வழக்கம் போல் கலைஞர், ராமதாஸ் அறிக்கை. ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை இங்கே
நேற்றைய தினம் உயர் கல்வித்துறையைக் கண் டித்து ஆர்ப்பாட்டம் ஒன் றையும் நடத்தி, அதில் கலந்து கொண்டு பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ் தெரி வித்திருந்த கருத்துக்கள் எனது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை தொடர்பு கொண்டு நான் கேட்ட போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக வெளியிடாமல் திரித்தும், குறைத்தும் ஏடுகளில் வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்த கருத்துக் களைப் பற்றிய விளக் கத்தை அறிக்கையாக பத்திரிகை களுக்கு தரப் போவதாகவும் என்னிடம் தெரிவித்து இருந் தார்.
ஆனால் இன்று காலை பத்திரிகைகளில், நேற்று மாலை பத்திரிகைகளில் வந்த அதே செய்திகள் வந்தி ருப்பதோடு ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையிலும் முழுமையாக விவரங்கள் தெரிவிக்கப்படாததால்,தோழ மைக் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இந்த விளக் கத்தை வழங்கிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொதுவாக கழக அரசைப் பற்றியும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றியும் தொடர்ந்து அறிக்கை விடுவதும், அதற்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதும் தோழமைக் கட்சிகள் இடையே உள்ள நல்லுறவைக் கெடுப்பதாக அமைந்து விடுமோ என்ற எண்ணத்தைப் பரவலாக ஏற் படுத்தியுள்ளது.
சுயநிதிக் கல்லூரிகள் அதி கக் கட்டணம் வசூலிப்பது குறித்து கடந்த ஆட்சியில் 20 முறைக்கு மேல் போராட்டம் நடத்தியதாகவும், இந்தப் போராட்டம் 27-வது போராட்டம் என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக் கின்றார்.
கடந்த ஆட்சியானாலும், இந்த ஆட்சியானாலும் சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் வாங்குகின்றார்கள் என்றால், அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அந்த சுயநிதிக் கல்லூரிகள் அதிகக் கட்டணம் பெற்றதற்கான ஆதாரம் வேண்டுமல்லவா என்றுதான் அந்தத் துறையின் அமைச்சர் பொன்முடி திரும்பத் திரும்பக் கேட்கிறார்.
டாக்டர் அவர்களே, தானே இதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டு, இதற்கான ஆதாரத்தை தோழமைக் கட்சி என்ற முறையிலே பெற்றுத் தருவாரானால், அதற்கு சட்டப்படி மாநில அரசினால் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்ற உறுதியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஆதரவாக இந்த அரசு நடக்கவில்லை. அரசுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இடையே வழக்கே நடைபெற்று நேற்று தான் அதில் அரசுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தத் தீர்ப்பைப் பற்றி கோ.க.மணி இன்று வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.
இந்த அரசைப் பொறுத்த வரையில் மாணவர்கள் நலன்களைக் காப்பதில் யாருக்கும் சளைத்தது அல்ல. மாணவர்களின் நலன்களை விட சுயநிதிக் கல்லூரி உரிமையாளர்களின் சொந்த நலனைப் பற்றி இந்த அரசு என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது.
அதனால் தான் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே நுழைவுத் தேர்வினை ரத்து செய்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் மூன்று பல்கலைக்கழகங்களையும் நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கியிருக்கிறோம்.
டாக்டர் ராமதாஸ், அமைச்சர் பொன்முடி தவறே நடக்கவில்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். தவறே நடக்கவில்லை என்று அமைச்சர் எப்போதும் கூறவில்லை. நடப்பதற்கான ஆதாரத்தையும், புகாரையும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலுமென்று தான் அமைச்சர் பொன்முடி சொல்லி வருகிறார்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் கூறுகிறார். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் யக் கூடிய அதிகாரம் மத்திய அரசின் அமைச்சர் அன்புமணியின் பொறுப்பிலே உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தானே உள்ளது. அங்கீகாரத்தை அவர் ரத்து செய்ய வேண்டுமென்றாலும், அவரிடம் புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுக்க இயலும்.
``தோழமையுடன் இருக்கும் நாம், இந்த ஆட்சியிலும் போராட வேண்டுமாப'' என்று டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். இதைத் தான் நானும் கேட்கிறேன். ஜெய லலிதா ஆட்சியை விட உயர் கல்வித்துறை அமைச்சகம் மிகவும் மோசமாக உள்ளது என்று அறிக்கை விடுத்தால் அதையும் கேட்டுக் கொண்டு தோழமைக் கட்சி கூறுகிறது என்பதற்காக விளக்கம் சொல் லாமல் இருக்க முடியுமாப
இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சகம் என்ற ஒன்றை கிடையாது. ஆனால் அதை விட தற்போது மோசம் என்று ஒரு தோழமைக் கட்சியின் தலைவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வது தான் முறையா?
ஜுலை 1-ந் தேதி சென்னை யில் நடைபெற்ற மகளிர் பேரணி பற்றி நிருபர்களிடம் அவர் பேசும்போது கூட, டாக்டர் ராமதாஸ் அவர் களுக்கும் மற்றும் கூட்டணி தலைவர்களுக்கும் தரையில் மேடை அமைத்து அமர வைத்ததாகவும், அதற்கு அருகில் உயர்ந்த மேடையில் மற்றவர்கள் அமர்ந்திருந்தனர் என்றும் குறையாகச் சொல்லி யிருக்கிறார். உயர்ந்த மேடை என்று கூறுவது பிரதீபா பட்டிலும், நானும் அமர்ந்த இடத்தைத் தான் குறிப்பிடுகிறார்.
