பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 08, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானார்

உடல்நிலை சரியில்லாமல் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலமானார். ரத்தம் தொர்பான நோயால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் டில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 மாதங்களாக டாக்டர் ராகேஷ்சோப்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 8.45 சிகிச்சை பலனளிக்காமல் சந்திரசேகர் உயிர் பிரிந்தது. சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரது உடல் டில்லியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் சந்திரசேகரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மறைந்த சந்திரசேகர் 1990- 91ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகரின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்து, நேர்மையான பிரதமர், ராஜிவ் காந்தியையே கொஞ்சம் பயபட வைத்தார்.

4 Comments:

Boston Bala said...

---நேர்மையான பிரதமர்---

அப்படியா ;)

அஞ்சலி

ஹரன்பிரசன்னா said...

Deepest Condolences.

இலவசக்கொத்தனார் said...

சூடான செய்தி தர நீங்க என்ன இப்படி ஆறிப் போன செய்தியோட வந்திருக்கீங்க?

IdlyVadai said...

//சூடான செய்தி தர நீங்க என்ன இப்படி ஆறிப் போன செய்தியோட வந்திருக்கீங்க?// பதிவின் நேரத்தை பார்க்கவும்.