பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 09, 2007

நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை கேலி செய்து அவரது வீட்டின் முன் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.

மதுரை இடைத்தேர்தலின் போது தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா எடுத்த நடவடிக்கைகள் திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Naresh Gupta

இன்றும் டவுன் பஸ்ஸில் சென்று வரும் நேர்மையான அதிகாரி நரேஷ்குப்தா. ஆனால், இவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளது. இதனால் நொந்து போயுள்ளார் குப்தா.

மதுரை இடைத்தேர்தலின் போது அழகிரி தரப்பை அடக்க நேரடியாக களமிறங்கி திமுகவுக்கு அதிரிச்சி தந்தார்.

இந் நிலையில் அண்ணாநகரில் இருக்கும் குப்தாவின் வீட்டின் முன் அவரை கேலி செய்யும் வகையில் 3 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த பேனர்களில், தங்களது வெற்றியை தடுக்க நரேஷ்குப்தா சூழ்ச்சி செய்வது போலவும், அதையும் மீறி நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்றும் சொல்கிறது திமுக.

இந்த 3 பேனர்களிலும் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பேனர்களை வைத்தவர்களின் பெயர் மட்டும் உள்ளது. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை.
( செய்தி: தட்ஸ் தமிழ் )

1 Comment:

Boston Bala said...

Both DMK, ADMK have made this kind of defamation, torture, bullying as a consistent practice.

அதிமுக-வை எதிர்த்துப் பேசியதற்காக, அசிங்கமாக சுவற்றில் வரைவது, சேதம் விளைவிக்குமாறு ஆணி இன்ன பிற அடிப்பது போன்றவை எங்கள் வீட்டுக்கு அரங்கேறியது

இணையம்தான் எவ்வளவு சுதந்திரம் ;)