குடியரசு தலைவர் போன்ற பெரும் பொறுப்புக்கு வரக் கூடியவரை ஏராளமான வர்களுக்கு மத்தியிலே மேடை யிலே அமர வைக்கக் கூடாது என்பது பாது காப்புத் துறையின் கண்டிப்பான ஆணையாகும். பதவிக்கு வரும் முன்பே குடியரசு தலைவ ருக்கான பாதுகாப்பா என்று டாக்டர் கேட்டிருக்கிறார்.
அது எங்களிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. பா.ம.க.வும் அங்கம் வகிக்கும் மத்திய அரசிடம் கேட்க வேண் டிய கேள்வி.
மேலும் அனைத்துத் தோழமைக் கட்சிகளின் சார் பில் பேரணி நடைபெறும் என் றும், அதனை நானும் பிரதீபாவும் பார்வையிடு வோம் என்றும்தான் அறி விக்கப்பட்டிருந்தது. மற்றக் கட்சிகளின் தலைவர்கள் வந்தால் அமருவதற்காகவே மற்றொரு மேடையும் அருகி லேயே அமைக்கப்பட்டு, அந்த மேடையில் தான் கழகத்தின் பொதுச் செயலாளரும், என்னை விட வயதில் மூத்த வருமான பேராசிரியர், காங் கிரஸ், பா.ம.க., சி.பி.எம். சி.பி.ஐ., விடுதலை சிறுத்தை கள், முஸ்லிம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி, சமூக நீதி இயக்கம் ஆகிய கட்சி களின் தலைவர்கள் அத்தனை பேரும் அமர வைக்கப் பட்டிருந்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால், அந்தத் தலைவர் கள் அமர்ந்திருந்த புகைப் படத்தைப் பார்த்தாலே அங்கே எனது மனைவியும், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம், துரை முருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் அமரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதை காணலாம்.
பிரதீபா பட்டீல் பேரணியில் உரை யாற்றி சென்றவுடன், நான் அமர்ந்திருந்த இடத்திற்கே அனைத்து தோழமைக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அமரச் செய்தேன். எதிர் வெயில் (மாலை வெயில் ஐந்தரை மணி அளவில்) தன் மீது அடித்தது என்றும் டாக்டர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார். அதே எதிர் வெயில் என் மீதும், பிரதீபா அம்மையார் மீதும், மற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மீதும் அடித்துக் கொண்டுதான்
இருந்தது.மேலும் இந்தப் பேரணியே தேவையில்லாத ஒன்று என்றும் பா.ம.க. நிறுவனர் பேசியிருக் கிறார். தேவையில்லாத பேரணிக்கு வந்து விட்டு, அதைப் பற்றி இத்தனை குறைகளையும் கூறுவது என்பது மனதிற்கு வேதனை தரக்கூடிய ஒன்றல்லவா என்பதை டாக்டர் எண்ணிப் பார்க்க வேண்டும். தென்னக மகளிரே திரண்டு வந்தது போல நடைபெற்ற பேரணியை தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் மட்டுமே நடைபெற்ற பேரணி என்ப தைப்போல டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டிருப்பது, பேரணி யிலே கலந்து கொண்ட அத்தனை கட்சிகளைச் சேர்ந்த மகளிரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து இவ்வாறு பா.ம.க. நிறுவனர் ஆளுங் கட்சியின் மீது ஏதாவது குற்றச் சாட்டுகளைக் கூறுவதும், அமைச்சர்கள் மீதே குறிப்பிட்டு புகார்களைச் சொல்வதும், அதற்கு பதிலளிக்க மற்ற தோழமைக் கடசியினரும், கழகத்திலே உள்ள அமைச்சர் களும் என்னிடம் அனுமதி கேட்பதும், நான் அதற்கு அணை போட்டு வைப்பதும், ஒரு சில சந்தர்ப்பங்களில் எனக்குத் தெரியாமலே ஒருசிலர் விளக்கங்களை அளிப்பது என்பதும் ஒரு நல்ல நீடித்து நிலைத்து இருக்க வேண்டிய தோழமைக்கு உகந்த செயலாக இருக்க முடி யாது.
டாக்டர் அவர்களுக்கு இந்த அரசின் செயல்முறைகளில் ஏதாவது குறை இருக்குமே யானால் என்னிடம் நேரிலோ தொலைபேசியிலோ அவற்றை விளக்கிடலாம். அதை விடுத்து நேரிடையாக பத்திரிகைகளுக் குச்சென்று அறிக்கை விடுவ தும், அதற்குப்பதில் அளிப்பதும் இரண்டுமே விரும்பத்தக்க தல்ல. ஏனென்றால், இரண்டு கட்சிகளைச் சேர்ந்த கீழ் மட்டத்தோழர்களிடம் இத்தகைய அறிக்கைகளால் அதிருப்தியும் வெறுப்பும் சில நேரங்களில் பகையுணர்ச்சியும் தோன்றிவிடுமேயானால் பின்னர் இரு தரப்பினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பது சிரமமான செயலாக ஆகி விடும். இனியாவது இதைத் தவிர்ப்பது நல்லது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 03, 2007
ராமதாஸுக்கு கலைஞர் பதில்
Posted by IdlyVadai at 7/03/2007 08:44:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment