பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 27, 2007

Vasanth TV, Mega TV - நாளைய தலையெழுத்து

தமிழ் நாட்டு மக்களின் விதி இப்படி என்றால் நான் என்ன் செய்ய முடியும்.

இரண்டு காங்கிரஸ் பெரும் தலைவர்கள் டிவி சேனல்களை ஆரம்பிக்க போகிறார்களாம்!

1. வசந்த் டிவி - ஆரம்பிக்க போகிறவர் வசந்தகுமார் ( அதே வசந்த & கோவில் சேரிலிருந்து திரும்பி பார்த்து சிரிப்பவர் ). காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகழ் பாடும், ஆனால் அதே சமயம் செய்திகள் ரொம்ப தரமாகவும், நடுநிலமையாகவும் இருக்கும் என்கிறார். ( ஐயோ )
இன்னும் இரண்டு மாதத்தில் இந்த டிவி சேனல் வரலாம், மத்திய் அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதாம் ( கிடைக்காதா பின்ன ).
( எதிர்பாக்கும் நிகழ்ச்சிகள்: சமையல் போட்டி, முதல் பரிசு - மிக்ஸி, இரண்டாம் பரிசு, ஃபேன், நீங்களும் பேச்சாளர் ஆகலாம் - குமரி அனந்தன். ஒரு டிவி குழு கோபால புரத்தில் எப்போது இருக்கும். டெல்லியிலிருந்து வருகிறவர்கள் அங்கே தான் முதலில் போவார்கள் :-)

2. மெகா டிவி - ஆரம்பிக்க போகிறவர் - தங்கபாலு - ஜூலை 27 தொடக்கம் என்று சொல்லுகிறார்கள். சுதாகர் ( விஜய் டிவி ) தான் இதில் முக்கிய பொருப்பில் இருக்க போகிறார் ( VP ). கட்சி சார்புநிலை இல்லாமல் நடுநிலமையாக இருக்கும் என்கிறார்கள்.

2 Comments:

TBCD said...

/*இரண்டு மதத்தில் */
இருக்கிற மதங்களினால் வருகிற பிரச்சனை போத வில்லை என்று..இன்னும் ரென்டு மதமா..? நாடு தாங்குமா..?

சீனு said...

எதிர்பாக்கும் நிகழ்ச்சிகள் - சூப்பர்...