பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 30, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 30-07-07

இந்த வாரம் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்.

அன்புள்ள இட்லிவடை,

எப்படி இருக்க என்று கேட்க போவதில்லை. தவலை இட்லி பதிவை பார்த்தாலே தெரியுது ரொம்ப வெட்டியா இருக்கேன்னு. கேட்ட பிசாத்து கேள்விகளுக்கு மாமிஅக்கா பதிலையெல்லாம் படிச்சியா ? எல்லா கேள்விகளையும் தாளிச்சு எடுத்துட்டாங்க. 'தாளிக்கும் ஓசை' சும்மா அதிருதில்லே. நல்ல வேளை, சாராயத்துக்கு சமையல் குறிப்பு கேட்காமல் விட்டையே அதுவரை நல்லது.

சரக்கு என்பதும் தான் ஞாபகம் வருது, போனவாரம் எந்த நாடு நிறைய சரக்கு அடிக்குதுன்னு ஒரு புள்ளிவிவரம் படிச்சேன். 184 நாடுகளில் இந்தியா 150வது இடம். ( காந்தி பிறந்த மண் என்று சும்மாவா சொன்னார்கள் :-). (முதல் இடத்தில் உகாண்டா - 19லிட்டர் ( per capita per annum ), ரஷ்யா - 10லி, இந்தியா ? 0.86லி. இந்த கணக்கு எல்லாம் சுத்தமான சரக்கின் புள்ளிவிவரம். அப்ப நாட்டு சரக்கு ?

சரி இந்தியாவில் எந்த மாநிலம் நிறைய குடிக்கிறார்கள் தெரியுமா ? பஞ்சாப், ஹரியானா. பிறகு சிக்கிம், கர்நாடகா. தமிழ்நாட்டுக்கு 11வது இடம். காவிரி தண்ணிக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை. ( அதே போல இந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை )

வருங்கால முதல்வர் ஸ்டாலின் எப்படி முதிர்ச்சியா பேசியுள்ளார் படித்தையா ? "குழந்தை இல்லாத ஜெயலலிதாவுக்குச் சொத்து எதற்கு?" என்று. இது தான் 'லூஸ்' டாக். So, புள்ள குட்டியிருந்தா முறைகேடாக சொத்து சேர்க்கலாம் என்கிறாரா ?

நேற்று இந்த தலைப்பு செய்திகள் எந்த டிவி சேனல் என்று கண்டுபிடிக்கிறவர்களுக்கு ஒரு சபாஷ் ( நான் வேறு என்ன கொடுக்க முடியும், என் கிட்ட அருவாள் தான் இருக்கு )

"நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு எதிரான டைட்டானியம் திட்டத்தை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்று ஜெயலலிதா ஆங்கிலத்தில் கூறியதை கீழே தமிழில் காண்பித்தார்கள்.

"ஆந்திராவில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்டுகள் போராடுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் கிராமத்தில் பலர் கொல்லப்பட்டதற்கு அங்குள்ள முதல்-அமைச்சரை பதவி விலக சொன்னார்களா?...... 50 கட்சிகள் இணைந்து வந்தாலும் என்னை அசைக்க முடியாது" என்று விஜயகாந்த் அவேசமாக பேசியதை காண்பித்தார்கள்.

இது இரண்டும் செய்தியும் சன் டிவி 8 மணி நியூஸில வந்தது. சன் டிவிக்கு இந்த மாதிரி நிலமை வரும் என்று யாராவது நினைதார்களா ? இதற்கு நிலமைக்கு பேர்தான் 'நடு' நிலை.

கலைஞரிடம் "மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?" என்று கேட்டதற்கு "நான் யாருடைய அமைச்சர் பதவியையும் கெடுக்க மாட்டேன்" என்று பதில் சொன்னார். என்ன சொல்ல வருகிறார் கலைஞர் ?

ஜெயிடம் நேற்று "டாக்டர் ராமதாஸ் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று நீங்கள் கூறிய பதில் விஜயகாந்துக்கும் பொருந்துமா?" என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னர் தெரியுமா ? "அந்த பதில் இதற்கு பொருந்தாது. இந்த கேள்விக்கு தற்போது பதில் சொல்ல விரும்பவில்லை" அதாவது சிங்கதை இப்ப சீண்ட விரும்பவில்லை என்று.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிப் போட்டி முடிந்தும் கூட ஏனோ நீட்டி முழக்கி கிருஷ்ணமுர்த்தியை பீச்சில் அலையவிடுவதும்... பாட விடுவதும் .... வேர்கடலையை சாப்பிடும் போது கிடைக்கும் கடைசி சொத்தை :-)

ஜூவியில் கனிமொழி கருணாநிதி பற்றி வந்த இரண்டு நகைச்சுவை படங்கள் இங்கே'கிரீடம்' படத்தின் முடிவு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வந்திருக்கு தெரியுமா? (அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்' அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது).

