகரம் உட்பட பல திட்டங்களை உங்கள் எதிர்ப்பால் திரும்பப் பெற்றுக் கொண்டவர் முதல்வர். அவரது வார்த்தைகளா உங்களைப் புண்படுத்திவிட்டன?’’

‘‘ஆம். சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் களம் இறங்கியபோது, இந்த ஆட்சியின் அவல நிலை அப்பட்டமாகத் தெரிந்தது. ஒரு ஆட்சியில் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அதிகாரிகளின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அவர்கள் சொல்லும் தகவல்களை சரிபார்த்த பிறகே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அதைச் செய்தியாக வெளியிடவும் செயல்படுத்தவும் வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சரோ, ‘வீட்டு வசதி வாரியத்துக்காக

நிலங் களைக் கொடுத்தவர்கள், அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட விவரம் தெரியாமல் சில தலைவர்கள் அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். அதே தலைவர்கள் எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்ட சூழ்நிலையில் வன்முறையற்ற அமைதி, நட்புறவு ஆகிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதாலேயே நாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்கு கைகொடுப்பவர்கள் என்ற குற்றத்துக்கு நாமும் ஆளாகிவிடுவதா?’ என்று சொல்லியிருக்கிறார். கூடவே, ‘முடிவெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டி ருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார்.

கூட்டணியை முறித்துக்கொள்ள காலம் பார்த்துக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் சொல்லியிருப்பது என்னை வருத்தமடையச் செய்கிறது. நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பதை இப்போது முதலமைச்சருக்குச் சொல்கிறேன். முதல்வர் சொல்வது போல் வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கொடுத்த அனைவருமே அரசாங்கத்திடமிருந்து பணம் வாங்கவில்லை. பத்து சதவிகிதம் பேர்தான் பணம் வாங்கியிருக்கிறார்கள். மக்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அந்த நிலங்களில் குடியிருப்புகளைக் கட்டாமல் இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலா பத்து ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் சொன்னால் நான் வன்முறையைத் தூண்டுவதாகச் சொல்கிறார் முதலமைச்சர். தமிழக அரசின் கவனத்துக்கு பல விஷயங்களை அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் முதலமைச்சருக்கு வராத கோபம் இப்போது வரக் காரணம் என்ன? இந்த விவகாரத்தில் மக்களும் நானும் சொல்வது நிஜம் என்பதால்தான்.

அங்கே வீடுகளைக் கட்டி குடியிருக்கும் மக்கள் என்னிடம் ஓடி வருகிறார்கள். எங்கள் எம்.பி-யான ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடத்திய போராட்டத்துக்கு பலனில் லாததால் நானே அந்தப் பகுதிக்குச் சென்றேன். ஒரு இதய நோயாளி, ‘என் வீட்டை இடிக்க அரசாங்கம் நாள் குறித்து விட்டது. அதே நாள்தான் என்னுடைய கடைசி நாள்’ என்று கண்ணீர் விட்டார். அப்போது, ‘உங்கள் வீட்டை இடிக்க புல்டோஸர் வந்தால் அதன் சாவியைப் பிடுங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இதில் எங்கே வன்முறை இருக்கிறது?

தி.மு.க. ஆட்சியில் இல்லாத வன்முறையா என் வார்த்தைகளில் வந்து விட்டது? தென்காசியில் பட்டப்பகலில் கொலை, சென்னையில் தொடர்ந்து கொலை, மதுரையில் மாநகர மேயர் தன் கணவரோடு சேர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார். அங்குள்ள பத்திரிகை அலுவலகத்தில் மூவர் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார்கள். எல்லாவற்றையும் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. இதுவா சட்டம் - ஒழுங்கு? எனக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. நான், என்ன பேசுகிறேன் என்பதை உணர்ந்து அறிந்து பேசுகிற பக்குவமுள்ள குடிமகன்.’’

‘‘முதலமைச்சரிடம் நீங்கள் தனியாகச் சொல்ல வேண்டிய விஷயங்களை, கோரிக்கைகளை மக்கள் மத்தியில் சொல்லி அதையே அரசியலாக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறீர்கள் என்று தி.மு.க-வினர் சொல்கி றார்களே?’’

‘‘சில விஷயங்களைக் கடிதமாக எழுதுகிறேன். லாட்டரி, கஞ்சா ஆகிய விவகாரங்களை சட்டமன்றத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் மூலம் எழுப்பினோம். என்ன நடவடிக்கை எடுத்தார் முதலமைச்சர்? மார்ட்டின் என்ற ஒரு லாட்டரி வியாபாரியை இதோ பிடிக்கிறோம், அதோ பிடிக்கிறோம் என்றது காவல்துறை. மார்ட்டினை கைது செய்தார்களா? என்ன ஆனார் அந்த மார்ட்டின்? இப்போதும் லாட்டரி வியாபாரம் தமிழகத்தில் சக்கைப்போடு போடுகிறது.

ஒரு அமைச்சரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை நானே நேரில் போய் முதலமைச்சரிடம் சொன்னேன். அந்த அமைச்சரைப் பற்றிச் சொன்னால் முதல்வருக்குக் கோபம் வருகிறது. ‘எதற்கும் ஒரு எல்லை உண்டு’ என்று எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

எல்லாவற்றையும் விடுங்கள், காவிரி இறுதித் தீர்ப்பு நகலை தமிழக அரசிடம் கேட்டோம். கொடுக்கவே இல்லை. அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதற்கு முதல் நாள் கொடுத்தனுப்புகிறார்கள். ஆகவே, இந்த மாதிரி சூழ்நிலையில் பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் சொல்வதுதான் சரி என்று எனக்குப்படுகிறது.’’

‘‘டைட்டானியம் தொழிற்சாலை விவகாரத் தில் ஏதோ பலனை எதிர்பார்த்துத்தான் நீங்கள் அதை எதிர்க்கிறீர்கள் என்று சில அரசியல் கட்சித் தலைவர்களே சொல்கிறார்களே?’’

‘‘முதல்வரே அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை சூசகமாக சொல்கிறார். ‘மூன்று மீட்டர் ஆழத்துக்குஅந்தப் பகுதியில் மணல் எடுத்தால் பாலைவனமாகாது. எதிர்ப்பாளர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ இது முதல்வரின் கூற்று. டாடா நிர்வாகத்தின் கூற்று என்ன? ஏழு மீட்டர் ஆழத்துக்கு மணல் எடுப்போம் என்பதுதான். அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் இரண்டு தரப்புமே என்ன செய்யப்போகிறோம் என்ற முடிவுக்கு வராத நிலையில் அங்குள்ள மக்களின் நிலங்களைப் பிடுங்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது அரசு.

டைட்டானியம் விவகாரத்தில் முதலமைச்சருக்கு ஒரே ஒரு கேள்வியை உங்கள் மூலம் கேட்கிறேன். ‘நீங்களும் டாடாவும் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் நகலை வெளியிட முடியுமா?’ இதற்கு முதல்வர் பதில் சொல்லட்டும்.

டாடாவுக்கு முன்பே அந்தப் பகுதியில் மணலை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வைகுண்டராஜன் என்பவருக்கு எதிராக தி.மு.க. ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்குமா? 97-ம் வருடம் வைகுண்டராஜனுக்கு எதிராக நெல்லையில் பெரும் கூட்டத்துடன் உண்ணாவிரதமிருந்தேன். அப்போதும் கலைஞர்தான் முதலமைச்சர். இப்போது இந்த மணல் விவகாரத்தில் ஏதேதோ பலன்களை எதிர்பார்த்துத்தான் ஆளும்கட்சியும் காய் நகர்த்துகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

டைட்டானியம் விவகாரத்தில் நாங்கள் கருத்துக் கேட்பு இயக்கம் நடத்துகிறோம். முதலமைச்சரோ தனது அமைச்சர் பெருமக்களை வைத்துக் கருத்துத் திணிப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்!’’

‘‘சரி, இவ்வளவு மனக்குமுறல்களோடு கூட்டணியில் இருக்கத்தான் வேண்டுமா என்று எப்போதாவது யோசித்ததுண்டா?’’

‘‘என்னைப் பொறுத்தவரை இந்த அரசுக்கு என்னால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் வாயை மூடிக்கொண்டு பா.ம.க. ஒரு ஓரமாக இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தால் அது நடக்காது. இடதுசாரிகள் ஒரு தவறை சுட்டிக் காட்டினால் அது அவர்களுடைய கொள்கை, நிலைப்பாடு என்று மத்தியில் சோனியாவும், மன்மோகன் சிங்கும் கருதுகிறார்கள். அது அவர்களுடைய உயர்ந்த அரசியல் நாகரிகத்தைக் காட்டு கிறது. ஆனால், இங்கே இருப்பவர்களோ அதை அரசியல் ஸ்டண்ட் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். தமிழகத்தில் இதைவிட அரசியல் நாகரிகம் முன்னெப்போதும் தரம் தாழ்ந்ததில்லை!’’

‘‘தி.மு.க. ஆட்சிக்கு மார்க் போடச் சொன்னால் எவ்வளவு மார்க் போடுவீர்கள்?’’

