பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 10, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 10-7-07

இட்லிவடைக்கு,

போன கடிதம் மாதிரி எழுதாதே. ரொம்ப போர் அடிக்குது. அப்புறம் பதில் போட மாட்டேன்....Communication Gap பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் Communication-னினால் வரும் கேப்பை இப்ப தான் பார்க்கிறேன். நம்ம கலைஞர், ராமதாஸ் அறிக்கை அறிக்கை போரை தான் சொல்றேன். உடனே கிடைத்த கேப்பில் அம்மா ராமதாஸை மரியாதையுடன் நடத்துவோம் என்று அறிக்கை விட்டிருக்காங்க. இந்த சைடுக்கு ராமதாஸ் வந்தால் அம்மாவை மரியாதையாக பேசுவாரா ? சரி இதற்கு ராமதாஸ் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா ? "தேவையில்லாத கேள்விகளும், தேவையில்லாத பதில்களும் எனக்கு வருத்தம் தருவதாக உள்ளது" இது எப்படி இருக்கு ?

டைம்ஸ்-ஆப்-இந்தியா மாதிரி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட யாராலும் முடியாது. முதல் பக்கத்தில் சென் செக்ஸுக்கும், சச்சினுக்கும் உள்ள ஒற்றுமையை இரண்டு நாள் முன்னாடி பார்த்தேன். நீ பார்த்தையா ? பார்க்கலைனா கீழே பார்.தமிழ் நாடு போலீஸ் பற்றிய செய்தியை படித்தேன். படிக்க படிக்க புல்லரிக்குது ராசா. ஒரு சைகிள் விலை - 91,000, பைக்கின் விலை 11 லட்சம், ஒரு மொபட் 90 லட்சம், எழுபது கிராம் தங்கம் 20 லட்சம், இதெல்லாம் விட ஒரு கருப்பு கலர் போயிங் 747, 1600 ரூபாய்!. இந்த ரேட்டில் போனால் இலவச டிவிக்கு பதில் போயிங்கே கொடுக்கலாம்.

அழகிரியின் படத்தையும், அவர் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து தினகரன் முதல் பக்கதில் வெளியிடுவது இயல்பான ஒன்றுதான். சமீபத்தில் தினகரனிலும் தமிழ்முரசிலும் முதல் பக்கம் தொடங்கி, பல இடங்களில் ஸ்டாலின் சிரிக்கத் தொடங்கியுள்ளார். ஸ்டாலினின் டெல்லி விசிட் பற்றிய செய்திகளும் மிகுந்த முக்கியத்துவத்துடன் தினகரனில் செய்தியாக வெளியிடப்பட்டது.

ஆனா நம்ம வெங்கட்ராமன் பெரிய அதிர்ச்சியா இதை பற்றி எழுதியிருக்கிறார். தினகரன் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று இவர் பார்க்க வேண்டும் "புதிய அனுபவம்".
2 ரூபாய்க்கு வேறு எந்த அனுபவம் கிடைக்கும் என்று இவர் எதிர்பார்க்கிறார் ?ஒளிப்பதிவாளர், டைரக்டர் ஜீவா 44 வயதில் மரணம் என்று படித்தேன். அதே போல அவர் அப்பாவும் 44 வயதில் மரணம் அடைந்துள்ளார்.விதி வலியது. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கு.

"இந்தியாவில் 35 வயதுக்குக் குறைவாக 54 கோடி பேர் உள்ளனர். இது மிகப் பெரிய மனித வளமாகும். இதைப் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச் சியை எட்ட முடியும்..."என்று விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசியிருக்கிறார்.

நம்ம சத்தியராஜ் போக்கிரி பட விழாவில் "விஜய்க்கு இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. இந்த கூட்டம் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்புறம்...? இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன செய்வார்? என்பதை இன்னும் பத்து வருடம் கழித்து யோசிக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

இந்த வாரம் புதிய உலக அதியங்கள் 7 அறிவிக்கபட்டது அதே போல் கடந்த சனிக்கிழமை அன்று தேதி 7-7-7. மாதம், தேதி, ஆண்டு என அனைத்துமே ஏழாக இருப்பதால், இதனை அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் கருதினர். உன் பதிவிலும் மற்ற சிலர் பதிவிலும் இதை பற்றி படித்தேன். அன்று ஏழு மலையானை தரிசிக்க கூட்டம் அதிகமாக வந்ததாம். என்ன சொல்லுவது, இந்த வாரத்திலும் 7 நாட்கள் கவனித்தாயா ?


‘சொல்லிட்டுப் போடி
சொல்லிட்டுப் போடி
பிடிச்சிருக்கா பிடிக்கலியா
சொல்லிட்டுப் போடி...’’


இது சிம்பு நடிக்கும் கெட்டவன் படத்தில் வரும் பாடல். இது எப்படி இருக்கு ?


இப்படிக்கு
பாடிகாட் முனீஸ்வரன்

3 Comments:

Boston Bala said...

முனிக்கு வணக்கங்கள்

இட்லி-வடையை விட முனி விஷயமறிந்தவராக, சென்செக்ஸ் முதல் சத்யராஜ் வரை சென்சிபிளா எழுதியிருக்கார்,

Anonymous said...

Namma Kanchi acharya'va 2004'la arrest panninanga. appuram enna acchucu?. Unga பாடிகாட் முனீஸ்வரன-kitta kettu sollamudiyuma? Please

இலவசக்கொத்தனார் said...

பாடி கார்ட் முனீஸ்வரன் கலக்குறாருப்பா!!