"ஆஸ்திரேலியா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்க வில்லை. ஆனால் அமைதியை விரும்பும் இந்திய குடிமக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" - டாக்டர் ஹனீப் தனது பேட்டியின் போது சொன்னது.
டாக்டர் ஹனிப் பற்றி எல்லா பத்திரிக்கைகளும், டிவிக்களும் கவரேஜ் செய்யும் போது, இட்லி வடையில் ஒன்றும் சொல்லவில்லை என்றால் எப்படி ?
ஹனிப் பேட்டியிலிருந்து சில விஷயங்கள்:
* "யாரும் இது போன்று தீவிரவாதி என்று முத்திரை குத்தப்படும் நிலை வரவே கூடாது. தீவிரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டதால் எனது குடும்பத்தினர் எவ்வளவு அவதிப்பட்டனர் என்பது எனக்குத்தான் தெரியும். இஸ்லாம் அன்பையும் அமைதியையும் மட்டுமே போதிக்கிறது"
* பிரிட்டனில் நாங்கள்(கபில், சபீல்) ஒன்றாக தங்கியது கிடையாது. ஆனால், பிரிட்டன் முழுவதும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருக்கிறோம். பயங்கரவாதம் குறித்து தகவல் தெரிந்து இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிச்சயம் தெரிவித்து இருப்பேன். பிரிட்டனில் வங்கிகளில் எனது பெயரில் கடன் இருந்தது. அதை அடைக்கவே பணம் அனுப்பி இருந்தேன். பயங்கரவாத அமைப்புக்கு பணம் அனுப்பியது இல்லை.
கேள்வி:- கபில், சபீல் ஆகியோர் தீவிர வாதிகளாக இருந்தது உங்களுக்கு எப்படி தெரியாமல் இருந்து இருக்க முடியும் அவர்கள் உங்கள் சகோதரர்கள்தானே?
பதில்:- இதற்கு ஏற்கனவே பலமுறை விசாரணையின்போதே விளக்கம் அளித்து இருக்கிறேன். அதை படித்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:- எங்களுக்காக ஒரு முறை சொல்லுங்களேன்?
பதில்:- ஆயிரம் தடவை ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:- விடுதலையானவுடன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பணம் வாங்கிக் கொண்டு பேட்டி அளித்தீர்களா?
இந்த கேள்விக்கு ஹனீப் பதில் சொல்ல வில்லை.அவருடைய உறவினர் இம்ரான்சித்திக் பதில் அளித்தார்.
ஹனிப் அரசியல்:
* டாக்டர் ஹனீபுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதை வரவேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, "ஹனீபின் காயத்துக்கு ஒத்தடம் தரும் செயல்' என்கிறார். முஸ்லிம் என்பதாலேயே ஒருவர் ஒசாமா பின்லேடனின் தளபதி ஆகிவிடமாட்டார் என்பதை வளர்ந்த நாடுகள் உணரவேண்டும். ஒருவர் மீது பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு முன்னர் ஆழமான விசாரணையும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்று கூறியுள்ளார் நக்வி.
* கர்நாடக அரசின் செய்கை முஸ்லிம்களை "உச்சி குளிரவைக்கும்' வேலை என சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த தீவிரக் கருத்துள்ளவர்கள் சாடியுள்ளனர். நாம் யாரையும் காயப்படுத்தாதபோது இந்த ஒத்தடம் கொடுக்கும் வேலை எதற்கு? "உச்சி குளிரவைக்கும்' இந்த வேலையில் பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது என்று பி.பி.சிங்கால் கூறியுள்ளார்.
* கர்நாடக அரசு முஸ்லிம்களுக்குச் சாதகமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, தலித் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகிடைக்காமல் இருப்பதை ஏன் கர்நாடக அரசு பார்க்க மறுக்கிறது?
இட்லிவடை கேட்கும் ஒரு கேள்வி:
ஹனீப் பேட்டியிலிருந்து இரண்டு கேள்விகள்
கேள்வி:- நீங்கள் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப விரும்புகிறீர்களா?
பதில்:- நிச்சயமாக நான் ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன். எனது பணிக்கான விசாவை திரும்ப பெற வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன். அதற்காக போராடவும் தயாராக இருக்கிறேன்.
கேள்வி:- உங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சர்வதேச சதி என்று நினைக்கிறீர்களா?
பதில்:- ஆஸ்திரேலிய சதி.
உறவினர் நம்மை அவமதித்தால் அவர்கள் வீட்டு படி ஏற தயங்குவோம், ஆனால் ஆஸ்திரேலிய சதி செய்தது என்று நம்பும் ஹனீப் அங்கே திரும்ப போக வேண்டும் என்கிறார்.
அல்லா அவருக்கு நல்ல வழியை காண்பிக்க வேண்டுகிறேன்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Tuesday, July 31, 2007
டாக்டர் ஹனீபுக்கு ஒரு கேள்வி
Posted by IdlyVadai at 7/31/2007 06:07:00 PM 20 comments
Labels: செய்தி விமர்சனம்
சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
* நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. சஞ்சய் தத்துக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையொட்டி தடா கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சஞ்சய் தத்தின் ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
* மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இன்று ஆஜராக வந்த நடிகர் சஞ்சய்தத் மகளுடன் கண்ணீர் விட்டபடி போனில் பேசினார். தண்டணை அறிவிக்கப்படும் முன்பு சகோதரி நம்ரதாவுடன் அழுதபடி வழியனுப்பி வைத்தாஞூ. தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் சஞ்சய்த்த் நீதிபதியிடம் அனுமதி கேட்டு மகளிடம் போனில் அழைத்து பேசினார்.
* குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய மும்பை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என சஞ்சய்தத் வக்கீல் தெரிவித்துள்ளார்.
* உடனடியாக ஜெயிலுக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் சிறிது அவகாசம் தரும்படியும், பின்னர் தான் ஆஜராகுவதாகவும் சஞ்சய்தத் தரப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். ஏற்கனவே சஞ்சய்தத் 16 மாதம் சிறையில் இருந்துள்ளார். இந்த நாட்கள் 6 ஆண்டில் கழிக்கப்படும்.
* இரு கைகளையும் கும்பிட்டபடி நீதிபதியின் பெஞ்ச் அருகே சென்றார். பின்னர் நான் 14 ஆண்டுகளுக்கு முன்பு தவறு செய்து விட்டேன் எனக்கு சிறைக்கு செல்ல கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என கெஞ்சியபடி கேட்டார். எல்லோருமே தவறு செய்கிறார்கள்.சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றார் நீதிபதி கோடே.
* சஞ்சய்தத் தரப்பு வக்கீல்கள் அவகாசம் கேட்டு வாதாடினர். இது தொடர்பாக மதியத்திற்கு மேல் உத்தரவு பிறப்பிக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார். அது வரை போலீசார் என்னை சுற்றி நிற்க வேண்டாம் சற்று தள்ளி இருக்க சொல்லுங்கள் என சஞ்சய்தத் நீதிபதியிடம் கேட்டார். அதற்கும் நீதிபதி ஒத்துக்கொண்டார். இதனையடுத்து சஞ்சய்தத் நீதிபதிக்கு கைகூப்பியபடி நன்றி தெரிவித்து கொண்டார். தொடர்ந்து 3 மணியளவில் அளித்த உத்தரவில் சஞ்சய்தத்தின் கோரிக்கையை நிராகரித்தார். இதனைையடுத்து போலீசார் ஜெயிலுக்கு அழைத்து செல்ல தயாராயினர்.
வழக்கம் போல் எல்லா டிவியிலும் இது தான் நியூஸ்.
( படம், செய்தி: தினமலர் )
Posted by IdlyVadai at 7/31/2007 04:08:00 PM 6 comments
Labels: செய்திகள்
Monday, July 30, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 30-07-07
இந்த வாரம் முனீஸ்வரன் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்.
அன்புள்ள இட்லிவடை,
எப்படி இருக்க என்று கேட்க போவதில்லை. தவலை இட்லி பதிவை பார்த்தாலே தெரியுது ரொம்ப வெட்டியா இருக்கேன்னு. கேட்ட பிசாத்து கேள்விகளுக்கு மாமிஅக்கா பதிலையெல்லாம் படிச்சியா ? எல்லா கேள்விகளையும் தாளிச்சு எடுத்துட்டாங்க. 'தாளிக்கும் ஓசை' சும்மா அதிருதில்லே. நல்ல வேளை, சாராயத்துக்கு சமையல் குறிப்பு கேட்காமல் விட்டையே அதுவரை நல்லது.சரக்கு என்பதும் தான் ஞாபகம் வருது, போனவாரம் எந்த நாடு நிறைய சரக்கு அடிக்குதுன்னு ஒரு புள்ளிவிவரம் படிச்சேன். 184 நாடுகளில் இந்தியா 150வது இடம். ( காந்தி பிறந்த மண் என்று சும்மாவா சொன்னார்கள் :-). (முதல் இடத்தில் உகாண்டா - 19லிட்டர் ( per capita per annum ), ரஷ்யா - 10லி, இந்தியா ? 0.86லி. இந்த கணக்கு எல்லாம் சுத்தமான சரக்கின் புள்ளிவிவரம். அப்ப நாட்டு சரக்கு ?
சரி இந்தியாவில் எந்த மாநிலம் நிறைய குடிக்கிறார்கள் தெரியுமா ? பஞ்சாப், ஹரியானா. பிறகு சிக்கிம், கர்நாடகா. தமிழ்நாட்டுக்கு 11வது இடம். காவிரி தண்ணிக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை. ( அதே போல இந்த படத்தில் இருக்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை )
வருங்கால முதல்வர் ஸ்டாலின் எப்படி முதிர்ச்சியா பேசியுள்ளார் படித்தையா ? "குழந்தை இல்லாத ஜெயலலிதாவுக்குச் சொத்து எதற்கு?" என்று. இது தான் 'லூஸ்' டாக். So, புள்ள குட்டியிருந்தா முறைகேடாக சொத்து சேர்க்கலாம் என்கிறாரா ?
நேற்று இந்த தலைப்பு செய்திகள் எந்த டிவி சேனல் என்று கண்டுபிடிக்கிறவர்களுக்கு ஒரு சபாஷ் ( நான் வேறு என்ன கொடுக்க முடியும், என் கிட்ட அருவாள் தான் இருக்கு )
"நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு எதிரான டைட்டானியம் திட்டத்தை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்று ஜெயலலிதா ஆங்கிலத்தில் கூறியதை கீழே தமிழில் காண்பித்தார்கள்.
"ஆந்திராவில் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்டுகள் போராடுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் கிராமத்தில் பலர் கொல்லப்பட்டதற்கு அங்குள்ள முதல்-அமைச்சரை பதவி விலக சொன்னார்களா?...... 50 கட்சிகள் இணைந்து வந்தாலும் என்னை அசைக்க முடியாது" என்று விஜயகாந்த் அவேசமாக பேசியதை காண்பித்தார்கள்.
இது இரண்டும் செய்தியும் சன் டிவி 8 மணி நியூஸில வந்தது. சன் டிவிக்கு இந்த மாதிரி நிலமை வரும் என்று யாராவது நினைதார்களா ? இதற்கு நிலமைக்கு பேர்தான் 'நடு' நிலை.
கலைஞரிடம் "மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?" என்று கேட்டதற்கு "நான் யாருடைய அமைச்சர் பதவியையும் கெடுக்க மாட்டேன்" என்று பதில் சொன்னார். என்ன சொல்ல வருகிறார் கலைஞர் ?
ஜெயிடம் நேற்று "டாக்டர் ராமதாஸ் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று நீங்கள் கூறிய பதில் விஜயகாந்துக்கும் பொருந்துமா?" என்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னர் தெரியுமா ? "அந்த பதில் இதற்கு பொருந்தாது. இந்த கேள்விக்கு தற்போது பதில் சொல்ல விரும்பவில்லை" அதாவது சிங்கதை இப்ப சீண்ட விரும்பவில்லை என்று.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிப் போட்டி முடிந்தும் கூட ஏனோ நீட்டி முழக்கி கிருஷ்ணமுர்த்தியை பீச்சில் அலையவிடுவதும்... பாட விடுவதும் .... வேர்கடலையை சாப்பிடும் போது கிடைக்கும் கடைசி சொத்தை :-)
ஜூவியில் கனிமொழி கருணாநிதி பற்றி வந்த இரண்டு நகைச்சுவை படங்கள் இங்கே
'கிரீடம்' படத்தின் முடிவு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வந்திருக்கு தெரியுமா? (அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்' அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது).
தமிழக மக்களுக்கு முடிவில் 'சுபம்' என்று போட்டால் தான் படம் முடிந்தவுடன் சீட்டை விட்டு எழுந்திருப்பார்கள். இந்த அழகில் நாம் ஆஸ்கர் பற்றி பேசுகிறோம். இதே போல முன்பு புன்னகை மன்னன் ( வேறு ஏதாவது படம் இருக்கா ) படத்தின் முடிவை மாற்றினார்கள். அப்ப நான் பார்த்த தியேட்டரில் குழம்பி போய் இரண்டு கிளைமாக்ஸையும் காண்பித்தார்கள்.
காமராஜர் பிரந்த நாள் விழாவில்(முன்று முட்டை திட்டம்) மு.க.அழகிரி கலந்துகொண்டார் என்பது பழைய நியூஸ். இந்த மூன்று முட்டை திட்டதுக்கு மு.க.முட்டை என்று சிலர் சொல்லி சிரிப்பதாக பேச்சு.
"தமிழகத்தில் ஆட்சி நடத்துவர்கள், எதை எதையோ இலவசமாக கொடுத்து வருகின்றனர். ஏமாந்தால், "அல்வா' கூட இலவசமாக கொடுப்பார்கள்" என்கிறார் வேற யார் ( முட்டையை இலவசமாக வாங்கிய) மத்திய அமைச்சர் இளங்கோவன் தான்.
எல்லாவற்றையும் விட போன வாரத்தின் மிக பெரிய ஜோக் - "தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது கூட தனக்குத் தெரியாது" என்று ஜெயலலிதா சொன்னது தான், ஒரு வாரமாகியும் சிரிப்பு அடங்கவில்லை.
Posted by IdlyVadai at 7/30/2007 02:53:00 PM 8 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Sunday, July 29, 2007
பதவி விலக தயார் - கலைஞர்
என்னால் மக்களுக்கு செய்ய முடிந்தது இவ்வளவுதான். இதைவிட மேலும் நல்லது செய்ய முடியும் என்று வேறுயாராவது கருதினால், நான் ஒதுங்கிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ்மாலை சூட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். நல்ல அரசு மக்களுக்கு நல்லதை செய்யும் போது அதற்கு மற்றவர்கள் துணை இருக்க வேண்டுமே தவிர, இதை தடுத்துவிட்டோம் என்று கித்தாப்பு காட்டக்கூடாது என்றும் அவர் காட்டமுடன் குறிப்பிட்டார். வா, வந்து பார், நான் நினைத்ததை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டுகிற அரசாக என்னுடைய அரசு செயல்படாது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3வது கட்டமாக அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் கருணாநிதி பேசியது:
வேலைவாய்ப்பகத்தின் பதிவு பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க முடியாவிட்டாலும் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல இன்று வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம்.
3வது கட்டமாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 818 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்று கட்டங்களில் மொத்தம் இதுவரை 55 கோடியே 52 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் வேலை வாய்ப்புக்கு தடைச்சட்டம் இருந்தது. அதை உடைத்தெறிந்து இந்த ஆட்சி அமைந்த பிறகு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் இருந்த 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பதிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.
தேர்தல் கால வாக்குறுதிகள் பலவற்றை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். இவ்வளவுதான் எங்களால் முடிந்தது என்று கூறி விடைபெறவும் நாங்கள் தயார்.