‘‘மார்க் போடுவது இருக்கட்டும்’’ என்ற ராமதாஸ், பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை எடுத்துப் புரட்டிவிட்டு, அதிலிருந்து சில புகைப்படங்களை நம்மிடம் காட்டியபடி பேச ஆரம்பித்தார். ‘‘இந்த ஆட்சியின் நிலையை மணல் விவகாரத்தைக் கொண்டு எடை போடுகிறேன். நீங்கள் பார்க்கும் படங்களை எங்கள் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறோம். தாமிரபரணியின் மணல் கொள்ளைதான் இந்தப் படங்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக கோவையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் மீது பேராசிரியர் அன்பழகன் கவர்னரிடம் ஒரு மனு கொடுத்தார். இன்று, அதே பிரமுகருடன் இன்னும் இருவர் சேர்ந்துகொண்டு தமிழக ஆறுகளின் மணலை கூறுபோட்டு விற்கிறார்கள். இதை நான் அறிக்கையாக சொல்ல, பெயரளவுக்கு சில லாரிகளைப் பிடித்தார்கள். பெரும்பாலான லாரிகள் மீது வழக்கே போடவில்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது என்று நான் சொல்கிறேன்... இல்லை என்று சொல்ல முதல்வர் தயாரா? நடக்கிறது என்று சொன்னால் அதைச் செய்வது அதிகாரிகளா? கட்சிக்காரர்களா? கட்சிக்காரர்கள் இல்லையென்று முதல்வர் சொல்வாரேயானால், எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? பதில் சொல்வாரா முதல்வர்?’’

‘‘கொதித்துக் கொண்டிருக்கும் உங்களை அ.தி.மு.க. பக்கம் கொண்டுபோக முன்னாள் டி.ஜி.பி-யான அலெக்ஸாண்டர் மூலம் ஜெயலலிதா முயற்சிப்பதாக ஒரு தகவல் உலவுகிறதே?’’

‘‘இது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் பொய். இதைப் பரப்புவது தமிழகத்தின் உளவுத்துறையாகத்தான் இருக்க வேண்டும். அது உளவுத்துறையா அல்லது பொய் பரப்புத் துறையா? இவர்களைப் போன்றவர்கள் கொடுக்கும் தகவல்களைக்கொண்டு தமிழக அரசு செயல்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்’’ என்று சீறியவர், ‘‘சரி, யார் அந்த அலெக்ஸாண்டர்? அவர் எப்படியிருப்பார்... கறுப்பா சிவப்பா?’’ என்று நம்மிடம் கேட்டார்
( நன்றி: ஜூவி )

Read More...

123 Faq


( Source: Times of India )

Read More...

123 பற்றி துக்ளக் தலையங்கம்

பிரதமர் பாராட்டுக்குரியவர் ! துக்ளக் தலையங்கம்


தேசத்தின் மீதுள்ள பற்றைக்காட்ட, பலதரப்பட்டவர்களுக்கும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது. அமெரிக்காவுடன் நமது நாடு செய்துகொள்கிற, அணுசக்தி பற்றிய ஒப்பந்தத்திற்கான வடிவம் (வசதிக்காக, "ஒப்பந்தம்' என்றே கூறுவோம்) ஏற்கப்பட்டிருப்பது, "நமது தேசத்தின் மாட்சிமை பறிபோகிறது' என்ற ஆட்சேபனையை, பல திசைகளிலிருந்து கிளப்பியிருக்கிறது.

இடதுசாரிகளிலிருந்து, அறிவாளிகள் உட்பட, பா.ஜ.க.வரை இதை பலர் எதிர்க்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே ரகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. சிலருக்கு, அமெரிக்கா என்றாலே சந்தேகம்; சிலருக்கு அமெரிக்க எதிர்ப்பு, அரசியல்
அந்தஸ்தைத் தரும் என்ற நம்பிக்கை; சிலருக்கு இந்திய – அமெரிக்க நட்பு சீனாவுக்கு பிடிக்காது என்பதால், அதுவேண்டாத உறவு என்கிற கொள்கைப்பிடிப்பு; சிலருக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம், நமது அணுசக்தி ஆராய்ச்சியையே கூட முடக்கிவிடும் என்ற உண்மையான அச்சம்.

இதில் முதல் மூன்று ரகத்தவர்கள் காட்டுவது ஒன்று – ஆதாய எதிர்ப்பு, அல்லது அர்த்தமற்ற எதிர்ப்பு. ஆகையால், கடைசி ரகத்தவர்களின் அச்சத்தைப் போக்குவதுதான், அரசின் கடமை. அந்தப்பணியை பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிகாரிகளும் சரிவர செய்துவருகிறார்கள். பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடந்தால், அப்போது அரசு தரப்பின் விளக்கங்கள், மேலும் தெளிவை உண்டாக்கி, ஒப்பந்தம் பற்றி உண்மையான அச்சம் கொண்டிருப்பவர்களின் சந்தேகங்களைப் போக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஒப்பந்தம் பற்றி, மக்கள் நினைத்துப்பார்க்கக் கூடியதும் – நினைத்துப்பார்க்க வேண்டியதும், ஒரு சில அம்சங்கள்தான். இந்த ஒப்பந்தத்தினால், நமக்குக்கிட்டுகிற பயன் – நாட்டின் மின்சாரத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய அணுமின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, வேண்டிய எரிபொருள் கிட்டும். நமது நாடு செய்த அணுஆயுத பரிசோதனைகளை அடுத்து, "அணுசக்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவை இந்தியாவிற்குக் கிட்டாது' – என்று நமக்கு விதிக்கப்பட்ட "சர்வதேசத் தனிமை'யிலிருந்து நாம் வெளியே வருகிறோம். இந்த
ஒப்பந்தம் அமல் ஆகிறபோது, அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற சில
நாடுகளிலிருந்தும் நமக்கு தொழில்நுட்ப உதவி கிட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பாதுகாப்புத் தேவைகளுக்காக இயங்கிவருகிற அணு ஆராய்ச்சி நிலையங்கள், அமெரிக்கா அல்லது அயல்நாட்டு சோதனைகளுக்கு அப்பாற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, நமது பாதுகாப்புக்கான அணுசக்தி ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும் என்கிற அச்சம், ஆதாரமற்றது.

நாம் அணுஆயுதப் பரிசோதனை (அணுகுண்டு வெடிப்பு) செய்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்கிற உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது என்பது உண்மையே; அப்படி ரத்து செய்தால் நமக்கு அவர்கள் அளித்த எரிபொருள், மற்றும் உள்ள பல சாதனங்கள் ஆகியவை திருப்பித் தர வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால், அப்படி ரத்து செய்வதானால், அதற்கு முன் அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய நிபந்தனைகள் பல, இந்த ஒப்பந்தத்திலேயே உள்ளன. நோட்டீஸ் தருவதிலிருந்து, இந்தியாவுடன் கலந்தாலோசனைகள் செய்வது உட்பட,
உலகச்சந்தையில் நிலவுகிற விலையின்படி இந்தியாவிற்கு நஷ்டஈடு கொடுத்துத்தான் எதையும் திரும்பப் பெறமுடியும் என்பது வரை உள்ள, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான், அமெரிக்கா "ஒப்பந்த ரத்து' பற்றி யோசிக்க முடியும்.

தவிர, இந்தியாவின் அணுமின் நிலையங்கள் ஸ்தம்பித்து போகாத வகையில்தான், பொருட்கள் திரும்பப்பெறுவது நடக்க முடியும் என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. ஆகையால், நாம் அணுஆயுத சோதனைகளை நடத்தினால்கூட, மீள முடியாத பின்னடைவு, இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படாது.

நமது சிவில் தேவைகளுக்கான, அணுசக்தி ஆராய்ச்சி, அயல்நாட்டு சோதனைக்கு உள்ளாவதால் நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது; மாறாக இதை ஏற்றால், அணுமின் உற்பத்தியை பெரிய அளவில் பெருக்கிக்கொள்ள வழி செய்கிற தொழில்நுட்பமும், எரிபொருளும் நமக்குக்கிட்டும்.

இரு நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறபோது, ஒரு நாடு ஏற்கக்கூடாத எதையும் நாம் ஏற்றுவிடவில்லை; எந்த ஒரு அடிமை சாசனத்தையும் இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலமாக எழுதிக்கொடுத்து விடவில்லை. இதன்மூலம் அமெரிக்காவுடனான உறவும் பலப்படும். அதுவும் நல்லதே; அதற்காகவே இதைக் கண்டிக்கிற, சீன தாசர்களாகிய இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி, இந்த
ஒப்பந்தத்தை ஏற்படுத்த முனைந்துள்ள பிரதமர், பாராட்டுக்குரியவர்.
(நன்றி: துக்ளக் )

Read More...

Friday, August 17, 2007

கலைஞர் காவியம்

"இன்னும் காசி, ராமேஸ்வரம் செல்பவர்கள், நெற்றியில் பொட்டிடுபவர்கள், விபூதி பூசுகிறவர்கள், கையிலே கயிறு கட்டுபவர்கள் இருக்கிறார்களே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது" - கலைஞர்நாளும் படிக்கிறேன்; சும்மா
நச்சுன்னு இருக்கு; உடனே -
இடத் தோன்றும் ஒரு முத்தம் -
இச்சுன்னு உனக்கு
- கவிஞர் வாலி ( கலைஞர் காவியம் )

பிகு: இரண்டு படங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

Read More...

ABC of 123

ABC of 123 - Karan Thapar article in Hindustan Times

Let me try and answer the most simple of questions this week: How good or bad is the Indo-US nuclear deal? I have a feeling that despite all the highfalutin analysis and loud tom-tomming of opinion this straightforward and essential question has been ignored. Yet it’s probably the only one that matters.

My answer is the deal is perhaps the best we could have got. More importantly, in all probability it will improve after India receives clearance from the Nuclear Suppliers Group (NSG). But what you need to know is how and why I’ve come to this conclusion. Well, read on.

