பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 26, 2007

தவலை இட்லி - நன்றி 'அடுப்படி மாமி'

வலையுலக 'அடுப்படி மாமி' என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும். சில நாட்களுக்கு முன் 'தவலை இட்லி' பற்றி எழுதியிருந்தார். சரி, நீண்ட நாட்களாக அவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில. ( ஜெயஸ்ரீ மாமியின் 108 பதிவை முன்னிட்டு )

1. செய்யும் பதார்த்தங்களை நீங்கள் என்றாவது சுவைத்து பார்த்திருக்கிறீகளா ?
2. போட்டோ எடுப்பதற்காக பதார்த்தங்களுக்கு மேகப் போடுவீர்களா ?
3. செய்யும் பதார்த்தங்களை பக்கத்து விட்டுக்கு கொடுப்பீர்களா ?
4. உங்கள் பக்கத்துவீட்டில் குயிருப்பவர் இன்னும் காலி செய்யவில்லையா ? (3 விடை ஆமாம் என்றால் )
5. தவலை இட்லி போல் தவலை வடை இருக்கா ? ( இட்லிவடை கூட்டணியில் பிரச்சனை உண்டு பண்ணாதீர்கள் )
6. செய்யும் ஐட்டங்களை பார்சல் செய்து அனுப்ப முடியுமா ?
7. 'மேட்ச் ஃபிக்சிங் கார்னர்' மாதிரி 'சைடு எபெக்ட்ஸ்' கார்னர் என்று தர முடியுமா ?
( வேறு கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம், காசா ? பணமா ?)

தவலை இட்லியை நான்-வெஜ்ஜாக எப்படி செய்வது ? இதோ நான் செய்து பார்த்ததின் படம். :-)

10 Comments:

ஹரன்பிரசன்னா said...

:))

இன்னும் சில கேள்விகள்.

01. தவலை இட்லியும் உடைத்த இட்லியும் ஒன்றா?

02. உங்கள் வலைப்பதிவில் எழுத்துரு பிரச்சினை வந்தபோது அதை சரி செய்ய உதவிய படுபாவி(கள்) யார்?

03. இட்லி வடை ஒரு தடவை பொதுவில் பெயர் சொல்லி மாட்டிக்கொண்டு, சில நிமிடங்களில் அதை சரி செய்தது போல, உண்மையிலேயே நீங்கள் சொல்லும் ரெசிபிகளைச் செய்தது யார் என்று சொல்லி, மாட்டிக்கொள்ளுமுன் தப்பித்த அனுபவங்கள் உண்டுமா?

04. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அலுவலகத்திற்கும் பள்ளிக்கும் விடுப்பு எடுப்பது நீங்கள் சமையல் செய்யும் நாளிலா அல்லது மறுநாளா?

05. நான் சொன்ன சிறந்த ரெசிபிகளில் சிலவற்றை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். மற்றதை எப்போது வெளியிடப்போகிறீர்கள்? (வழக்கம்போல் என் பெயரைச் சொல்லவேண்டாம்!)

Boston Bala said...

---போட்டோ எடுப்பதற்காக பதார்த்தங்களுக்கு மேகப் போடுவீர்களா ---

நானும் ரொம்ப நாளாக கேட்க நினைத்த கேள்வி. பார்த்தவுடன், கிடைக்காதா... என்று ஏங்க வைக்கும் புகைப்படங்கள்!

IdlyVadai said...

அனானி உங்கள் கேள்விகளை பொதுவில் வைக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

enRenRum-anbudan.BALA said...

IV,
"மாமியிடம்" நேரே சென்று போட்டுக் கொடுத்து விட்டேன் :)

http://mykitchenpitch.wordpress.com/2007/07/26/mor-saaththamuthu/#comment-557

கேள்விகளுக்கு பதில் வருதா என்று பார்க்கலாம் !

எ.அ.பாலா

IdlyVadai said...

அனானி வேறு சில அனானிகள் கேட்டுக்கொண்டதால் உங்கள் கேள்விகள் சிலவற்றை எடிட் செய்து இங்கே தருகிறேன்.

* * * * *
யோவ் இட்லிவடை, பார்ட்டியை நீ என்ன மல்லிகா பத்ரிநாத் மாமியைக் கேக்கற மாதிரி கேட்டிருக்க. நீ வேஸ்ட்டுயா. நீ கலைஞரைக் கேள்வி கேக்கத்தான் லாயக்கு. நீ ஒத்து. நா கேக்கறேன்..

ஜெ! என்கிற ஜெஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களே,

1. ஏன் ஒரேயடியாக அடுப்படிப் பக்கம்?

2. ஏன் திரட்டிகளில்(முக்கியமாக தமிழ்மணம்?) இல்லை?

3. question deleted.

4. இந்த முறை வித்லோகாவில் என்னென்ன புத்தகம் வாங்கினீர்கள்? (இல்லை என்று மறுக்க வேண்டாம். மஞ்சள் சேலையில் வந்ததை நான் பார்த்தேன்.)

5.கிழக்குப் பதிப்பகத்தில் ஓனர் சரி. இன்னும் வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?

6.எனிஇந்தியனில் நடந்த இலக்கியவாதியுடனான சந்திப்பைப் பற்றி எழுதுவீர்களா?