என்ன செய்தாலும் எல்லோரையுமே திருப்திப் படுத்த முடியாது. ஆங்காங்கே சில குறைபாடுகள் எழுவதற்கு வாய்ப்புண்டு. நல்ல முறையில் வழிகாட்ட தோழர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும்.
மேலும் இதைவிட காரியங்கள் செய்கிறோம் என்று யாராவது வந்தால் என்னால் முடிந்தது இதுதான் என்று நான் விலகிக்கொண்டு அவர்களை வரவேற்று பாராட்டி, புகழ் மாலை சூட்ட தயாராக இருக்கிறோம்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற 11 மாத காலத்திற்குள் 11 தொழிற்சாலை களை இந்த அரசு கொண்டுவந்து இருக்கிறது. இதனால் எனக்கு கர்வமோ, பெருமையோ, இறுமாப்போ இல்லை. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கின் றனரே என்ற மனவேதனைதான் உண்டு.
ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்கு எத்தனை தடைகளை கடந்து வர வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். வடமாநிலங் களிலே இது போன்ற புதிய தொழிற்சாலைகள் வரும்போது சில பிற்போக்குவாதிகள் ஏழை விவசாயிகளை தூண்டிவிட்டு ரத்த வெள்ளம் ஓடச் செய்கிறார்கள்.
ஒரு அரசு நல்ல முடிவு எடுத்து மக்களின் நல்வாழ்வுக்காக புதிய தொழில்களை தொடங்க முன் வந்தால் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் மக்களை தூண்டிவிடும் விஷமிகளும், சமுதாய கிருமிகளும் நாட்டில் உள்ளன.
இவைகளை எல்லாம் சமாளித்து தான் தொழில்வளங்களை உருவாக்க ஒரு அரசு நேரத்தையும், உழைப்பை யும், பணத்தை யும் செலவழிக்க வேண்டும். அரசு செய்யும் காரியங்களை தடுப்பவர்களுக்கு இடைக்கால மாக நாம் நினைத்த காரியத்தை முடித் தோம் என்ற ஆறுதல் கிடைக்கலாம். அதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது.
ஒரு நல்ல அரசு மக்களுக்கு செய்கிற நல்ல காரியங்களுக்கு துணை இருக்க வேண்டியது நண்பர்கள், தோழர் களின் கடமையாகும். இதை தடுத்து விட்டோம் என்கிற கித்தாப்பு கூடாது.
வா, வந்து பார் என்று நினைக்கிற அரசாக இருந்தால் நான் எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் காட்டலாம். இங்கு எந்தவித கலவரமும் நடக்கக் கூடாது.
அமைதிக்கு பங்கம் வரக்கூடாது என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் உங்கள் பாடு, மக்கள் பாடு என்று ஒதுங்கிக்கொள்ள தயார். நல்ல காரியங்களை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமும், வேதனையும் தான் என்கு உள்ளது. தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று நான் எண்ணுபவன் அல்ல.
நான் பிறந்த போது முதலமைச்சர் ஆவேன் என்று நினைத்து வந்தவன் அல்ல. காலத்தின் கோலம், சமுதாயத்தின் நிலை, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களின் வழி காட்டுதல் ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்படி அவர்கள் காட்டிய தியாக வழியில் நான் நடப்பதும் எனக்காக அல்ல; உங்களுக்காக; உங்களுடைய வாழ்க்கை நலனுக்காகத்தான். என்னுடைய வார்த்தையை நம்பினால் உங்களோடு இருப்பதில் அர்த்தமுண்டு. இல்லை என்றால் மக்களிடம் சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.
Posted by IdlyVadai at 7/29/2007 04:38:00 PM 11 comments
தில் தலைவர் விஜயகாந்த் - பேட்டி
ஆனந்த விகடனில் வந்த பேட்டி.( நன்றி: விகடன் )
சென்னை-தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபம்; (விகடன்) பயிற்சி முகாமின் முதல் நாள். ‘சிறப்பு அழைப்பாளரோடு சந்திப்பு’ என சஸ்பென்ஸ் வைத்தபோது, வருவது யாரோ என ஆவலும் எதிர்பார்ப்புமாக அமர்ந் திருந்தார்கள் மாணவர்கள். சரியாக ஆறேகால் மணிக்கு மண்டபத்துக் குள் எந்தவித பந்தாவும் இல்லாமல் நுழைந்த அந்தப் பிரபலம்- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். விகடன் இதழ்களின் மூத்த பத்திரிகையாளர்கள் மூன்று பேருடன், மாணவ நிருபர்களும் கேள்விச் சரம் தொடுக்க... பேட்டி உற்சாக வெடியாக வெடித்தது.
‘‘சினிமாவிலும் அரசியலிலும் இழந்ததும் பெற்றதும் என்ன?’’
‘‘நடிகனாக இருக்கும்போது சேர்த்தது பேரு, புகழ், காசு, பணம். அதில் வெற்றியும் இருக்கு, தோல்வியும் இருக்கு! ஆனால், அரசியலில் இழந்ததுதான் அதிகம். என்னை நம்பி சினிமாவில்
இருக்கும் விநியோகஸ்தர்களிடம் ‘விஜயகாந்த் படத்தை வாங்காதீர்கள்’ என்று தடை போட்டார்கள். படத்தை ரிலீஸ் செய்ய முடியாதபடி தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
அறிவாலயத்தில், முன்பக்கம் தி.மு.க. கட்சி அலுவலகம், பின்னால் கல்யாண மண்டபம் என இருக்கிறது. அறிவாலயம் மாதிரி எனக்கும் திருமண மண்டபமும் கட்சி அலுவலகமும் ஒன்றாக அமைந்தது. அது பொறுக்காமல் மண்டபத்தை இடித்தார்கள். ‘ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது’ என்று இகழ்ந்தவர்கள், 8.38 சதவிகிதம் ஓட்டு வாங்கியதும் என்னைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சித்தார்கள். இடையில் ஒருமுறை கலைஞரைப் பார்க்கப் போனேன். ‘விஜயகாந்த் தடுமாறுகிறார்’ என்று அதுவேகூட செய்தியானது. ஆனால், நான் போன விஷயம் வேறு! போன இடத்தில் மண்டபம் பற்றியும் பேச்சு வந்தது; அவ்வளவுதான்! ஒருவேளை, நான் தி.மு.க-வோடு கூட்டணி வைத்திருந்தால் மண்டபத்தை விட்டிருப்பார்கள்!’’
‘‘ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்கள். ஆனால், மதுரை இடைத்தேர்தலில் வாக்காளர்களிடம் அரசியல் வாதிகள் பணம் கொடுத்தால் வாங்கிக்குங்கன்னு சொல்றீங்களே?’’
‘‘இதுவே பொதுத் தேர்தலாக இருந்தால், இன்னும்கூட வாங்குங்கன்னு சொல்லியிருப்பேன். மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர் கள், இப்போது அந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதியை திருப்பிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் ‘ஆயிரம், ரெண்டாயிரம்னு வாங்காதீங்க; ஐந்து வருஷத்துக்கு கணக்கு பண்ணி மொத்தமாக பெரிய தொகையா பேசி வாங்குங்க’ என்றேன். நான் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எப்போதும் எதிரானவன்தான். மதுரையில் நடந்த பண பேரத்தை ஆதாரத்தோடு வீடியோ எடுத்து, தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தாவிடம் கொடுத்தது நான்தான்!’’
‘‘எப்போதும் இரண்டாவது, மூன்றாவது இடத்திலேயே இருந்தால், உங்களை நம்பி இருப்பவர்கள் சோர்வடைந்துவிடுவார்களே... கூட்டணி சேரும் திட்டம் உண்டா?’’
‘‘நானாக யாருடனும் கூட்டணிக்குப் போக மாட்டேன். அவர்களாக வந்து சேர்ந்தால் பார்ப்போம்..!’’
‘‘உங்க லாஜிக் புரியலையே?’’
‘‘அவங்க வர மாட்டாங்கன்னு தெரியும். இருந்தாலும் ச்சும்மா விடுறதுதான். அப்படி நான் சொன்னா தானே உங்களுக்குச் செய்தி (சிரிக்கிறார்)! என்னைப் போலவே தனித் தனியா எல்லா கட்சிகளும் நிற்கட்டும். அப்போ தெரியும், என் பலம் என்ன என்று! மதுரையில், காங்கிரஸ் போன தடவையைவிட இந்த முறை 7,000 ஓட்டு அதிகமா வாங்கியிருக்கு. அதுக்கு 15 கோடி ரூபாய் செலவாகியிருக்கு. இந்த 15 கோடியையும் தொகுதியோட நன்மைக்குச் செலவு செய்திருந்தால், விஜயகாந்த் பற்றி பயப்படவே வேண்டாமே! ஜெயலலிதாவும் கருணாநிதியும் நிஜமாகவே மக்களுக்கு நல்லது பண்ணியிருந்தா, விஜயகாந்த் என்கிற ஒருத்தன் வரவேண்டிய அவசியமே இல்லையே?’’
‘‘மற்றவர்களைக் குடும்ப அரசியல் என்று விமர்சிக்கும் உங்கள் கட்சியிலும் உறவுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறதே? உங்கள் மைத்துனரின் கையில்தான் கட்சி இருப்பதாக சொல்லப்படுகிறதே?’’
‘‘நீங்கள் நல்லதைப் பார்க்க மறுக்கிறீர்கள்; கெட்டதை மட்டும் தோண்டி எடுத்து என்னிடம் கேட்கி றீர்கள். நான் கட்சி துவங்கும்போதே, என் மைத்துனரும் மனைவியும் அதில் உறுப்பினர்கள். அவர்கள் படித்தவர்கள் என்பதால், அவர்களிடம் சில பொறுப்பு களைக் கொடுத்திருக்கிறேன். மற்றபடி கட்சி ரீதியான முடிவுகளை நிர்வாகிகள் தான் எடுக்கிறார்கள். மாவட்டவாரியாக நடக்கிற விஷயங்களைத் தனித்தனி ஃபைலாகப் போட்டு என் பார்வைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.’’
‘‘விவசாயிகள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உங்கள் விவசாயக் கொள்கை என்ன?’’
‘‘விவசாயத்தை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகள் உண்டோ, அவ்வளவையும் இதய சுத்தியோடு ஆராய்ஞ்சு செயல்படுத்த முனையணும். விவசாயத்துக்கு மானியம் அதிகமா கொடுக்கணும். ஆனா, இங்கே என்ன நடக்குது? விவசாயிகள் நம்ம நாட்டின் முதுகெலும்புன்னு சொல்லிக்கிட்டே, அந்த முதுகெலும்பை உடைக்கிற வேலையைத்தான் நம்ம அரசியல்வாதிகள் செய்துட்டிருக்காங்க. நதிகளை இணைக்கணும்னு தன்னோட சட்டமன்றப் பொன்விழா மேடையில் கலைஞர் பேசினாரே... பிரதமர், சோனியா முன்னாடி மேடையில் வேண்டுகோள் வெச்சுட்டா மட்டும் போதுமா? நினைக்கிறப்ப எல்லாம் அவங்களோட போன்ல பேச முடிகிற ஒருத்தர், இப்படி மேடையில் பேசிவிட்டுத் தன் கடமையைக் கழிச் சுக்கிறது சுத்த ஹம்பக்கா தெரியலையா?’’
‘‘குடும்பத் தலைவர், நடிகர், கட்சித் தலைவர்... இந்த மூன்றில் எது சந்தோஷமானது? ஏதாவது, ஒன்றை மட்டும்தான் சொல்லணும்?’’
‘‘சாதிக்கணும்னு நினைக்கிறவனுக்கு எல்லாமே சந்தோஷம்தான். சினிமா, குடும்பம், அரசியல் இந்த மூன்றுமே எனக்கு முக்கியம்தான். என் மனைவி என்னைவிடப் படிச்சவங்க. என் வெற்றிக்குப் பின்னால இருக்கிறவங்க அவங்கதான். நான் சோர்ந்து போகும் போதெல்லாம் அவங்கதான் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்காங்க. வீட்டுக்குப் போனால், நான் குடும்பத் தலைவன். ஞாயிற்றுக்கிழமைகள்ல நான் ஷூட்டிங்ல கலந்துக்கிறது கிடையாது. அது என் குழந்தைகளுக்கான நாள். வீட்டில் இருக்கும்போது சினிமாவை மறந்துவிடுவேன்; சினிமாவில் இருக்கும்போது அரசியலை மறந்துவிடுவேன்!’’
பேட்டியை முடித்துக்கொண்டு, மாணவர்களின் உற்சாக வழியனுப்புதலோடு விடைபெற்றார் விஜயகாந்த். கிளம்பும்போது நம்மிடம், ‘‘இளைய தலைமுறையினரிடம் இத்தனை நேரம் பேசிக்கொண்டு இருந்தது எனக்குள் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருக்கு. ‘எனது கனவு ஒரு நாள், ஒரு பொழுது, இன்று இல்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் விடியும்’ என்றார் கறுப்பு இன மக்கள் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். இந்த இளைஞர்களுடன் பேசி, அவர்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டு அறிந்துகொண்டதில், புதுத் தெம்பு கிடைச்சிருக்கு; அவர் சொன்ன அந்த வரும் காலம் எனக்கு வந்தாச்சு என்ற நம்பிக்கை வேர் விட்டிருக்கு! என்ன பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும் தலைவணங்கப் போவதில்லை என்கிற என் உறுதியான முடிவும் மேலும் வலுப்பட்டு இருக்கு!’’ என்று புன்னகையோடு அழுத்தமாக நம் கைகளைப் பற்றிக் குலுக்கி விடைபெற்றார் விஜயகாந்த்.
Posted by IdlyVadai at 7/29/2007 07:07:00 AM 2 comments
Labels: பேட்டி
பாரதிராஜா பேட்டி
சினிமா டைரக்டர் பாரதிராஜா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். படம் ஏன் காலதாமதம், அரசியல், இளையாராஜா-வைரமுத்து கூட்டணி, நானாபடேகருடன் மோதல்....
கேள்வி:- நீங்கள் டைரக்டு செய்து வரும் `பொம்மலாட்டம்' படம் 2 வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறதே. இந்த காலதாமதத்துக்கு காரணம் என்ன?
பதில்:- இரண்டு வருடங்கள் அல்ல. ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. இந்த படத்தை தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் டைரக்டு செய்வதுதான் காலதாமதத்துக்கு முதல் காரணம். முதலில் இந்த படத்துக்காக இந்தியில் நல்ல நடிகரை தேடினேன். நானா படேகர் `கால்ஷீட்' கிடைப்பதற்கு காலதாமதமானது. அடுத்ததாக மழை ஒரு காரணம். அடுத்து என் மகன் திருமணம் வந்தது. நுணுக்கி நுணுக்கி படம் செய்ததால், இன்னும் காலதாமதம் ஆனது. இப்போது படம் தயாராகி விட்டது. ஆகஸ்டு மாதம் படம் திரைக்கு வரும். இது, சர்வதேச தரம் வாய்ந்த படமாக இருக்கும்.
கேள்வி:- இந்த படத்தின் படப்பிடிப்பின்போது உங்களுக்கும், நானாபடேகருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டதே, உண்மையா?
பதில்:- அவை எனக்கு ஏற்பட்ட வீர தழும்புகள். சரியான ஆளுடன்தான் நான் மோதியிருக்கிறேன். நானாபடேகர், ஒரு புத்திசாலி. அற்புதமான கலைஞன். இரண்டு கத்திகள் ஒரே உறையில் இருக்கக்கூடாது அல்லவா? அதுதான் உரசலுக்கு காரணம். உரசி உரசி இரண்டு பேருமே கூர்மையாகி விட்டோம். இது, ஒரு ஆரோக்கியமான போர்தான். இந்த போரில், என்னிடம் இருந்து பல விஷயங்களை அவரும், அவரிடம் இருந்து சில விஷயங்களை நானும் கற்றுக்கொண்டோம். நானா படேகர், நடிப்பதே தெரியாமல் நடிக்கிற நடிகர். அவர் இந்த படத்தில் தமிழ் பேசி நடித்திருப்பது, ஒரு சிறப்பு.