There are three critical issues on which the deal should be judged. First, does it take away or constrain India’s sovereign right to carry out nuclear tests? The answer is an unequivocal no. The 123 Agreement doesn’t even mention the phrase ‘nuclear testing’ or the word ‘detonation’. More importantly, the Agreement explicitly says (Clause 2.4) that it doesn’t impinge upon India’s military strategic programme. Finally, Nicholas Burns has himself confirmed this. Now, tell me, would he lie?

So the next question is: Has it raised the cost of testing unacceptably? This depends on what would happen if India tests. America has a right of return, which, no doubt, it will insist upon. Of course its constrained with multi-layers of consultation and cross-cutting commitments. But even so, I have no doubt Washington will operationalise it. At that stage the critical question will be whether India has been able to immunise its strategic reserves of fuel from this right of return.

Let’s consider this carefully. There is no doubt there are many assurances in the 123 that suggest the answer could be yes. The issue is, are we sure? Frankly, as long as there are even a few informed voices saying no, there will be room for doubt. And today there are doubters. But if the NSG countries do not insist on a similar right of return then, at worst, we will lose American-supplied fuel but retain that which has been bought from them. In this eventuality India will have protected its strategic reserves from an American right of return. It therefore follows that the cost of testing will not have gone up unacceptably.

But is the NSG likely to insist on a right of return? I have three reasons for saying no. Unlike America, their domestic laws do not require it. If they want to do business with India, as France and Russia do, they will not consider it. And if they want to edge out America from this competition they won’t be tempted to follow America’s example.

The second critical issue is has India got the right to re-process spent fuel? Here, at the moment, the answer is yes and no. The right has been granted in principle, but it only becomes effective after “arrangements and procedures” are agreed upon. Although there is an 18-month deadline for deciding, what happens if agreement is not possible? The 123 doesn’t say. Delhi claims it can go ahead. Washington, no doubt, will differ. In all probability we could end up with a crippling difference of opinion. However, once again, the NSG is the way out. If we get a clean right to re-process from them we don’t need to worry about America’s complicated permission. And will we? Well again, NSG policy on this issue is far more accommodating then America’s. If they want to sell to us — which they do — they’ll have every reason for sticking to it. And finally, individual NSG countries have already indicated that’s what they intend.

The third issue is have we got the right to buy technologies or components associated with enrichment, re-processing and heavy water? At the moment the answer is no. But equally, the 123 doesn’t deny it. The issue is postponed for a later decision. What does that mean? This answer is crucial.

To begin with, American law doesn’t permit such sales to any country, including nuclear weapon powers. So the fact that it’s not denied to us is a significant way around US law. What this also means is that hereafter NSG countries, whose domestic laws are different, are free to make such sales if they want. Had the 123 said no — which is what consistency with American law might have logically required — we would have been in trouble. But the artful veering around this has opened the way for NSG sales.

Now, will the NSG sell? Without doubt. The French and the Russians are not just keen, but anxious to do so. The only thing they need is the American 123 to clear the way. Now that they have it, they’ll be knocking on our doors.

So what does all this amount to? If you take the 123 along with the outcome we anticipate from the NSG, we have achieved full civilian nuclear co-operation (the PM’s promise), safeguarded our military strategic programme, and ensured our right to test. For me that means we have got what we want.

But what if the NSG takes us by surprise and spoils things? Well, in that unlikely event, we can walk away from the 123. Remember, the US Congress will only pass the deal after passage by the NSG (and the IAEA). We sign after that.

My advice is we should wait till the NSG has met and announced its decision. Then — if all goes well, as it should — I suggest the loudest possible ‘Thank you, George Bush’! Without him this would not have been possible.
( நன்றி: Hindustan Times )

Read More...

சிம்புவிற்கு வந்த சோதனை


சிலம்பரசன் இப்போது `காளை,' 'கெட்டவன்' ஆகிய 2 புதிய படங்களில் நடித்து வருகிறார். அதில் `கெட்டவன்' படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதுடன், கதை-திரைக்கதை-வசனத்தையும் எழுதியிருக்கிறார். சிலம்பரசனுக்கு ஜோடியாக, புதுமுகம் லேகா வாஷிங்டன் நடிக்கிறார். கவர்ச்சிகரமான `அத்தை' வேடத்தில், சங்கீதா நடிக்கிறார்.படத்தின் இன்னொரு கதாநாயகியாக நமீதா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நமீதா தரப்பில் சில நிபந்தனைகள் விதிப்பதாகவும், அதிக சம்பளம் கேட்பதாகவும் தயாரிப்பாளர் விஸ்வநாதன் அதிருப்தி அடைந்துள்ளார்.

அதனால் பிரபல இந்தி நடிகை மந்த்ராபெடியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் விஸ்வநாதன் வந்து இருக்கிறார். மந்த்ராபெடி ஏற்கனவே `மன்மதன்' படத்தில், சிலம்பரசனுடன் நடித்து இருப்பதால், மீண்டும் சிலம்பரசனுடன் ஜோடி சேருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்.

இதற்கிடையில், `கெட்டவன்' படத்தில் இப்படி ஒரு வேடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு, ஷெரீன் அந்த வேடத்தில் நடிக்க மிக தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்காக கதாநாயகன் சிலம்பரசன், டைரக்டர் நந்து, தயாரிப்பாளர் விஸ்வநாதன் ஆகியோருக்கு போன் செய்து, ``கெட்டவன் படத்தில் நான்தான் நடிப்பேன்'' என்று பிடிவாதமாக வாய்ப்பு கேட்டு வருகிறார்.

நமீதா, மந்த்ராபெடி, ஷெரீன் ஆகிய மூன்று பேரில் யாரை நடிக்க வைப்பது? என்று சிலம்பரசன் குழம்பிப்போய் இருக்கிறார். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் ?

"கெட்டவன் படத்துக்காக, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நமீதாதான். படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஐந்து அல்லது ஆறு சீன்களில் வரும். அவருக்கு இரண்டு பாடல் காட்சிகளும் இருக்கிறது. நமீதாவைப் பொருத்தவரை, அவர் ஒரு நல்ல நடிகை. நல்ல சினேகிதி. ஆனால், அவருடைய மானேஜர் விதித்த நிபந்தனைகளால், தயாரிப்பாளர் நொந்து விட்டார்.

அதனால்தான் அவர், அவசரம் அவசரமாக மந்த்ராபெடியை சந்தித்து பேசியிருக்கிறார்.

இதற்கிடையில், அதே கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என்று ஷெரீன் போட்டிபோடுகிறார். எனக்கு யாரை நடிக்க வைப்பது? என்று குழப்பமாக இருக்கிறது."

இவ்வாறு சிலம்பரசன் கூறினார்.

சிம்புவிற்கு(கெட்டவனுக்கு) வந்த சோதனை யாருக்கும் வர கூடாது :-)

Read More...

Thursday, August 16, 2007

கொதித்து போயிருக்கேன் - ராமதாஸ் பேட்டி

கட்சியை வளர்ப்பதற்காக நாட்டை காடாக்கும் எந்த போராட்டத்தையும் நடத்தலாம் என்று செயல்படுபவர்கள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருக்குவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை கண்டு மனம் கொதித்துப் போயிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று கருணாநிதி கருதுகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

தைலாபுரத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேள்வி: சில அரசியல் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம்; எத்தகைய போராட்டத்தை யும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்து விட்டது என்று முதல்வர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?

பதில்: இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன்பு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும், வருங்கால வைப்பு நிதி, வட்டி குறைப்பு, விமான நிலையங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் தனியார்மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் நுழைய எதிர்ப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற விஷயங் களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளன.

இந்த போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தி வந்துள்ளன. அதே சமயம் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு இந்த கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. தேவைப்படும்போது விமர்சிக் கிறார்கள். அவசரமான பிரச்சனை களில் ஆர்ப்பாட்டங்களை நடத்து கிறார்கள். இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகளின் மிக கடுமையான விமர்சனத்தால் மிகவும் மென்மை யாக பேசக் கூடியவர் என்று கருதப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கே மிக கடுமையாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த பிரச்சனையில் இடதுசாரிகளின் எதிர்ப்பால் மத்திய அரசு நிலைக்குமா? என்கிற அளவுக்கு நிலைமை முற்றி வருகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளில் பல முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் முடங்கிப் போய் கிடக்கின்றன.

இதையெல்லாம் சொல்வது இடதுசாரி கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதை சுட்டிக் காட்ட அல்ல. அரசியலில் அவர்கள் ஒரு முடிவை மேற்கொண்டு அதே சமயம் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களை பற்றி எந்த கட்சியும் குற்றம் சொல்லவில்லை; பழி சுமத்தவில்லை.

மாறாக ஒவ்வொரு பிரச்சனையிலும் இடதுசாரி கட்சி தலைவரை அழைத்து பேசுகிறார். சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். மத்தியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக இப்படித் தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதே நிலைமைதான் தமிழகத்திலும் உள்ளது.

இங்கு திமுகவுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கின்றன. பாமகவும், இடதுசாரி கட்சிகளும் கொள்கை நிலைப் பாட்டுக்கேற்ப அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களை நடத்து கிறோம். அரசியலில் இது தவிர்க்க முடியாதது.

ஆனால் இங்கே பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மத்தியில் இருப்பது போல ஒரு ஒருங்கிணைப்புக் குழு இல்லை. அப்படி இருந்திருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகளை கலந்து பேசி குறைத்திருக்கலாம். அரசின் சில முடிவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம், பாராட்டுகிறோம். அதே போல சரியில்லாத நடவடிக்கைகளை எதிர்க்கிறோம்.

