"விஜயகாந்த் பெறுகின்ற வாக்குகள் அர்த்தம் நிறைந்தது!. விஜயகாந்த்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க, கவனிக்கத்-தக்க, மறுக்க, மறைக்க முடியாத வளர்ச்சி என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஞாயிறு நண்பகல் அமைதியை-யும் தாண்டிப் பரபரப்பாக இருக்கிறது, மந்தைவெளியில் இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இல்லம். ‘‘விவகாரமான கேள்வி எதுவும் கேட்க மாட்டீங்களே!’’ - சிரித்தபடியே எளிமையான வேட்டி-சட்டையில் வந்து அமர்கிறார், ஜவுளித் துறையின் மத்திய இணை அமைச்சர்!
‘‘தி.மு.க-வின் தோளில் பயணித்துப் பெற்ற மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்குக் கெளரவமான வெற்றிதானா? மு.க.அழகிரி இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்குமா?’’
‘‘மத்தியில் காங்கிரஸின் மூன்றாண்டு கால
ஆட்சிக்கும், மாநிலத்தில் தி.மு.க-வின் ஓராண்டு கால ஆட்சிக்கும் மக்கள் அளித்த நற்சான்றித-ழாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன். தி.மு.க-வின் தோளில் பயணித்தோம் என்பதை-விட, அவர்களும் எங்கள் வெற்றிக்குப் பாடுபட்டார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
மு.க.அழகிரியும், தி.மு.க-வும் இல்லா-திருந்தாலும் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் ஜெயித்திருக்கும். அழகிரியின் கடுமை-யான உழைப்புதான் இந்த பிரமாண்ட-மான வெற்றியின் ஆணிவேர். ஆனால், தேர்தலில் வாக்கு-கள் கை சின்னத்துக்குதானே விழுந்தன!
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த-தாகக் குவிந்த புகார்கள், வன்முறைப் பிரசாரம் என்று புகார்கள் சொல்கிறார்-கள். எங்களை எதிர்த்துப் போட்டியிட்ட-வர்கள் ஒன்றும் காந்தியோ, புத்தரோ இல்லையே. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நடத்தப்-பட்ட இடைத் தேர்தல்களின் லட்ச-ணத்தை நாடறியும். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளுக்கு இடையே, நியாயமான முறையில்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தேறியது. என்ன குற்றம் குறை கண்டுபிடித்தாலும், வெற்றி வெற்றிதான்! ‘நெவர் டிஸ்கஸ் ஆஃப்டர் சக்சஸ்’ என்பார்கள். அதனால் இனிமேலும் இந்த வெற்றியைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் வேண்டாமே!’’
‘‘தி.மு.க-வின் ஓராண்டு கால ஆட்சி பற்றி..?’’
‘‘தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி-களை நிறைவேற்று-வதில் முதல்வர் காட்டிய முனைப்பு பாராட்டத்தக்கது. அதே சமயம், தமிழகத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன... தமிழகம் இதற்கு முன் அறிந்திராத ரிமோட் கன்ட்ரோல் வெடி-குண்டு, பட்டப்பகலில் கவுன்சிலர் கொலை எனப் பொது இடங்-களில் வன்முறை வெறி-யாட்டங்-கள் சர்வ சாதாரண-மாகிவிட்டன. சட்டம்-ஒழுங்கு சரிவரப் பராமரிக்கப்படவில்-லையோ என்ற சந்தேகத்தை அவை தோற்றுவிக்-கின்றன!’’
‘‘தமிழக மந்திரி சபையில் இடம் கேட்டுப் போராடினீர்-களே... என்ன ஆச்சு?’’
‘‘கேட்டுக் கேட்டுக் கிடைக் காமல் அலுத்துச் சலித்துப் போய்-விட்டோம். இனி, நாங்களே நேரடியாக மக்களிடம்தான் போய்க் கேட்க வேண்டும். வருங் காலத்திலாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி போராடும்னு சொல்றதைத் தவிர, நான் வேற என்ன பண்ண முடியும்?’’