தமிழக மக்களுக்கு முடிவில் 'சுபம்' என்று போட்டால் தான் படம் முடிந்தவுடன் சீட்டை விட்டு எழுந்திருப்பார்கள். இந்த அழகில் நாம் ஆஸ்கர் பற்றி பேசுகிறோம். இதே போல முன்பு புன்னகை மன்னன் ( வேறு ஏதாவது படம் இருக்கா ) படத்தின் முடிவை மாற்றினார்கள். அப்ப நான் பார்த்த தியேட்டரில் குழம்பி போய் இரண்டு கிளைமாக்ஸையும் காண்பித்தார்கள்.

காமராஜர் பிரந்த நாள் விழாவில்(முன்று முட்டை திட்டம்) மு.க.அழகிரி கலந்துகொண்டார் என்பது பழைய நியூஸ். இந்த மூன்று முட்டை திட்டதுக்கு மு.க.முட்டை என்று சிலர் சொல்லி சிரிப்பதாக பேச்சு.

"தமிழகத்தில் ஆட்சி நடத்துவர்கள், எதை எதையோ இலவசமாக கொடுத்து வருகின்றனர். ஏமாந்தால், "அல்வா' கூட இலவசமாக கொடுப்பார்கள்" என்கிறார் வேற யார் ( முட்டையை இலவசமாக வாங்கிய) மத்திய அமைச்சர் இளங்கோவன் தான்.

எல்லாவற்றையும் விட போன வாரத்தின் மிக பெரிய ஜோக் - "தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது கூட தனக்குத் தெரியாது" என்று ஜெயலலிதா சொன்னது தான், ஒரு வாரமாகியும் சிரிப்பு அடங்கவில்லை.

8 Comments:

Boston Bala said...

---இது தான் 'லூஸ்' டாக். ---

Good catch :)

Anonymous said...

Two vetti replies.

"/இதே போல முன்பு புன்னகை மன்னன் ( வேறு ஏதாவது படம் இருக்கா ) படத்தின் முடிவை மாற்றினார்கள்./"

1. The climax shot in "Makkal En Pakkam" changed after release of the movie, In another movie also clicmax was re-shot that is acted by an actor by name "Prem" (some junk movie)

2. Since u r having a very much familiar, and having a very fresh memory of "புன்னகை மன்னன்" release, I reckon u shd be in 40's (or nearing 40).. .. Any reason, why not married so far ,, expecting something BIG....

சீமாச்சு.. said...

"/இதே போல முன்பு புன்னகை மன்னன் ( வேறு ஏதாவது படம் இருக்கா ) படத்தின் முடிவை மாற்றினார்கள்./"

சிவாஜி நடித்த வசந்த மாளிகை படத்துக்கும் இது போல் இரண்டு க்ளைமாக்ஸ் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நம் ஊரில் ரிலீஸான பிரதிகளில் சிவாஜி பிழைத்து வந்து வாணிஸ்ரீயுடன் டூயட் பாடுவது போல் நடித்திருப்பார்..

பாலக்காட்டில் வெளியான பிரதிகளில் சிவாஜி இறந்து விடுவதாகக் காண்பிப்பார்கள்..

இதற்காக என் வயது 60 பக்கம் என்பது உண்மையல்ல..

முப்பத்தியிரண்டுக்கு ரெண்டு மாசம் கம்மி.. :))

சீமாச்சு

Anonymous said...

To Seemachu,

Since , I.Vadai refered an event in which he was also involved at the time time of "புன்னகை மன்னன்" release, it has given a thought about his age. Thats all.
:)

Sunny said...

"போன வாரத்தின் மிக பெரிய ஜோக் - 'தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது கூட தனக்குத் தெரியாது' என்று ஜெயலலிதா சொன்னது தான்" this is really best joke which I never heard in my life before.

Anonymous said...

NOT related to this article.

Can anybody enlighten, who is this Judge "Ashok Kumar"? what is going on? who favors who? Usually "The Hindu" will provide news opinions.
If a news is not favorable to them, then they will publish news as it is. This is a news without any head and tail..

BTW,

OR I might have not followed any news articles related to this person "Ashok Kumar".

Any have, if somebody know, pl. share.

URL :

http://www.thehindu.com/2007/07/31/stories/2007073160931500.htm&news=Justice%20Ashok%20Kumarâ?Ts%20appointment%20challenged&pubDate=Tue%2C+31+Jul+2007&keyword=hindu_home

advance tks..

இலவசக்கொத்தனார் said...

//"போன வாரத்தின் மிக பெரிய ஜோக் - 'தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது கூட தனக்குத் தெரியாது' என்று ஜெயலலிதா சொன்னது தான்"//

அவங்க என்ன முடிவு எடுத்தா என்னா? நான் சொல்லறதுதான் நடக்கப் போகுது. அப்படி இருக்கும் பொழுது எதுக்கு அவங்க முடிவு எல்லாம் பத்தி நான் தெரிஞ்சுக்கணும்? அப்படின்னு சொல்ல வந்தாங்களோ என்னவோ...

Anonymous said...

TASMAC serves millions of rounds சரக்கு to unhappy Tamils and makes them happy. So open as many TASMAC bars as possible and remove the temple idols and place Periyar statues inside.

Also don't forget to mention Kalaignar words on the walls that don't collapse. Sell some more packet Kauvery water for Rs 3.00 and provide rice for Rs.2.00.

I love Tamil, Tamil Nadu, Jai Hind.

சரக்கு எப்படி?