100 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை வருகிறது உலகமே எதிர்பார்க்கும் அதிர்ஷ்ட நாள் 07-07-07 7-ந் தேதி திருமணம் செய்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் இணைந்துவாழ்வோம் என்ற நம்பிக்கை !
அதிர்ஷ்டம்
07-07-07 என்ற தேதி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும். இது போல், நாள், மாதம் மற்றும் ஆண்டு ஆகியவை ஒரே எண்ணில் ஒருங்கிணைந்து வந்தால், அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இது போன்ற நாட்களில் வீட்டில் நல்ல காரியங்களை செய்வது வழக்கம். குறிப்பாக அந்த நாளில் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொள்வார்கள். வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவங்கள் 7-ல் அமைய வேண்டும் என்று விரும்புவோர் பலர் உள்ளனர்.
ஏழாம் எண்ணுக்கு தனி மகத்துவம் உள்ளது என்பதை ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பலரும் உறுதிபடுத்துகிறார்கள். இந்த வகையில் நாளை வரக்கூடிய 07-07-07 க்கு கூடுதல் சக்தி (பவர்) இருப்பதாக கருதப்படுகிறது.
மகத்துவம்
நாள் நட்சத்திரம் பார்ப்பதில் நம்மவர்கள் மட்டுமின்றி இப்போது வெளிநாட்டவர்களும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆம். நாளை மூன்று 7 ஒன்றாக வருவதால் இந்த நாளை மிக மிக அதிர்ஷ்டநாளாக கருதுகிறார்கள்.
ஏழாம் நம்பருக்குரிய மகத்துவத்துவத்தைக் கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் இளம் காதலர்கள் தங்கள் திருமணத்தை 07-07-07 அன்று நடத்துவது என்று தீர்மானித்து தங்கள் திருமணத்துக்காக நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பெரிய ஓட்டல்களை புக் செய்துள்ளனர்.
ஏழேழு ஜென்மத்துக்கும்
2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதியில் தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் ஜோடிகள் வெளிநாடுகளில் உள்ள திருமண தகவல் மைய இணைய தளத்தில் கடந்த மார்ச் மாதமே பதிவு செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய 07-07-07 என்ற தேதியில் திருமணம் செய்து கொண்டால், ஏழேழு ஜென்மத்துக்கும் இணை பிரியா தம்பதியாக வாழலாம், வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும், புத்திர பாக்கியங்களையும் பெறலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஜூலை 7-ந் தேதி அன்று ஏராளமான திருமணங்கள் நடப்பதாக பல்வேறு நாடுகளில் உள்ள ஒரு திருமண தகவல் இணைய தளங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளன.
இந்தியாவிலும்
வெளிநாடுகளில் தான் இந்த 07-07-07 அதிர்ஷ்டம் நிறைந்தது என்ற கருத்து பரவலாக நிலவியது.
ஆனால், இதை முறியடிக்கும் விதமாக ஜூலை மாதம் 7-ந் தேதி (நாளை) இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக சென்னையிலும் ஜூலை 7-ந் தேதி மோகம் பரவத் தொடங்கிவிட்டது.
காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், முதியோர் தினம் என்பதெல்லாம் முன்பு வெளிநாடுகளில்தான் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் இவை நம்நாட்டிலும் பரவத் தொடங்கிஉள்ளது.
இவற்றை வெளிநாட்டு மோகம் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இந்த 'தினம்'' கள் இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓட்டல்களில்
அந்த வரிசையில், 07-07-07 நாள், மாதம், வருடம் என்ற மூன்றும் ஒன்று சேர வரக்கூடிய ஜூலை 7-ந் தேதியான நாளை (சனிக்கிழமை) சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பலர் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜூலை மாதம் 7-ந் தேதி பிறந்த நாளைக் கொண்டாடும் பலர் தங்கள் பிறந்த நாளை வழக்கத்தைவிட கோலாகலமாக கொண்டாட தீர்மானித்து நாளை உற்றார், உறவினர் மட்டுமின்றி உற்ற நண்பர்களுக்கும் விசேஷ விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
7-ந் தேதி தொடங்கிய நிறுவனங்கள் தங்கள் ஆண்டுவிழாக்களை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகளை செய்துள்ளன.
7-ந் தேதியை திருமண நாளாக கொண்டுள்ள தம்பதியர் தங்கள் திருமண நாளை வழக்கத்தைவிட சற்று வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.
கூடுதல் சிறப்பு
ஒற்றை இலக்க எண்கள் அதிர்ஷ்டம் அளிப்பவை என்ற கருத்து நம்மவர்களிடையே பரவலாக உள்ளது. அந்த வகையில் நாளை 7-ந் தேதி அதிர்ஷ்டநாள் என்றாலும் கூட மூன்று 7 சேர்ந்தார்ப்போல் வருவது மும்மடங்கு அதிர்ஷ்டநாள் என்று ஜோதிட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஜூலை மாதம் 7-ந் தேதி கூடுதல் சிறப்புப் பெற்று விளங்குவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நாளை ஆனி மாதம் கிருஷ்ண பக்ஷ சப்தமி ஆகும். பொதுவாக இந்த நாளில் திருமணம் செய்து கொள்வது இல்லை. ஆனால், பவுர்ணமி கழிந்த 7-வது நாளில் நாளை ஜூலை மாதம் 7-ந் தேதி வருவதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறத
( தகவல்: தினத்தந்தி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, July 06, 2007
07-07-07
Posted by IdlyVadai at 7/06/2007 05:57:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
7/7/7ல் பிறந்தநாள் கொண்டாடுறவங்க அதிஷ்டக்காரங்களா? திறமைசாலிகளா?
உங்களை விட சட்னி வடை ரொம்ப வேகமா இருக்காரே...
http://sadnyvadai.blogspot.com/2007/07/blog-post_05.html
அப்பப்போ பதிவு போடும் நான் வெச்சிருந்த மேட்டரை 1000 பதிவு போட்ட நீர் அடிச்சது நியாயமாங்கறேன். இருந்தாலும் ரொம்ப விளக்கமாகவே போட்டு இருக்கீரு!!
Post a Comment