பயபடாதீர்கள், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று சொல்லுகிறார் ராமதாஸ். தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். பேட்டி கீழே..
( "வேலியிலே போகும் ஓணானை..." என்று ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது )
நாங்கள் தி.மு.க. அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம். 5 ஆண்டு காலத்துக்கு இது தொடரும் அதில் மாற்றம் இருக்காது.
நாங்கள் தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கமாட்டோம். எங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது. எங்கள் நிலைமைகளை, பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் எடுத்து சொல்வோம். ஆனால் அதுமாதிரி கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. பின்னர் பிரச்சினைகள் பற்றி எப்படி ஆலோசிக்க முடியும்.
இப்போதைய கூட்டுறவு தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். எந்தவித ஆலோசனையும் எங்களுடன் நடத்தப்படவில்லை. பின்னர் எப்படி தேர்தலை சந்திப்பது?
சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி எளியமக்களுக்கு தெரியும். இது பற்றி நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை வெளியே கொண்டு வரவேண்டும். ஒருவர் மட்டும் குரல் கொடுத்தால் அது போதுமானதாக இருக்காது.
நாங்கள் தி.மு.க.வுடன் நட்புமுறையில் கூட்டணி அமைத்து உள்ளோம். இதற்காக அரசை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா?
நாங்கள் துணைநகரம் பிரச்சினை, விமானநிலையம் விரிவாக்கம் பிரச்சினை, காவிரி, பாலாறு பிரச்சினைகள் போன்றவற்றில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதாவது மக்கள் பிரச்சினைக்காக இந்த விஷயங்களில் குரல் கொடுத்தோம்.
தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால் எங்களின் ஆதரவு அவசியம் தேவை. அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, July 04, 2007
இப்படி பேசுவோம் ஆனால் அட்சிக்கு ஆதரவு தருவோம்
Posted by IdlyVadai at 7/04/2007 12:49:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
Did you read MK's response to PMK? So far its not posted in idlyvadai. [While posting it, pl dont say, 'rasikarkaLin vENdukOLukkiNangka... :))]
ஹரன்பிரசன்னா இன்னும் எனக்கு அறிக்கை வந்து சேரவில்லை. வந்தவுடன் போடுகிறேன்.
---பயபடாதீர்கள், ஆட்சிக்கு ஆபத்து இல்லை---
ஜென்டில்மேன் படம் எடுக்கிறவரை எதுகு டிஸ்டர்ப் செய்யறீங்க ;)
Accountability வேண்டாம். ஆனால், குற்றஞ்சாட்டுவதற்கு மட்டும் ஒரு வர் தேவை.
http://idlyvadai.blogspot.com/2007/07/blog-post_03.html
this is the one I told. Its already in idlyvadai. SethikaLai munthith tharukiRathu. :)
Post a Comment