பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 13, 2007

டெல்லி விமான செய்திகள்

டெல்லி விமான செய்திகள் மூன்று :-)

1. ஜெயலலிதா இன்று டில்லி சென்றார். சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்ற அவர் அங்கு நாளை பிற்பகல் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

2. திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளனர். அதே வாரத்தில் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவும் நடைபெறும். இதற்கு முதல்வர் கருணாநிதி அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார்.


3.சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் 2 காக்கைகள் பறந்து கொண்டிருந்தன. இதனால் விமானம் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் காக்கைகளை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். ஒரு வழியாக காக்கைகள் வேறு பக்கம் பறந்த பின்னர் 2 மணி நேரம் தாமதமாக விமானம் தரையிறங்க முடிந்தது.

7 Comments:

Anonymous said...

Hi...

none of these 'read more' links are working since this morning...Is it a problem only with my machine?

-- Nokia Fan...

IdlyVadai said...

Nokia Fan ஆமாம் வேலை செய்யலை :(. இன்னும் ஒரு அந்நியலோகம் ஸ்கிரிப்ட்ஸ் அது. இன்னும் ஒரு நாளைக்கு பார்க்கிறேன், இல்லை அதை எடுத்துவிடுகிறேன். தகவலுக்கு நன்றி

IdlyVadai said...

ஒரு முறை ரிப்ரெஷ் செய்து பார்த்தேன். இப்ப வேலை செய்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள்.

Anonymous said...

not the read more links are not working

Anonymous said...

காக்கா ஓட்டுறது எல்லாம் நகைச்சுவை லிஸ்டில் சேர்த்துட்டீங்களே ?

ஒருவேளை காக்காவுக்கும் மீதி ரெண்டு பதிவுகளுக்கும் சம்பந்தம் வெச்சு ஏதாவது உள்குத்தா ?

Anonymous said...

Hi...

No...the work around doesnt seem to work for me... Need to go to comments page, and click on 'Show Original Post' to see whats hidden. [its dreary]

-- Nokia Fan...

IdlyVadai said...

Nokia Fan சரி செய்துவிட்டேன். இப்போது பாருங்கள்.