தேவைப்படும்போது போராட்டங்களை நடத்துகிறோம். இதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. டாடா டைட்டானியம் தொழிற் சாலையில் ஓராயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து விட்டு பல ஆயிரம் பேரை பாதிக்க விடுவது எப்படி நியாயம் என்று நாங்கள் கேட்கிறோம்.

கே: முடிவெடுக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறுவதன் அர்த்தம் என்ன?
ப: முதல்வர் என்ன கருதுகிறார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதற்கான காரணம் என்று கூறியிருப்பதுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது. திரும்ப திரும்ப அதை படித்து மனம் கொதித்துப் போயிருக் கிறேன்.

சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், ஒற்றுமையும், அமைதியும் ஏற்பட வேண்டும் என்று மாவட்டந் தோறும் மாநாடுகளை நடத்தி வருகிறேன். அப்படி நடந்த ஒரு மாநாட்டில் முதலமைச்சரே கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.

இப்படியெல்லாம் பாடுபட்டு வருகிற எங்களை பார்த்து நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு தூபம் போடுபவர்களை போலவும், வன்முறையை தூண்டுபவர்களை போலவும் முத்திரை குத்தும் முயற்சி என்னை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் நான் மனம் நொந்து போயிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக இந்த பழிச் சொற்கள் என்னை பெரிதும் பாதித்துள்ளது.

கே: காங்கிரஸ் ஆதரவு மட்டும் போதும் என்று முதல்வர் கருதுகிறாரா?
ப: அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு எப்படி தெரியும். அவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே கேட்டு வருகிறார்கள். ஒரு கூட்டணி நீடித்து, நிலைத்து வெற்றிகரமாக அமைவதற்கும், கூட்டணியை உருவாக்குவதற்குமான காரணங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்த தொடர்பு முக்கியமானது. இதை நான் சொல்லவில்லை. இன்றைய முதல்வர் கருணாநிதிதான் பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். இது இப்போதும் பொருந்தும்.

கே: பாமகவை மட்டும் குறிப்பிட்டு கருணாநிதி விமர்சனம் செய்கிறார். ஆனால் கடுமையாக விமர்சிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை ஒன்றும் சொல்லாதது ஏன்?
ப: இதை நீங்கள் கருணாநிதி யிடம்தான் கேட்க வேண்டும். இதற்கான காரணமும் அவருக்குத் தான் தெரியும்.

கே: இந்த பிரச்சனையால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?
ப: நிச்சயம் ஏற்படாது. நான் பல முறை கூறியிருக்கிறேன். 5 ஆண்டு காலத்திற்கு திமுக ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று அன்று சொன்னதில் நாங்கள் இன்றும் உறுதியாக இருக்கிறோம். எங்களால் இந்த ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Read More...

ராஜ் டிவி, கலைஞர் டிவி குழப்பம்

சுதந்திர தினமான நேற்று மாலை கலைஞர்" டிவி'யின் சோதனை ஒளிபரப்பு துவங்கியது. கலைஞர் "டிவி'யின் நேற்றைய சோதனை ஒளிபரப்பில், தொடர்ந்து சினிமா பாடல்கள் ஒளிபரப்பபட்டது. கலைஞர் "டிவி'யின் லோகோ "டிவி' திரையில் இடதுபுறம் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது.கேபிள் சேனல்கள் வரிசையில் ராஜ் "டிவி' தூக்கப்பட்டு, அந்த இடத்தில் கலைஞர் "டிவி' வருகிறது. ராஜ் "டிவி' பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. இதனால், தெளிவாக ராஜ் "டிவி'யை பார்க்க முடியாத மக்கள் பெரிதாக பாதிக்கபடவில்லை.

எஸ்.சி.வி.தான் இதற்குக் காரணம் என தங்களை நாடும் பொதுமக்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர். விரைவில் இந்தக் குழப்பம் நீங்க, கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவி ஆகிய இரண்டையும் பிரைம் அலைவரிசையில் ஒளிபரப்ப எஸ்.சி.வி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயல் இளவரசு கோரியுள்ளார்.

சுமங்கலி கேபிள் விஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.சி.வி. நிறுவனம் வழங்கி வரும் கேபிள் டி.வி. இணைப்பில் ராஜ் டி.வி. வழங்கப்பட்ட இடத்தில் நேற்று மாலை முதல் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கலைஞர் டி.வி. நிறுவனம், ராஜ் டி.வி. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ் டி.வி. நிர்வாகம் தங்கள் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டு வந்த இடத்தை கலைஞர் டி.வி.க்கு அளிக்க ஒப்புக் கொண்டது.

இதையடுத்து கலைஞர் டி.வி. நிர்வாகம் கேட்டுக் கொண்டபடி ராஜ் டி.வி. வழங்கப்பட்ட இடத்தில் தற்போது கலைஞர் டி.வி. வழங்கப்பட்டு வருகிறது.

இப்பிரச்சினையில் எஸ்.சி.வி. நிறுவனம் தன்னிச் சையாக ஒரு முடிவை எடுத்து விட்டதைபோல தவறான தகவல் பரப்பப்பட்டு வரு கிறது. எனவே ராஜ் டி.வி. நிர்வாகத்துடன் கலைஞர் டி.வி. நிர்வாகம் செய்து கொண்ட உடன் பாட்டின் படிதான் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் எஸ்.சி.வி. கேபிளில் அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-08-07

இந்த வாரம் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் நீளமான கடிதம்.

அன்புள்ள இட்லிவடை,

நல்ல செய்தி போட ரொம்ப கஷ்டபட்ட போல. உனக்கு ஒரு அட்வைஸ் - வீனாக பாதை மாறி போகாதே. ஜோதிகாவிற்கு பெண் குழந்தை, அதற்கு என்ன பேர் வைக்க போகிறார்கள், ஸ்ரீகாந்த், வந்தனா சமரசம் என்று நியூஸ் போட்டால் தான் உன் கடைக்கு கூட்டம் வரும். நல்ல செய்தியை போட்டு தமிழ் வலைப்பதிவு உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்காதே. சரி இந்த வாரம் சில செய்திகள் படிக்க நேர்ந்தது அதை பற்றி..

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ? ஷில்பா ஷெட்டி தான். லண்டனில் அவர் நல்ல பிரபலம் ( நன்றி: பிக் பிரதர் ). முன்பு ஐஸ்வரியா ராய் இப்ப ஷில்பா ஷெட்ட பார்க்கலாம்.

சிகரெட் பற்றி ஒரு செய்தி படித்தேன், நீ படித்தையா ?
புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதை தெரிவிக்கும் விதமாக புற்று நோய் தாக்கியதால் உருக் குலைந்த உடல் பாகங்கள் சிகரெட் பாக்கெட் லேபிள் களில் அச்சிட வேண்டும் என்று சிம்லா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. வருகிற அக்டோபர் மாதம் முதல் இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருந்தது.

முன்பு பீடிக்கட்டுகள் மீது மண்டை ஒடு பற்றி கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா ?

பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு சின்னம் அச்சிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்திரவை கைவிட்டு, லட்சக் கணக்கான பீடிக் தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாத்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உரிய நடாடிக்கை எடுக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன் ( பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கலைஞர் கடிதம், முரசொலி 7.5.2006).

மூன்று நாளைக்கு பிறகு அதே கலைஞர் ( ராமதாஸ் எஃபெக்ட் காரணமாக )
நான் ஒரு கடிதம் பிரதமருக்கும் மத்தியில் இருக்கின்ற மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் எழுதினேன்.
"அதில் நான் படம் ஓட்டுகின்ற இந்த உத்திரவை நிறுத்த வேண்டும் என்று மாத்திரமல்ல, அந்த உத்திரவே கூடாது என்று நான் அதில் குறிபிடவில்லை, இந்த முயற்சியால் பீடி பிடிப்பதை தடுக்க கூடாது என்றும் குறிப்பிடவில்லை. இப்போழுது ஏற்பட்டு இருக்கின்ற இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு உத்திரவை ரத்து செய்யக் கூட வேண்டியது இல்லை ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இதை சரியாக படித்து இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சியிலேயிருந்து கூட எனக்கு எதிர்ப்பு வந்திருக்காது. நான் ஒத்தி வையுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ( சட்டசபையில் கலைஞர் 10.5.2007, தினந்தந்தி )

கலைஞருக்கு நிகர் கலைஞர் தான் :-)

கானடாவில் சிகரெட் பாக்கெட் மீது உள்ள படத்தை பார்க்கவும்.


"சொந்த தொகுதியை கோயிலா நினைக்க வேண்டும்...". இந்தனால் என்ன ஆகபோகிறதோ. நம்ம அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா உடனே பெரியார் சிலையை வைத்துவிடுவார்கள் இல்லையென்றால் அட்லீஸ் ஒரு உண்டியலாவது வெச்சு காசு பார்த்துவிடுவார்கள்.

மாயாவதி 'லக்னோ பல்கலைக்கழகத்துக்கு 1957ஆம் ஆண்டு பெரியார் வந்தார் என்று ஒரு வரலாற்று சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார். அப்போது அங்கே பெரியாருக்கு சிலை வைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினார்களாம். ஆனால் இன்று வரை அதை செயல்படுத்தவில்லையாம். இப்ப மாயாவதி அந்த அநீதியை போக்க முன்வந்துள்ளார். சூப்பர் சூப்பர். சிலைக்கு அடியில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று எழுதுவார்களா ?

