பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 13, 2007

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கலைஞர்

2001ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நான்கு இடங்களில் ஜெயலலிதா மனுதாக்கல் செய்ததை, பெரிய பிரச்சனை ஆக்குகிறார் தி.மு.க. தலைவர். ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது, ஒருவேளை தேர்தல் கமிஷனை அவமதிக்கும் செயல் என்றே வைத்துக் கொண்டால் கூட, தி.மு.க. பிரமுகர்
செங்கை சிவம், ஒருமுறை இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நின்று அவரது மனுக்களை தேர்தல் கமிஷன் நிராகரித்த போது, தி.மு.க. தலைவர், "ஜெயலலிதா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் செங்கை சிவத்தை போட்டியிடச் சொன்னேன்' என்றார். தேர்தல் கமிஷனை கேலிக்கூத்தாக்கிய விஷயம் அல்லவா இது? தி.மு.க. தலைவரின் கணிப்பே, மக்கள் இதை மறந்திருப்பார்கள் என்பதுதான். எனவேதான், இதை நினைவுபடுத்துகிறேன்.
( துக்ளக் வாசகர் கடிதம் )

மதுரை மேற்கில் தேர்தல் கமிஷன் எங்களைக் காயப்படுத்தியது. மக்கள்அதற்கு மருந்துபோட்டார்கள். ( இதை சொன்னவர் யார் ?)

2 Comments:

Mani said...

சொன்னவர் யார்?

சில நிமிடங்களில்.

தங்கமோ, பித்தளையோ மஞ்சளா இருக்குறதுனால பித்தளைய தங்கமா மதிக்க முடியுமா?

அதெப்படி முடியும்.

யோவ், அத போட்டுரு

ஆஆ

Anonymous said...

அழகிரிதான். வேற யாருங்கணா சொன்னாங்க.