கேள்வி:- `பொம்மலாட்டம்,' ஒரு சஸ்பென்ஸ்-திகில் படமா?
பதில்:- அது, சஸ்பென்ஸ்.
கேள்வி:- இந்த படம் சர்வதேச தரத்துடன் தயாராகி இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படியானால், ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுமா?
பதில்:- சர்வதேச தரம் வாய்ந்த படம்தான். அதனால் சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.
கேள்வி:- நீங்கள் எடுத்த அளவுக்கு, இப்போது யாராவது மிக யதார்த்தமாக கிராமிய படங்கள் எடுக்கிறார்களா?
பதில்:- இப்போது கிராமங்கள் தொலைந்து போய்விட்டன. பொருளாதார அடிப்பபடையில், பல கிராமங்கள் நொந்து போய்விட்டன. சமீபத்தில் நான் பார்த்து ரசித்த கிராமிய படங்கள், `காதல்.' சேரனின் `தவமாய் தவமிருந்து. அமீரின் `பருத்தி வீரன்.' இந்த படத்தை பாரதிராஜா படம் போல் இருந்ததாக பேசப்பட்டபோது பெருமைப்பட்டேன். என் முத்திரைகளில் இருந்து இன்னும் அழுத்தமாக, ரத்தமும், சதையுமாக அமீர் சொல்லியிருந்தார். நான் விட்ட இடத்தை அமீர் நிரப்பி இருந்தார்.
கேள்வி:- பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி மீண்டும் இணையுமா?
பதில்:- இமயமலைக்கு மூன்று பேர் சென்றார்கள். கொடியை நட்டார்கள். கொடியை நட்டபின், மீண்டும் கொடி நடப்படுமா? என்று கேட்டால் எப்படி? கொடி நட்டது, நட்டதுதான்.
கேள்வி:- உங்கள் மகன் மனோஜ் டைரக்டர் ஆகப்போகிறார் என்கிறார்களே?
பதில்:- மனோஜ் டைரக்டர் ஆகப்போவது உண்மைதான். ஒரு கதை தயார் செய்து இருக்கிறான். தொழில்நுட்ப ரீதியாக, என்னைவிட நிறைய தெரிந்து வைத்து இருக்கிறான். உலக சினிமா பற்றி அவனுக்கு அத்துப்படி. அவன் டைரக்டர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
கேள்வி:- அரசியலுக்கு போவதுபோல் போய்விட்டு, மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விட்டீர்களே, ஏன்?
பதில்:- 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் பொருளாதார பிரச்சினைகளை முன்வைத்து போராடி இருக்கிறேன். அதற்காக என் பொருளாதாரத்தையும், நேரத்தையும் இழந்து இருக்கிறேன். எனக்கு எப்போதுமே பதவி ஆசை ஏற்பட்டதில்லை. எம்.ஜி.ஆர். என்னை தோளுக்கு மேலே தூக்கிவைத்திருந்தபோதே நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. அன்று வராதா ஆசையா, இனிமேல் வரப்போகிறது? 1962-67ம் ஆண்டுகளில் நான் மிக சிறந்த பேச்சாளனாக இருந்தேன். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் இரண்டையும் கலந்து பேசுவேன். காமராஜர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டது முதல், என்னிடம் இருந்து அரசியல் ஈடுபாடு போய்விட்டது. நல்லவேளையாக, சினிமாவுக்கு வந்துவிட்டேன். நான், பாரதிராஜாவாக இருக்கவே விரும்புகிறேன்.''
Posted by IdlyVadai at 7/29/2007 06:27:00 AM 0 comments
Labels: பேட்டி
Saturday, July 28, 2007
திராவிட கட்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை - ராமதாஸ் பேட்டி
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்கு பிறகு பதவிக்கு வந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாமக ஆட்சியை நிறுவ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பாமக, தற்போது நடந்து வரும் திமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது. எனினும் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாமக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குறிப்பாக, உயர்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது எழுப்பி வருகிறார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி, எதற்கும் ஒரு அளவு வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடியாக ராமதாஸ், தனக்கு வாய்ப்பூட்டு போட முடியாது என்று அறிக்கை விட்டார். இந்த நிலையில் திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்ற பொருள்படும் படி பரபரப்பான பேட்டி ஒன்றை டெஹல்கா டாட் காம் என்ற இணையதளத்திற்கு அளித் துள்ளார். தைலாபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் அளித்த அந்த பேட்டியின் விவரம் வருமாறு:
கேள்வி: பல்வேறு விஷயங்களில் திமுக அரசை பாமக எதிர்த்து வருகிறது. இதை விளக்க முடியுமா?
பதில்: சென்னைக்கு அருகே 140 கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம்பெயரச் செய்யும் அளவிற்கு துணைநகரம் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டது. அதை எதிர்த்தோம். 5 ஆயிரம் குடும்பங்களை அப்புறப் படுத்தும் வகையிலான விமான நிலைய விரிவாக்கத்தையும் எதிர்த்தோம். இந்த விஷயங்களில் அரசு எங்களது கருத்துக்களை ஏற்றுக் கொண்டது. சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைவதை துவக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம்.
ஏனெனில் இது லட்சக் கணக்கான சிறிய வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடாகும்.கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் ஆறாக பெருகி ஓடும் என்று திமுக அரசு வாதிடுகிறது. நாங்கள் இந்த வாதத்தை ஏற்க தயாராக இல்லை. இப்படி பல்வேறு விஷயங்களில், கொள்கைகளில் கருத்து வேறுபாடு உள்ளது. நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம்.
கே: உங்கள் கட்சியின் செயல் பாட்டை திமுக தாங்கி கொள்ளா விட்டால் என்ன நடக்கும்?
ப: அரசியலில் எதையும் யாரும் கணிக்க முடியாது. பாமகவை பொறுத்தவரை நாங்கள் திமுக அரசை தொடர்ந்து ஆதரிப்போம்.
கே: நீங்கள் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந் திருக்கிறீர்கள். இந்த இரண்டு அணிகளின் தலைவர்களை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
ப: கருணாநிதியை பொறுத்தவரை நான் அவருடன் தொலைபேசியில் பேச விரும்பினால் இப்போதே என்னால் பேச முடியும். அவரை சந்திக்க வேண்டும் என்றால் நாளையே எனக்கு நேரம் ஒதுக்குவார். எனக்கு மட்டுமல்லாமல் எல்லா கூட்டணி தலைவர்களிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்கிறார். ஜெயலலிதாவுடன் தொலை பேசியில் பேச வேண்டும் என்றால் கூட இரண்டு வாரம் காத்திருக்க வேண்டும்.
கே: 2011ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாமகவின் எண்ணம் நிறைவேறுமா?
ப: 1957ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக பிடித்தது 15 இடங்கள் தான். 1962ல் 50 இடத்தை வென்ற திமுக, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அதுகூட ஒரு கூட்டணியை ஏற்படுத்தி தான் அவர்களால் ஆட்சிக்கு வர முடிந்தது. மக்களின் நம்பிக்கையை பெருவதை கொண்டே ஒரு கட்சி வளருகிறது.
கே: திராவிட கட்சிகளின் செயல்பாடு குறித்து உங்களது மதிப்பீடு என்ன?
ப: அந்த கட்சிகள் பெரிய அளவில் எதையும் சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் விரும்பியிருந்தால் வறுமையை அடியோடு ஒழித்திருக்க முடியும். கல்வியில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் கேரளாவுக்கு இணையாக எழுத்தறிவை பெறுவதில் தமிழகத்தை முன்னேற்றி இருக்க முடியும்.
பெருந்தலைவர் காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்தார். ஆனால் இவர்களோ கல்வியில் தனியாரை ஊக்குவித்தனர். மதுவை விற்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
கே:பாமகவின் வன்னியர் சங்கத்தில் அடித்தளம் பாதிக்கப்பட்டுள்ளதா?
ப: பாமக இதையெல்லாம் விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டது. 80களில் வன்னியர் சங்கத்தின் போராட்டங் களின் பயனாக மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் 108 சாதிகளுக்கு இடம் கிடைத்தது. தற்போது பாமக வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சியாக இல்லை. அனைத்து சாதியினரின் ஆதரவையும் அக்கட்சி பெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
Posted by IdlyVadai at 7/28/2007 08:50:00 PM 5 comments
Labels: பேட்டி
கலாம் பேட்டி
அப்சல் குருவின் கருணை மனு, பிரதமர் ஆவீர்களா?, தற்போதைய அரசியல் , இட ஒதுக்கீடு, பீகார் ஆட்சி கலைப்பு.. மற்றும் வேறு சில கேள்விகள்
கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு தாக்கல் செய்த கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காதது ஏன்? இதுதொடர்பாக உங்கள் மீது விமர்சனமும் எழுந்ததே?
பதில்:- அப்சல் குருவின் கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை அறிய, அந்த அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசிவரை, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை பதில் வந்திருந்தால், அதை நான் பரிசீலித்து இருப்பேன்.
கேள்வி:- அதுபோல், நீங்கள் வெளிநாட்டில் இருந்தபடி, பீகார் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியதே?
பதில்:- அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்போது நான் ரஷியாவில் இருந்தேன். அங்கிருந்தபடியே, பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசனை நடத்தினேன். அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். அவர் இரண்டு தடவை என்னுடன் அதுபற்றி விவாதித்தார். எனக்கு தேவையான விவரங்கள் எல்லாம் ஈ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், நான் ஆட்சி கலைப்புக்கு ஒப்புதல் அளித்தேன்.
கேள்வி:- ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவை நீங்கள் திருப்பி அனுப்பியதும் சர்ச்சை உண்டாக்கியதே?
பதில்:- அதுவும் சரியான முடிவுதான். முதலில் அதை நான் பாராளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பினேன். மத்திய அரசு அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியது. அந்த மசோதா தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேள்வி:- எதிர்காலத்தில், பிரதமர் பதவிக்கு பொது வேட்பாளர் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவியை ஏற்பீர்களா?
பதில்:- இந்த கேள்வி உங்களுக்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு கற்பனையாக தோன்றுகிறது. எனக்கு 5 கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டிய வேலை இருக்கிறது.
கேள்வி:- முதல்முறையாக பெண் ஜனாதிபதி கிடைத்து இருப்பது பற்றி?
பதில்:- இது உண்மையிலேயே நல்ல செய்தி.
கேள்வி:- வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய இரண்டு பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- இருவருமே திறமையானவர்கள், சிந்திக்கும் வகையை சேர்ந்தவர்கள், பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுபவர்கள். அவர்களுடன் எனக்கு சிறப்பான உறவு நிலவியது. மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மாற்றி அமைக்க வேண்டுமா?
பதில்:- தேவை இல்லை. அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளை தாங்கி நிற்கிறது. என்னை பொறுத்தவரை எனது பணியில் எந்த முட்டுக்கட்டையும் இருக்கவில்லை.
கேள்வி:- 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையை சமாளிக்க வழி என்ன?
பதில்:- கல்வி நிறுவனங்களில் `சீட்'களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கேள்வி:- இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்:- அணுசக்திக்கு நம்மை நாமே சார்ந்திருப்பதுதான் ஒரே வழி. நம்மிடம் நிறைய தோரியம் இருக்கிறது. அதை வைத்து அணுசக்தி உற்பத்தி செய்ய ஈனுலைகள் அமைக்க வேண்டும்.
கேள்வி:- தற்போதைய அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அரசியல் நிலைமை கவலை அளிக்கிறது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படுவது இல்லை. வளர்ச்சி பற்றி போதுமான அளவு பேசப்படுவது இல்லை. அதற்கு உயர் முன்னுரிமை கொடுப்பது இல்லை. உதாரணமாக, எந்த ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று எந்த கட்சியும் இலக்கு நிர்ணயிப்பது இல்லை.
எல்லா அரசியல் தலைவர்களும், வளர்ச்சிரீதியான அரசியலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. வளர்ச்சி பணி அடிப்படையில் தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
Posted by IdlyVadai at 7/28/2007 08:27:00 AM 2 comments
Labels: பேட்டி
Friday, July 27, 2007
FYI & B - இரண்டு உள்ளாடை விளம்பரத்துக்கு தடை
தனியார் டெலிவிஷன்களில் ஆபாச விளம்பரங்கள் இடம் பெறுவதை தடுக்க மத்திய தகவல் ஒலிபரப்பு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் டெலிவிஷன்களில் ஒளிபரப்பான 2 உள்ளாடை விளம்பரங்கள் சில ஆபாசமாக இருப்பதை கண்காணிப்பு குழுவினர் கண்டு பிடித்தனர்.
ஒரு விளம்பரத்தில் மாடல் பெண் கவர்ச்சி காட்டி உள்ளாடையை சலவை செய்வது போல் காட்சி இடம் பெற்று இருந்தது. இதே போல் மற்றொரு விளம்பரமும் ஆபாசமாகவும் அருவறுப்பாகவும் இருந்தது என்று கருதினார்கள்.
இதையடுத்து அந்த 2 உள்ளாடை விளம்பரத்துக்கும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இனி டெலிவிஷன்களில் இது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு முன் டெலிவிஷன் நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் எப். டி.வி. சேனல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து ஒளிபரப்பாகும் எப். டி.வி.யில் நள்ளிரவில் அழகிகள் அங்கங்கள் வெளியே தெரிய மிகக்குறைந்த கவர்ச்சி ஆடையுடன் நடந்து வருவதும், அரை நிர்வாண காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து அந்த டி.வி. ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எப். டி.வி. நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன் ஆபாச காட்சிகளை குறைத்துக் கொண்டது. இதையடுத்து எப். டி.வி. மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.
இதற்கு முன் மற்றொரு வெளிநாட்டு தொலைக்காட்சியான ஏ.எக்ஸ்.என். டி.வி.யும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பியதால் இந்தியாவில் அதன் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
டெலிவிஷன் நிகழ்ச்சிகள் தரமானதாகவும், பெண்களை ஆபாசமாக சித்தரிக்காமலும் இருக்க வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களே அது என்ன விளம்பரம் ? பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தபடுபவர்களுக்கு இங்கே ( கண்டிப்பாக வலைப்பதிவர்களுக்கு மட்டும். லேடிஸ் சமையல் குறிப்பு பதிவுக்கு போகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். )
Posted by IdlyVadai at 7/27/2007 02:36:00 PM 2 comments
Vasanth TV, Mega TV - நாளைய தலையெழுத்து
தமிழ் நாட்டு மக்களின் விதி இப்படி என்றால் நான் என்ன் செய்ய முடியும்.
இரண்டு காங்கிரஸ் பெரும் தலைவர்கள் டிவி சேனல்களை ஆரம்பிக்க போகிறார்களாம்!
1. வசந்த் டிவி - ஆரம்பிக்க போகிறவர் வசந்தகுமார் ( அதே வசந்த & கோவில் சேரிலிருந்து திரும்பி பார்த்து சிரிப்பவர் ). காங்கிரஸ் தலைவர் சோனியாவின் புகழ் பாடும், ஆனால் அதே சமயம் செய்திகள் ரொம்ப தரமாகவும், நடுநிலமையாகவும் இருக்கும் என்கிறார். ( ஐயோ )
இன்னும் இரண்டு மாதத்தில் இந்த டிவி சேனல் வரலாம், மத்திய் அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதாம் ( கிடைக்காதா பின்ன ).
