சந்திரசேகர் ஆட்சியின் போது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது, ஜெயலலிதா மற்றும் ராஜீவ் காந்தியின் வற்புறுத்தலினால்தான் – என்ற ஒரு பிரச்சாரம் அன்று முதல் இன்று வரை நடக்கிறது. அதில் சற்றும் உண்மை கிடையாது. ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் அதை கோரினார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து சந்திரசேகர் தனது நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடனேயே, அவரை நான் சில முறை சந்தித்தபோது, விடுதலைப்புலிகளின் விவகாரங்கள் பற்றி அரசிடமிருக்கும் தகவல்கள் குறித்து, பெரும் கவலை தெரிவித்தார் அவர்.
இதைத் தவிர ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். சந்திரசேகர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த போது என்னிடம், ""விடுதலைப்புலிகளுக்கு இங்கே கிடைக்கும் ஆதரவு விபரீதமானது. இதை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தலாமா என்று கூட நான் யோசிக்கிறேன்'' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் இயங்குவது பற்றியும், தி.மு.க. அரசு அவர்களுக்குச் செய்த உதவிகள் பற்றியும், அவரிடம் பல தகவல்கள் அப்போதே சேர்ந்திருந்தன. ஆட்சிக்கு வந்த பிறகு, அவருக்கு அதிகாரபூர்வமான தகவல்களும் கிட்டின.
தமிழக அரசு, தான் (மத்திய அரசு) அளிக்கும் தகவல்களை விடுதலைப்புலிகளுக்கு அளித்து விடுகிறது என்பது தெரிந்த பிறகுதான், அவர் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார். இது பற்றி எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவர் எடுத்த முடிவு ராஜீவ் காந்திக்கும், ஜெயலலிதாவுக்கும் பிடித்ததாக இருந்தது என்பது உண்மையே. ஆனால் அது, அவர்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல மாதங்களாகவே தன் மனதில் ஏற்பட்டிருந்த எண்ணத்திற்கு ஆட்சியில் மேலும் சான்றுகள் கிடைத்த போது, சந்திரசேகர் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய தீர்மானத்தின்படி, நடவடிக்கை எடுத்தார். அவ்வளவுதான்...
சந்திரசேகர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்திருந்தால், நிச்சயமாக அவர் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருந்திருப்பார். ஆட்சியில் இருந்த குறுகிய காலத்திலேயே, அவர் சற்றும் தயங்காமல், எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தார். அயோத்தி பிரச்சனைக்குக் கூட ஒரு முடிவு காணக் கூடிய அளவுக்கு, அவர் பெரும் விவேகத்துடன் செயல்பட்டார். அதுவரை சந்தித்துப் பேசத் தயாராக இல்லாத இரு தரப்பினரும், அவர் ஆட்சியின் கீழ்தான்
சந்தித்துப் பேசவே சம்மதித்தனர்.
வளைகுடா யுத்தத்தின் போது, அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்கிற முடிவாக இருக்கட்டும் – தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படுகிற முடிவாக இருக்கட்டும் – அந்நிய செலாவணி சேமிப்பு விஷயத்தில் தேவைப்பட்ட ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கிற விஷயமாக இருக்கட்டும் – எதுவாக
இருந்தாலும், சந்திரசேகர் மன உறுதியுடன் செயல்பட்டார். இத்தனைக்கும் அவர் தலைமை தாங்கியது ஒரு சிறுபான்மை அரசுக்கே. ஆனால் அவர் செயல்பட்ட வேகம், ராஜீவ் காந்திக்கே ஒரு சந்தேகத்தை உருவாக்கி விட்டது. "இவர் அதிக நாள் பதவியில் தொடர்ந்தால், மக்களிடையே இவருடைய செல்வாக்கு வளர்ந்து விடும். இது காங்கிரஸுக்கு நல்லதல்ல' என்ற முடிவுக்கு ராஜீவ் காந்தி வருமளவுக்கு
சந்திரசேகர் செயல்பட்டார்.
– "துக்ளக்' – 9.9.98 இதழ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, July 19, 2007
சந்திரசேகர் ஒரு நினைவு – சோ
Posted by IdlyVadai at 7/19/2007 01:55:00 PM
Labels: கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
உடன்பிறப்பு வலைஞர்கள் கொதித்து உங்களையும், சோ-வையும் மட்டுமல்லாது சந்திரசேகரையும் திட்டக் கிளம்பிடுவாங்க....ஏங்க இந்த வேலை?
//....ஆனால் அவர் செயல்பட்ட வேகம், ராஜீவ் காந்திக்கே ஒரு சந்தேகத்தை உருவாக்கி விட்டது. ...//
இவ்வாறுதான் புலிகளும் சொல்கிறார்கள். தாம் செயற்பட்ட வேகம் ராஜீவை சந்தேகம் கொள்ள வைத்ததாகவும் , இவர்களை விட்டால் இவர்களின் செல்வாக்கு வளர்ந்துவிடும் இது ஸ்ரீலங்காவுக்கோ அல்லது அதன் அடிவருடிகளான தமிழ்க் கட்சிகளுக்கோ நல்லதல்ல.....
:( :( :( :(
Post a Comment