சரி, படிக்கிறவர்களுக்கு ஒரு மெசேஜ்: இழுத்துப் பேசலாம்; இழிவுபடுத்திப் பேச யாருக்கும் உரிமையில்லை. உதாரணமாக "கடவுள் இல்லை; நான் நம்பவில்லை" என்று சொல்லலாம். ஆனால் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது பிறர் சுதந்தரத்தில் தலையிடுவதாகும்; அரசியல் சாசனத்துக்கு முரணானதாகும். நம்ம அரசியல் தலைவர்களுக்கு இது எங்க தெரிய போகிறது. படித்த ... சரி வேண்டாம்.

இப்ப ஒரு ஜோக்

ஸ்கூல் பையன்1: என்னை என் வாத்தியார் முட்டாள் என்று சொன்னால், அவர் மீது வழக்கு தொடரலாம் தெரியுமா ?
ஸ்கூல் பையன்2: அப்படியா சூப்பர். ஆனால் சில மத அடிப்படைவாதிகள் 'உன் தலையை சிவிவிடுவேன்' என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள் மேல் நடவடிக்கை கிடையாதா ?
ஸ்கூல் பையன்1: இப்ப தெரிகிறதா நான் பெரியவனான பின் என்ன ஆக போகிறேன் என்று ?

ஜோக் என்றுதும் நினைவுக்கு வருவது இடதுசாரிகள் செய்யும் 'Step down' அரசியல். அமெரிக்காவுக்கு அடிபணியும் வகையில் நடந்து கொண்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என இடதுசாரிகளும், வேண்டுமானால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என பிரதமரும் சவால் விட்டுக் கொண்டு போன வாரம் நல்ல தமாஷ். இடதுசாரிகள், ஆதரவு வாபஸ் பற்றி ஆ.கே.லக்ஷ்மன் கார்ட்டூன் சூப்பார் அதை இங்கே தந்திருக்கிறேன்.இட்லிவடை வாசகர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அறுபது ஆண்டு சுதந்திர இந்தியா பற்றி சில புள்ளி விவரம் பார்க்க நேர்ந்தது, அதை கீழே கொடுத்திருக்கிறேன்.

அதே போல் 1947 - 2007 பற்றிய சுவாரசியமான தகவல்கள்பிகு: புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையானவை கிடையாது என்று 95% புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடிகள், பேட்ஜ்கள் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. நாடு தனது 60வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், தேசியக் கொடியின் விற்பனை, இந்த ஆண்டு 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது தெரியுமா ? கலைஞர், மன்மோகன் சிங் நேற்று கொடியை ஏற்றினார்கள். ஆனால் கீழே இருக்கும் இவர்களை யார் ஏற்ற போகிறார்கள் ?தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நேற்று டிவியில் நடிகைகள் பேட்டி, பட்டிமன்றம் சினிமாவிற்கு நடுவில பிரேக்கில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் பாரத் பாலா தயாரிப்பில் 'ஜன கன மன' 15 நிமிஷத்துக்கு ஒரு முறை ஒலித்தது. இது சரியா ? ஆனால் ரொம்ப சூப்பராக இருந்தது.


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் ஒவ வொரு ஆண்டும் திருவிழா போல கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நகர் முழுவதும் கட்- அவுட், பேனர்களை போட்டி போட்டுக் கொண்டு வைப்பதும் வாடிக்கை. முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டுகளை மிஞ்சும் வகையில் பிரமாண்டமான கட்-அவுட், பேனர்களை வைத்து ஆதரவாளர்கள் அசத்தினர். படத்தில் இருப்பது புதுச்சேரி முதல்வர் தான்.

சிவாஜி' படத்திற்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது, இந்த செய்தி பரப்பு இல்லாததால் பத்திரிக்கைகள் கண்டுகாம விட்டுவிட்டது. "எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அவதூறு செய்யும் நோக்கம் இல்லை' என நடிகர் ரஜினி மற்றும் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் கூறியதைத் தொடர்ந்து, "சிவாஜி' படத்துக்கு எதிரான வழக்கு முடிக்கப்பட்டது.

அப்புறம் சிவாஜி படம் இந்தியில் டப்பிங் செய்யப்படுகிறது "சிவாஜி' ரஜினியே வசனம் பேசுகிறார். வரே வா!
கடைசியாக ஒரு பக்தி கதை - நாதருடைய கையிலே ஒரு டிவி சேனல் இருந்தது. தங்கபாலு அந்த சேனல் வேணுமென்று 'தாம் தாம்' என்று குதித்தார்; வசந்தகுமார் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: "யார் முதலில் டெல்லியை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் என்று சொல்லிவிட்டார்.

வசந்தகுமார் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தில் டெல்லியை வலம்பர புறப்பட்டார். தங்கபாலு 'டொங்கு, டொங்கு' என்று எலியின் மேல் கோபாலபுரம் ஓடினார். இருவருக்கும் டிவி சேனல் கிடைத்தது என்பது செய்தி. (இப்ப தான் தயாநிதி மாறன் இல்லையே, அதனால் இரண்டு போருக்கும் கிடைத்தது )

அன்புடன்,
முனீஸ்வரன்

Read More...

Wednesday, August 15, 2007

கலைஞருக்கு டாக்டர் ராமதாஸ் பதில் அறிக்கை

நேற்று கலைஞர் அறிக்கைக்கு இன்று ராமதாஸ் "வீடு பறிபோய்விடுமோ என்று பரிதவித்து நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் பேசியதை அமைதியை குலைக்கும், அராஜகத்தை தூண்டும் பேச்சு என்று முதல்-அமைச்சர் பழிபோடுவது வியப்பாக இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் காட்டமான அறிக்கை.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் :


``சாவியைப் பிடுங்குங்கள் பூட்டை உடையுங்கள்'' என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறதென்றால் என் செய்வது-தமிழகத்தின் அமைதி கருதி தலைக்குனிந்து கொண்டுதான் இருக்க வேண்டியதுள்ளது என்றும் சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்து விட்டது என்றும் முதலமைச்சர் கருணாநிதி ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஒரு தலைவர் என்று அவர் குறிப்பிடுவது என்னை பற்றித்தான் என்பதை நாள்தோறும் நாளேடுகளை படிப்பவர்கள் நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.


முதல்-அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சோழிங்கநல்லூரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகிற குடியிருப்புகளை அகற்றிவிட்டு அங்கே புதிய குடியிருப்புகளைக் கட்டப் போவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்திருக்கிறது. அதற்காக அவர்களை அங்கிருந்து காலி செய்வதற்கான நடவடிக்கை வேகமாகத் தொடங்கியிருக்கிறது.

நாள்தோறும் அதிகாரிகள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள். புல்டோசர் வண்டிகளை வைத்து வீடுகளை இடித்துவிடுவோம் என்று சொல்லுகிறார்கள். அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி எங்களுக்கு வாழ்வளியுங்கள் என்று அந்த மக்கள் பலமுறை என்னைச் சந்தித்து முறையீடு செய்தார்கள்.

அவர்களின் பிரதிநிதி என்ற முறையில் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை முறையிட்டிருக்கிறார். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அவர்களுக்காகப் போராட்டமும் நடத்தியிருக்கிறார். சட்டப் பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்த மக்களை கோட்டைக்கே அழைத்துச் சென்று, வீட்டு வசதித்துறை அமைச்சரை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறி அவர்களுக்கு பரிவுகாட்ட வேண்டும் என்று வாதாடியிருக்கிறார்.இத்தனைக்குப் பிறகுதான், அவர்களது பிரச்சினைதான் என்ன என்பதை நேரில் தெரிந்து கொள்வதற்காக நான் அங்கே சென்றேன். ஆண்களும், பெண்களுமாகத் திரண்டு வந்து என்னிடம் கதறி அழுதார்கள். நிம்மதியாக வாழ முடியவில்லை. எந்த நேரத்தில் புல்டோசர் வண்டிகள் வந்து வீடுகளை இடித்து நொறுக்குமோ என்று நாள்தோறும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்று தாய்மார்கள் கண்ணீர் மல்க கதறி அழுதார்கள்.

இருதய நோயால் அவதிப்படுகிற சில முதியவர்கள் அதிகாரிகளின் மிரட்டல் ஒரு பக்கம், புல்டோசர் வண்டிகள் வந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கமாக அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இதனால் எந்த நேரத்தில் எங்களது மூச்சு அடங்குமோ தெரியவில்லை என்று மனம் நெகிழக் கூறினார்கள்.

இதனால் மனம் உடைந்து போன நான், நீங்கள் அஞ்சுகிறபடி எதுவும் நடக்காது என்று உறுதி கூறினேன். முதல்வர் கருணாநிதியிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுகிறேன். அவரும் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பார் என்று நம்பிக்கையூட்டினேன். இதனை காவல் துறை ரகசிய எழுத்தர்களிடம் முதல்வர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இத்தனைக்குப் பிறகும் உங்கள் வீடுகளை இடிப்பதற்காக புல்டோசர் வண்டிகள் வந்தால், நீங்கள் எல்லோரும் திரண்டு போராடுங்கள்; அதையும் மீறி வண்டி நுழைந்தால் சாவியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சொன்னேன்.