( எதிர்பாக்கும் நிகழ்ச்சிகள்: சமையல் போட்டி, முதல் பரிசு - மிக்ஸி, இரண்டாம் பரிசு, ஃபேன், நீங்களும் பேச்சாளர் ஆகலாம் - குமரி அனந்தன். ஒரு டிவி குழு கோபால புரத்தில் எப்போது இருக்கும். டெல்லியிலிருந்து வருகிறவர்கள் அங்கே தான் முதலில் போவார்கள் :-)
2. மெகா டிவி - ஆரம்பிக்க போகிறவர் - தங்கபாலு - ஜூலை 27 தொடக்கம் என்று சொல்லுகிறார்கள். சுதாகர் ( விஜய் டிவி ) தான் இதில் முக்கிய பொருப்பில் இருக்க போகிறார் ( VP ). கட்சி சார்புநிலை இல்லாமல் நடுநிலமையாக இருக்கும் என்கிறார்கள்.
Posted by IdlyVadai at 7/27/2007 08:30:00 AM 2 comments
பிரதமர் ஏமாற்றி விட்டார் - கிரண் பேடி
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, தன்னை விட இரண்டு ஆண்டுகள் ஜூனியராக உள்ள அதிகாரிக்கு டில்லி போலீஸ் கமிஷனர் பதவி அளித்துள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து மூன்று மாதங்களுக்கு விடுமுறையில் சென்றுள்ள அவர், நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு செல்லப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
* பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் கிரண்பெடிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
* எனக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் என்னை கை விட்டு விட்டார்.
* அரசு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். என்னை விட ஜூனியர் ஒருவரை டில்லி போலீஸ் கமிஷனராக தேர்வு செய்தது நியாயமற்றது.
* மத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன் சிங் தான் இறுதி முடிவு எடுக்கக் கூடியவர். அவர் கூட சீனியாரிட்டி விஷயத்தில் என்னை நிராகரித்து விட்டார். எனக்கு நியாயம் கிடைக்க கோர்ட்டுக்கு செல்வது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறார்.
உங்கள் கருத்தை சைடுல சொல்லுங்க :-)
Posted by IdlyVadai at 7/27/2007 07:55:00 AM 6 comments
Labels: செய்திகள்
Thursday, July 26, 2007
பிளசன்ட் ஸ்டே - 4 மாடிகள் இடிக்க வேண்டூம் - ஐகோர்ட்
சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கொடைக்கானல் பிளசன்ட்ஸ் டே ஓட்டலில் 4 மாடிகளை 6 மாதத்துக்குள் இடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின்போது பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் கொடைக்கானலில் ஓட்டல் கட்டப்பட்டது. ரூ.1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் சட்ட விதிமுறைகறை மீறி கட்டப்பட்டிருப்பதாக பழனி பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்பது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் முகாபாத், சுகுணா ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அதில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டலின் 4 மாடிகளை 6 மாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக 1997ம் ஆண்டு திருத்தப்பட்ட நகராட்சி சட்டம் 3வது பிரிவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Posted by IdlyVadai at 7/26/2007 02:44:00 PM 0 comments
Labels: செய்திகள்
தவலை இட்லி - நன்றி 'அடுப்படி மாமி'
வலையுலக 'அடுப்படி மாமி' என்றால் அது ஜெயஸ்ரீ தான் என்று வலைப்பதிவு எழுதும் பெரிய குழந்தைக்கு கூட தெரியும். சில நாட்களுக்கு முன் 'தவலை இட்லி' பற்றி எழுதியிருந்தார். சரி, நீண்ட நாட்களாக அவரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் சில. ( ஜெயஸ்ரீ மாமியின் 108 பதிவை முன்னிட்டு )
1. செய்யும் பதார்த்தங்களை நீங்கள் என்றாவது சுவைத்து பார்த்திருக்கிறீகளா ?
2. போட்டோ எடுப்பதற்காக பதார்த்தங்களுக்கு மேகப் போடுவீர்களா ?
3. செய்யும் பதார்த்தங்களை பக்கத்து விட்டுக்கு கொடுப்பீர்களா ?
4. உங்கள் பக்கத்துவீட்டில் குயிருப்பவர் இன்னும் காலி செய்யவில்லையா ? (3 விடை ஆமாம் என்றால் )
5. தவலை இட்லி போல் தவலை வடை இருக்கா ? ( இட்லிவடை கூட்டணியில் பிரச்சனை உண்டு பண்ணாதீர்கள் )
6. செய்யும் ஐட்டங்களை பார்சல் செய்து அனுப்ப முடியுமா ?
7. 'மேட்ச் ஃபிக்சிங் கார்னர்' மாதிரி 'சைடு எபெக்ட்ஸ்' கார்னர் என்று தர முடியுமா ?
( வேறு கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம், காசா ? பணமா ?)
தவலை இட்லியை நான்-வெஜ்ஜாக எப்படி செய்வது ? இதோ நான் செய்து பார்த்ததின் படம். :-)
Posted by IdlyVadai at 7/26/2007 10:10:00 AM 10 comments
Labels: மொக்கை
Wednesday, July 25, 2007
ஷங்கரின் அடுத்த பாஸ் - ஷாருக்கான்
ஷங்கரின் அடுத்த ஹீரோ ஷாருக்கான் என்று செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஹிர்த்திக் ரோஷனை அனுகியுள்ளார், ஆனால் அவர் Krrish-2 நடிப்பதால் முடியாது என்று சொல்லிவிட்டதாக தகவல். இந்த படம் ஒரு SCI-FI, ஆக்ஷன் திர்ல்லர் என்றும் சில செய்திகள் சொல்லுவதை பார்த்தால் ரோபோவாக இருக்கலாம் என்று தெரிகிறது.
Posted by IdlyVadai at 7/25/2007 12:14:00 PM 0 comments
Labels: சினிமா
மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்
நடிகை மீரா ஜாஸ்மின், இசை கலைஞர் `மான்டலின்' ராஜேசை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம், திருப்பதியில் ரகசியமாக நடந்தது.
வாழ்த்துக்கள்
Posted by IdlyVadai at 7/25/2007 08:30:00 AM 0 comments
Labels: சினிமா
வாய்ப்பூட்டு போட முடியாது - ராமதாஸ்
கேள்வி:-பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து தமிழக அரசைப் பற்றி பல்வேறு விமர்சனங்களைச் செய்து வந்த போதிலும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ய என்ன காரணம்?
பதில்:-அந்தத் துறையின் அமைச்சர் அவருடைய மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் பெற வேண்டும் என்ற பாசத்தோடு தான் டாக்டர் ராமதாஸ் அந்தக் கருத்துக்களை தெரிவித்திருக்கக்கூடும். ஆனால் ஒன்று, எதற்கும் ஓர் எல்லையும் அளவும் உண்டு.
என்று கலைஞர் நேற்று சொல்லியிருந்தார். அதற்கு ராமதாஸ் பதில். :-)
ராமதாஸ் அறிக்கை:
நாட்டில் மக்களை, மாணவர்களை, தொழிலாளர்களை, ஆசிரியர்களை, அரசு ஊழியர்களைப் பாதிக்கின்ற சிக்கல்கள் எத்தனையோ ஏற்படுகின்றன. சில சிக்கல்கள் நேரடியாகவே எங்களுக்குத் தெரிய வருகின்றன. வேறு சில சிக்கல்கள் பாதிக்கப்பட்டவர்களால் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்த்து வைக்கும் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தினால் அரசின் கவனத்திற்கும், முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறேன்.
சிலவற்றை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகவும், வேறு சிலவற்றை பத்திரிகைகளின் வாயிலாகவும் முதல்-அமைச்சரின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றேன். ஜனநாயகத்தில் அப்படிச் செயல்படுவது ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயகக் கடமை.
இந்தக் கடமையை ஆற்றும் போது வாதாட வேண்டியவற்றுக்காக வாதாடுகிறேன்; போராட வேண்டியவற்றுக்காகப் போராடவும் செய்கிறேன். அரசின் செயல்பாட்டில் பாராட்ட வேண்டிய அம்சங்களை பாராட்டியும் வந்திருக்கிறேன். அப்படி ஜனநாயகக் கடமையை ஆற்றும் எனது செயல்பாட்டில் எல்லை மீறியது என்றோ, அளவுக்கு அதிகமானது என்றோ, வரம்பு கடந்தது என்றோ எதுவும் இருக்க நியாயமில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.
கடந்த ஆட்சியில் 5 ஆண்டுக் காலமும், இப்போது இந்த ஆட்சியில் ஓராண்டுக் காலமும் மக்களுடைய சிக்கல்களுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் நான் எடுத்து வைத்துள்ள கருத்துகளிலும், வாதங்களிலும் எல்லை கடந்தது என்றோ, அளவுக்கு மிஞ்சியது என்றோ, வரம்பு மீறியது என்றோ எதையும் சுட்டிக் காட்ட முடியாது.
எதற்கும் ஒர் எல்லையும், அளவும் வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை பத்திரிகைகள் தங்களது விருப்பம் போல, எச்சரிக்கை என்றும், அறிவுரை என்றும் வெளியிட்டிருக்கின்றன. முரசொலி பத்திரிகையும் ஒரு விரலைச் சுட்டிக்காட்டும் முதல்-அமைச்சரின் படத்தோடு அந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
முதல்-அமைச்சர் மூத்த அரசியல் தலைவர்; ஜனநாயகவாதி. ஜனநாயகத்தில் ஒரு அரசியல் கட்சியின் கடமை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர். அப்படிக் கடமையாற்றுவதில் எந்த ஒரு கட்சிக்கும் வாய்ப்பூட்டுப் போட முடியாது என்பதையும், வாய்ப்பூட்டு எதுவும் போடக் கூடாது என்பதையும் நன்கு புரிந்தும், உணர்ந்தும் வைத்திருப்பவர்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சிக்கு நட்புக் கட்சியாக இருந்தாலும், பொறுப்புள்ள எதிர்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. மக்களின் சிக்கல்களுக்காகக் குரல் கொடுக்கும் அதே நேரத்தில் தவறு என்று நாங்கள் கருதுவதையும், தவறு என்று மற்றவர்களால் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்படுபவைகளையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அவை பற்றி எங்களது கருத்துகளையும் வெளியிட்டு வருகிறோம்.
மற்றவர்களால் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரும் சிக்கல்களை அரசின் கவனத்திற்காகக் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதை பத்திரிகைகளின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். எங்களுடைய அந்த ஜனநாயகக் கடமை தொடரும்; மக்களுக்காக, அவர்களுடைய சிக்கல்களுக்காகக் குரல் கொடுத்துச் செயல்படும் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
( 25/07/07 Update )
கேள்வி:- பொதுமக்கள் பிரச்சினை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்து வரும் கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளாரே?
பதில்:- அண்ணா ஒருமுறை சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. அண்ணா தலைமையில் சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து மகத்தான வெற்றி பெற்றோம். விமர்சனம் செய்யும் போது மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அண்ணாவிடம் பயின்றவன் நான். அண்ணா தெரிவித்ததாவது... எனது அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்வது பூனை தனது குட்டியை கவ்வி எடுத்துச் செல்லும் போது எவ்வளவு மென்மையாக கவ்வி செல்லுமோ அதுபோல் சில கட்சிகள் தெரிவித்தன. சில கட்சிகள், பூனை எலியை பிடிப்பது போல் கண்டிக்கின்றன என அண்ணா சொன்னார்.
கேள்வி:- பாட்டாளி மக்கள் கட்சி பூனைக்குட்டியா? அல்லது எலியா?
பதில்:- பாட்டாளி மக்கள் கட்சி ஒரு புலி. சீண்டினால் புலி என்ன செய்யும் என்பது உங்களுக்கு தெரியும்.
Posted by IdlyVadai at 7/25/2007 08:00:00 AM 0 comments
Tuesday, July 24, 2007
Thank you Kalam !
Posted by IdlyVadai at 7/24/2007 08:55:00 PM 0 comments
Labels: செய்திகள்
subservientprogrammer
கீழே இருப்பவரிடம் ஏதாவது சொல்லி பாருங்கள் :-)
நான் laugh, cry, read, write என்று சம்பிரதாயமாக சொன்னேன், செய்தார்.
நக்கலாக piss, rotate the chair, break the computer என்று சொல்லி பார்த்தேன். அட அதையும் செய்தார்.
Tamil blog என்று ஏதோ சொல்ல வந்தேன். ஓடிவிட்டார் :-)
இந்த பதிவில் தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்
This works in IE 6.0 and above only
நீங்கள் சொன்ன வார்த்தைகளை பின்னூட்டதில் சொல்லலாம்.
Posted by IdlyVadai at 7/24/2007 02:33:00 PM 7 comments
Labels: நகைச்சுவை
ஆந்திராவில் நேற்று , இன்று
நேற்று:
அப்பாவி இந்தியன் சில நாட்களுக்கு முன் இந்த படத்தை போட்டு, இந்த மாதிரி தமிழ் நாட்டில் பார்க்க முடியுமா ? என்று கேட்டிருந்தார்.
இன்று
""If I reveal the history of your character, then you will be ashamed of why you were born from the womb of your mother. I will wash you out! I will wash you out!" - YSR ( Chief minister, AP )
"Paying back in the same tone is not my culture. The words used by the CM are an insult to all mothers." - Naidu ( leader of opposition, AP )
"I don't mind if the comments are expunged if found to be unparliamentary, but I won't apologise" - YSR
“All members in the house have mothers. Has anybody been born without a mother,” - Naidu
( விடியோ படம் : http://www.timesnow.tv/frmVideoDialog.aspx?VName=NV1566.wmv )
பிகு: அப்பாவி இந்தியன் என்பது எல்லோருக்கும் பொருந்தும் :-)
Posted by IdlyVadai at 7/24/2007 12:11:00 PM 2 comments
ஜீவஜோதி, அண்ணாச்சி பற்றிய கதை.
ஜீவஜோதி, அண்ணாச்சி பற்றிய கதை.
முன் கதை சுருக்கம்:
ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜீவஜோதியின் அழகைப்பார்த்து மயங்கிய ஹோட்டல் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக்கொடைக்கானலுக்கு(2001) கடத்திச் சென்று மலையில் தள்ளிக் கொலை செய்துவிட்டதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தன் பெற்றோருடன் தஞ்சைக்கு ஜீவஜோதி இடம் பெயர்ந்தார். அங்குள்ள கிருஷ்ணாநகரில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜீவா லேடீஸ் டெய்லர்ஸ் என்ற பெயரில் தையல் கடையை நடத்திவருகிறார். கணவரை இழந்து பெற்றோருடன் வசித்து வரும் ஜீவஜோதி, மறுமணம் செய்து கொள்ளும்முடிவுசெய்துள்ளார். இவருடன் பள்ளிக் காலத்தில் உடன் படித்த தண்டபாணி என்பவரையே ஜீவஜோதி கல்யாணம் செய்துகொள்ளவுள்ளார். ஏற்கெனவே தண்டபாணி, ஜீவஜோதியைக் காதலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அப்போது அதை ஏற்காமல் பிரின்ஸ் சாந்தகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு விட்டார்ஜீவஜோதி. தற்போது ஜீவஜோதியின் நிலையைப் பார்த்து வருந்திய தண்டபாணி, அவரைக் கல்யாணம்செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கவே அதை ஏற்றுக்கொண்டு தண்டபாணியைக் கரம் பிடிக்க முடிவு செய்தார்ஜீவஜோதி.
இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.
இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.
பின் கதை சுருக்கம்:
இந்தா வழக்கு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.
இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.
புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.
மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.
ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.
Posted by IdlyVadai at 7/24/2007 11:27:00 AM 5 comments
Labels: செய்திகள்
Monday, July 23, 2007
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-07-07
பாடிகாட் முனீஸ்வரன் இந்த முறை கடிதம் எழுதாமல் கூகிள் டாக்கில் வந்தார். அவரிடம் செய்த உரையாடலின் தொகுப்பு.
இட்லி: வணக்கம் பாடிகாட் எப்படி இருக்கீங்க ?
பாடிகாட் : வணக்கம், நலம். நீ எப்படி இருக்க ?
இட்லி: ஏதோ இருக்கேன். ஒரே மண்ட குடைச்சலா . எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு உன்னிடம் கேட்களாமா ? ?
