பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 03, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 03-07-07

இந்த வார முனீஸ்வரனுக்கு கடிதம்.


மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே!

உம்முடைய கடிதம் கிடைத்தது. என்னையும் மதித்து எனக்கு பதில் எழுதியதற்கு நன்றி.

இந்த வாரம் தமிழ் வலைப்பதிவு ஒரு பெரிய ஆய்வுக்களமாக மாறியுள்ளது. "என்னை யார் கைலியுடன் பார்த்தார்?" என்ற தலைப்பில் உண்மை தமிழன் எழுதியுள்ள பதிவு ஒரு முதுகலை எம்.ஃபில் திசீஸ். அவர் சொல்ல வந்த விஷயத்தை ஒரு வரியில் எழுதி முடித்திருக்கலாம். நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான்!. இந்த மாதிரி பதிவுகளை படிச்சா மூச்சு வாங்குகிறது என்ன செய்ய ? இதை போல இன்னொரு பதிவை படித்திருந்தால் நான் சர்வைவ் ஆவேனா என்பது எனக்கு சந்தேகம். நீ தான் என்னை காப்பாத வேண்டும்.

முற்போக்கு பேசும் மக்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் முக்கால்வாசி பேர் பூர்வாசிரமத்தில் ஐயங்கார்ஸாக இருக்கிறார்கள். முற்போக்கு என்பது பார்பனர்களை இழிவுபடுத்திப் பேசனும், அவ்வளவு தான். ஐயங்கார்ஸ் எல்லாம் சேர்ந்து முற்போக்கு ஐயங்கார் சங்கம் (மு.ஐ.ச) என்று ஆரம்பிக்கலாம். தமிழ் வலைப்பதிவில் சர்வைவல் என்று வந்துவிட்டால் ஐயங்கார்ஸ் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிபட்ட முற்போக்கு ஐயங்கார்ஸையும் நீ காக்க வேண்டும்.

வலைப்பதிவில் வேறு சில தாமாஷும் நடக்கிறது பெரியாரின் சிஷ்ய கோடிகள் எல்லாம் இப்ப சிஷ்ய கேடிகள் ஆகி, குழி பணியாரம், புளு ஃபிலிம் என்று ரொம்ப முன்னேறிவிட்டார்கள். அவர்களை நீ திருத்த நினைக்காதே. அவர்களும் சர்வைவல் என்று வந்துவிட்டால் இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

நண்பர் மா.சிவகுமார் ஆகஸ்ட 5, சென்னை பதிவர் பட்டறை நடத்தவிருக்கிறார். மாணவர்களிடம் மற்றவர்களிடமும் தமிழ் வலைப்பதிவை எடுத்துக்கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார். என்னுடைய கவலை எல்லாம் மாணவர்கள் இந்த மாதிரி பதிவுகளை பார்த்து கெட்டுபோகாமல் இருக்க வேண்டும் என்பதுதான். மாணவர் சமுதாயம் மேல் அக்கறை இருந்தால் ஏதாவது செய். ஆகஸ்ட் 5, சன் டிவியில் ஒரு நல்ல படம் போட்டா கூட்டம் அங்கே போய்விடும். செய்வியா ?

சரி தமிழ் வலைப்பதிவை விட்டு விடு, இந்திய ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் கூட சர்வைவல் என்று வந்துவிட்டால் என்னவெல்லாம் பேசவேண்டியிருக்கிறது :

முதலில் "முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்" என்றார்.
பிறகு ""முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்" என்று பல்டி அடித்தார். பாரதியார் "தில்லி துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்று பாடியிருக்கிறார். ஆக உண்மையை ஜனாதிபதி சொல்ல கூடாது, சொன்னால் ? எப்படி சர்வைவ் ஆவது ?. இந்த குழப்பத்துக்கு பேசாம நீயே ஜனாதிபதி தேர்தலில் நின்றிருக்கலாம். அட்லீஸ்ட் உன் கையில் இருக்கும் அருவாளுக்காவது அரசியல்வாதிகள் பயந்திருப்பார்கள்.

என் வீட்டில் இருக்கு நாய் என்னை பார்த்து தினமும் வாலை ஆட்டுகிறது. அது வாலை ஆட்டுவது என் மேல் இருக்கும் பாசத்தினாலா இல்ல அதுவும் சர்வைவலுக்காகவா ?

அமர்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனிலிங்கத்துக்கு கூட இப்ப எல்லாம் சர்வைவல் என்பது கேள்விக்குறியாகி விட்டது. என்னமோ போ கலி முத்திப் போச்சு!

இப்படிக்கு சர்வைவலுக்காக உன்னை வணங்கும்,
இட்லிவடை

5 Comments:

Anonymous said...

அதெல்லாம் சரி கலைஞர் டீ வி logoவில் மஞ்சள் சூரியனைக் கவனித்தீரா ?. இதுவும் சர்வைவலுக்குத்தானோ

ஹரன்பிரசன்னா said...

:))))))))))

Sunny said...

"A" Class பதிவு... please keep go ahead.

இலவசக்கொத்தனார் said...

இன்னும் பதில் வரலையா? :))

IdlyVadai said...

இலவசக்கொத்தனா பதில் இன்னும் வரலை. முனீஸ்வரனிடம் கேட்டதற்கு இண்டிபெண்டன்ஸ் டே விடுப்பில் இருக்கிறாராம். திங்கள் வரும் என்றார்.