பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 13, 2007

இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்

ராமதாஸுக்கு என்னையும் தெரியும்; ஜெயலலிதாவையும் தெரியும் - முதல்வர் கருணாநிதி மேலும் தெரிந்து கொள்ள...


தமது கூட்டணிக்கு வருமாறு பாமக நிறுவனர் ராமதாஸýக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அழைப்பு குறித்து கருத்துக்கு கலைஞர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவுடன் பாமக தோழமை கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்ற பாமக நிறுவனர் ராமதாஸை பல மணி நேரம் காத்திருக்கச் செய்த ஜெயலலிதா, தற்போது ராமதாஸ் எங்கள் அணிக்கு வந்தால் பாசத்துடன் வரவேற்போம் என்று சொல்லியிருக்கிறார்.

( வெயிலில் காய வைத்ததை விடவா ? )

இதற்கு ராமதாஸ் உரிய பதில் சொல்லி இருக்கிறார். இது தேவையற்ற கேள்வி - பதில் என்றும், வருத்தம் அளிக்கிறது என்றும் சொல்லிவிட்டார். அவருக்கு (ராமதாஸுக்கு) என்னைப் பற்றியும் தெரியும் அந்த அம்மையாரைப் பற்றியும் தெரியும்.

( கலைஞருக்கு ராமதாஸ் பற்றி என்ன தெரியும் ? )

பாஜக தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பேச்சு ஒன்றை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். "அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் வேதனையான காலமாகும். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நாளிலிருந்தே ஜெயலலிதா தொல்லை கொடுக்கத் துவங்கினார். பாஜக அரசைப் பலவீனப்படுத்தும் வகையில் பேசி வந்தார். அரசை கவிழ்க்கப் போவதாக சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் கூட அவர் அச்சுறுத்தினார். ஆனால் அவரது பிளாக் மெயில் தந்திரத்துக்கு நாங்கள் அடிபணியவில்லை' என்ற இந்த பேச்சை ஒரு முறை படித்துக் கொண்டால் அவர்களது இன்றைய சந்திப்பு பற்றி சிரிப்பு தான் வரும்.

( எந்த மந்திரி பதவி வேண்டும் என்ற பேரம் பற்றி சோனியா இன்னும் பேசவில்லை அவ்வளவு தான் )

அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் பல அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் மாற்றி உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தப்பட்டனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டு இப்போது அவர் சைவப் பூனையாக மாறி மதுரை மேற்கு தொகுதியில் மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பழைய இடத்தில் பணி அமர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்துள்ளார். இதை நினைக்கும்போது வெட்கமில்லை; வெட்கமில்லை என்ற உடுமலையாரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

( எனக்கும் சில பாடல்கள் நினைவு வருது. அது "சிரிப்பு வருது சிரிப்பி வருது.. படிக்க படிக்க சிரிப்பு வருது )

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினர், தோழமை கட்சியினர் சில யோசனைகளைச் சொல்லும்போது ஆளும் கட்சியினர், ஏற்கத்தக்க கருத்துகளை யார் சொன்னாலும் அந்தக் கருத்தைச் சொல்வது யார் என்று பார்க்காமல் எந்த அளவுக்குச் சரியானது என்பதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து இந்த அரசு செயல்பட்டுள்ளது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அந்த அடிப்படையில்தான் கூட்டுறவு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

( எண்ணி மட்டும் தான் பார்க்க முடிகிறது. என்ன செய்ய )

0 Comments: