பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 29, 2007

சிவாஜி விமர்சனம் - கல்கி

நிறைய பேர் கேட்டுக்கொண்டதால் கல்கியில் வந்த சிவாஜி விமர்சனம். ( டைப் அடித்ததால் சில பிழைகள் இருக்கலாம் )

உலகத் தரத்துக்கு இணையாகவோ மனதை விட்டு அகல மறுக்கும் உன்னதத் தன்மையுடனோ, யதார்த்தம் தழுவும் காட்சிகளுடனோ வந்திருக்கும் படமல்ல சிவாஜி. ஆனால், அப்படியெல்லாம் இருந்திருந்தால் கூட இப்போது ரசிக்கும் அளவுக்கு ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். பிறக்கப் போகும் குழந்தைக்கு கூட சிவாஜியின் கதை இந்நேரம் தெரிந்திருக்கும் ( இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால் முதலில் கேட்கும் கேள்வி: சிவாஜி பார்த்தியா ?) நல்லது செய்ய நினைக்கும் அமெரிக்க ரிட்டர்ன்ஸ் சிவாஜிக்கு லோக்கல் புள்ளிகளால் பிரஷர். நடுத்தெருவுக்கு வருகிறார். மறுபடி ஒரு ரூபாயிலிருந்து தமது வாழ்க்கையைத் தொடங்குபவர் இந்தியாவை கறுப்புப் பணத்திலிருந்து மீட்கிறார்.

இதுவரை பார்த்திராத, இனியும் பார்ப்போமா என்று ஏங்க வைக்கிற அழகு ரஜினி. ஃப்ரேம் அவர் செய்யும் அதிரடி ஸ்டைல்களால் தியேட்டர் குலுங்குகிறது. 'ஏம்மா என்னை கறுப்பா பெத்தே' என்று உருகுவதாகட்டும் 'வாங்க பழகலாம்' என்று ஸ்ரேயா குடும்பத்தை உலுக்குவதாகட்டும் மிரள வைக்கும் பட்டாசு. 'ஒரு கூடை சன்லைட்' பாடலில் பிரமிக்க வைக்கிறது நடன அசைவுகள். அவர் நாணயம் சுண்டும் போது வழுக்கிக் கொண்டுபோய் பாக்கெட்டுக்குள் விழுவது அந்த ஒரு ரூபாய் மட்டுமல்ல நாம் மனசும் தான். கமெடியில் கொடிகட்டிப் பறக்கும் சிவாஜி சண்டையில் அனலாய்க் கொதிக்கிறார். மியூசிக் ஷாப்பில் எதிரிகளை துவசம் செய்து, டிரைவ் இன்னில் காரில் அமர்ந்தே கச்சிதமாய் கதையை முடிக்கும் அடிதடிகள் இதுவரை ரஜினி படங்களில் பார்க்கப்படாதவை. ( ஹாட்ஸ் ஆஃப் டு பீட்டர் ஹெய்ன்!) எல்லா பாடல்களிலும் ரஜினியின் ரவுசு ராஜ்ஜியம். நயந்தாரவுடன் தமிழகத்தில் ஆடுவதில் திடங்கி ஸ்ரேயாவுடன் அயல்நாட்டில் ஜேம்ஸ்பாண்டாய் முறுவலிப்பது வரை மிரட்டல் அத்தியாங்கள்.

ச்சும்மா இல்லை.. ஸ்ரேயாவும் பின்னிமெய்ந்திருக்கிறார். ரஜினியைக் கண்டு மிரண்டு ஓடும் போது புள்ளிமான். அதுவே அவருக்காக உருகிக் கரையும் போது டிஃபிகல் குடும்ப தலைவி. ஆனாலும் பாடல் காட்சிகளில் இந்தளவு கவர்ச்சி காட்டியிருக்க வேண்டாம்.

ஆந்திர வில்லன் சுமன். 'என்னங்க சிவாஜி' என்று அவர் மரியாதையோடு பேசும்போது உள்ளிருந்து கொப்பளிக்கிறது அமிலப் பிழம்பு, ரஜினியிடம் ஒரு ரூபாய் கொடுத்து பிச்சையெடுக்கச் சொல்லும்போது ஊற்றெடுக்கும் உத்வேகம் மாணவர்களாலே மிதிபட்டு உயிர்விடும் வரை தொடர்வது சிறப்பு.

