Questions for IdlyVadai என்று பாஸ்டன் பாலா சில கேள்விகளை கேட்டிருந்தார். சுவாரசியமான கேள்விகள் கேட்ட பாஸ்டன் பாலாவிற்கு நன்றி.
பதில்கள் கீழே....
1. யார் நீங்க? 'நீதானா அந்தக் கழுதை' என்று மோகன்தாஸ் முதல் முட்டம் சின்னப்பதாஸ் வரை மடல் விடு தூதுகிறார்கள். சொல்லிடுங்க.
முதல் கேள்வியே இந்த மாதிரி கேட்டு வேஸ்ட் செய்யலாமா ?. எனக்கு நேற்று பாபா கனவில் வந்து அருள்வாக்கு சொன்னார், நான் கிருபா ஷங்கர் இல்லை என்று!
2. சென்சேஷனல் செய்தி எங்கேயிருந்து பிடிக்கறீங்க? 'காசிமேடு ஆதி'யாக ஒரு ரூபாய் சொன்னீங்கன்னா, நாங்களும் முந்தித் தந்து கூகிள் ஆட் சில்லறையில் 'சிவாஜி' கல்லாப்பெட்டி நிரப்புவோம்.
"Do you have any Sense?" என்று மூளை இல்லாதவர்களை பார்த்து கேட்கும் கேள்வி.
நம்முடைய கைக்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறது. அதே போல் கண்களுக்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறது. முன்னது ஓட்டு போடும் போது வேலை செய்யாது, பின்னது செய்திதாள் படிக்கும் போது வேலை செய்யாது. வேண்டாத செய்திகள் தான் நம் கண்ணில் படுகிறது. சென்ஸ் இல்லாத செய்தி சென்சேஷனல் செய்தியாகிவிடுகிறது!
3. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலை என்று ஏதாவது உண்டா? ஜர்னலிஸ்டாக இல்லை என்றால், முழுநேர செய்தியாளராக ஆகும் எண்ணம் உண்டா?
முழு நேர செய்தியாளராக ஆகும் எண்ணம் நிச்சயம் கிடையாது. பயப்படாதீர்கள். அதற்கு எனக்கு தகுதியும் இல்லை.
4. உங்களை இதுவரை எவ்வளவு பேர் கண்டுபிடுச்சிருக்காங்க? அதில் எம்புட்டு கரெக்டு?
இதுவரை என்னை ஒருவர் கையும் களவுமாக என்னை கண்டு பிடித்துள்ளார். ஒரு முறை தூக்க கலக்கத்தில் என் பெயருடன் ஒரு பதிவு எழுதிவிட்டேன். நான்கு நிமிஷத்தில் எனக்கு ஒரு போன் வந்தது "என்ன சார் இப்படி செஞ்சிட்டீங்க. சீக்கிரம் யாராவது பார்க்கும் முன் திருத்துங்கள்" என்றார் அதலட்டலாக. பிறகு அந்த நபருக்கு நன்றி மடல் ஒன்று அனுப்பினேன். "நீங்க யார் என்று எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள்" என்று பதில் எழுதியிருந்தார்.
5. நீங்க அரசியலுக்கு வருவீங்களா? வந்துட்டீங்களா?
தமிழ்வலைப்பதிவு வைத்திருப்பவரிடம் ஒரு redundant கேள்வி.!
6. ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினார் (அப்படியா?). சுஜாதா நிறுத்த வேண்டும் என்கிறார்கள் (யாரு!?). நீங்கள் வலைப்பதிவை நிறுத்திவிட வேண்டுமா?
இது கேள்வியா இல்லை, வேண்டுகோளா ?
7. டைம் மேனேஜ்மெண்ட் எப்படி செய்யறீங்க? கணவன், குழந்தைக்கெல்லாம் அவ்வப்போது ஹலோ சொல்வதுண்டா?
young-age-ment ஆகாததால் டைம் மேனேஜ்மெண்ட் செய்ய முடிகிறது. ( என்னுடைய பதிவுகளை பாத்துவிட்டு என்னை பெண் என்று உயர்த்தியதற்கு நன்றி )
8. காபி/பேஸ்ட் போரடிக்கவில்லையா? சற்றுமுன், மிளகாய், தமிழ் நியுஸ் என்று கிளம்புகிறவர்களை போட்டியாக கருதுகிறீர்களா? வளர்ப்பு மகவுகளாக பார்த்து உச்சி மோந்து மகிழ்வுறுகிறீர்களா?
காலை பேஸ்டிக்கு பின் காப்பி, பிறகு காப்பிக்கு பின் பேஸ்ட். முன்னது காலைக்கடன், பின்னது என் "என் கடன் பணி செய்து கிடப்பதே".
செய்தி வாசிப்புக்கும், செய்தி வழங்குவதற்கும் உள்ள வித்தியாசம் தான் (இட்லிவடையில் செய்திகளுடன் ஒரு பன்ச்
இருக்கும்/கிடைக்கும் ). மிளகாய் எல்லாம் உச்சி முகர்ந்தால் தும்மல் தான் வரும்.
9. ஜனாதிபதியாக வர கலாம் மறுத்துவிட்டார். உங்க சாய்ஸ் யாரு? எவர் வந்தால் இட்லி-வடை சூடு பறக்கும்?
என் சாய்ஸ் லாலு. நான் மட்டும் இல்லை, எல்லா ஊடகங்களுக்கும் ஜாலி தான்.
10. 'எனக்கு அந்த முக்கியஸ்தரை தெரியும்... இவருடன் நேற்று டீ சாப்பிட்டேன்' என்பதெல்லாம் 100% கப்ஸாவா? கனவா? சொப்பன ஆருடங்களா?
எனக்கு சிலரை தெரியும், ஆனால் அவர்களுக்கு நான் தான் அவன் என்று தெரியாது. உங்களை கூட தெரியும், இதையும் கனவு என்பீர்களா ?
11. திரட்டியை விட்டு விலகுவது பயந்து முக்காடு போடுவதற்கு சமானம் அல்லவா? அதற்கு எழுதாமலே ஒதுங்கலாமே? ஏன் தமிழ்மணம் கருவிப்பட்டையை கழற்றினீர்கள்?
முகமூடிக்கு முக்காடு அவசியம். ஒரு நாள் திரட்டிகள் வேலை செய்யவில்லை என்றால் என் வலைப்பதிவை எவ்வளவு பேர் படிப்பார்கள் என்று யோசித்து பார்த்தேன் ? திரட்டியில்லாமல் நான் ஒரு handicap என்பது புரிந்தது, விலகினேன். விலகியதில் வேறு சில நன்மைகளும் இருக்கிறது. கருவிப்பட்டை என்ன கருத்தடை ஆபரேஷனா இவ்வளவு ஃபீல் பண்ணுறீங்க!.
12. முன்னாடியெல்லாம் துக்ளக் கார்ட்டூன்கள் ரெகுலராக வருமே? இப்பொழுது ஏன் நின்று போச்சு? பின்னூட்ட பிரண்டிங் மனப்பிராந்தியா?
துக்ளக் கார்ட்டூன் போடுவதற்கு வேறு ஒருவர் இருக்கிறார். பின்னூட்ட மனப்பிராந்தியில் பாதிக்கபட்டவர்கள் காளிமுத்துவிடம் செல்லவும் ( துக்ளக் கடைசி பக்கம் விளம்பரத்துடன் விலாசம் இருக்கும் ).
13. விசயகாந்த்துக்கும் இராமதாசுக்கும் ஆறு ஒற்றுமைகள் சொல்லுங்க.
1. சண்டை காட்சிகளின் போது அங்கேயும் அங்கேயும் குதிப்பார், தேர்தல் நேரத்தின் போது அங்கேயும் இங்கேயும் குதிப்பார்.
2. கலைஞர் - முன்னாள் நண்பர், இன்னாள் எதிரி.
3. ஒருவருக்கு 'மன்னிப்பு' தமிழில் பிடிக்காத வார்த்தை. மற்றவர் தமிழில் பேசலை என்றால் மன்னிக்க மாட்டார்.
4. குடிதாங்கி, ஒருவர் தெலுங்கு மற்றொருவர் தமிழ்
5. ஒருவர் புள்ளி(விவரத்தில்) ராஜா, இன்னொருவர் புலி(விவரத்தில்) ராஜா
6. விருதாச்சலம் - கோட்டை விட்டவர், கோட்டை கட்டியவர்.
14. அட்டன்பரோ :: காந்தி; சத்யராஜ் :: பெரியார்; மோகன்லால் :: எம்ஜியார்; (நிரப்புக)
அ) ரஜினி :: - ராகவேந்திரர்
ஆ) விஜய் :: - ரஜினி
15. இட்லி-வடைக்கு நிகர் இ-வ.தான் என்றாலும். அமிதாப் இல்லாத அசோகாவுக்கு அஜீத் தேவலாம் என்பது போல் இ-வ அல்லாத பதிவுலகில் யாரை இட்டு நிரப்ப முடியும்:
அ) யோசிப்பவர் / ஆ) உண்மைத் தமிழன் / இ) காஞ்சி ஃபிலிம்ஸ் / ஈ) பாலச்சந்தர் கணேசன்?
எல்லோரும் சேர்ந்து கூட்டு பதிவு ஆரம்பிக்க வேண்டும்.
16. 1007-இல் எட்டாவது சொந்தமாக எழுதியிருப்பீங்க. (எழுதியிருக்கீங்களா!?) அதில் பிடித்த முத்து?
இந்த பதிவு தான்.
