பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 24, 2007

ஜீவஜோதி, அண்ணாச்சி பற்றிய கதை.

ஜீவஜோதி, அண்ணாச்சி பற்றிய கதை.

முன் கதை சுருக்கம்:

ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜீவஜோதியின் அழகைப்பார்த்து மயங்கிய ஹோட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக்கொடைக்கானலுக்கு(2001) கடத்திச் சென்று மலையில் தள்ளிக் கொலை செய்துவிட்டதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தன் பெற்றோருடன் தஞ்சைக்கு ஜீவஜோதி இடம் பெயர்ந்தார். அங்குள்ள கிருஷ்ணாநகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜீவா லேடீஸ் டெய்லர்ஸ் என்ற பெயரில் தையல் கடையை நடத்திவருகிறார். கணவரை இழந்து பெற்றோருடன் வசித்து வரும் ஜீவஜோதி, மறுமணம் செய்து கொள்ளும்முடிவுசெய்துள்ளார். இவருடன் பள்ளிக் காலத்தில் உடன் படித்த தண்டபாணி என்பவரையே ஜீவஜோதி கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார். ஏற்கெனவே தண்டபாணி, ஜீவஜோதியைக் காதலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அப்போது அதை ஏற்காமல் பிரின்ஸ் சாந்தகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு விட்டார்ஜீவஜோதி. தற்போது ஜீவஜோதியின் நிலையைப் பார்த்து வருந்திய தண்டபாணி, அவரைக் கல்யாணம்செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கவே அதை ஏற்றுக்கொண்டு தண்டபாணியைக் கரம் பிடிக்க முடிவு செய்தார்ஜீவஜோதி.

இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

பின் கதை சுருக்கம்:

இந்தா வழக்கு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.

இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.

புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.

ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.

5 Comments:

Anonymous said...

பணம் பத்தும் செய்யும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஈட்டி எட்டியவரை பாய, பணம் பாதாளம் வரை பாய்ந்து விட்டது.
எனினும் மனச்சாட்சி ஒன்று உண்டு;
அது நின்று அனைவரையும் தண்டிக்கும் எனக் கொள்வோம்.

அரவிந்தன் said...

அதெப்படி இட்லி வடை..பெங்களுரிலிருந்து தமிழக செய்திகளை உடனுக்குடன் எழுதறிங்க..

ஸ்ரீரங்கத்து பயணம் நல்ல படியா இருந்ததா...?

அன்புடன்
அரவிந்தன்

IdlyVadai said...

அரவிந்தன் அவர்களே இட்லி வடை தமிழ் நாட்டு உணவாச்சே :-)

அடுத்த பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு தான் போகனும். உங்களையும் கூப்பிடுகிறேன். வாங்க :-)

அரவிந்தன் said...

நிச்சயம் வருகிறேன்..வழி செலவு உங்களுது..

பதிலுக்கு PVR-ல தசாவதாரம் ரெண்டு டிக்கட் தருகிறேன்..

அன்புடன்
அரவிந்தன்