நான் மட்டுமல்ல, வேறு எந்தத் தலைவரானாலும், அந்த நேரத்தில் இப்படித்தான் பேசியிருப்பார்கள். ஏன்? நம்முடைய முதல்-அமைச்சரும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதிருந்தால், அந்த மக்களுக்கு ஆறுதல் கூற இப்படித்தான் பேசியிருப்பார்.நான் இப்படிப் பேசியதைத்தான் அமைதியைக் குலைக்கும் முயற்சி என்றும் அராஜகப் போராட்டத்தைத் தூண்டும் பேச்சு என்றும் வலிந்து கற்பனை செய்து கொண்டு முதல்-அமைச்சர் என் மீது பழிபோடுகிறார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிக்கை வெளிவந்த அதே நிமிட நேரத்தில் தெற்கே தென்காசிப் பட்டினத்தில் பட்டப்பகலில் நடுவீதியில் நடந்த கோஷ்டி கலவரத்தில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் வெளிவந்தது. இன்று மட்டுமல்ல, நாள்தோறும் இத்தகைய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாட்டின் நிலைமை இப்படி இருக்கையில், வீடு வாசல்கள் பறிபோய்விடுமோ என்று பரிதவித்து நின்ற மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நான் பேசியதை, மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் முயற்சி, அராஜகத்தைத் தூண்டும் பேச்சு என்று முதல்-அமைச்சர் பழிபோடுவது வியப்பாக இருக்கிறது.அரசியல் கட்சிகள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டமும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிற முதல்-அமைச்சர், நான்கு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசும்போது, நான் செய்கின்ற காரியத்தை நான்கு பேர் ஏதோ பேசி என்னைச் சலிப்படையச் செய்து காரியத்தை கெடுத்துவிட முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதும், அவர்களோடு நின்று போராடுவதும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமை. இந்த ஜனநாயக கடமையை ஒரு கட்சி ஆற்றுகின்றபோது அது கட்சியை வளர்த்துக் கொள்வதற்கான செயல் என்று கொச்சைப்படுத்துவதையும், நான்கு பேர் ஏதோ பேசுகிறார்கள் என்று ஏளனம் செய்வதையும் சட்டப்பேரவைப் பணியில் பொன்விழா கண்ட கருணாநிதி போன்ற தலைவரிடமிருந்து, அரசியல் அறிஞரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.தோழனாய், நண்பனாய், அரசுக்கு ஆலோசனைகளை கூறி வருகிற என்னை எதிரியாக ஏன் பார்க்க வேண்டும்? வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்று எங்கள் மீது ஏன் முத்திரை குத்த முயல வேண்டும்?

தோழமை கட்சி என்றால் எதையும் பேசக்கூடாது என்று கருதுவதும், அப்படி பேசினால், அது போராட்டத்தைத் தூண்டும் செயல் என்று பழிசுமத்துவதும் அரசியல் பெருந்தன்மையாகாது. அரசியலில் தங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாத கட்சிகள் என்று எதையாவது அடையாளம் காட்ட முடியுமா? தி.மு.க. அந்த இலக்கணத்திற்கு உட்பட்டதா? உண்மை இப்படி இருக்கையில், பாட்டாளி மக்களுக்காக, பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுப்பதையும், அவர்களுக்காகப் போராடுவதையும் கட்சியை வளர்த்துக் கொள்வதற்கான செயல் என்று பழிபோடுவது காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறதே தவிர, வேறல்ல.

Read More...

Tuesday, August 14, 2007

முடிவு எடுக்கும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது- கருணாநிதி அறிக்கை

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேற்றப்படும் காலம் நெருங்கி கொண்டிருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை


இன்றைக்கு சாத்தான்குளம் பகுதியில் டாட்டாவின் டைட்டானியம் தொழிற்சாலை என்றதும்; ஏ, அப்பா! எத் தனை கட்சிகளின் குழுக்கள் - எத்தனை நெடிய பய ணங்கள் - எத்தனை கொடிய விமர்சனங்கள் எத்தனை எத்தனை மாற்று யோசனைகள் - மக்கள் கண்ணீரில் மாளிகை அமைக்காதீர் என்று எவ்வளவு அருமையான மாணிக்க வாசகங்கள் - எங்களூர் திருக்கு வளைக்கு மிக அருகில் உள்ள எட்டுகுடி முருகன் ஆலயத்துக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காவடிகள் வருகிற மகத்தான திருவிழா நடைபெறுவது கண்டு சிறுவனாக இருந்த நான் ரசித்

திருக்கிறேன்.எட்டுகுடியைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்கள், நகரங்களி லுமிருந்து "வேண்டுதல்'' செய்து கொண்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வரும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சிறப்புக் காவடிகள் என்ற பெயரால் திருக்குவளையிலிருந்து சில கல் தொலைவில் உள்ள திருப்பூண்டி பகுதி யிலிருந்து ஆண்டுதோறும் ஒரு காவடிக் குழு வரும். அந்தக் குழுவுக்கு முன் பகுதியில் சில பேர் கோலாட்டம் அடித்துப் பாடிக் கொண்டு வருவர்! காவடி வருவதோ கோயிலுக்கு; முரு கன் சன்னதிக்கு! ஆனால் கோலாட்டம் அடித்துக் கொண்டு வருபவர்கள் பாடு கிற பாட்டோ பெரியாரைப் பற்றியதாக இருக்கும்.

"ஈரேழுலகம் புகழுகின்ற எட்டுகுடி முருகா!'' என்ற பக்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப் பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலை மையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர் - கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு; "ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா. வாழ்க! வாழ்க!'' என்று பின்னர் கோலாட்டம் அடித்து முழக் கும் போது அந்தக் கிராமத்து இளைஞர்களாகிய எங்களை அந்த ஆட்டமும் பாட்டமும் கிறுகிறுக்க வைத்து விடும்.

இப்படிப் பல ஊர்களில் இருந்து காவடிகள் வந்து, திருக்குவளை குளத்தில் நீராடி விட்டு இறுதியாக எட்டுகுடி செல்லும். காலை முதல் பல ஊர்க் காவடிகள் வந்து போனாலும்; இன்னும் நாகையிலிருந்து "வேணு காவடி'' வரவில்லையே என்று நாங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருப் போம்.

கடைசியாக மாலை 6 மணிக்கு அந்த வேணு காவடி வரும். அப்போதிருந்த நாகை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேணு நாயக்கர் எடுத்து வரும் காவடி தான்; வேணுக்காவடி எனப் படுவ தாகும்.

இப்படிக் காவடி கோஷ் டிகள் ஒவ்வொன்றாக வரு வதைப் பார்த்துப் பார்த்து ரசித்த அதே உணர்வுடன்; இன்றைக்கு சாத்தான்குளத்து மக்கள் தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவர் களைச் சந்திக்கச் சாத்தான் குளத்துக்கு வந்து வந்து போவதைப் பார்த்து; "ஓ! இது இன்னைக்கு புதுக் காவடியாப இது என்ன சொல்லப்போவுது'' என்று காவடியைக் கண் கொட்டாமல் பார்த்து; காதுகளை வளைத்துக் கொண்டு கவனிக்கிறார்கள்.

ஆனால் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு சந்தேகம்; இதே டைடானியம் தொழிற்சாலையை, இதே பகுதியில் அமைத்திட - ஜெயலலிதா ஆட்சியில் இதே "டாட்டா''வுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே; அப்போது எந்தக் கட்சியும் இங்கே வந்து இது மாதிரி முகாம் அடித்து; முழக்கம் செய்ய வில்லையே - இப்போது மட்டும் தி.மு.க. ஆட்சி என்றதும் இத்தனை கட்சி கள் இங்கே வந்து போர் முழக்கம் செய்கின்றனவே என்ன காரணம் என்று புரியாமல் சில கட்சிகள் மட்டு மல்ல; சாத்தான்குளம் பகுதி மக்களும் விழிக்கிறார்கள்.

இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், டாட்டாவுடன் ஏற்கனவே ஒப் பந்தம் செய்து கொண்டு, அந்தத் தொழிற் சாலை வருவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்தவர்களே கூட, இப் போது அங்கே அந்தத் தொழிற் சாலை வருவது பற்றி அங்கே சென்று கருத்துக் கேட்பு நடத்து வோம் என்று சென்றி ருக்கிறார்கள்.

வன்முறையைத் தூண்டி விடும் பேச்சுக்கள் - "வரட் டும் பார்க்கலாம்'' என்று தோளைத் தட்டும் போர் முழக்கங்கள் - தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்தாலே - இப்படிச் சில கட்சிகள் (தோழமைக் கட்சிகள் உட்பட) அறைகூவல் விடுத்து அரசை மிரட்டத் தொடங்குகின்றன.

16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த சோளிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை; இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லும் ஒரு போராட்டத்தை அறி வித்து, அதாவது பல ஆண்டு களுக்கு முன்பே அந்த இடத்தை வீட்டு வசதி வாரி யத்திடம் ஒப்படைத்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்களே மீண்டும் அந்த இடத்தைத் தங்களிடம் கொடுக்க வேண்டுமென்று கேட்டு கோரிக்கை, அதற்கு ஆதரவாகப் போராட்டம் என்று கூறி, "சாவியைப்பிடுங்குங்கள் - பூட்டை உடையுங்கள்'' என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளி வருகிறது என்றால், என் செய்வது - தமிழகத்தின் அமைதி கருதி தலை குனிந்து கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்று நிலைமை வளர்ந்து விட்டச் சூழலில்;

வன்முறையற்ற - அமைதி - நட்புறவு - தோழமை ஆகிய உணர்வு களுக்கு நாம் மதிப்பு கொடுப் பதாலேயே;

நாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்குக் கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா?

இதனை யோசித்து முடி வெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Read More...