7. உங்கள் புத்தகத்தை வெளியிடப்போவது கிழக்கா, எனி இந்தியனா? ..some words deleted... (கேள்வி செந்தழலார் கொலைவெறிப் படை சார்பாகக் கேட்கப் படுகிறது.)

8. நிறைய புத்தகம் படிக்கிறீர்கள் என்று தெரியும். ஏன் எங்குமே புத்தக விமர்சனம் எழுதுவதில்லை. என் புத்தகத்தை அனுப்பினால் எழுதுவீர்களா?

Last but not the least, 'மரத்தடி'யில் இருக்கிறீர்களா? மரத்தடி சம்பந்தமான அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? (ஆம் என்றால் மேலும் 100 கேள்விகள் அது சம்பந்தமாகக் கேட்டு உங்கள் 108 வது பதிவிற்கு மெருகேற்றுவேன்.)

முக்கியப் பின்குறிப்பு: (ஜெ!, உங்களுக்குத் தான் பின்குறிப்பு பிடிக்குமே)

மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? முகமூடிகளுக்கு பதில் சொல்வதில்லை என்று தப்ப முடியாது. இட்லிவடையும் முகமூடியே.

* * * * *

ramachandranusha(உஷா) said...

அன்புள்ள இட்லி வடை அவர்களுக்கு,
மிக உத்தமமான வேலை, சூப்பர். அப்படியே இன்னும் பல மாமிகள் எழுதிக் கொண்டு இருக்கிறோம். இங்கு மாமி என்றால் வயதுக்குக் கொடுக்கும் மரியாதை என்று தவறாய் பொருள் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அவர்களைப் பற்றியும் நக்கலாய்
பதிவு போட்டு, அதற்கு வரும் ஆபாச பின்னுட்டங்களை எடிட் செய்துப் போடவும். கவலையே வேண்டாம் நீங்கள் எடிட் செய்த கோடிட்ட இடங்களில், தேவையானவைக்களை அவர் அவர்கள் போட்டுக் கொண்டு கிளுகிளுப்பு அடைவார்கள். இதைவிட..... தனம் வேறு இல்லை.

IdlyVadai said...

உஷா அக்கா
நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் டெலீட் செய்தது எல்லாம் தனி நபர் விமர்சனங்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி வேறு எதுவும் இல்லை. அந்த மாதிரி நினைப்பு வர கூடாது என்பதால் தான் அந்த பின்னூட்டதை எடிட் செய்து பிரசுரித்தேன்.

சரி அந்த '3' ஆம் கேள்வி இது தான்

3. ஒரு பக்கம் பிகேஎஸ் என்கிற ...... இன்னொரு பக்கம் மதி என்கிற ..... எப்படி இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள்? என்ன சமரசம் செய்துகொள்கிறீர்கள்? இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்தால் யாருடன் பேசுவீர்கள்?

இங்கும் சில வரி/வார்த்தைகளை எடுத்திருக்கிறேன் இதுவும் தனி நபர் விமர்சனம் அதனால்.

// இதைவிட..... தனம் வேறு இல்லை.//

ரொம்ப குழந்தை தனம் :-)

அன்புடன்,
இட்லிவடை

ramachandranusha(உஷா) said...

சக பதிவாளர்களை கேள்விக் கேட்பது தவறில்லை. ஆனால் அதை நேராக அவரிடமே கேட்பதே முறை. உங்களை போன்ற முகமிலியாய் இருந்தால் பிரச்சனை இல்லை. நீங்கள் எடிட் செய்துப் போட்டதில் எனக்கு கோபத்தை உண்டாக்கியது எண் எழு. அதற்கும் மழுப்பலாய் பதில்
சொல்ல வேண்டாம். என் எதிர்ப்பை சொல்லிவிட்டேன். இனி நான் சொல்ல ஒன்றுமில்லை.

IdlyVadai said...

உஷா எனக்கு 7'ல சனி என்று சொல்லுவார்கள் அது சரிதான் :-). நான் டெலீட் செய்த வார்த்தை நாம் எல்லோருக்கும் வலைப்பதிவில் படித்து மரத்துபோன வார்த்தையான 'பார்ப்பான்' என்ற சொல்தான்
இதற்கு மேல் நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. எதற்கு நான் மழுப்ப வேண்டும் ?

Anonymous said...

யோவ் இட்லி வடை ஜெயஸ்ரீ அக்காக் கிட்ட கேள்வி கேக்குறவுங்க அங்கேயே போய் நேர கேட்டுக்கிடலாமில்ல? உனக்கேன்யா இங்கே இடைத் தரகர் வேலை? இப்ப பாரு உஷா அக்கா கோவுச்சுக்கிட்டாங்க. அபுதுல் கலாம் அன்னலட்சுமில போய் சாப்பிட்ட மாதிரியான சில்லறை விஷயங்களை வழக்கம் போல எழுதும் ஐயா, ஜெஸ்ரீ ப்ளாக்க்கு வர்ற கேள்விகளை அங்கே ஃபார்வார்ட் பண்ணு ஏன் உன் தலைய அநாவசியமா உருட்ட விடுற?