17. கீழ்க்கண்ட சன் டிவி தொடர்களில் ஒன்றை உங்கள் பதிவோடு ஒப்பிடுக:
அ) அல்லி ராஜ்ஜியம்,
ஆ) அமுத மொழிகள்,
இ) குட்டீஸ் சாய்ஸ்,
ஈ) சென்ற வார உலகம்,
உ) தற்காப்பு கலை
சாரி, நான் ஜெயா டிவி தான் பார்பேன்.
18. சண்டை நமது குணம் என்பதற்கேற்ப இட்லி-வடைக்கு x யார்?
படிக்கும் நீங்கதான்!
19. TOP 10 Movies போல் இட்லி-வடைக்காக ஸ்பெசல் திரைப்படம் போடுக.
விரைவில்...
20. தங்களின் அத்யந்த வாசகருக்கு ஒரு கேள்வி வரைக.
என் வாசகாராக நீங்க என்ன நினைக்கிறீங்க ?
21) 1008 பதிவுகளை இட்லி-வடை தொடப் போகிறார். - அதெப்படி பாலாஜிக்கு தெரியும்?
மோதிரம் வரவைக்கும் பாபாவிற்கு இது என்ன பெரிய விஷயமா.
22) இட்லியில் உப்புக்குச் சப்பாணியா யாராச்சும் பொண்ணுங்களும் இருக்காங்களா?
இன்னும் அந்த 'பொன்னான' வாய்ப்பு இட்லிவடைக்கு கிடைக்கவில்லை.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, July 02, 2007
1008
Posted by IdlyVadai at 7/02/2007 01:03:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)
19 Comments:
கலைஞரை மிஞ்சும் சாதுர்ய + ரசிக்கத்தக்க பதில்கள் :)
நன்றி
கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கீங்க... கண்டிப்பாக தமிழக அரசியலுக்கு வரலாம்....
1008 க்கு வாழ்த்துக்கள்
1008 வாழ்த்துக்கள் !! உங்கள் அனானித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் பதில்கள். வாசிப்பவர்களுக்கு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைவிட யார் எழுதியது என்பதில் உள்ள ஆர்வத்தை அறுவடை செய்யும் உங்கள் வழி தனி வழிதான் :))
பாபா கேள்வி கேட்டதற்கு நன்றி.
நாகை சிவா, மணியன் நன்றி.
1008க்கு வாழ்த்துக்கள்.
பாபா - இ.வ சபாஷ், சரியான போட்டி!
உங்கள் சேவை ஊசிப்போகாமல் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். நாகை சிவா சொன்னமாதிரி கண்டிப்பாக அரசியலுக்கு வரலாம். தமிழகம் மட்டுமில்லை. எல்லா ஊரிலும் நல்ல வாய்ப்பு உண்டு.
யாரு யாரா இருந்தா எனக்கென்ன
நம்மள பொருத்தவரைக்கும் செய்தி முக்கியம் அவ்வளவே. . . . . . .
10008 பதிவா . . . . . . .
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.
- இட்லி வடை மெஸ்ஸின் ரெகுலர் கஸ்டமர்.
இட்லிவடை 1008க்கு வாழ்த்துகள்.
//வாசிப்பவர்களுக்கு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதைவிட யார் எழுதியது என்பதில் உள்ள ஆர்வத்தை அறுவடை செய்யும் உங்கள் வழி தனி வழிதான் :)) //
ரிப்பீட்டே!!
கேள்விகளும், பதில்களும் அக்மார்க் தேங்காய் சட்னிண்ணேன்.. எனக்கும் இதுதான் பிடிக்கும்ணேன்..
suoıʇɐ1nʇɐɹbuoɔ
uʍop ǝpısdn - (-: ɯɐ ı ʍoɥ 11ǝʇ ʇou 11ıʍ ı 'uʍop ǝpısdn puɐʇs noʎ ɟı uǝʌǝ 'sʞuɐɥʇ
1008க்கு மீண்டும் வாழ்த்துக்கள். திரட்டப் பட்டோ படாமலோ உங்கள் சேவை எங்காளுக்குத் தேவை!! :))
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
uʍop ǝpısdn - (-: ɯɐ ı ʍoɥ 11ǝʇ ʇou 11ıʍ ı 'uʍop ǝpısdn puɐʇs noʎ ɟı uǝʌǝ 'sʞuɐɥʇ
என்ன வித்தப்பா இதெல்லாம் . . . . . . ?
(; umop paujn+ aq +ouuec l!weî op shnb ñ ja^a+eyM
Technique kaanbitha mahaan vaazhga :)
Nice quips Desikan.
வாழ்த்துக்கள்! தொடர்ந்து பரிமாரவும்
Great questions...
excellent answers....
#njoyed reading it.
1008க்கு வாழ்த்துக்கள் இ.வடை.....
நீங்க கூறியது போல இன்னொருவர் ரெகுலராக துக்ளக் கார்ட்டூன்களை போடுவதாக தெரியவில்லை....ஆதலால் தாங்கள் போட முடியுமா?...
Post a Comment