வைகோ பேட்டி

வைகோ பேட்டி

எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியை விட்டு பிரிந்து சென்றபோது அவர்களின் பிரிவிற்கு காரணம் தி.மு.க.வும் முதல்-அமைச்சர் கருணாநிதியும்தான் என்று வைகோ குற்றம் சாட்டினார். இது பற்றி அவர் பேசிய கருத்துக்கள் தி.மு.க.வையும் முதல்-அமைச்சர் கருணாநிதியையும் இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக கூறி அமைச்சர் ஆற்காடு வீராசாமி வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜர் ஆனார். நீதிபதி ராஜகோபாலன் வழக்கு விசாரணையை உடனே தொடங்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி தரப்பில் வாய்தா கேட்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந்தேதி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

வழக்கில் ஆஜர் ஆகி விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்:

அரசியல் வஞ்சம் தீர்க்க ஆளும்கட்சி என் மீது போட்ட வழக்கு இது. நீதி வெல்லும் உண்மை நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.

கேள்வி:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப்போகிறீர்கள்?

பதில்:- தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியில் மக்கள் விரோத செயல் பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

கே:- கேபிள் டி.வி.யை தமிழக அரசே தொடங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப:- அ.தி.மு.க. ஆட்சியின் போது கேபிள் இணைப்பு வழங்குவதை அரசுடமை ஆக்க மசோதா கொண்டு வரப்பட்டது. அதை சட்டமன்றத்தில் சட்டமாக்கும் நேரத்தில் இன்றைய முதல்-அமைச்சர் பரிவாரங்களோடு சென்று கவர்னரை சந்தித்தார்.

சட்டமாகி விடக்கூடாது என்று அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரியும். கேபிள் டி.வி.க்கான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது. எனவே இந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறினார். அப்படி கூறியவர்தான் இன்று அதே சட்டத்தை கொண்டு வருகிறார்.

கே:- இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்து வருவதாக கூறப்படுகிறதே?

ப:- இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு பீரங்கி படகுகள், தாக்குதல் படகுகள் வான்வழி தாக்குதலுக்கான கருவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்தி வரும் இனவெறி தாக்குதலுக்கு ஆயுத உதவி செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்.

இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

கே:- தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- இது முற்றிலும் தவறானது. உளவு அமைப்புகள் விடுதலைப்புலிகள் மீது தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. 1000 முறைக்கு மேல் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஒரு முறை கூட இந்திய கடற்படை எதிர்தாக்குதல் நடத்தியது

Read More...

Monday, August 13, 2007

முஸ்லிம்களுக்கு கருத்தடை சாதனம்

முஸ்லிம்களுக்கு கருத்தடை சாதனம்: மத்திய அரசு முடிவு.
நல்ல வேளை இந்த அறிவிப்பை பா.ஜ.காவை சேர்ந்தவர் யாரும் சொல்லவில்லை.

நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனத்தை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், கருத்தடை சாதனங்கள் முஸ்லிம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப நல்வாழ்வு திட்டங்கள் தொடர்பான அரசு திட்டங்களை முஸ்லிம் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என சிறும்பான்மை மக்கள் விவகாரத் துறை அமைச்சர் அந்துலே மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுத்து மூலம் தெரிவித்தார்.

"சச்சார் கமிட்டி பரிந்துரையின் படி பொதுமக்கள் உரிமை மையங்கள் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும். முதல்கட்டமாக இவை மத்திய பல்கலைக்கழகங்களில் தொடங்கப்படவுள்ளன.

தொகுதி மறுசீரமைப்பு சட்டம் குறித்தும், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் சச்சார் கமிட்டி அளித்த பரிந்துரையை பரிசீலிக்க உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Read More...

யார் இவர்கள்படத்தில் யார் ஐஸ்கீரிம் சாப்பிடுகிறார்கள் ?

Read More...

ஸ்ரீகாந்த், வந்தனா சமரசம்

ஸ்ரீகாந்த் வந்தனா ஆந்திராவில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடக்க இருந்த நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன் மீது எழுந்த பல கோடி மோசடி புகாரால் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்தை தள்ளி போட்டனர்.

வந்தனா வீட்டாரிடம் பேசுவதையும் தவிர்த்தனர். எங்கே ஸ்ரீகாந்த் நமக்கு கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற பயத்தில் அதிரடியாய் ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் புகுந்தார் வந்தனா. மேலும் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் பதிவு திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


வந்தனா, தனது வீட்டில் குடித்தனம் புகுந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்தும், அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், ஓட்டல்களிலும் தங்கி உள்ளனர். இதற்கிடையே இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். கோர்ட்டிலும் நிறைய மனு செய்தனர். சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. சில வழக்குகள் விசாரணையில் உள்ளது.

ஜாமீன் பெற்று வடபழனி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்த ஸ்ரீகாந்த் போலீசாரிடம் வந்தனாவிடம் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் அவரது சினிமா இமேஜும் பாதிக்கப்பட்டது. திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் வாழாமல் ஓடி ஒளிகிறாறே என பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பட வாய்ப்புகளும் குறைந்தது.

இதையடுத்து வந்தனா விவகாரத்தில் தெளிவான நல்ல முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்ரீகாந்த் தள்ளப்பட்டார். கோர்ட்டில் முன் ஜாமீன் மனு விசாரணையின் போதும் ஸ்ரீகாந்தும்- வந்தனாவும் கலந்து பேசி சமரசம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஸ்ரீகாந்த்- வந்தனா இருவரும் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர். கடந்த 1 மாத காலமாக இருவரும் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து ஒருவருக்கொருவர் செல்போனில் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது காதலித்த போது ஏற்பட்ட சுகமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த் மனம் மாறியது. வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்தின் வக்கீல் ஜி.கே.ஆர். பாண்டியன் இருவரது குடும்பத்தினரும் நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்தார். வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, ஸ்ரீகாந்தின் பெற்றோர் கிருஷ்ணமாச்சாரி- ஜெயந்தி ஆகியோர் கலந்து பேசினர்.

வந்தனாவின் திருமண விவகாரம் உலகம் அறிந்த ஒன்றாகி விட்டதாலும், அவர் ஸ்ரீகாந்த் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான காதலாலும்தான் வீட்டில் குடி புகுந்தார். மற்றப்படி அவரை அவமானபடுத்தும் எண்ணமெல்லாம் இல்லை என்றும எங்கள் மகளுக்காக எந்தவித தியாகத்தை செய்யவும் தயாராக இருப்பதாக வந்தனா பெற்றோரும் உருக்கமாக தெரிவித்தனர்.

ஸ்ரீகாந்த்தும் வந்தனா மீது உண்மையான அன்பு வைத்திருப்பதால் அவர்களை சேர்த்து வைக்க அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து ஸ்ரீகாந்தும்- வந்தனாவும் நேரில் சந்தித்து கண்ணீர் மல்க பேசினர். இதில் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு தீர்ந்தது. சேர்ந்து வாழலாம் என முடிவு செய்தனர்.

இருந்தாலும் இரு தரப்பினரும் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் வாங்கும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இன்னும் 2 தினங்களில் சேர்ந்து வாழ போகும் தகவலை பத்திரிகைகளுக்கு அளிக்க உள்ளனர். அதன் பிறகு ஊரறிய திருமண வரவேற்பு நடத்தவும், ஸ்ரீகாந்த் முடிவெடுத்துள்ளார்.


Read More...

Sunday, August 12, 2007

ஒலிப்புதிர் - 3

இந்த வாரத்தின் ஒலிப்புதிர். மூன்று பாடல்களில் வரும் பிட்டுகளை ஒன்றாக இணைத்துள்ளேன்.
ஒலி பிட் 6

விடைகளை பின்னூட்டதில் தெரிவிக்கலாம். இந்த புதிர் ரொம்ப சுலபம்

Read More...

Saturday, August 11, 2007

நம்புங்கள் - பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை

இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுள் ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடது சாரி கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவா தம் நடந்தவேண்டும் என்று அவர்கள் வற்புறுத் தினார்கள். இந்தியாவின் பாதுகாப்புக்கு இது ஆபத் தானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திலும் வெளி யேயும் கடுமையாக எதிர்ப் போம் என்று இடதுசாரி கட்சிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன.

இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தொலை பேசியில் இடதுசாரி கட்சிகளு டன் தொடர்பு கொண்டு பேசினார். "இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது. தொடர்ந்து இதை எதிர்த்தால் பிரதமர் பதவியை விட்டு விலகுவேன்'' என்று மன்மோகன் சிங் மிரட்டிய தாகவும் தகவல்கள் வெளியா னது. ஆனால் பிரதமர் அப்படி மிரட்டல் ஏதும் விடவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் வருகிற 14 மற்றும் 16-ந்தேதி களில் விவாதம் நடக்க இருக்கிறது. விவாதத்துக்குப் பிறகு ஓட்டெடுப்பு நடந்தால் அதில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் இடதுசாரி கட்சிகள் எச்சரித்து இருக்கிறது. கொல் கத்தாவில் இருந்து வெளி வரும் பத்திரிகை ஒன்றுக்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில் இந்த மிரட்டலுக்கு பதில் அளித்து இருக்கிறார்.....

அணுசக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இந்த ஒப்பந்தத்துக்கு மந்திரி சபை ஒபபுதல் அளித்துள்ளது. இது ஒரு ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம். அதை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை. இடதுசாரி கட்சி களிடம் இதை தெரிவித்து விட்டேன்.