பாடிகாட்: ஒவ்வொன்னா கேளு
இட்லி: பார்ப்பனீயம் என்றால் என்ன ?
பாடிகாட்: தான் தான் உயர்ந்தவன், தன்னைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எல்லோரும் உயர்வானவர்கள், மற்றவர்கள் எவரும் தாழ்ந்தவர்கள் தான் என்ற எண்ணம்.
இட்லி: உதாரணம் சொல்லு புரியலை
பாடிகாட்: இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் குடும்பம் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். மரம் வெட்டுவதற்கும், பஸ்ஸின் மீது கல் எறிவதற்கும், தீ வைப்பதற்கும் தான் லாயக்கு என்ற நினைப்பு.
இட்லி: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?
பாடிகாட்: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கனிமொழி இப்போது தான் திமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும் சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார் ( தினகரன் சம்பவத்திற்கு பிறகு சட்டசபையில் முதல்வர் கலைஞர் பேச்சு, 11.5.07 )
"கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால் தான் திமுக வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கபாடுள்ளது" (அதே முதல்வர் கலைஞர் பேச்சு 27.5.07 )
இப்ப புரியுதா ?
இட்லி: புரிஞ்ச மாதிரி இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. சரி, எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு மட்டும் தான் இருக்கு என்று நினைப்பார்களா ?
பாடிகாட்: ஆமாம். எதையும் தீர்மானம் செய்யும் அறிவு தனக்கே உண்டு என்ற எண்ணம். நான் எப்படி மாறினாலும், என்ன செய்தாலும், மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தன்னிடம் அன்றைய தேதியில் ஆசி பெற்றவர்கள் மட்டுமே பயன் பெற வேண்டும், தன்னிடம் சாபம் பெற்றவர்கள் நாசமாகப் போகவேண்டும் என்ற எண்ணம் இவை எல்லாம் பார்ப்பனீயத்தின் குணங்கள் தான்.
இட்லி: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?
பாடிகாட்: ஒரு முறை பி.ஜே.பியை ஆதரிப்பது, அடுத்த முறை சோனியாவை ஆதரிப்பது, ஒரு முறை இந்திரா காந்தியை எதிர்ப்பது, அடுத்தமுறை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது.. இப்படி மாறும் போது, அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது; ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவது.
இட்லி: இதைவிட்டால் வேறு ஏதாவது குணங்கள் ?
பாடிகாட்: தங்களை விட்டால் தலைமைக்கு யாரும் இல்லை என்ற முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்
இட்லி: புரியலையே
பாடிகாட்: கலைஞரையும், அம்மாவையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை சிறுதுரும்பாக நினைப்பது. தன் ஜாதி மட்டும் இல்லாமல், ஒடுக்கபட்டவர்களாக இருந்தாலும் அதன் தலைவனாக இருப்பார்கள். வலைப்பதிவு உலகத்தில் இது பிரபலம். உனக்கு தெரியாதா ?
இட்லி: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?
பாடிகாட்: வேதம் போன்ற தத்துவங்களைப் படிப்பார்கள். பூணூல் போன்ற பிரத்யேகமான குறியீடுகளை அணிந்துக்கொள்வார்கள். சிலர், அண்ணாவின் பள்ளியிலும், பெரியாரின் பாசறையிலும் படித்தபின், மஞ்சள் துண்டை மறக்காமல் அணிவார்கள். அது போல
இட்லி: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும் ?
பாடிகாட்: கீழே இருப்பவர்களிடம்(அதாவது அப்படி, தான் நினைப்பவர்ளிடம்) பேசும்போது மரியாதை குறைவாக வாடா போடா என்று ஏகவசனத்தில் இருக்கும். "நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா? நீ தாண்டா கொலைகாரன் போடா..." கேட்டால் "They expect respect!" என்று எகத்தாளமாக பதில் வரலாம்.
இட்லி: சரி, கடைசியாக பர்ப்பனச் சூழ்ச்சி என்றால் என்ன ?
பாடிகாட்: நாங்கள் பார்பானை எதிக்கவில்லை, பார்பனீயத்தைதான் எதிரிக்கிறோம் என்று ஜல்லியடிப்பது. இந்திரா காந்தி, பி.ஜே.பி அரசை எதிர்பார்கள், ஆனால் மந்திரி பதவிக்கு இவர்களை ஆதரிப்பார்கள்.
இட்லி: பார்ப்பனீய வேதத்தின் மூலக் கருத்து?
பாடிகாட்: உடல் அழியும்; ஆனால் ஆன்மாவிற்கு அழிவு கிடையாது என்று வேதத்தின் சாறைப் பிழிவார்கள்.
இட்லி: சுத்தமா புரியலை
பாடிகாட்: பதவி என்பது ஆத்மா, கொள்கை என்பது உடல். கொள்கை அழிந்தாலும், பதவி அழியாது. வேறு கொள்கையில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?
இட்லி: எனக்கு அவசரமா டாய்லெட் போகனும். பை.
பாடிகாட்: பை பை
Posted by IdlyVadai at 7/23/2007 03:30:00 PM 12 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
111 ?
007 ஜேம்ஸ் பாண்ட் என்றால் 111 என்ன ?
Posted by IdlyVadai at 7/23/2007 11:04:00 AM 7 comments
Labels: மொக்கை
Friday, July 20, 2007
மூன்று முட்டை: தமிழக காங்கிரஸ் நன்றி
சத்துணவில் மூன்று முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த தலைப்பையும் செய்தியையும் படித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை :-)
Posted by IdlyVadai at 7/20/2007 11:42:00 AM 0 comments
Labels: நகைச்சுவை
ராஜ் டிவி நிகழ்ச்சிகள் ஒரு நாள் ரத்து
கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஒரு நாள் மட்டும் ராஜ் டிவி நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யாமல் நிறுத்தி வைப்பது என, தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
இப்போராட்டத்துக்கு ஒத்துழைக்காவிட்டால் எஸ்சிவி நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தவும் இக்குழு முடிவு செய்துள்ளது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவர் டி.வி. ரமேஷ் தலைமை வகித்தார்.
செப்டம்பர் 15ஆம் தேதி ஒளிபரப்பைத் தொடங்க உள்ள "கலைஞர் டிவி'யை வரவேற்பதுடன் சிறப்பான வெற்றி பெற வாழ்த்தும் தீர்மானங்கள் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Posted by IdlyVadai at 7/20/2007 11:41:00 AM 1 comments
Labels: செய்திகள்
தமிழக அரசு கேபிள் டிவி - கலைஞர்
தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். எனவே அரசே கேபிள் டி.வி.யை ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கேபிள் டி.வி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தொழில் நுட்பத் துறை அதிகாரிகளை முதல்- அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார். அவர்கள் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள்.
அப்போது டாக்டர்ராமதாஸ் "தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டுமானால் எல்லா கேபிள் டி.வி.க்களையும் அரசே கையகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்'' என்று ஆலோ சனை தெரிவித்தார்.
தனியார் கேபிள் டி.வி.க் களை கையகப்படுத்தும் பட்சத்தில் அதில்சட்ட சிக்கல்கள் எழலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதனால் தமிழக அரசே சொந்தமாக கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட முடிவு எடுக்கப் பட்டுள்ளது. விரைவில் அரசின் கேபிள் டி.வி. நடை முறைக்கு வர உள்ளது.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
புதிய கேபிள் டி.வி.யை தமிழக அரசு சொந்தமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கேபிள் டி.வி.யையும் அரசு கையகப்படுத்த முடியாது. அது தேவை இல்லாத சட்ட பிரச்சினைகளை உருவாக் கலாம். எனவே தான் அரசே சொந்தமாக கேபிள் டி.வி.தொழிலில் ஈடுபடுகிறது.
`டாஸ்மாக்' போல கேபிள் டி.வி.யும் தமிழக அரசுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும். முதல் கட்டமாக கேபிள் டி.வி. தொழில் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வருமானம் அரசின் மேம்பாட்டு பணிகளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது முதல் கட்ட அளவில் தான் உள்ளது.
புதிய கேபிள் டி.வி.யை அமல்படுத்த கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை. அரசின் கேபிள் டி.வி.யை சிறப்பாக கூடுதல் லாபத்துடன் இயங்க வைக்கும் வழிகள் குறித்து தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடன் நாங்கள் கருத்து கேட்டு இருக்கிறோம்.
நிபுணர்களின் முழுமை யான ஆலோசனை கிடைத்த தும் அரசின் புதிய கேபிள் டி.வி. நடைமுறைக்கு வரும் முதலிலேயே தமிழ்நாடு முழுவதிலும் அரசின் கேபிள் டி.வி.யை கொண்டு வர இய லாது. படிப்படியாக அரசின் கேபிள் டி.வி. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி
Posted by IdlyVadai at 7/20/2007 11:29:00 AM 1 comments
Thursday, July 19, 2007
சந்திரசேகர் ஒரு நினைவு – சோ
சந்திரசேகர் ஆட்சியின் போது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது, ஜெயலலிதா மற்றும் ராஜீவ் காந்தியின் வற்புறுத்தலினால்தான் – என்ற ஒரு பிரச்சாரம் அன்று முதல் இன்று வரை நடக்கிறது. அதில் சற்றும் உண்மை கிடையாது. ராஜீவ் காந்தியும், ஜெயலலிதாவும் அதை கோரினார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை வைத்து சந்திரசேகர் தனது நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடனேயே, அவரை நான் சில முறை சந்தித்தபோது, விடுதலைப்புலிகளின் விவகாரங்கள் பற்றி அரசிடமிருக்கும் தகவல்கள் குறித்து, பெரும் கவலை தெரிவித்தார் அவர்.
இதைத் தவிர ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். சந்திரசேகர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த போது என்னிடம், ""விடுதலைப்புலிகளுக்கு இங்கே கிடைக்கும் ஆதரவு விபரீதமானது. இதை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தலாமா என்று கூட நான் யோசிக்கிறேன்'' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் இயங்குவது பற்றியும், தி.மு.க. அரசு அவர்களுக்குச் செய்த உதவிகள் பற்றியும், அவரிடம் பல தகவல்கள் அப்போதே சேர்ந்திருந்தன. ஆட்சிக்கு வந்த பிறகு, அவருக்கு அதிகாரபூர்வமான தகவல்களும் கிட்டின.
தமிழக அரசு, தான் (மத்திய அரசு) அளிக்கும் தகவல்களை விடுதலைப்புலிகளுக்கு அளித்து விடுகிறது என்பது தெரிந்த பிறகுதான், அவர் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார். இது பற்றி எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவர் எடுத்த முடிவு ராஜீவ் காந்திக்கும், ஜெயலலிதாவுக்கும் பிடித்ததாக இருந்தது என்பது உண்மையே. ஆனால் அது, அவர்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல மாதங்களாகவே தன் மனதில் ஏற்பட்டிருந்த எண்ணத்திற்கு ஆட்சியில் மேலும் சான்றுகள் கிடைத்த போது, சந்திரசேகர் தன் மனசாட்சியின்படி, தன்னுடைய தீர்மானத்தின்படி, நடவடிக்கை எடுத்தார். அவ்வளவுதான்...
சந்திரசேகர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்திருந்தால், நிச்சயமாக அவர் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருந்திருப்பார். ஆட்சியில் இருந்த குறுகிய காலத்திலேயே, அவர் சற்றும் தயங்காமல், எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தார். அயோத்தி பிரச்சனைக்குக் கூட ஒரு முடிவு காணக் கூடிய அளவுக்கு, அவர் பெரும் விவேகத்துடன் செயல்பட்டார். அதுவரை சந்தித்துப் பேசத் தயாராக இல்லாத இரு தரப்பினரும், அவர் ஆட்சியின் கீழ்தான்
சந்தித்துப் பேசவே சம்மதித்தனர்.
வளைகுடா யுத்தத்தின் போது, அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்கிற முடிவாக இருக்கட்டும் – தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படுகிற முடிவாக இருக்கட்டும் – அந்நிய செலாவணி சேமிப்பு விஷயத்தில் தேவைப்பட்ட ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கிற விஷயமாக இருக்கட்டும் – எதுவாக
இருந்தாலும், சந்திரசேகர் மன உறுதியுடன் செயல்பட்டார். இத்தனைக்கும் அவர் தலைமை தாங்கியது ஒரு சிறுபான்மை அரசுக்கே. ஆனால் அவர் செயல்பட்ட வேகம், ராஜீவ் காந்திக்கே ஒரு சந்தேகத்தை உருவாக்கி விட்டது. "இவர் அதிக நாள் பதவியில் தொடர்ந்தால், மக்களிடையே இவருடைய செல்வாக்கு வளர்ந்து விடும். இது காங்கிரஸுக்கு நல்லதல்ல' என்ற முடிவுக்கு ராஜீவ் காந்தி வருமளவுக்கு
சந்திரசேகர் செயல்பட்டார்.
– "துக்ளக்' – 9.9.98 இதழ்
Posted by IdlyVadai at 7/19/2007 01:55:00 PM 2 comments
Labels: கட்டுரை
FLASH: ஜெ ஷெகாவத்துக்கு ஆதரவு !
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி ஆதரவு வேட்பாளர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு அதிமுக திடீர் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்றைய தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் ஷெகாவத்துக்கு வாக்களிக்கவுள்ளனர்.
(இன்று காலை சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.)
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜயகாந்த் இன்று காலை தலைமை செயலகத்துக்கு வந்தார். படப்பிடிப்பு இடைவேளையில் வந்த அவர் தலைமை செயலகத்தில் இருந்த கூட்டத்தை பார்த்ததும் ஓட்டு போடாமலேயே திரும்பி சென்று விட்டார். இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சூட்டிங்கை பாதியில் விட்டு விட்டு வந்தேன். ஓட்டுப்போட கூட்டமாக இருக்கிறது. சூட்டிங்கை முடித்து விட்டு பிறகு வந்து ஓட்டு போடுவேன், என்றார்
( சினிமா டிக்கேட் வாங்குவதற்கு நாம் வரிசையில் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் நிக்கலாம், தப்பில்லை )
Posted by IdlyVadai at 7/19/2007 11:25:00 AM 0 comments
Labels: அரசியல்
Subject: Farewell
இன்று காலை மின்னஞ்சலில் வந்தது. நிச்சயம் Farewell மெயில் எழுதுவதற்கு இதை templateஆக பயன்படுத்தலாம் :-)From: [redacted]
To: A whole lot of redacted people from JPMChase
Subject: Farewell
Dear Co-Workers and Managers,
As many of you probably know, today is my last day. But before I leave, I wanted to take this opportunity to let you know what a great and distinct pleasure it has been to type "Today is my last day."
For nearly as long as I've worked here, I've hoped that I might one day leave this company. And now that this dream has become a reality, please know that I could not have reached this goal without your unending lack of support. Words cannot express my gratitude for the words of gratitude you did not express.
I would especially like to thank all of my managers both past and present but with the exception of the wonderful Saroj Hariprashad: in an age where miscommunication is all too common, you consistently impressed and inspired me with the sheer magnitude of your misinformation, ignorance and intolerance for true talent. It takes a strong man to admit his mistake - it takes a stronger man to attribute his mistake to me.
Over the past seven years, you have taught me more than I could ever ask for and, in most cases, ever did ask for. I have been fortunate enough to work with some absolutely interchangeable supervisors on a wide variety of seemingly identical projects - an invaluable lesson in overcoming daily tedium in overcoming daily tedium in overcoming daily tedium.
Your demands were high and your patience short, but I take great solace knowing that my work was, as stated on my annual review, "meets expectation." That is the type of praise that sends a man home happy after a 10 hour day, smiling his way through half a bottle of meets expectation scotch with a meets expectation cigar. Thanks Trish!
And to most of my peers: even though we barely acknowledged each other within these office walls, I hope that in the future, should we pass on the street, you will regard me the same way as I regard you: sans eye contact.
