மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாறு ஜெயலலிதாவுக்கு, அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. இச்சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் மம்தா பேட்டியளித்தார். மேற்கு வங்கத்தில் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது. மாநிலத்தில் நடந்த நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பிரமாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் சார்பில் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு வருகை புரியுமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினர்.
மேலும், ஜெயலலிதாவும் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கான தன் ஆதரவு எப்போதும் உள்ளதாக தெரிவித்தார். இச்சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்துக் கலந்தாலோசிக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் குறித்தான அவரவர் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வு ஜனாதிபதி அப்துல் கலாம் தான். எதிர்பாராதவிதமாக அவர் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார் என்று கூறினார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, July 08, 2007
ஜெயலலிதா மம்தா பானர்ஜி சந்திப்பு
Posted by IdlyVadai at 7/08/2007 06:54:00 PM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment