பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 27, 2007

பிரதமர் ஏமாற்றி விட்டார் - கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, தன்னை விட இரண்டு ஆண்டுகள் ஜூனியராக உள்ள அதிகாரிக்கு டில்லி போலீஸ் கமிஷனர் பதவி அளித்துள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து மூன்று மாதங்களுக்கு விடுமுறையில் சென்றுள்ள அவர், நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு செல்லப் போவதாகவும் அறிவித்துள்ளார்.


* பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் கிரண்பெடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

* எனக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் என்னை கை விட்டு விட்டார்.

* அரசு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். என்னை விட ஜூனியர் ஒருவரை டில்லி போலீஸ் கமிஷனராக தேர்வு செய்தது நியாயமற்றது.

* மத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங் தான் இறுதி முடிவு எடுக்கக் கூடியவர். அவர் கூட சீனியாரிட்டி விஷயத்தில் என்னை நிராகரித்து விட்டார். எனக்கு நியாயம் கிடைக்க கோர்ட்டுக்கு செல்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்.

உங்கள் கருத்தை சைடுல சொல்லுங்க :-)

6 Comments:

Boston Bala said...

பிரதிபா பாடில் மாதிரி நெளிவு சுளிவு தெரியாதவரோ?

IdlyVadai said...

பாலா தலைவலியை யார் விலை கொடுத்து வாங்குவார்கள் :-)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<--பாலா தலைவலியை யார் விலை கொடுத்து வாங்குவார்கள் :-) -->
அப்படித்தான் இருக்கும்போல.

Anonymous said...

Our TN police top officials (Lathika Charan and D. Mukherjee) can be recommended
- DMK Murasu

சின்னப் பையன் said...

இதுக்கு பிரதமர் மேலே கோவிப்பது என்ன விதத்துல ஞாயம்? அல்லது, இப்போல்லாம் அவர் சுயமாக முடிவெடுக்க ஆரம்பித்துவிட்டாரா?....:-)

இலவசக்கொத்தனார் said...

பதவியேற்றம் என்பது வெறும் சீனியாரிட்டி மட்டுமே பார்த்து செய்வதா? வயது மட்டுமல்லாமல் திறமை, மற்ற தகுதிகள் எல்லாம் இவருக்கு மேலாக இருந்திருக்குமோ என்னவோ. எனக்கு இந்த சீனியாரிட்டி படி பதவியேற்றம் என்பதில் ஒப்புதல் இல்லை. மற்ற தகுதி அடிப்படைகளில் ஒன்றாக இருந்தால் அப்பொழுது மட்டுமே சீனியாரிட்டி படி முடிவு செய்ய வேண்டும்.