முக்கியமாக முழங்க வேண்டியது விவேக்கின் விஸ்வரூபத்தை. சமீபகாலமாக சரிந்து கிடந்த இவரின் கிராப் 'சிவாஜி' ரிலீஸான ஒரே நாளில் உச்சிக்குச் சென்றுவிட்டது. ரஜினியின் தாய்மாமனாக வந்து 100% நகைச்சுவைக்கு உத்திரவாதம் தருகிறார். ரஜினி வாயை பொத்திவிட்டு விவேக் பேசும் பன்ச் டயலாக்குகளுக்கு வலிமை அதிகம்.

மணிவண்ணன், வடிவுக்கரசி, சாலமன் பாப்பையா, உமா பத்மநாபன், பட்டிமன்ற ராஜா, போஸ் வெங்கட் என்று படம் நெடுக நட்சத்திரக் கூட்டங்கள் மின்னி மின்னி மின்னலடிக்கின்றன.

வசனம் சுஜாதா, அட்லாண்டிஸ் விண்கல வேகம். 'பன்னிங்கதான் கூட்டமா வரும்... சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' ஒரு பானைப் பதம்.

தோட்டாதரணிக்கு ஸ்பெஷல் பொக்கே!

வாஜி வாஜி, சஹானா பாடல்களுக்கு அவர் அமைத்திருக்கும் செட்டுகள் காலம் கடந்தும் நிற்பவை. பின்னணியிலும் மிடுக்கு குறையாத ரஹ்மான் எல்லா பாடல்களுக்கும் ஹிட் என்றாலும் சாஹானாவுக்குச் சந்ததியையே எழுதிக் கொடுக்கலாம்.

அம்சமாய் ரஜினியை அடையாளப் படுத்தியதற்காகவே கே.வி. ஆனந்தின்கையை வலிக்கும்வரை குலுக்கலாம். பாடல் காட்சிகளில் கேமரா கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன

ஷங்கர் பற்றி நிறையவே சொல்ல வேண்டும். ரஜினிக்காக ரொம்பவே காம்பிரமைஸ் செய்திருக்கிறார். இந்தியன், முதல்வன், அந்நியன் மாதிரி இதிலும் பவர்ஃபுல்லான ( கறுப்பு பணம் ) விஷயத்தை கையிலெடுத்தவர், சொன்ன விதத்தில் தான் பிந்தங்கி விட்டார். ரஜினி ரசிகர்களை திருப்தி பண்ணும் ஒரே நேக்கம்தான் படத்தில் தலை விரித்து ஆடுகிறது. விஸ்தீரணமாக நெஞ்சில் அறைந்து சொல்லபட்டிருக்க வேண்டிய இந்தியாவை அச்சுறுத்தும் கறுப்புப் பண விவகாரத்தை, ஜஸ்ட் லைக் தட் சொல்லிவிட்டார். ரஜினி முன்னுக்கு வந்து, கதை பின்னுக்குப் போனதில் ஷங்கரின் முத்திரை இல்லாமல் வெறிச்சோடி விடுகிறது சிவாஜி. ஆனாலும் ரஜினியை பிரம்மாண்டமாய் காட்டியதில் ஷங்கருக்கு நிகர் ஷங்கர்தான்!
( நன்றி: கல்கி )

Read More...

மதுரை தேர்தல் - தலைவர்கள் ரியாக்ஷன்

மதுரை இடைத்தேர்தல் பற்றி ஜெ, கலைஞர், வீரமணி,கிருஷ்ணசாமி மற்றும் பலர். தொண்டர்கள் ரியாக்ஷன் கடைசியில்

முன்பே எனக்கு தெரியும் - ஜெ அறிக்கை
( தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே ஜெ இந்தை தயாரித்திருப்பார் என்று தெரிகிறது :-)
இது எதிர்பார்த்த முடிவுதான். இப்போது வந்திருப்பது மக்கள் தீர்ப்பு அல்ல, திமுகவினரின் திட்டமிட்ட சதி. தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்காது, நடக்க முடியாது என்பதை உணர்ந்துதான் தலைமைத் தேர்தல் ஆணையரே தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்தார்.

இதனால்தான் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்தி வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டுதான், தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார் கருணாநிதி.

தேர்தல் ரத்தானால் அல்லது ஒத்திவைக்கப்பட்டால், சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லை என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகி விடும் என்பதால்தான், தேர்தலை நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டினார் கருணாநிதி.

அவரது வற்புறுத்தலால், சோனியாவும் இதில் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தார். இதை விட உச்சமாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமைத் தேர்தல் ஆணையரையே நேரில் சென்று மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் கொல்லப்பட்டதால் மதுரை மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை மதுரை மக்கள் தோற்கடித்து விட்டால், அதற்கு தானே பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மு.க.அழகிரி, ரவுடிகள் பட்டாளத்துடன் நேரடியாக களத்தில் இறங்கினார்.

அழகிரியின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் கெட்டுப் போய் இருப்பதால்தான் தேர்தலை நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது. ஆனால் பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டதன் ரகசியம் என்ன?, பின்னணியில் என்ன நடந்தது?.

இந்தத் தேர்தலில் சதியும், சூதும், சூழ்ச்சியும், அதிகார துஷ்பிரயோகமும், அராஜகமும் வென்று விட்டன.

அதிமுகவினர் யாரும் இந்த தோல்வியால் மனம் தளர வேண்டாம். சோர்வடைய வேண்டாம். ஏனெனில் இது உண்மையான தோல்வி அல்ல, செயற்கையான முடிவு. அதிமுகவுக்கு நிச்சயமான, ஒளிமயமான எதிர்காலம் உண்டு. தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டாம்

கலைஞர் அறிக்கை
அதில், இடைத் தேர்தலையொட்டி உயர் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 163 பேரையும், பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோரை மாற்ற வேண்டும். யார் யார் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தொகுதி தேர்தல் அதிகாரியாக யார் இருக்க வேண்டும், மாநகர காவல்துறை ஆணையராக இவரைத்தான் நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியது. தேர்தல் ஆணையம் விரும்பியதை, அவர்கள் உத்தரவிட்டதை இந்த அரசு நிறைவேற்றியது.

தேர்தல் நாளன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியாக சென்று சோதனை நடத்தினார். ஏதோ பெரிய அசம்பாவிதம் ஏற்படப் போவது போல பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டன.

இத்தனையையும் மீறி திமுக கூட்டணிக்கு மதுரை மேற்குத் தொகுதி வாக்காளர்கள் வெற்றி தேடித் தந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

வீரமணி
மதுரை இடைத் தேர்தலை எடைத் தேர்தலாகவே கருதலாம். மதுரையில் வாக்காளர்கள் எவ்வளவு கெடுபிடிகள், அதிரடிகளைத் தாண்டி நியாயத் தராசினை பிடித்து தங்களின் பேராதரவு கலைஞர் ஆட்சிக்கே என்பதை காட்டியுள்ளனர்.

மதுரை வாக்காளர்களுக்கு திராவிடர் கழகம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வெற்றி கலைஞர் ஆட்சியின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல

கிருஷ்ணசாமி


மதுரை மேற்கு தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி யில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராஜேந்திரன் அமோக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

முதல்-அமைச்சர் கருணா நிதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் குறிப்பாக மு.க.அழகிரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.விடம் இருந்து மதுரை மேற்கு தொகுதியை கைப்பற்றியதன் மூலம் மத்திய- மாநில ஆட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு நடந்த பொதுத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை கருணாநிதி சிறப்பாக செயல்படுத்தி வரு கிறார். இந்த தேர்தல் முடிவு மக்கள் அவருக்கு கொடுத்த பரிசு. 75 சதவீதம் வாக்குகள் பதிவானதை வைத்து சிலர் பல கருத்துகளை வித்தியாசமாக சொன்னார்கள். நான் 4 முறை மதுரையில் பிரசாரம் செய்தேன். நேரடியாகவும் மக் களை சந்தித்தேன். அவர் களின் மனநிலையை வைத்து 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறு வோம் என்று கூறினேன். ஓட்டு சதவீதம் கூடுதலாக பதி வானதற்கு காரணம் மக்கள் மத்திய-மாநில ஆட்சி கள் மீது கொண்டுள்ள நம் பிக்கைதான்.

ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு இருந்தால் ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்திருக்கும். குறிப்பாக இந்த தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஒரு பெண்ணை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி இருப்பதுதான். அதன் பிரதிபலிப்புதான் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்து உள்ளனர். ஜெயலலிதா தான் ஒரு பெண் என்றும் நினைக் காமல் தன்னைத் தவிர வேறு எந்த பெண்ணும் உயர்ந்த பதவிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். அந்த எண்ணத்தில்தான் சோனியாவை எதிர்த்தார். மக்கள் பொதுத்தேர்தலில் மரண அடி கொடுத்தார்கள். அதே போல் இப்போது பிரதீபா பட்டீலை எதிர்த்தார். அதற்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளார்கள்.

எனவே ஜெயலலிதா தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வினர் பிரதீபாவை ஆதரித்து வாக் களிக்க வேண்டும். அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஜனநாயக கடமையை மறந்து சட்டமன்றத்தில் தொகுதி பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை. அவர் களுக்கு ஏன் வாக்களித் தோம் என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த தேர்தல் வெற்றி. அ.தி.மு.க.வின் தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்தி விட ஜெயலலிதா பல் வேறு சதி திட்டங்களில் ஈடு பட்டார். அவற்றை முறிய டித்து சிறப்பாகவும் அமைதி யாகவும் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணை யத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மதுரையில் வெற்றி பெற்ற தற்கு காரணம் பண பலம் அல்ல. மத்திய-மாநில அரசுகளின் சாதனைகள்தான்.

தொண்டர்கள் ரியாக்ஷன்
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்ததிலிருந்தே திமுகவினரும், காங்கிரசாரும் மதுரையில் கொண்டாட்டங்களை தொடங்கினார்கள். மதுரை நகர் முழுவதும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை கொண்டாடினார்கள். மு.க.அழகிரி வீட்டுக்கு முன்பு ஆயிரக்கணக்கான திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நகரில் பல இடங்களில் அழகிரியின் மெகா சைஸ் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்தினார்கள். வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட் பாளரும், மு.க.அழகிரியும் நாளை விமானத்தில் சென்னைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளனர்

வைகோ
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. பணநாயகம் வென்றது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே, ஏன் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஓட்டுக்கு 1500 ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டு, வாக்குச் சீட்டுகள் விலைக்கு வாங்கப்பட்ட அநீதி இதுபோல நடைபெற்றதில்லை.

65 மொழிப் போராட்டத்தில் எண்ணற்றத் தமிழர்களை கொன்று குவித்து துப்பாக்கி வேட்டை ஆடிய காங்கிரஸ் கட்சி அதனை அடுத்து நடைபெற்ற தர்மபுரி இடைத்தேர்தலில் அண்ணாவின் தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்றது. அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தோற்கடித்தனர். அதே வரலாறு மீண்டும் திரும்பும்.


புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்

மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது, தமிழக மக்கள் முதல்வர் கருணாநிதி மீதும், அவரது ஆட்சியின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இரவும், பகலும் நலன் ஒன்றையே தனது உயிர் மூச்சாய் கருதி பாடுபட்டு வரும் கருணாநிதியின் ஓராண்டுகால சாதனைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை உடனுக்குடனே நிறைவேற்றி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, மக்களாட்சி நடத்தும் கருணாநிதிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் தான் இந்த வெற்றியாகும். இந்த வெற்றியின் நாயகன் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read More...

கேப்டன் கொடுத்த 'நெத்தியடி'

திமுக, அதிமுகவைப் போல பண பலம், அடியாள் பலம், அதிகார துஷ்பிரயோகம், கூட்டணி பலம் என எதுவும் இல்லாமல், தன்னந்தனியாகப் போட்டியிட்டு, மதுரை மேற்குத் தொகுதியில் கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக.


கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு உதித்த தேமுதிக முதல் தேர்தலிலேயே பெரிய அரசியல் கட்சிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அபாரமாக வாக்குகளைப் பெற்று அதிர வைத்தது.

அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிகவுக்கு வெற்றிகள் தொடர்ந்தன. கணிசமான ஊராட்சி அமைப்புகளையும், நிறைய கவுன்சிலர்களையும் பெற்று சாதனை படைத்தது.

இந் நிலையில் வந்தது மதுரை மேற்கு இடைத் தேர்தல். இத்தேர்தலில் அதிமுக சார்பில் ெசல்லூர் ராஜு நிறுத்தப்பட்டார். மறு முனையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டார் ராஜேந்திரன்.

போட்டியிட்டது காங்கிரஸ் என்றாலும் கூட, வேலை பார்த்தது எல்லாம் திமுகவினர்தான்.


மு.க.அழகிரியே தேர்தலில் நிற்பதாக நினைத்துக் கொண்டு மிகத் தீவிரமாக பணியாற்றினர் திமுகவினர்.