அவர்கள் (இடதுசாரி கட்சி கள்) என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மத்திய அரசுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளட் டும். அதுபற்றி கவலை இல்லை.அவர்கள் மீது எனக்கு கோபம் ஏதும் இல்லை. கடுமையான வார்த்தைகளை நான் பயன்படுத்த விரும்ப வில்லை. அவர்கள் எங்கள் நண்பர்கள். அவர்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். அதே நேரத் தில் அவர்களும் அதை உணர்ந்து எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தி யாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து இல்லை. இந்தியாவின் இறையாண்மைக் கும் பாதிப்பு இல்லை. யாரிட மும் நாம் சரண் அடைய வில்லை. அவர்கள் ஏன் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவுடன் அவர் களுக்கு ஏதோ பிரச்சினை உள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய ïனியன், சீனா, பிரான்சு உள்பட அனைத்து நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளது. சீனாவை பாருங்கள், வியட்நாமை பாருங்கள், பயமின்றி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

நாம் மட்டும் ஏன் கிணற்று தவளை போல் இருக்க வேண்டும். பல்வேறு மதம், இனம், மொழிகளுடன் ஒற்றுமையாக வாழும் நாம் உலக நாடுகளுக்கு ஒரு உதார ணமாக திகழ வேண்டும். நமது பலத்தை இடது சாரி கட்சி கள் குறைத்து மதிப்பீட்டு விட்டன.

Read More...

Friday, August 10, 2007

VP தேர்தல்அமீது அன்சாரி வெற்றி

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமீது அன்சாரி வெற்றி பெற்றார். வாழ்த்துக்கள் !. நாளை துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்பார்.

Read More...

Quit India (1942) to Quit Sonia (2007!!)

Quit India (1942) to Quit Sonia (2007!!) - V SUNDARAM


Today is 9 August, 2007. 65 years ago, on the same day, the All India Congress Committee (AICC) meeting in Bombay passed the 'Quit India Resolution' in 1942. The slogan 'Quit India; Bharat Chodo� reverberated throughout the length and breadth of India. This simple and powerful slogan launched the legendary struggle which also became famous by the name of the 'August Revolution'. It sanctioned the starting of a mass struggle on non-violent lines on the widest possible scale to declare India's inalienable right to freedom and independence. Gandhiji was requested to take the lead and to guide the nation.

Gandhiji told the people, 'there is a mantra, a short one, that I give you. You imprint it on your heart and let every breath of yours give an expression to it. The mantra is 'DO OR DIE'. We shall either be free or die in the attempt........ Every one of you from this moment consider himself a free man or woman and even act as if you are free and no longer under the heel of this imperialism'. In this struggle, the common people of the country demonstrated an unparalleled heroism and mood of militancy. Moreover, the repression that they faced was the most 'brutal'.

The speech which Mahatma Gandhi delivered at the commencement of the 'Quit India Movement' was one of the most important ones, which he made in his long political career. Tragically, the 'Movement' which Gandhi planned, taking full responsibility on his shoulders, failed miserably and gave unintentional boost and strength to the Muslim League. Some historians are of the view that the failure of the 'Quit India Movement' ended the Gandhian era in Indian politics which had its beginning in 1920. It is an accepted fact that after 1942, Gandhiji's iron grip on the Congress Party loosened and in subsequent years his role became peripheral. Perhaps Gandhiji was sure that after the AICC Quit India Resolution, the Viceroy would call him and negotiate with him. Gandhiji was so sure of meeting the Viceroy that he had not chalked out any organized programme or line of action for the participants in the Movement. In his Discovery of India (1946), Jawaharlal Nehru lamented �Gandhiji had kept everyone in the dark�. His exhortation 'DO OR DIE' further confused the masses. No one knew what to do and how to die.

Nevertheless the sudden and unexpected attack by the government produced an instantaneous reaction among the people. In Bombay, as soon as the news of arrests spread, lakhs of people flocked to Gowalia Tank where a mass meeting had been scheduled and there were clashes with the authorities. There were similar disturbances on 9 August in Ahmedabad and Poona. On the 10 August, Delhi and many towns in UP. and Bihar, including Kanpur, Allahabad, Varanasi and Patna, followed suit with hartals, public demonstrations and processions in defiance of the law. The government responded by gagging the press. The National Herald and Harijan ceased publication for the entire duration of the struggle and others for shorter periods.

Crowds of villagers, often numbering a few hundred or even a couple of thousands, physically removed the railway tracks in several parts of India. Elsewhere, small groups of individuals blew up bridges and removed tracks, and cut telephone and telegraph wires. Industrial workers too struck work throughout the country. Students went on strike in schools and colleges all over the country and busied themselves taking out processions, writing and distributing anti-British news-sheets. Hundreds of these 'Patrikas' in all the regional languages came out all over the country. They also became couriers for the emerging underground networks created by leaders like Jaya Prakash Narain, Smt Aruna Asaf Ali, Smt Sucheta Kriplani and others.

The reaction to the arrests was most intense in Bihar and Eastern UP., where the Movement attained the proportions of a rebellion. From about the middle of August, 1942 the news reached the rural areas through the students and other political activists who fanned out from the towns. Students of the Banaras Hindu University decided to go to the villages to spread the message of Quit India. They hijacked trains and draped them in national flags. In rural areas, the pattern was of large crowds of peasants descending on the nearest Taluk or District town and attacking all symbols of government authority. There was government firing and repression, but the rebellion only gathered in momentum. For two weeks, TIRHUT Division in Bihar was totally cut off from the rest of the country and no government authority existed. Control was lost over Patna for two days after firing at the Provincial Secretariat. Eighty per cent of the police stations were captured or temporarily evacuated in ten Districts of north and central Bihar. There were also physical attacks on Europeans.

A significant feature of the Quit India movement was the emergence of what came to be known as Parallel Governments in some parts of the country. The first one was proclaimed in Ballia, in east UP, in August 1942 under the leadership of Chittu Pande, who called himself a Gandhian. Though it succeeded in getting the Collector to hand over power and release all the arrested Congress leaders, it could not survive for long and when the soldiers marched in, a week after the parallel government was formed, they found that the leaders had fled. Yet, the Quit India Movement unnerved the British, though the gravity and extent of the challenge it posed were, as the Viceroy said in a telegram to Prime Minister Winston Churchill, �concealed from the world for reasons of military security�. Strict censorship was imposed on all news of the Movement.

After the Non-Cooperation and Civil Disobedience Movements, the Quit India Movement was the third great mass struggle of the Indian People. The distinctive feature of the Movement was the struggle carried on by the people who had been forced to go underground by the Government's ruthless repression. Jaya Prakash Narayan after his escape from the Hazaribagh Central Jail, tried 'to attune the mental attitude of the rebel youth to the spirit of the last fight for freedom', through a series of letters addressed �TO ALL FIGHTERS FOR FREEDOM�. Through the illegal Radio broadcasts and various other activities, Ram Manohar Lohia, Aruna Asaf Ali, Achyut Patwardhan and other leaders belonging to the Congress Socialist Party, helped sustain the 'Open Rebellion' and keep the morale of the people high despite Government repression.

65 years after the 'Quit India Movement' and 60 years after our independence, Mother India is under the stranglehold of an Italian dictator who has contempt for India and her culture and religion. We have a crumbling, weak and neutral Prime Minister, with no commitment to the nation or the Constitution but only to the political fortunes of Sonia Gandhi and her family. Alas! We now have a President, with questionable credentials, who has been unscrupulously planted in that position as a private agent of one 'woman'. We, as a nation, have lost our sensitivity to and sensibility towards the Quality of Life and become oblivious of the sense of values that should enrich and sustain it. All right thinking people in India are fully aware of the many things which are going wrong in India today. And yet there is a feeling of frustration, cynicism, helplessness, uncertainty and impotence everywhere at all levels of society.

Growing indiscipline everywhere and at all levels, complete erosion of all cultural, ethical, moral and religious values, the ever rising tide of communalism, regionalism, casteism and linguistic chauvinism, Himalayan corruption eating into the vitals of national life, total want of inspiring and enlightened leadership in all fields of national endeavour and finally a mounting wave of politically-sponsored violence in all parts of India�these and other destabilizing, disturbing and disintegrating factors have raised doubts in many responsible quarters in India and abroad about the very survival of India as a nation.

The crying national need of the hour is to substitute morality for egoism; honesty for dishonesty; principles for expedients and usages and precedents; duties for improprieties masquerading as proprieties; the empire of reason for the casual tyranny of caprice; dignity for insolence; nobleness for vanity; love of public glory for the love of filthy lucre; good people for 'high society'; merit for intrigue; creative genius for brilliant manipulation; the charm of ' high' contentment for the satiety of 'low' pleasure; the majesty of man for noble lineage; a vigorous and happy people for a wretched nation of servile people. We have to put an end to both 'Parliamentary Monarchy' and 'Parliamentary Anarchy'. By 'Parliamentary Monarchy' I mean a system of hereditary Government like Monarchy which survives by manipulating the apparatus of Parliament to serve and suit the private interests of one family or one small group as the case may be. By 'Parliamentary Anarchy' I have in my mind the conditions of anarchy and lawlessness created by elected members in the Legislative Assemblies in various States and the Lok Sabha in New Delhi. In short the nation as a whole should uphold in a virile manner the virtues of a strong Republic that will replace the soft vices and absurdities of a perverted parliamentary democracy. India is in desperate need of informed dictatorship of the people, by the people and for the people.

(The writer is a retired IAS officer)
( நன்றி: News Today )

Read More...