அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் கருணாநிதியை மறைமுகமாகத் தாக்கியுள்ளார். அரசியலில் இருந்து கொண்டு சினிமாவுக்கு கதை, வசனம் எழுதும் போது நடிப்பதில் மட்டும் என்ன தவறு இருக்கிறது என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் 150வது பட பூஜை விழா செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் உள்ள அவரது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அரசியல் நிகழ்ச்சியைப் போல இந்த படபூஜை விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் விஜயகாந்த் போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாக நடிக்கிறார். அந்த போலீஸ் சீருடையிலேயே செய்தியாளர் களுக்கு அவர் பேட்டியளித்தார்.
கேள்வி: அரசியலில் இருந்து கொண்டு சினிமாவில் நடிப்பது சரியா?
பதில்: தொண்டர்கள், நான் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் இருந்து கொண்டு சினிமாவுக்கு கதை, வசனம் எழுதும் போது நான் நடிப்பதில் மட்டும் என்ன தவறு இருக்கிறது. யார் யாருக்கு எந்தெந்த துறையில் ஈடுபாடு உள்ளதோ அதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சிலருக்கு ஆரம்பத்திலிருந்தே எழுத்தில் ஈடுபாடு இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அதுபோல எனக்கு நடிப்பில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு இருந்து வருகிறது. எனவே, நான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
கேள்வி: உங்களை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் அச்சப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில் : அப்படியெல்லாம் கிடை யாது. இப்போதும் கூட 6 தயாரிப்பாளர் கள் என்னை வைத்து படமெடுக்க முன் வந்தனர். எனக்குத்தான் அரசியல் பணிச்சுமை காரணமாக அவற்றில் நடிக்க முடியவில்லை.
கேள்வி: ஜார்ஜ் பெர்ணான்டஸ் உங்களை வந்து சந்தித்தாரே?
பதில் : அது அரசியல் ரீதியான சந்திப்பு. அதைப்பற்றி வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: நடிகர் சங்கத்தின் தற்போதைய பணிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : நான் அதனை கடனே இல்லாத சங்கமாக விட்டுவிட்டு வந்தேன். அதனால் இப்போது நடிகர் சங்கத்தின் பணிகள் நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேள்வி: "சிவாஜி' படம் பார்த்தீர்களா?
பதில் : நான் எந்தப் படமும் பார்ப்பதில்லை. நல்ல ஆங்கிலப் படங்களை மட்டும் பார்ப்பேன்.
கேள்வி: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
தொடர்ந்து தனது 150வது படத்தைப் பற்றி பேசிய விஜயகாந்த், இந்த படத்திற்கு "வித்தகன்' என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும், ஆனால், இன்னும் அது உறுதி செய்யப் பட வில்லை என்றும், ஓரிரு நாட்களில் படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இந்தப் படத்தை இயக்குனர் மாதேஷ் இயக்குகிறார். தேமுதிகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ் இதன் தயாரிப்பாளர் ஆவார்.
3 Comments:
//கேள்வி: "சிவாஜி' படம் பார்த்தீர்களா?
பதில் : நான் எந்தப் படமும் பார்ப்பதில்லை. நல்ல ஆங்கிலப் படங்களை மட்டும் பார்ப்பேன்.//
hahahahahahahahaha.. good joke.
//பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
//
enna kodumai sir idhu?
இவர் நடித்த படங்கள் நல்ல படங்கள் இல்லையா??? அவைகளையும் பார்க்க மாட்டாரா??
(இவர் நடித்த) தமிழ் படம் பார்க்கும் நாமெல்லாம் கேனையா???
Post a Comment