பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 31, 2007

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

* நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. சஞ்சய் தத்துக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையொட்டி தடா கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சஞ்சய் தத்தின் ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

* மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று ஆஜராக வந்த நடிகர் சஞ்சய்தத் மகளுடன் கண்ணீர் விட்டபடி போனில் பேசினார். தண்டணை அறிவிக்கப்படும் முன்பு சகோதரி நம்ரதாவுடன் அழுதபடி வழியனுப்பி வைத்தாஞூ. தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் சஞ்சய்த்த் நீதிபதியிடம் அனுமதி கேட்டு மகளிடம் போனில் அழைத்து பேசினார்.

* குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய மும்பை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என சஞ்சய்தத் வக்கீல் தெரிவித்துள்ளார்.

* உடனடியாக ஜெயிலுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் சிறிது அவகாசம் தரும்படியும், பின்னர் தான் ஆஜராகுவதாகவும் சஞ்சய்தத் தரப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். ஏற்கனவே சஞ்சய்தத் 16 மாதம் சிறையில் இருந்துள்ளார். இந்த நாட்கள் 6 ஆண்டில் கழிக்கப்படும்.

* இரு கைகளையும் கும்பிட்டபடி நீதிபதியின் பெஞ்ச் அருகே சென்றார். பின்னர் நான் 14 ஆண்டுகளுக்கு முன்பு தவறு செய்து விட்டேன் எனக்கு சிறைக்கு செல்ல கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என கெஞ்சியபடி கேட்டார். எல்லோருமே தவறு செய்கிறார்கள்.சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றார் நீதிபதி கோடே.

* சஞ்சய்தத் தரப்பு வக்கீல்கள் அவகாசம் கேட்டு வாதாடினர். இது தொடர்பாக மதியத்திற்கு மேல் உத்தரவு பிறப்பிக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார். அது வரை போலீசார் என்னை சுற்றி நிற்க வேண்டாம் சற்று தள்ளி இருக்க சொல்லுங்கள் என சஞ்சய்தத் நீதிபதியிடம் கேட்டார். அதற்கும் நீதிபதி ஒத்துக்கொண்டார். இதனையடுத்து சஞ்சய்தத் நீதிபதிக்கு கைகூப்பியபடி நன்றி தெரிவித்து கொண்டார். தொடர்ந்து 3 மணியளவில் அளித்த உத்தரவில் சஞ்சய்தத்தின் கோரிக்கையை நிராகரித்தார். இதனைையடுத்து போலீசார் ஜெயிலுக்கு அழைத்து செல்ல தயாராயினர்.

வழக்கம் போல் எல்லா டிவியிலும் இது தான் நியூஸ்.
( படம், செய்தி: தினமலர் )

6 Comments:

Anonymous said...

He dint take part in the conspiracy, but he knew about it to certain extent. Though it could have been a forgotten misery, the gap it created along with Babri Masjid demolition is still bleeding. There is a very good and intelligent book, 'Black Friday' about this whole conspiracy written by one Mr.S Hussein Zaidi,who was a reporter for MidDay daily. Anurag Kashyap was inspired by the narration and went on to film it in the very name. This movie and the book gives a very good insight about 1993 blasts.

[Those all who were mentioned as the conspirators in this book are getting convicted...]

-- Nokia Fan.

Anonymous said...

நீதிபதியே தீர்ப்பளித்துவிட்டார் சஞ்சய் தத் செய்த குற்றம் என்ன - அதற்கு தக்க தண்டணை என்ன என்று..

பம்பாய் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தண்டணை கிடைத்துவிட்டது - குண்டு வெடிப்பிற்கு காரணமான பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கும் - அதை தொடர்ந்த 'பம்பாய் கலவர'த்திற்கும் காரனமானவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும்?

Nokia N Series Owner

மர்ம வீரன் said...

நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 வருஷம் தீட்டினது சரியா தப்பான்னு ஓட்டு போட சொல்லி இருக்கீங்க. 6 வருஷம் போதாது, 7 வருஷம் கொடுத்து இருக்கணும்னு சொல்லணும்னா 'சரி' க்ளிக்கணுமா இல்ல 'தப்பு' க்ளிக்கணுமா?

Anonymous said...

"நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 வருஷம் தீட்டினது சரியா தப்பான்னு ஓட்டு போட சொல்லி இருக்கீங்க. 6 வருஷம் போதாது, 7 வருஷம் கொடுத்து இருக்கணும்னு சொல்லணும்னா 'சரி' க்ளிக்கணுமா இல்ல 'தப்பு' க்ளிக்கணுமா? "

Awesome reply

R.Subramanian@R.S.Mani said...

'vinai vithaiththavan vinai aruppan - VITHAI VITHAITHAVAN VITHAI ARUPPAN - hARVEST IS ACCORDING TO THE SEEDS"
sUPPAMANI

R.Subramanian@R.S.Mani said...

'VINAI VITHAITHTHAVAN VINAI ARUPPAN - VITHAI VITHAITHTHAVAN VITHAI ARUPPAN - Haarvest is according to the used seed"- Suppamani