‘‘நாளொரு அறிக்கை, பொழு-தொரு போராட்டம் எனக் கூட்டணியில் இருக்கும் பா.ம.க. முரட்டுத் தோழனாகச் செயல்படு-கிறதே! தமிழகத்தில் காங்கிரஸைக் காட்டி-லும் கூட்டணியில் முக்கியத்துவம் பெறுவதற்கு பா.ம.க. மேற்-கொள்ளும் முயற்சியா இது?’’
‘‘எனக்கு பா.ம.க. ராமதாஸின் போக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. மாநில அரசின் மீது பல குற்றச்சாட்டு-களைத் தினந்தோறும் அள்ளி அடுக்கிவிட்டு இறுதி வரிகளில், ‘ஆனாலும், நாங்கள் கடைசி வரை உங்களுக்கு ஆதரவு அளிப்போம்’ என்றும் மறக்-காமல் குறிப்பிடு-கிறார்கள். இது என்ன விதமான கூட்டணி தர்மம் என்றே புரியவில்லை. விமான நிலைய விரிவாக்க விவகாரத்-தில் பா.ம.க. பெரும் போராட்டத்-துக்குப் போர்க்கொடி தூக்கிய-போது, அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இடத்தை மாற்றிக் கொள்வ-தாக அறிவித்தது மாநில அரசு. அதை ஒரு நியாயமான போராட்டம் என எடுத்துக் கொள்ளலாம். அதற்காக அதே போன்றதொரு தொனியுடன் அனைத்து கோரிக்கைகளையும் முன்வைப்பது நாகரிக அரசிய லுக்கு ஏற்புடையது அல்ல என்பதே என கருத்து!’’
‘‘மூன்றாவது அணி அமைக்கும் ஜெயலலிதாவின் முயற்சி வெற்றிபெறுமா?’’
‘‘மூன்றாவது அணி என்று சொல்லப்-படும் அந்த அணியின் முதல் முயற்சியே கேலிக்கூத்தாக முடிந்துவிட்டதில் இருந்தே அதன் எதிர்காலம் புலப்படவில்லையா? அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதி-ஆக்குவோம் என்ற அவர்களின் அறிவிப்பு காற்றில் கரைவதற்குள் காலாவதியாகி-விட்டது. பிரதீபா அம்மையார் ஜனாதிபதி வேட்பாளர் ஆனதை ‘ஜோக்’ என்று சொன்னவர்தான், இன்று அரசியல் அரங்கில் நகைப்புக்கு ஆளாகிவிட்-டார். தலைவர் யார் என்று தெரியாம-லேயே ஒரு அணி. முன்னாள் முதல்வர்கள் சேர்ந்து அமைத்த ஒரு சாதாரண அமைப்பு-தான் மூன்றாவது அணி. அதைத் தவிர, அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை!’’
‘‘விஜயகாந்த்தின் வளர்ச்சி குறித்து தமிழ-கத்தில் எந்த அரசியல்-வாதியும் வாய் திறக்க மறுக்கிறார்களே..?’’
‘‘விஜயகாந்த்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க, கவனிக்கத்-தக்க, மறுக்க, மறைக்க முடியாத வளர்ச்சி! அவர் கட்சி பெறு-கின்ற வாக்கு-கள் ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தது; வாக்காளர்-களின் மனநிலையை பிரதிபலிப்பது. மாற்றுக் கட்சியில் இருந்-தாலும் மற்றவரை மனம் திறந்து பாராட்டும் மரபு, தமிழக அரசியல்-வாதிகளிடம் என்றோ வழக்கொழிந்து-விட்டது. மற்றவரின் பாராட்டை எதிர்பார்த்தால், இங்கு அரசியல் நடத்த முடியாது. சொல்லப்போனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே கிடை-யாது; எதிரிக் கட்சிகள்தான் உண்டு!’’
(நன்றி: ஆனந்த விகடன் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, July 06, 2007
விஜயகாந்த் வளர்ச்சி குறிப், கவனி, மறுக், மறை முடியாத வளர்ச்சி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Posted by IdlyVadai at 7/06/2007 09:22:00 AM
Labels: அரசியல், பத்திரிக்கை விஷமம், பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment