பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 05, 2007

ராமதாஸ் ஓப்பன் டாக் சூப்பர் - இல.கணேசன

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் இல.கணேசன பேட்டி - ராமதாஸ் ஓப்பன் டாக், நிமிட்ஸ் கப்பல், விபசார பெண்கள், ஜனாதிபதி தேர்தல், ராமர் பாலம், கீ.வீரமணி புத்தகம் ஜெயை விமர்சிக்க மாட்டோம் ... படிக்க கீழே...


அமெரிக்க போர் கப்பல் நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் வந்துள்ள அமெரிக்க வீரர்களின் நோக்கம் என்ன? 5, 6 நாட்கள் தங்கும் போது, இங்கு ஏதாவது பொருள்களை வாங்க வந்தார்கள் அல்லது இந்தியாவில் உள்ள புராதான சின்னங்களை காண்பதற்கு வந்தார்கள் என்றால் அது நமக்கு பெருமை.

ஆனால் அவர்கள் இங்கு வந்து பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்கிறார்கள். இவர்கள் யார் நம் நாட்டுக்கு வந்து சுத்தம் செய்ய? தேசத்திற்கு இது அவமானம். அவர்கள் சுத்தம் செய்வதை காமிராவில் படம் எடுத்து, இந்தியா அசுத்தமான நாடு, நாங்கள் போய் சுகாதாரத்தை சொல்லித் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். எந்த தேசபக்தனாலும் அவர்களுடைய இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது.இந்தியர் ஒருவர் அமெரிக்காவுக்கு செல்ல விசா கிடைப்பதே கடினமான காரியம். அப்படிக் கிடைத்தாலும் கூட பாதுகாப்பு காரணங்களை காட்டி ஏக கெடுபிடிகள் செய்கிறார்கள். நிமிட்ஸ் கப்பலில் வந்துள்ள அமெரிக்க வீரர்களுக்கு விசா உள்ளதா? `இமிகிரேஷன்' சான்றிதழ் உள்ளதா? யார் யார் வந்திருக்கிறார்கள் என்ற பெயர் விவரம் தெரியுமா? அதைக் கேட்க கூட மத்திய அரசுக்கு தைரியம் இல்லை. அமெரிக்க வீரர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்.

நம்முடைய பெருமையை குலைக்கும் வகையில் அவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட விபசார பெண்களை அண்டை மாநிலங்களில் இருந்து வரவழைத்து இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இங்கு வந்து குப்பைகளை சுத்தம் செய்து விட்டு, இங்குள்ளவர்களுக்கு எய்ட்ஸ் நோயை தர வந்திருக்கிறார்கள்.அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பட்டீலை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டார். அவருடைய ஆதரவு சுயேச்சை வேட்பாளராக நிற்கும் செகாவத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மதுரை மேற்கு தொகுதியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியதற்கு தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ.க. பாராட்டு தெரிவிக்கிறது.


ஜனாதிபதி தேர்தல் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்துகள் சிறப்பாக உள்ளன. பூரண மதுவிலக்கு, பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு போன்ற அவருடைய செயல்பாடுகள் பாரதீய ஜனதா கருத்துடன் ஒத்து போகிறது.

ஆளும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் பகுத்தறிவோடு, விவேகத்தோடு டாக்டர் ராமதாஸ் சுதந்திரமாக பேசுவது பாராட்டத்தக்கது. கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சனம் செய்வதா? என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்புகிறார். பா.ஜ.க. கூட்டணியில் மந்திரி சபையில் இருந்த போது எங்களை விமர்சிக்கவில்லையா? மத்திய அரசை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் கருணாநிதி.சென்னையை அடுத்த நன்மங்கலம் வனப்பகுதியில் ஆயிரம் மரங்களை வெட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொன்மையான வரலாற்று சின்னமான ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியும். இதை வலியுறுத்தும் வகையில் 22-ந் தேதி மதுரையில் கட்சி சார்பற்ற முறையில் `ராமேஷ்வரம் ராமர் பாலம் பாதுகாப்பு அமைப்பு' சார்பில் பேரணி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜனதா அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் அழைக்கப்பட்டுள்ளார்.கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 125 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 2-வது செமஸ்டரில் கட்டாய பாடமாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய `வாழ்வியல் சிந்தனைகள்' என்ற புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். கூட்டுக்குடும்ப முறை தேவையற்றது, பாரம்பரிய பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும், பாலியல் கல்வி, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்பது போன்ற கருத்துகள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தின் கடைசியில் தி.க.வில் சேருவதற்கு விண்ணப்பமும் வைக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை தரும் அந்த புத்தகம் மாணவர்களுக்கு பாடப்புத்தமாக வைக்க தகுதியற்றது. எனவே அந்த புத்தகத்தை உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

"அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர்சிக்க மாட்டேன் " என்று கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கேட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்.

ஆளும் கட்சியாக இருந்தால் விமர்சிக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருப்பவர்களை விமர்சிப்பது மரபு அல்ல. அதுவும் இப்போது எங்களுக்கு அதிமுக ஆதரவு தேவைப்படுகிறது என்றார் அவர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கமாட்டோம் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தற்போதைய சூழலில் ஷெகாவத்துக்கு ஜெயலலிதா ஆதரவு தேவைப்படுகிறது என்றும் கூறினார்.


சேலத்தில் 7-ந் தேதி பா.ஜ.க.வின் மாநிலக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் 100 பேருக்கு பேச்சாளர் பயிற்சி அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ராமர் பாலம், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றை அவர்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

0 Comments: