பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 04, 2007

பா.ம.க. வருமா? - ஜெ பேட்டி

ஜெ பேட்டி.

கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் நிலை என்ன?

பதில்:- நாங்கள் சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக காத்திருக்கிறோம். அவர் அமெரிக்காவில் இருந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார். அதன் பின்னர் எங்களது அணியின் முடிவை அறிவிப்போம்.

பாரதீய ஜனதா வேண்டுகோள்

கேள்வி:-பாரதீய ஜனதா உங்களது ஆதரவை கேட்டுள்ளதே?

பதில்:- டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி மிக தெளிவாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரையோ, தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரையோ ஆதரிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறேன்.

கேள்வி:- தி.மு.க.-பா.ம.க. இடையேயான மோதல் முற்றி வருகிறதே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாங்கள் எப்படி கருதுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்.

கேள்வி:- பா.ம.க. உங்கள் அணிக்கு வருமா, வந்தால் ஏற்பீர்களா?

பதில்:- இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. வருவாரா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? இடதுசாரிகள் உங்களை நோக்கி வந்தால் ஏற்பீர்களா?

பதில்:- அரசியலில் நிரந்தர கூட்டணி என்று எதுவும் இல்லை.


கேள்வி:- பிரதீபா பட்டீல் மீது தினசரி ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறதே?

பதில்:- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல பேர் ஜனாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரைப் பற்றியும் இத்தகைய இழிவான குற்றச்சாட்டுகள், அதுவும் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்ததில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவதால் ஜனாதிபதி பதவிக்கு இருக்கின்ற கண்ணியம், மாண்பு சீர்குலைக்கப்பட்டு வருகிறது. ஆகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதீபா பட்டீலை வாபஸ் பெற வேண்டும். அல்லது பிரதீபா பட்டீலே இந்த நாட்டின் நலனை கருதி அவரே இந்த போட்டியில் இருந்து விலக வேண்டும். இதுதான் அ.தி.மு.க.வின் கருத்து.


கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் தங்கள் சொத்துக்கள், குற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கு ஒரு புதிய விதிமுறை வகுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தேர்தல் கமிஷனிடம் கூறியுள்ளதே?

பதில்:- அது சரியானது தான். ஜனாதிபதி தேர்தலுக்கான விதிமுறைகளை வகுத்த முன்னோர்கள் இதுபோன்றதொரு பிரச்சினை ஏற்படும் என்று கருதி இருக்க மாட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஊழல், மோசடி புகார்களுக்கு ஆளான ஒருவர் அப்பதவியில் நிறுத்தப்பட்டுள்ளார். எனவே சொத்துக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சரியானது தான்.

கேள்வி:- அப்துல் கலாமை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டதாக உங்கள் அணி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே?

பதில்:- நாங்கள் அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்தோம். தேசிய முற்போக்கு கூட்டணி அப்துல் கலாம் போட்டியிட்டால் ஆதரிப்போம் என்றனர். அவர் போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பார். பிரதீபா பட்டீல் சோனியா காந்தி, கருணாநிதி போன்ற சில அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பிடித்த வேட்பாளர். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் பிரதீபா பட்டீலை பலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் மாறி வாக்களித்து அதன் மூலம் அப்துல் கலாம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படும் பிரதீபா பட்டீல் போட்டியிடுவதால் இன்று தேசம் தான் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது.

கேள்வி:- தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா இருசாராரும் தன்னை குறை சொல்வதாக கூறியிருக்கிறாரே?

பதில்:- அவரே தனது பதிலில் விளக்கமாக கூறியிருக்கிறாரே. நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ரவுடிகள், குண்டர்கள் முன்பு தேர்தல் ஆணையமே எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த திட்டங்கள், சில சட்டங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டதே?

பதில்:- இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆட்சியே அல்ல. எல்லா சட்டங்களும் மீறப்பட்டுள்ளன. வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டுள்ளன. இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது வெறும் ஏமாற்று வேலை.

0 Comments: