பாடிகாட் முனீஸ்வரன் இந்த முறை கடிதம் எழுதாமல் கூகிள் டாக்கில் வந்தார். அவரிடம் செய்த உரையாடலின் தொகுப்பு.
இட்லி: வணக்கம் பாடிகாட் எப்படி இருக்கீங்க ?
பாடிகாட் : வணக்கம், நலம். நீ எப்படி இருக்க ?
இட்லி: ஏதோ இருக்கேன். ஒரே மண்ட குடைச்சலா . எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு உன்னிடம் கேட்களாமா ? ?
பாடிகாட்: ஒவ்வொன்னா கேளு
இட்லி: பார்ப்பனீயம் என்றால் என்ன ?
பாடிகாட்: தான் தான் உயர்ந்தவன், தன்னைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எல்லோரும் உயர்வானவர்கள், மற்றவர்கள் எவரும் தாழ்ந்தவர்கள் தான் என்ற எண்ணம்.
இட்லி: உதாரணம் சொல்லு புரியலை
பாடிகாட்: இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் குடும்பம் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். மரம் வெட்டுவதற்கும், பஸ்ஸின் மீது கல் எறிவதற்கும், தீ வைப்பதற்கும் தான் லாயக்கு என்ற நினைப்பு.
இட்லி: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?
பாடிகாட்: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கனிமொழி இப்போது தான் திமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும் சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார் ( தினகரன் சம்பவத்திற்கு பிறகு சட்டசபையில் முதல்வர் கலைஞர் பேச்சு, 11.5.07 )
"கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால் தான் திமுக வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கபாடுள்ளது" (அதே முதல்வர் கலைஞர் பேச்சு 27.5.07 )
இப்ப புரியுதா ?
இட்லி: புரிஞ்ச மாதிரி இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. சரி, எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு மட்டும் தான் இருக்கு என்று நினைப்பார்களா ?
பாடிகாட்: ஆமாம். எதையும் தீர்மானம் செய்யும் அறிவு தனக்கே உண்டு என்ற எண்ணம். நான் எப்படி மாறினாலும், என்ன செய்தாலும், மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னிடம் அன்றைய தேதியில் ஆசி பெற்றவர்கள் மட்டுமே பயன் பெற வேண்டும், தன்னிடம் சாபம் பெற்றவர்கள் நாசமாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இவை எல்லாம் பார்ப்பனீயத்தின் குணங்கள் தான்.
இட்லி: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?
பாடிகாட்: ஒரு முறை பி.ஜே.பியை ஆதரிப்பது, அடுத்த முறை சோனியாவை ஆதரிப்பது, ஒரு முறை இந்திரா காந்தியை எதிர்ப்பது, அடுத்தமுறை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது.. இப்படி மாறும் போது, அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது; ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவது.
இட்லி: இதைவிட்டால் வேறு ஏதாவது குணங்கள் ?
பாடிகாட்: தங்களை விட்டால் தலைமைக்கு யாரும் இல்லை என்ற முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்
இட்லி: புரியலையே
பாடிகாட்: கலைஞரையும், அம்மாவையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை சிறுதுரும்பாக நினைப்பது. தன் ஜாதி மட்டும் இல்லாமல், ஒடுக்கபட்டவர்களாக இருந்தாலும் அதன் தலைவனாக இருப்பார்கள். வலைப்பதிவு உலகத்தில் இது பிரபலம். உனக்கு தெரியாதா ?
இட்லி: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?
பாடிகாட்: வேதம் போன்ற தத்துவங்களைப் படிப்பார்கள். பூணூல் போன்ற பிரத்யேகமான குறியீடுகளை அணிந்துக்கொள்வார்கள். சிலர், அண்ணாவின் பள்ளியிலும், பெரியாரின் பாசறையிலும் படித்தபின், மஞ்சள் துண்டை மறக்காமல் அணிவார்கள். அது போல
இட்லி: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் ?
பாடிகாட்: கீழே இருப்பவர்களிடம்(அதாவது அப்படி, தான் நினைப்பவர்ளிடம்) பேசும்போது மரியாதை குறைவாக வாடா போடா என்று ஏகவசனத்தில் இருக்கும். "நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா? நீ தாண்டா கொலைகாரன் போடா..." கேட்டால் "They expect respect!" என்று எகத்தாளமாக பதில் வரலாம்.
இட்லி: சரி, கடைசியாக பர்ப்பனச் சூழ்ச்சி என்றால் என்ன ?
பாடிகாட்: நாங்கள் பார்பானை எதிக்கவில்லை, பார்பனீயத்தைதான் எதிரிக்கிறோம் என்று ஜல்லியடிப்பது. இந்திரா காந்தி, பி.ஜே.பி அரசை எதிர்பார்கள், ஆனால் மந்திரி பதவிக்கு இவர்களை ஆதரிப்பார்கள்.
இட்லி: பார்ப்பனீய வேதத்தின் மூலக் கருத்து?
பாடிகாட்: உடல் அழியும்; ஆனால் ஆன்மாவிற்கு அழிவு கிடையாது என்று வேதத்தின் சாறைப் பிழிவார்கள்.
இட்லி: சுத்தமா புரியலை
பாடிகாட்: பதவி என்பது ஆத்மா, கொள்கை என்பது உடல். கொள்கை அழிந்தாலும், பதவி அழியாது. வேறு கொள்கையில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?
இட்லி: எனக்கு அவசரமா டாய்லெட் போகனும். பை.
பாடிகாட்: பை பை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 23, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-07-07
Posted by IdlyVadai at 7/23/2007 03:30:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
அருமையான கற்பனை....போலி-கோழின்னு 2-3 பதர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கு காலையிலிருந்து....அதுகளின் தலைவருக்கு நீங்க வெச்ச ஆப்பு....அட, அட...
U wanted to ask more quentions B.Muni, where as u ran to rest room for getting answer to a single question. What will happen if all qtns asked and answered?!!
:-))
Keep Going.
-- Nokia Fan.
சும்மா நச்சுனு இருக்கு!
அண்ணா அசத்திட்டேல் போங்கோ.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
கலக்கிட்டீங்க. சோ ராமசாமியே அசந்து போற மாதிரி இருக்கு.
oppose kula kalvi for others, but keep giving minister posts for their kin.
நம்ம முனிஸ் ஜி.டாக் ஐ.டி கிடைக்குமா..அவர்க்கிட்டே கொஞ்சம் மொக்கை போடனும்
wow this is also good Idea.. மொத்ததில் உங்க ப்திவு கூல்ல்ல்ல்ல்ல்
பாடிகாட் முனீஸ் & இட்லி,
சிம்பிளான விஷயமான அரசியலில் தூய்மை-நேர்மை-வாக்குசுத்தம் Vs மஞ்சள்துண்டுக்கான ஒரே ஒரிஜினல் காரணம் என்ன என்பதை அடுத்த எபிஸோடில் விளக்கவும்.
கருணாநிதியால் இதுவரை மஞ்சள் துண்டுக்காக துண்டுதுண்டாகச் சொல்லப்பட்ட 108 காரணங்களால் கிர்ர்ரடித்துப்போன மக்கள்ஸுக்கு பாடிகாட் முனீஸின் விளக்கம் உதவிகரமாக இருக்கும்.
கவிஞர் என்றால் அப்ரண்டீஸ் அரசியல்வா(ந்)தி என்பது கனிமொழிக்கு மட்டுமே = குலக்கல்வி
ஆனால் குலக்கல்வியை எதிர்க்கவும் செய்வது அரசியல் திரா"விட"ப் பெத்தடின் பகுத்தறிவு
பார்ப்பனீயம், ராஜதந்திரம் எனப் பேசுவது, முழங்குவது என்பதெல்லாம் கொஞ்சம் சிந்தனை செய்யமுடிந்தவர்களை மழுங்கடிக்க மேற்கொள்ளும் முயற்சி.
Where is the question of parpaneeyam coming in this.
This hypocracy is known for ages.Right from the time three measure was not given after promising during elections in 1967, People have known them for this double talk.This was a malicious spread talk to sideline one set of people who weilded power then as clerks and accountants and edupudies.
You can use some other word for it. May be Dravideeyam or self respect or pakuttharivu
செம்ம போஸ்டு தலீவரே! அக்காங்!!
Post a Comment