But to those few souls with whom I've actually interacted, here are my personalized notes of farewell:
To Philip Cress, I will not miss hearing you cry over absolutely nothing while laying blame on me and my coworkers. Your racial comments about Joe Cobbinah were truly offensive and I hope that one day you might gain the strength to apologize to him.
To Brenda Ashby whom is long gone, I hope you find a manager that treats you as poorly as you have treated us. I worked harder for you then any manager in my career and I regret every ounce of it. Watching you take credit for my work was truly demoralizing.
To Sylvia Keenan, you should learn how to keep your mouth shut sweet heart. Bad mouthing the innocent is a negative thing, especially when your talking about someone who knows your disgusting secrets. ; )
To Bob Malvin (Mr. Cronyism Jr), well, I wish you had more of a back bone. You threw me to the wolves with that witch Brenda and I learned all too much from it. I still can't believe that after following your instructions, I ended up getting written up, wow. Thanks for the experience buddy, lesson learned.
Don Merritt (Mr. Cronyism Sr), I'm happy that you were let go in the same manner that you have handed down to my dedicated coworkers. Hearing you on the phone last year brag about how great bonuses were going to be for you fellas in upper management because all of the lay offs made me nearly vomit. I never expected to see management benefit financially from the suffering of scores of people but then again, with this company's rooted history in the slave trade it only makes sense.
To all of the executives of this company, Jamie Dimon and such. Despite working through countless managers that practiced unethical behavior, racism, sexism, jealousy and cronyism, I have benefited tremendously by working here and I truly thank you for that. There was once a time where hard work was rewarded and acknowledged, it's a pity that all of our positive output now falls on deaf ears and passes blind eyes. My advice for you is to place yourself closer to the pulse of this company and enjoy the effort and dedication of us "faceless little people" more. There are many great people that are being over worked and mistreated but yet are still loyal not to those who abuse them but to the greater mission of providing excellent customer support. Find them and embrace them as they will help battle the cancerous plague that is ravishing the moral of this company.
So, in parting, if I could pass on any word of advice to the lower salary recipient ("because it's good for the company") in India or Tampa who will soon be filling my position, it would be to cherish this experience because a job opportunity like this comes along only once in a lifetime.
Meaning: if I had to work here again in this lifetime, I would sooner kill myself.
To those who I have held a great relationship with, I will miss being your co-worker and will cherish our history together. Please don't bother responding as at this very moment I am most likely in my car doing 85 with the windows down listening to Biggie.
One!
Posted by IdlyVadai at 7/19/2007 11:07:00 AM 3 comments
Labels: நகைச்சுவை
கனிமொழி கருணாநிதி
இன்று வந்த செய்தி:
தமிழக அரசு உதவியுடன் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு டாக்டர்கள் பலரும், பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் பார்ப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று கனிமொழி கருணாநிதி எம்.பி. வருத்தத்துடன் கூறினார்
இதில் செய்தியில் பிரமாதமாக ஒன்றும் இல்லை, ஆனால் கவிஞர் கனிமொழி என்று அழைத்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் (நேற்று முதல் ?) கனிமொழி கருணாநிதி எம்.பி என்று அழைக்க தொடங்கியுள்ளது.
"என்னை என் சொந்த தகுதிகளை வைத்துத்தான் அடையாளம் காட்ட விரும்புகிறேனே தவிர, கருணாநிதியின் மகள் என்ற அடையாளம் தேவையில்லை. அவரை அன்பான அப்பாவாக மட்டுமே பார்க்கிறேன்" - கனிமொழி
Posted by IdlyVadai at 7/19/2007 10:56:00 AM 6 comments
Labels: செய்திகள்
Wednesday, July 18, 2007
வெட்கமில்லை வெட்கமில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரதிபா பாட்டீலின் மீது சாட்டப்பட்டுள்ள மிக வலுவான குற்றச்சாட்டுகள் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனையும் அதிர்ச்சியடைய வைக்கின்றன.
இக்குற்றச்சாட்டுகளுக்கான பிரதிபா பாட்டீலின் பதிலோ மிக சாதுர்யமானது. "நாட்டின் மிகப் பெரிய பதவிக்காக போட்டியிடுகிறேன். பிரசாரம் என்ற பெயரில் என் மீது குற்றம்சாட்டுவது மூலமாக அந்தப் பதவியின் கண்ணியத்தைக் குறைத்து விடாதீர்கள்; இதுவரை எனது 50 ஆண்டுகால பொதுவாழ்வில் எனது மனசாட்சியின்படியே நடந்து வந்துள்ளேன்'.
மிக வினோதமான பதில் இது! மனசாட்சி என்ற அளவுகோல் எப்படி இவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக முடியும்? ஓர் ஊழல்வாதிக்கு அவரது மனசாட்சிப்படி லஞ்சம் வாங்குவது குற்றம் அல்ல; ஒரு திருடனுக்கு அவனது மனசாட்சிப்படி திருடுவது குற்றம் அல்ல; இதேபோல் கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் அவர்களது மனசாட்சியின்படி கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் குற்றம் அல்ல!
அவருக்கு வக்காலத்து வாங்கும் வகையில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி இது ஒன்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் அல்ல. இந்தியாவைப் பொருத்தவரை நேரடியாக மக்களே குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாது. இங்கு எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே வோட்டளித்து தேர்வு செய்யும் பதவி இது என்று "அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே' என்ற அடிப்படை உண்மையைக்கூட மிக லாவகமாக மறைத்திருக்கிறார்! "மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பத்தை அறிந்து நடந்து கொள்ளத் தேவையில்லை; அது எங்களுக்கு அவசியமும் இல்லை; ஓட்டுப்போட்டுவிட்டாயா உனது வேலை முடிந்தது, ஓரம்போ! மீதி விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' - என்று வாக்காளரின் கன்னத்தில் அறையாத குறையாகப் பேசியிருக்கிறார். ஆஹா, திருவாளர் பொதுஜனத்தின் மீதுதான் இவருக்கும் இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் கூட்டணிக்கும் எவ்வளவு மரியாதை?
மே-13 உ.பி. முதல்வராகப் பதவி ஏற்கிறார் மாயாவதி. பதவி ஏற்று ஒருமாதகாலம் கூட ஆகவில்லை. மாயாவதியும் சோனியாவும் தில்லியில் சந்தித்துக் கொள்கிறார்கள். பேச்சுகளும் பேரங்களும் நடக்கின்றன. உ.பி. மாநிலத் திட்டங்களுக்கு ரூ. 70,000 கோடி நிதி தருவதாக மத்திய அரசு அறிவிக்கிறது; மாயாவதி மீதான ரூ. 175 கோடி தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கைச் சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் வாபஸ் பெறுவதாக உ.பி. மாநில ஆளுநர் டி .வி. ராஜேஸ்வர் அறிவிக்கிறார்! பிறகென்ன, தனது நலன், உ.பி.யின் நலன் இரண்டும் கவனிக்கப்பட்டாகி விட்டது! இனி தேசநலன் பற்றி எனக்கென்ன அக்கறை என்ற ரீதியில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரே எங்கள் வேட்பாளர் எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார், மாயாவதி! புதிய குடியரசுத் தலைவருக்கான முதல்கட்டத் தேர்தல் பணி இனிதே வெற்றியுடன் முடிந்தது!
அடுத்தகட்டம் ஆரம்பமாகிறது! அடுத்த குடியரசுத் தலைவர் "தான் கேட்ட நேரத்தில், கேட்ட இடத்தில் கையெழுத்திடும் நபராக இருக்க வேண்டும்' என்ற நோக்கில் தங்களது அணியின் வேட்பாளரைத் தேட ஆரம்பித்தார் சோனியா! பிரணாப் முகர்ஜி, கரண்சிங், சிவராஜ் பாட்டீல்... என ஒவ்வொருவராக ஓரங்கட்டப்பட்டு கூட்டணியின் ஏகோபித்த ஆதரவுடன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் பிரதிபா பாட்டீல்!
போனஸôக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சிவசேனையும் பிரதிபாவை ஆதரிக்கிறது! பிரதிபாவை வேட்பாளராக நிறுத்தியதால் பெண்ணினத்திற்கே பெருமை தேடித் தந்துவிட்டதாக கூட்டணியினர் கூத்தாடினர்!
பிரதிபா மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பத்திரிகைகளும், பய செய்திகளும், அரசியல் வல்லுநர்களும், கட்டுரையாளர்களும் வெளிச்சம் போட்டுக் காட்டியபொழுது, காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும், இடதுசாரிகளும் "தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே' என்ற காந்திய வழியைப் பின்பற்றியது!
லஞ்சம், ஊழல் கறைபடியாத பல தலைவர்களை இன்றும் கொண்டுள்ள கட்சி இடதுசாரி கட்சிகள் மட்டுமே! ஆனால் இடதுசாரிகள், இன்று பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளுடன் கூடிய பிரதிபா பாட்டீலை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது வேட்பாளர் இவர்தான் என்று சுட்டிக்காட்ட, அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் "ஆமாம்' - என்று தலை அசைத்தார்கள்!
அனைத்துக் கட்சிகளும் சென்ற தேர்தலில் அப்துல் கலாமை ஆதரித்தபொழுது, தோல்வி உறுதி என்ற நிலையிலும் தங்களின் நிலைப்பாடு முக்கியம் என்று கேப்டன்
லட்சுமி சைஹலை அப்துல் கலாமுக்கு எதிரான வேட்பாளராக நிறுத்திய இவர்களது துணிச்சல் இப்போது எங்கே போயிற்று?
இத்தனைக்கும் அப்போது இடதுசாரிகளின் ஆதரவு காங்கிரஸýக்கோ ஆளும் பாஜக அணிக்கோ தேவையேயில்லாத ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசோ இடதுசாரிகளின் ஆதரவிலும் தயவிலும்தான் காலம் தள்ள வேண்டிய நிலை! இத்தகைய வலுவான நிலையில் இருக்கும்போது சென்ற முறை போட்டியிடச் செய்த கேப்டன் லட்சுமியையே இந்த முறையும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியிருக்கலாமே! பிரதிபா பாட்டீலை மிக மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார்கள்!
சமீபகாலமாகவே நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் மத்தியில் இடதுசாரிகளின் தயவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சோனியாவின் தயவில் தற்போதைய இடதுசாரிகளின் அரசியல் இருக்கிறதா என்ற சந்தேகமே வருகிறது! மொத்தத்தில் இடதுசாரிகள் இடது "ஸôரி'களாக மாறி வருகிறார்கள்!
மகளிர் உரிமையை நிலைநாட்ட கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விடுவாரா தமிழக முதல்வர் கருணாநிதி? "அனைத்துக் கட்சி அருமைச் சகோதரிகாள் வாரீர்! வாரீர்! அணி அணியாக வாரீர்! - அன்னை நாடு காத்திட என்றுமே அழியா ஜனநாயகம் பூத்திட அன்னையொருவர் ஏறுகிறார் அரியாசனம்! அதற்கு வாழ்த்தளிக்க - வரவேற்று மகிழ வாரீர்! வாரீர்!' என்று தனக்கே உரிய பாணியில் அழைத்தார்! தமிழகம் முழுவதுமிருந்து கார், வேன், பேருந்துகளில் வருகை! கூட்டணிக் கட்சித் தலைவர் ராமதாúஸ அதிர்ந்து போகும் அளவுக்குப் பேரணி!
சென்னை மாநகரமே திக்குமுக்காடியது! "பெண்ணினத்திற்குப் பெருமை தேடிய கலைஞர் வாழ்க!', "பிரதிபா பாட்டீல் வெல்க!' என விண்ணதிர முழக்கம்! மேலும் ஒரு வரலாறு படைத்தார் கருணாநிதி!
1937-ல் நீதிக்கட்சி தொடங்கியது. 1938-ல் திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. இதன்மூலம் திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் தற்போதைய வயது சரியாக 80. நீதிக்கட்சி 1944-ல் திராவிடர் கழகம் ஆனது. திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவி அரசியலாகப் பரிணாம வளர்ச்சி எடுத்து 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2007-ல் இன்றும் அதே திமுக ஆட்சிதான்! துரதிருஷ்டம் என்னவென்றால் இந்த 40 ஆண்டு கழக ஆட்சிகளின் காலத்தில், சட்டசபையில் கருணாநிதியின் 50 ஆண்டு பொன்விழா சாதனை காலத்தில், 80 ஆண்டு திராவிட இயக்க பாரம்பரியத்தில் ஒரு தமிழ்ப்பெண்கூட குடியரசுத் தலைவருக்கான முழுத்தகுதிகளுடன் உருவாக முடியாததுதான்!
பெண்ணினத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடி வரும் தமிழக முதல்வர் குறைந்தபட்சம் தனது 5 முறை முதல்வர் பதவியில் ஒரு முறையாவது தனது கட்சியை சார்ந்த ஒரு பெண்ணை முதல்வர் பதவியில் அமர்த்தி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்ணினத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கலாம்! ஒருவேளை அதுதான் 2 முறை ஜெயலலிதா முதல்வராக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோமே; அது திமுகவின் சாதனைதானே என்று விட்டுவிட்டாரோ என்னவோ?!
அடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலைப்பாட்டைப் பார்க்கலாம்! முதலில் இருந்தே பைரோன்சிங் ஷெகாவத்தான் எங்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்று உறுதியாக இருந்தது. பிறகு சோனியா - மாயாவதி திடீர் கூட்டு, பிரதிபாவுக்கு சிவசேனை ஆதரவு, மூன்றாவது அணி கைவிரிப்பு... என அடிமேல் அடிவிழ முற்றிலும் நிலை தடுமாறியது! "மூன்றாவது அணி கலாமை ஆதரித்தால் தான் போட்டியில் இருந்து விலகத் தயார்' என ஷெகாவத் மூலமாகவே அறிக்கைவிட்டது! இரண்டாவது முறை போட்டிக்கு கலாம் மறுத்துவிடவே நிலைமை இன்னும் மோசமாகியது! வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்சிங்... என பாஜகவின் அனைத்து முதல்கட்டத் தலைவர்கள் புடை சூழ தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்குச் சென்று ஷெகாவத்தை சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய வைத்தார்கள்.
ஊழல் சம்பாத்தியத்துக்கும், சொத்துகளுக்கும்தான் இதுவரை "பிநாமி' கேள்விப்பட்டிருக்கிறோம்! ஆனால் தனது கட்சியின் சார்பாக ஒரு "பிநாமி' வேட்பாளரையே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவருக்காக கட்சித் தலைவர்களும் கூட்டணித் தலைவர்களும் நாடு முழுவதும் வீடுவீடாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வேண்டி "பாஜக ஒரு வித்தியாசமான கட்சி' என்பதை மீண்டும் உறுதி செய்தது.
இறுதியாக மூன்றாவது அணியின் லட்சணத்தைப் பார்ப்போம். முதலில் யார், யார் பெயரையோ யோசித்தார்கள். ஊடகங்களிடம் கிசுகிசுத்தார்கள். இறுதியில் ஒன்றும் உருப்பட்டு வராது எனத் தோன்றவே "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்போல்' அப்துல் கலாமே இரண்டாவது முறை நீடிக்கட்டுமே என்று தங்களது பெருந்தன்மையைக் காட்டினார்கள்'! அதை கலாம் முதலில் நாசூக்காகவும் பிறகு நேரடியாகவும் மறுத்த பிறகு மூன்றாவது அணியின் நிலைப்பாடு மிக மோசமானது! பிரதிபா, ஷெகாவத் இருவருக்கும் நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை, தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தார் ஜெயலலிதா!
