பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 17, 2007

நேரு , மவுண்ட் பேட்டனின் மனைவி பற்றிய புத்தகத்திற்கு தடை ?

மவுண்ட் பேட்டன் மகள் நேருவை பற்றி எழுதிய புத்தகத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த புத்தகம் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தி ஆட்சியாளராக (வைசிராய்) மவுன்ட் பேட்டன் பிரபு இருந்தார். சுதந்திரம் அடைந்து நேரு பிரதமர் ஆன போதும் அந்த பதவியில் மவுன்ட் பேட்டன் பிரபு தொடர்ந்து இருந்து வந்தார்.மவுண்ட் பேட்டனுடன் பிரதமர் நேரு நெருங்கிய நண்பராக இருந்தார். மவுண்ட் பேட்டனின் மனைவி செல்வினாவும், நேரு மீது அன்பு செலுத்தினார். இதை அப் போதே வேறு மாதிரி சித்த ரித்து சிலர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இப்போது மவுண்ட் பேட்டனின் மகள் பமிலா மவுண்ட் பேட்டன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் தனது தாயாருக்கும், நேருவுக்கும் இருந்த நட்பு பற்றி பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். இது நேருவை மோசமாக அவமதிக்கும் வகையில் இருக்கிறது. இந்தி யாவிலும் இந்த புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புத்தகத்துக்கு அரசு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தேவேந்திர திவேதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதையும் முன் வைக்கும் திட்டம் காங்கிரசுக்கு இல்லை. புத்தகம் எழுதுவது ஜனநாயக உரிமை. அதை தடுக்க முடியாது.

பிரபல தலைவர்களை பற்றி ஏததாவது சொல்லி புத்தகம் எழுதுவது வாடிக்கையாக உள்ளது. காந்தியை பற்றி கூட எழுதி இருக்கிறார்கள்.

0 Comments: