ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அவரை பாசத்துடன் ஏற்று உரிய மரியாதையுடன் நடத்துவோம் என்று அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறினார். ( முழு பேட்டி கீழே ... )
( படம்: புதுப்பிக்கபட்ட பழைய படம் )
கேள்வி:- சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி உங்களை சந்தித்தாரே? 3-வது அணியில் அவரை சேர்ப்பது குறித்து பேசினíர்களா?
பதில்:- மம்தா பானர்ஜி எனது நண்பர். அந்த அடிப்படையில் தான் சந்திப்பு நடந்தது. 3-வது அணி பற்றி அவரிடம் பேசவில்லை.
கேள்வி:- கடந்த முறை நீங்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு தி.மு.க.விற்கும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் இடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறதே! தேர்தலோடு தி.மு.க.வுடன் தோழமை முடிந்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளாரே? இந்தச் சூழலில் உங்கள் அணிக்கு டாக்டர் ராமதாஸ் வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- டாக்டர் ராமதாஸ் எங்கள் அணிக்கு வந்தால் அவரை பாசத்துடன் வரவேற்போம். உரிய மரியாதை கொடுத்து கவுரவமாக அவரை நடத்துவோம்.
கேள்வி:- 25 கூட்டுறவு சங்கங்களுக்கு மறுதேர்தல் அறிவித்துள்ளனரே?
பதில்:- கூட்டுறவு சங்கங்களுக்கு மறுதேர்தல் நடத்த அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு. ஒட்டு மொத்த தேர்தலையும் ரத்து செய்துவிட்டு புதிதாக தகுதியானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதன்பிறகே தேர்தல் நடதëத வேண்டும். இதுவே அ.தி.மு.க.வின் நிலை ஆகும். நடந்து முடிந்த கூட்டுறவு சங்க தேர்தல் மிகப் பெரிய மோசடி. முதல்கட்ட தேர்தல் உண்மையாக நடக்கவில்லை. எனவே, கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும்.
கேள்வி:- அமர்சிங்கும், மம்தா பானர்ஜியும் உங்களை அடுத்தடுத்து சந்தித்துள்ளார்களே? ஏதாவது அரசியல் முக்கியத்துவம் உண்டா?
பதில்:- அமர்சிங் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து அவருடன் விவாதித்தேன். மம்தா பானர்ஜியும் நானும் நல்ல நண்பர்கள். சென்னை வழியாக செல்லும்போது நட்பு ரீதியாக அவர் என்னை சந்தித்தார்.
கேள்வி:கொல்கத்தா பேரணியில் கலந்து கொள்ள வருமாறு அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறதே?
பதில்:- ஆம். கொல்கத்தா பேரணியில் பங்கேற்க வருமாறு என்னை அழைத்தார். ஆனால், குறுகிய காலத்தில் அழைப்பு வந்ததால் என்னால் பேரணியில் பங்கேற்க முடியாது. அத்துடன் எனக்கு பல்வேறு பணிகளும் இருக்கின்றன.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் செகாவத்தை உங்கள் அணி ஆதரித்தால், உங்கள் அணிக்கு துணை ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?
பதில்:- அப்படி எந்தவொரு திட்டமும் எங்களிடம் இதுவரை சொல்லப்படவில்லை.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தால் அதுவே குற்றம் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளாரே?
பதில்:- நாங்கள் அதுதொடர்பாக ஆலோசனை செய்வோம்.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவு எடுத்துவிட்டீர்களா?
பதில்:- இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். 3-வது அணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் உள்ள சவுதாலா வீட்டில் நடைபெற உள்ளது. முதல் கூட்டம் அலகாபாத்தில் முலாயம்சிங் வீட்டிலும், இரண்டாவது கூட்டம் ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு வீட்டிலும், மூன்றாவது கூட்டம் சென்னையில் எனது வீட்டிலும், நான்காவது கூட்டம் டெல்லியில் அமர்சிங் வீட்டிலும் நடந்தது.
கேள்வி:காவிரி நதிநீர் சிக்கலில் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைதியாக இருப்பதாக புகார் எழுந்துள்ளதே?
பதில்:- இதுபற்றி நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் தனது கடமையை செய்யத் தவறிவிட்டார். கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று அந்த மாநில அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் பெங்களூரில் 3 நாட்கள் தங்கி இருந்து ஓய்வெடுக்கிறார். அங்கு கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறநëதுவிட வேண்டும் என்று கேட்பதற்கு அவருக்கு நேரம் இல்லை.
கேள்வி:- தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரியாக இருந்தபோது ரூ.10 ஆயிரம் கோடி இழபëபு ஏற்பட்டிருப்பதாக புதிதாக அந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தி.மு.க. மந்திரி ராசா குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்:- அவர்களே சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது உண்மையாகத் தான் இருக்கும். இந்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. இதுபற்றி மேலும் விளக்கங்களை அவரிடம்தான் கேட்க வேண்டும். இப்போது இந்த மோசடியை ஏன் அம்பலப்படுத்துகிறார்கள்? இதற்கு ஏன் இவ்வளவு தாமதமë என்பதையும் இந்த விவகாரத்தில் உண்மை நிலைமையையும் தி.மு.க. விளக்க வேண்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 09, 2007
இது என்ன கூத்து ? அல்லது ஜெ பேட்டி
Posted by IdlyVadai at 7/09/2007 09:16:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
உங்களுடைய டச் இதில் ஏதும் இல்லையே ஏதவது பன்ச் வைத்து இருக்காலம்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை!
Post a Comment