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது ஊர் ஊராய், தெருத்தெருவாய், வீடுவீடாய்ச் சென்று "எங்களுக்கு வாக்களிக்க மறந்து விடாதீர்கள், உங்கள் ஜனநாயகக் கடமையை மறந்து விடாதீர்கள்' என்று புன்னகைத்து பிரசாரம் செய்யும் இவர்கள் தங்களுக்கும் அத்தகைய கடமை உண்டு என்ற அடிப்படை நியாயத்தைக்கூட குப்பைத் தொட்டியில் எறிந்தார்கள்! தோற்றாலும் பரவாயில்லை, பிரதிபாவுக்கும் ஷெகாவத்துக்கும் எதிராக எங்கள் வேட்பாளரை நிறுத்துவோம்; ஜனநாயகத்தின் மாண்பைக் காப்போம் என்றல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்!
பாவம், என்னதான் செய்வார்கள் அவர்கள்?! லக்னௌ, ஹைதராபாத், சென்னை, தில்லி... என ஊர் ஊராய்ச் சென்று கூடிப்பேசியும் தங்கள் அணியின் தலைவரையே தேர்ந்தெடுக்க முடியாத நிலை. அவர்களுக்குள்ளேயே போட்டா போட்டி! இந்நிலையில் எங்கே இவர்கள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள்?
இறுதியாக பெண்ணுரிமை பற்றி பேசுபவர்களுக்கும் அதன் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கும் ஒரு செய்தி. (எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமும் தர்க்கமும் செய்யும் தர்க்கவாதிகளை இங்கு மறப்போம்) இத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பிரதிபாவைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் இன்றைய மத்திய ஆளும் கூட்டணி பெண்ணினத்தை கௌரவப்படுத்துவதற்குப் பதிலாக அதை அவமானப்படுத்தியிருக்கிறது! களங்கப்படுத்தியிருக்கிறது!
ஒளவையார் முதல் சுனிதா வில்லியம்ஸ் வரை இந்த நாட்டின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ ஆயிரம் பேர்! வேலுநாச்சியார், ஜான்சிராணி, சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அருணா ஆஸப் அலி, உஷா மேத்தா, நிர்மலா தேஷ்பாண்டே, சௌந்தரம் ராமச்சந்திரன், இந்திரா காந்தி, கேப்டன் லட்சுமி, கிருஷ்ணம்மாள் ஜகநாதன், மேதா பட்கர், உஷாராய், அருந்ததி ராய், ருக்மிணி அருண்டேல், எம்.எஸ். சுப்புலஷ்மி, லதா மங்கேஷ்கர், பி. சுசீலா, எஸ். ஜானகி, டாக்டர் சாந்தா, ஷபனா ஆஷ்மி, இந்திரா நூயி, கிரண்பேடி, கல்பனா சாவ்லா, பி.டி. உஷா, சானியா மிர்சா...என சுதந்திரப் போராட்டம் தொடங்கி அரசியல், வரலாறு, கல்வி, விஞ்ஞானம், சமூக சேவை, கலை, இலக்கியம், விளையாட்டு... இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனை பேர்? நிலைமை இவ்வாறு இருக்க இந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பதவிக்கு இவ்வளவு குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஒரு பெண்மணிதான் கிடைத்தாரா?
ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி. கிரி, சஞ்சீவரெட்டி, கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் என மாபெரும் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், மேதைகள் அலங்கரித்த பதவியில் அமரப் போகிறார் பிரதிபா பாட்டீல்!
ஒரு டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்டு... விண்ணப்பிக்க திருவாளர் பொதுஜனம் எவ்வளவு ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது, எவ்வளவு அலைச்சல் அலைய வேண்டியிருக்கிறது? அது இல்லை, இது இல்லை, இது போதாது, தகுதிச் சான்றிதழ் வேண்டும் என எத்தனை முறை திருப்பி அனுப்பப்படுகிறார்.
ஆனால் இன்றைய மத்திய ஆளும் கூட்டணியோ தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரின் பின்னணி என்ன, அவரிடம் உள்ள குறைபாடுகள் என்ன, உயர் தகுதிகள் என்ன..? என்பதையெல்லாம் ஆராயாமல், பரிசீலனைக்கு உட்படுத்தாமல் இத்தனை குற்றச்சாட்டுகள் வந்தபிறகும் மறுபரிசீலனை தேவையில்லை, எங்கள் முடிவை மாற்ற இயலாது, எங்கள் வேட்பாளரின் வெற்றியை யாரும் தடுக்கவும் முடியாது, "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், வெட்கமில்லை வெட்கமில்லை வெட்க மென்பதில்லையே' - என்பதையே கூட்டணியின் தாரக மந்திரமாகக் கொண்டு நாளை நடக்கும் தேர்தலில் வெற்றியும் பெறப் போகிறார்கள்!
எனது 18 ஆண்டு கார்ட்டூனிஸ்ட் பணியில் இதுவரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட குடியரசுத் தலைவரை கார்ட்டூனில் கொண்டு வந்ததில்லை..! அதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்! ஆனால் அதைத் தங்களது வேட்பாளர் தேர்வு மூலம் உடைத்துக் காட்டியிருக்கிறார்கள் இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர்! "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோ வென்று போவான்!' என்ற மகாகவி பாரதியின் வரிகளை நினைத்துக்கொண்டு இப்போதைக்கு நம் மனதைத் தேற்றிக் கொள்வதைவிட வேறு வழி நமக்குத் தெரியவில்லை!
( நன்றி: தினமணி )
Posted by IdlyVadai at 7/18/2007 07:20:00 PM 4 comments
Labels: கட்டுரை
திருப்தியும் அதிருப்தியும்
இந்த கார்ட்டூனை வெளியிட்டமைக்கு வருந்துகிறோம் என்ற தலைப்பில் வந்த தினமணி கார்ட்டூன், மற்றும் தலையங்கம்.
திருப்தியும் அதிருப்தியும்
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட போது, மிக நல்ல தேர்வாகவே தெரிந்தது.
நெருக்கடியான நிலையில் இருந்து விடுபட காங்கிரஸ் கட்சித் தலைமை கடைசி நேரத்தில் எடுத்த முடிவு அது என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கவிருக்கும் முதல் பெண்மணியாக அவர் சித்திரிக்கப்படுகிறார். அவர் என்ன சாதாரண அரசியல்வாதி, தனக்கென்று தனி ஆளுமை இல்லாதவர் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு அரசியல் களத்தில் விரிவான, பலதரப்பட்ட அனுபவம் இருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் மாநில அமைச்சர், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர், மாநிலங்களவை துணைத் தலைவர், மிகவும் தன்னடக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் விசுவாசி என்பதெல்லாம் அவருக்குள்ள சாதகமான அம்சங்கள். அதே சமயம் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தபோது, மதமாற்றத் தடைச் சட்டத்தில் கையெழுத்திட முடியாது என்பதில் அவர் காட்டிய உறுதியிலிருந்து அவரால் கடுமையான முடிவுகளையும் எடுக்க முடியும் என்று அறியலாம். அவர்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்படும்வரை அவரைக் குறித்து எந்தவித சர்ச்சையும் மூண்டதில்லை.
அவர்தான் வேட்பாளர் என்று அறிவித்த 3 வாரங்களுக்குள், அவரைப் பற்றிய ஊழல் புகார்கள் அடுக்கடுக்காக வந்து அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரம் இல்லை, காழ்ப்புணர்ச்சியால் காரணம் என்று அவர் சமாதானம் சொன்னாலும், பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்பது வேறு விஷயம். மக்கள் எதையும் நீண்ட நாள்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வதில்லை, அவர் மீதான ஊழல் புகார்களும் மறக்கப்பட்டுவிடும் என்பதெல்லாம் உண்மையே.
பதவிக்கு வந்தால் உடனேயே அவருடைய மதிப்பு உச்சாணிக் கொம்புக்குப் போய்விடாது. கடந்த இரு வாரங்களில் தனக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க அவர் மிகுந்த பாடுபட வேண்டியிருக்கும். நம்முடைய அரசியல் கட்சிகளிலும் நிர்வாகத்திலும் முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதை உணர இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மிக உயர்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், நமது கட்சியில் அப்படிப்பட்டவர்கள் யார், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா, நாம் எப்படி அணுக வேண்டும் என்றெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும்.
ஆளும் கட்சி அல்லது கூட்டணி தேர்வு செய்யும் நபர் பற்றிய தகவல்களை, மத்திய அரசின் உளவுப்பிரிவு போலீஸôர் திரட்டி அரசின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏதோ அவசரத்தில், அரைகுறையான தகவல்களுடன் யாரையாவது தேர்ந்தெடுப்பது அல்லது யாரையாவது நியமிப்பது என்பதே அரசின் நடவடிக்கையாக ஆகிவிட்டது. ஏதோ ஒரு பிரச்னை தனக்கு நேர்ந்துவிட்டது என்றால், உடனே அதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. அதன் நீண்டகால விளைவு குறித்து ஏதும் சிந்திக்கப்படுவதில்லை.
1990-களில், தன்னுடைய பதவிக்கு ஆபத்து என்ற உடன், அப்போதைய பிரதமர் வி.பி. சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.
உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவற்றிடம் நிதி உதவி கேட்கச்சென்றபோது அவர்கள் அளித்த நிர்பந்தத்தின்பேரிலேயே நம் நாட்டில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்பவை கட்டாயமாக ஏற்கவைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் பதவிக்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக முதலில் சிவராஜ் பாட்டீல் பெயர்தான் பரிந்துரைக்கப்பட்டது. அதை முதலில் நிராகரித்தவர்கள் இடதுசாரி கட்சியினர். பிறகு சோனியா காந்தி பிரதிபா பாட்டீலுக்குக் குறி வைத்தார்.
2002-லும் கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் அப்துல் கலாம் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எப்படிப்பட்ட சக்திகள் வேலைசெய்கின்றன என்பதை அறிய கடந்த இரு வாரங்கள் நல்ல வாய்ப்பாக இருந்தன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கோபமாகவும் மெüனமாகவும் இருக்கின்றனர்.
நம்வேலையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல், பிரதிபா பாட்டீலை ராஜஸ்தான் ஆளுநராக நியமித்துத் தொலைத்தோமே என்று தனது விதியை மனதுக்குள் நொந்தபடியே இருக்கிறார் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். ""அவருக்கு உடல்நிலை சரியில்லையே''என்று தன்னைப்பற்றி கட்சித் தலைவர் சோனியா காந்தி, பலர் அறிய வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே என்று உள்ளூர கொதித்துக் கொண்டிருக்கிறார் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்.
கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அழைத்து யோசனை கேட்கிறார்கள், தீர்மானம் என்றால் வாசகம் எழுதித்தரச் சொல்கிறார்கள், குடியரசுத் தலைவர் பதவியில் இவரை வைத்தால் நம் கதி என்ன ஆகுமோ என்று கட்சித் தலைமையே நம்மைச் சந்தேகிக்கிறதா என்று கொதித்துப் போயிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.
இடதுசாரிகள் விதித்த நிபந்தனைகளின்படியான அத்தனைத் தகுதிகளும் நமக்கு இருக்கிறது, மாயாவதியும் ஆதரவு தரத்தயாராக இருக்கிறார்; அப்படியும் கட்சித் தலைமை நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லையே என்ற ஆதங்கம் மூத்த தலைவரான நாராயண் தத் திவாரிக்கு நிறையவே இருக்கிறது.
மார்கரெட் ஆல்வாவை யாரும் கிறிஸ்தவராகவே பார்ப்பது கிடையாது என்றாலும், கிறிஸ்தவர் என்ற காரணத்துக்காக அவரை வேட்பாளராக்க மறுத்துவிட்டனர். இப்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரை கட்சித்தலைமை ஏன் ஓரங்கட்டியது என்பதற்கு விளக்கம் அளித்துக் கொண்டே போகலாம்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மிக அருகில் இருந்து கவனித்தவர்கள், பிரதிபா மீது இத்தனை புகார்கள் அடுக்கடுக்காய் வருவதற்குக் காரணம் உள்ளே இருக்கும் அதிருப்தியாளர்கள்தான் என்பதை எளிதாகக் கூறிவிடுவார்கள்.
காலங்கடந்துதான் காங்கிரஸ் தலைமைக்கு இது புரிந்திருக்கிறது; சேதத்தைக் குறைக்கும் வகையில், பைரோன் சிங் ஷெகாவத்மீது காங்கிரஸ் கட்சியும் பதில் குற்றச்சாட்டுகளைக் கூற ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியில் முதிர்ந்த தலைவர்கள் இல்லை என்பதால் அல்ல. முதிர்ந்த தலைவர்களைப் பயன்படுத்திக் கொள்ள கட்சித் தலைமை தயாராக இல்லை.
நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கான தேர்தல் என்ற போதிலும் அதில் அரசியல் தலைகாட்ட இதுவரை அனுமதித்ததே இல்லை. 1969-ம் மட்டும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை, மனசாட்சிப்படி வாக்களித்து தோற்கடிக்க வைத்தனர் இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள். வி.வி. கிரி அப்போது குடியரசுத் தலைவர் ஆனார். ஆனால் அப்போதுகூட புழுதிவாரித்தூற்றும் செயலும் நடைபெறவில்லை, அந்த அளவுக்குத் தகுதி குறைவானவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படவும் இல்லை.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் சர்ச்சையே கூடாது என்பதுதான் மரபாக இருந்து வந்திருக்கிறது. இந்த முறை அதுவும் மீறப்பட்டுவிட்டது என்பது வருத்தத்தைத் தருகிறது.
பிரதீபா பாடில் பற்றி அருன் ஷோரி, சோ பேசிய ஒலிப்பதிவு ( பத்ரி பதிவு வழியாக )
அருன் ஷோரி (32.16 நிமிடங்கள்)
சோ ராமசாமி (20.55 நிமிடங்கள்)
( நன்றி: தினமணி, பத்ரி )
Posted by IdlyVadai at 7/18/2007 02:08:00 PM 0 comments
Labels: கட்டுரை, கார்ட்டூன்ஸ்
இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?
தினமலரில் வந்த தகவல்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மாநில சட்டசபைகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா
ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரப்படி பிரதிநிதித்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் அதன் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் மூலம் பிரதிநிதித்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ஓட்டு மதிப்பு உண்டு. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தால் வகுத்தால் வரும் தொகைக்கு இணையாக இருக்கும். இந்த தொகையை மாநிலத்தின் மொத்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.
உதாரணம்:
ஆந்திர மாநிலம்
மொத்த மக்கள் தொகை 43,502,708: ஆயிரத்தால் வகுத்தால் வருவது 43,502.708 , மொத்த எம்.எல்.ஏ.,க்கள் 129, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு: 43,502.708 ஐ 129 ஆல்வகுக்க வேண்டும் 147.96 = 148
மிக அதிகபட்ச மற்றும் மிகவும் குறைந்தபட்ச ஓட்டு மதிப்பு கொண்ட மாநிலங்கள்
உத்தர பிரதேசம் 208: சிக்கிம் 7
ஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
* மாநில சட்டசபையில் உள்ள மொத்த சீட்களின் எண்ணிக்கையை ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்புடன் பெருக்கி கொள்ள வேண்டும்.
*ஒவ்வொரு ஓட்டின் மதிப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விடுவதால், மாநில வாரியாகவே ஓட்டுக்கள் எண்ணப்படும்.
ஓட்டு எண்ணிக்கை:
* பதிவான மொத்த ஓட்டுக்களில் பாதியளவுக்கு அதிகமான ஓட்டுகளை வேட்பாளர் பெற வேண்டும்.
* ஒவ்வொரு வேட்பாளரும் முன்னுரிமை ஓட்டு மூலம் எவ்வளவு ஓட்டுகள் பெற்றார் என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார். தேவையான அளவுக்கு ஓட்டுகள் பெற்று விட்டால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லாவிடில் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.
* முன்னுரிமை ஓட்டில் மிகவும் குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளர்கள் இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையில் இருந்து விலக்கப்படுவர். அவர் பெற்ற ஓட்டுகள் மீதியுள்ள வேட்பாளர்களுக்கு, இரண்டாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின்படி பிரித்து கொடுக்கப்படும்.
* இந்த முறையும், தேவையான அளவுக்கு ஒரு வேட்பாளர் ஓட்டுகளை பெற்றுள்ளாரா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி தான் முடிவு செய்வார். அதன்படி ஓட்டுகள் பெற்று இருந்தால், வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
2007ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்
மொத்த ஓட்டுகளின் மதிப்பு . 5,49,408: அனைத்து ஓட்டுகளும் பதிவானது என்று எடுத்து கொண்டால் ஒரு
வேட்பாளர் வெற்றி பெற 5,49,408ஐ 2 ஆல் வகுக்க வேண்டும்.அதில் வரும் தொகையுடன் 1 ஐ கூட்ட
வேண்டும். இதன்படி ஒரு வேட்பாளர் 2,74,705 ஓட்டுக்களை பெற வேண்டும்.
பதவிக்காலம்
* ஐந்து ஆண்டு காலத்துக்கு ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.
ஓட்டுச் சீட்டு
* ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் எவ்வித அடையாளகுறியீடுகளோ, சின்னங்களோ இருக்காது. வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தான் இருக்கும்.
* ஒவ்வாரு வாக்காளரும் தனது முன்னுரிமை ஓட்டு குறித்து ஒவ்வொரு வேட்பாளருக்கு எதிராகவும் குறிப்பிட வேண்டும்.
* குறிப்பிட்ட வேட்பாளருக்கு தன்னை பொறுத்தவரை முன்னுரிமை பெற்றவர் என்பதை குறிக்க அந்த வேட்பாளருக்கு எதிராக "1' என்று குறிப்பிட வேண்டும். இரண்டாவது முன்னுரிமை பெற்ற வேட்பாளருக்கு எதிராக "2' என குறிப்பிட வேண்டும்.
Posted by IdlyVadai at 7/18/2007 11:32:00 AM 0 comments
Labels: கட்டுரை
TN 25.08, KA 23.42
இது என்ன என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஷாக் கொடுக்க வேண்டாமா ?
தகவல் உரிமை பெறும் சட்டம் (RTI - Right to Information )மூலம் தொடரபட்ட மனுவில் காவிரி நதி நீர் பிரச்சனையில் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கபட்ட தொகை
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் சம்பளம் ரூ 22.69 கோடி
இது சம்பந்தமாக நட்சத்திர ஹோட்டலில் நடந்த கருத்தரங்குகளுக்கு ரூ 2.39 கோடி
மொத்தம் செலவு ரூ 25.08 கோடி
கர்நாடக அரசு வழக்கறிஞர்கள சம்பளம் ரூ 23.42 கோடி
தினமணி செய்தி கிழே....
காவிரி பிரச்னையில் வழக்கறிஞர் கட்டணமாக தமிழக அரசு இதுவரை ரூ. 22.69 கோடி செலவு செய்துள்ளது.
இத்தகவலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளதாக கல்வியாளர் டி.டி. நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
காவிரி நடுவர் மன்றத்தில் இப் பிரச்னையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்காக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.
இப் பிரச்னைக்காக தமிழக அரசு சார்பில் 25 வழக்கறிஞர்கள் நடுவர் மன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 6 கோடி வரை கட்டணங்கள் வழக்கப்பட்டுள்ளன.
1990 முதல் 2007 மார்ச் 31-வரை இந்த தொகையை தமிழக அரசு செலவு செய்துள்ளது.
மேலும் வழக்கறிஞர்கள் ஹோட்டல்களில் கூடி ஆலோசனை நடத்துவதற்காக இதுவரை ரூ. 2.39 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு நாளொன்றுக்கு கட்டணமாக ரூ. 1,000 அரசிடம் இருந்து பெறுகிறார்கள்.
இந் நிலையில், விவசாயிகளின் வாழ்வு ஆதார பிரச்னைக்காக தமிழகத்தின் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் இவ்வளவு அதிக தொகையை நிர்ணயித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி பிரச்னைக்காக அரசு செலவு செய்ததில் ஒரு பகுதிதான் இந்த விவரங்கள். இப் பிரச்னைக்கான மொத்த செலவு குறித்த விவரங்களை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார் நாயுடு.
Posted by IdlyVadai at 7/18/2007 08:10:00 AM 4 comments
Tuesday, July 17, 2007
காமராஜர் ஆட்சி - காமெடி கீமெடி பதிவு
Posted by IdlyVadai at 7/17/2007 03:58:00 PM 2 comments
Labels: நகைச்சுவை
கலைஞர் விடுதலையை எதிர்த்து வழக்கு
இந்துக்களை இழிவாக பேசிய முதல்வர் கருணாநிதி மீதான வழக்கை வாபஸ் பெற்றதை ரத்து செய்து, அவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு குறித்து 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
24-10-2002 அன்று கிறிஸ்துவர்கள் சென்னையில் நடத்திய கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி பேசினார். இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என்று அவர் பேசினார். அவரது பேச்சு இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் ஆர். பிரேம்நாத், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 28-10-2002 அன்று கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நான் வழக்கறிஞராக ஆஜரானேன்.
இது குறித்து எழும்பூர் போலீஸôர், கருணாநிதிக்கு எதிராக 14-11-2003-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதன்பிறகு அந்த வழக்கு பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து நான் ஆராய்ந்தேன். 17-8-2006 அன்று இந்த வழக்கில் இருந்து கருணாநிதியை விடுதலை செய்து 15 வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அரசு வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் கருணாநிதியை விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கருணாநிதிக்கு எதிராக புகார் கொடுத்தவருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே இவ்வழக்கில் இருந்து கருணாநிதியை விடுதலை செய்துள்ளனர்.
கருணாநிதி முதலமைச்சராக ஆனபிறகு, இந்த வழக்கை வாபஸ் பெற 27-5-06-ல் பொதுத்துறை செயலாளர் (சட்டம் ஒழுங்கு) ஆணை வெளியிட்டுள்ளார்.
பொதுநல முக்கியத்துவம் வாய்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவோ வாபஸ் பெறவோ தகுந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனவே இவ்வழக்கை வாபஸ் பெற 27-5-06 ல் பொதுத்துறை செயலாளர் வெளியிட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வழக்கை மீண்டும் நடத்துமாறு சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் இம்மனு குறித்து 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
(தினமணி செய்தி)
Posted by IdlyVadai at 7/17/2007 03:49:00 PM 0 comments
நேரு , மவுண்ட் பேட்டனின் மனைவி பற்றிய புத்தகத்திற்கு தடை ?
மவுண்ட் பேட்டன் மகள் நேருவை பற்றி எழுதிய புத்தகத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த புத்தகம் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தி ஆட்சியாளராக (வைசிராய்) மவுன்ட் பேட்டன் பிரபு இருந்தார். சுதந்திரம் அடைந்து நேரு பிரதமர் ஆன போதும் அந்த பதவியில் மவுன்ட் பேட்டன் பிரபு தொடர்ந்து இருந்து வந்தார்.
மவுண்ட் பேட்டனுடன் பிரதமர் நேரு நெருங்கிய நண்பராக இருந்தார். மவுண்ட் பேட்டனின் மனைவி செல்வினாவும், நேரு மீது அன்பு செலுத்தினார். இதை அப் போதே வேறு மாதிரி சித்த ரித்து சிலர் விமர்சித்தனர்.
இந்த நிலையில் இப்போது மவுண்ட் பேட்டனின் மகள் பமிலா மவுண்ட் பேட்டன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் தனது தாயாருக்கும், நேருவுக்கும் இருந்த நட்பு பற்றி பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். இது நேருவை மோசமாக அவமதிக்கும் வகையில் இருக்கிறது. இந்தி யாவிலும் இந்த புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புத்தகத்துக்கு அரசு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தேவேந்திர திவேதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதையும் முன் வைக்கும் திட்டம் காங்கிரசுக்கு இல்லை. புத்தகம் எழுதுவது ஜனநாயக உரிமை. அதை தடுக்க முடியாது.
பிரபல தலைவர்களை பற்றி ஏததாவது சொல்லி புத்தகம் எழுதுவது வாடிக்கையாக உள்ளது. காந்தியை பற்றி கூட எழுதி இருக்கிறார்கள்.
Posted by IdlyVadai at 7/17/2007 11:40:00 AM 0 comments
Labels: புத்தகம்
Monday, July 16, 2007
ரஷீத் மசூத் 3வது அணி வேட்பாளர்!
வேற ஒன்றும் இல்லை, முஸ்லீம் அரசியல். நிச்சயம் காங்கிரஸ் ஒரு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என்று டில்லியில் சவுதாலா இல்லத்தில் நடந்த அக்கூட்டணி கூட்ட முடிவில் அறிவித்தனர். அதன்படி இக்கூட்டணியன் வேட்பாளராக லோக்சபா எம்.பி., ரஷீத் மசூத் நிறுத்தப்பட உள்ளார் என்று மூன்றாவது அணியிலுள்ள சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் அமர் சிங் இன்று அறிவித்தார்.
Posted by IdlyVadai at 7/16/2007 10:31:00 PM 0 comments
Labels: அரசியல்
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 16-07-07
இந்த கடிதத்தில் விடை தெரியாத கேள்விகள், புத்தகங்களைப் பற்றி மட்டும்.
அன்புள்ள பாடிகாட் முனீஸ்வரனே,
நலமா ? இந்த கடிதத்தில் எனக்கு விடை தெரியாத கேள்விகள் சில இருக்கு. அதற்கு பதில் போடவும்.
* உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க ஜனாதிபதியின் ஒப்புதல் என்ன ஆயிற்று ?
* அரசு ஆணைகள் எல்லாம் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவர் வழக்கம் ஆர்ப்பாட்டம் செய்தார். இப்ப மறந்துவிட்டாறா ?
* தேர்தல் போது, வைகோ மதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்து காட்டி கூடுதல் இடங்களை திமுக பெற்றது என்றார். கலைஞர் அதற்கு "சோனியாவும், பிரதமரும் மறுப்பார்கள்" என்றார். ஏன் இன்னும் மறுக்கவில்லை ?
* காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு என்ன ஆயிற்று ?
* இலவச சைக்கிள் திட்டம் இன்னும் நடக்கிறதா ? டெண்டரில் ஏதோ குளறுபடி என்று சொன்னார்களே ?
* "மதுபானத் கடைகளில் எனக்கும் சசிகலாவுக்கும் பங்கு இல்லை" என்றார் ஜெ. இருக்கு என்றார் கலைஞர். எது உண்மை ?
* ஜிப்மர் கல்லூரிக்கு தன்னாட்சி கிடைத்துவிட்டதா ?
* தேர்தலின் போது இலவச டிவியுடன் இலவச கேபிள் என்றார் கலைஞர் தற்போது, அது தரப்படுகிறதா ? அல்ல மூன்று முட்டைகள் மட்டும்தானா ?
* டான்ஸி நிலம் என்ன ஆயிற்று ? அரசுக்கு திரும்ப கிடைத்துவிட்டதா ?
* பீடிக்கட்டுகள் மீது மண்டை ஓடு விவாகாரம் என்ன ஆயிற்று ?
பின்னூட்டதில் வரும் மற்ற கேள்விகளை உனக்கு அடுத்த மடலில் அனுப்புகிறேன். இப்ப சில புத்தகங்களை பற்றி
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. மொத்தம் மூன்று பாகங்கள் ஒவ்வொரு பாகத்திலும், சுமார் 1000 பக்கங்கள். மூன்று பாகங்களுடன், ஆங்கிலத்தில் 'பொருள் குறிப்பு அகராதி' ( index மாதிரி ) என்று ஒரு சின்ன புத்தகம் தருகிறார்கள். இந்த சின்ன புத்தகம் இல்லை என்றால், அதில் கண்டுபிடிப்பது கஷ்டம். R.K.Laxman, Friedman,jayalalitha, karunanidhi, sanskrit, sanyasi, san jose, periyar, sankara das swamigal, logic என்று எல்லாம் இருக்கிறது. முனீஸ்வரன் பற்றி தேடி பார்த்தேன், சாரி இல்லை.
சிவபாலன் Tintin பற்றி எழுதியிருக்கிறார். அதை பற்றி ஒரு செய்தி, "Tintin In The Congo" என்ற புத்தகம் இப்ப நல்ல விற்பனை ஆகிறதாம். அதில் சில வசனங்கள், கருப்பு இன மக்களை இழிவுபடுத்துவதாகவும், இனவெறி சம்பந்தமாக இருப்பது தான் காரணம். ( இதில் கருப்பு இன மக்களை குரங்கு என்று சொல்லுவதாக வந்துள்ளது ). இந்த புத்தகம் லண்டன் கடைகளிலிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளபடுகிறது.
சேவியர் ஹாரிபாட்டர் பற்றி எழுதியிருக்கிறார். அதை பற்றி மேலும் சில தகவல்கள். இந்த மாதம் 21ஆம் தேதி வரவிருக்கும் ‘ஹாரிபாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ("Harry Potter and the deathly hallows" ) புத்தகம் இப்பவே Amazon.comல் இரண்டு மில்லியன் பிரதிகள் முன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஆறு நாட்களில் இந்த எண்ணிக்கை கூடும் என்று சொல்லுகிறார்கள். ஏழாம் பாகம் தான் ஹாரி பாட்டரின் கடைசி புத்தகமாம்.
அதில் ஹாரிபாட்டர் என்ன ஆகிறார் என்ற முடிவை பரம ரகசியமாக வைத்துள்ளார்கள். ரகசியத்தை காக்க செலவு எவ்வளவு தெரியுமா ? 800 கோடி ரூபாய். புத்தகம் ஏற்றி செல்லும் லாரிகளில் செயற்கைகோள் மூலம் டிராக் செய்கிறார்கள். புத்தகம் அச்சகத்தில் யாரும் மொபைல் போனை எடுத்து செல்ல கூடாது, அதே போல் டிபன் பாக்ஸுக்கும் தடா!. அச்சாகும் போது படிக்க கூடாது என்று வேலை செய்யும் இடத்தில் லைட்டை கூட அணைத்துவிட்டார்களாம். நாயுடன் காவல் காக்கும் காவலர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 30 பவுண்ட், நாயில்லாமல் காவல் காக்கும் காவலருக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் என்று ஒரே பரபரப்பு.
சிலர் ஹாரிபாட்டர் இறந்துவிடுவார் என்கிறார்கள்; தற்கொலை என்கிறார்கள், இதற்கு கூட பெட்டிங் ஆரம்பித்துவிட்டது.
இப்படி இருக்க கேபிரியல் என்றவர் இது தான் முடிவு என்று சொல்லி பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார். எது எப்படியோ கடைசியில் மகிழ்ச்சியாக முடியாது என்று ஜே.கே ரெளலிங் (offlineனாக) சொல்லியிருக்கிறார். பார்க்கலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லு. அப்புறம் மூல பிரதியை எடுத்துக்கொண்டு லண்டனிலிருந்து அமெரிக்கா சென்றவர் பாதுகாப்பிற்கு ஃபிளைட்டில் அதன் மேலேயே உட்கார்ந்து கொண்டு சென்றாராம். சூடாக விற்பனையாவதில் ஆச்சரியம் இல்லை :-)
தமிழ்நாட்டு பாட புத்தகத்திலிருந்து கம்ப ராமாயணத்தை எடுத்துவிட்டார்களாம் எனக்கு நேற்று தான் தெரிந்தது, அதே போல் பிரிட்டன் கல்வி பாடப் புத்தகத்தில் இருந்து, மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களின் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாம என்ன சொல்ல முடியும் ?
கடைசியாக ராமதாஸ் சொல்லியிருப்பதை கொடுத்துள்ளேன். சிரிக்காமல் படிக்கவும்.
பா.ம.கவுக்கு கனவு காணும் உரிமை கூட இல்லையா ? - ராமதாஸ்
2011 பா.மா.க ஆட்சி அமைக்கும் - ராமதாஸ்
Posted by IdlyVadai at 7/16/2007 08:49:00 PM 3 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்