ஓட்டுக்கு இவ்வளவு என கவரில் பணம் போட்டு தந்தனர் திமுகவினர். அதிமுகவினரும் சளைக்காமல் போலி காது குத்து விழாக்கள் நடத்தி வாக்காளர்களுக்கு பிரியாணியும் போட்டு காசு தந்தனர்.

அத்தோடு திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் வேறு. அடியாள் பலத்தோடு அதிமுகவும் திமுகவும் புகுந்து விளையாட தேர்தல் ஆணையமே அதிர்ந்து போனது.

இதனால் தேர்தலையே நிறுத்தி வைக்கும் அளவுக்கு நிலைமையும் உருவானது. ஆனால், உண்ணாவிரத மிரட்டலைக் கொடுத்து தேர்தலை நடத்த வைத்தார் முதல்வர் கருணாநிதி.


அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் பணத்தை வாரி இறைத்தனர்.

ஆனால் இந்த களேபரம் எதிலுமே சிக்கிக் கொள்ளாமல் படு அமைதியாக, அதேசமயம் ஆணித்தரமாக தங்களது தரப்பு வாதங்களை வைத்து எளிமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் விஜய்காந்த்.

தனது மனைவி பிரேமலதாவோடு மதுரையிலேயே முகாமிட்டு தீவிரப் பிரசாரம் மேற்ெகாண்டார் விஜயகாந்த்.


ஆடம்பர, அலங்கார வாகனங்கள் இல்லை, ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம் இல்ைல, காசை வாரியிறைக்கவும் வழி இல்லை.

இப்படி இக்கட்டான நிலையில் தேர்தலில் நின்றாலும் கூட மக்களை மட்டும் நம்பி, தன்னம்பிக்கையோடு தேமுதிகவினர் செய்த பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

''திமுகவும் அதிமுகவும் காசு தந்தா வாங்கிங்குங்க.. அது உங்க காசு தான். ஊழல் செஞ்சு, கமிஷன் அடிச்சு உங்க பணத்தை சுரண்டித் தான் உங்ககிட்ட தர்றாங்க. அதை வாங்கிகிட்டு எங்களுக்கு ஓட்டு போடுங்க'' என மிக நேரடியாகவே விஷயத்தை மக்களின் காதில் போட்டு விஜய்காந்த் செய்த பிரச்சாரத்துக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலை விட இந்த இடைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது தேமுதிக. அதை விட முக்கியமாக தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 8,000 சில்லரைதான்.

கிட்டத்தட்ட 2வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை நோக்கி படு வேகமாக தேமுதிக வளர்ந்து கொண்டிருக்கிறது, முன்னேறிக் ெகாண்டிருக்கிறது தேமுதிக.

சத்தம் போடாமல் மக்கள் ஆதரவை அள்ளிக் ெகாண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு இங்கு 14 ஆயிரத்து 527 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் இம்முறை தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமரன் 21 ஆயிரத்ுத 272 ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். இது தேமுதிகவின் பெரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.

இரு பெரும் மலைகளுக்கு மத்தியில் சிறு துரும்பு போலத் தெரிந்த தேமுதிக இந்த அளவுக்கு ஓட்டு வாங்கியுள்ளது மதுரை வாக்காளர்களை மட்டுமல்ல தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிற கட்சிகளைப் போல தேமுதிகவின் பலம் பணத்தில் இல்ைல, மக்கள் மனதில்தான் இருக்கிறது என்பதை விஜயகாந்த் சத்தம் இல்லாமல் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

விஜயகாந்த் கொடுத்துள்ள இந்த நெத்தியடி திமுகவை விட அதிமுகவுக்குத்தான் பலத்த பேரிடியாக அமைந்துள்ளது.

எந்த சினிமா மாயையை வைத்து அதிமுக வளர்ந்ததோ அதே சினிமா, விஜய்காந்த் ரூபத்தில் வந்து ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைத் தந்து வருகிறது.
( நன்றி: தட்ஸ் தமிழ் )

Read More...

ராமதாஸ் சொல்லும் ரகசியம்

விகடனில் வந்த ராமதாஸ் பேட்டி.
அடுத்தகட்ட பரபரப்புக்கு ஆயத்த-மாகிவிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. ‘2011-ல் தனித்து ஆட்சியைப் பிடிப்போம்’ என்று அறிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். தைலாபுரம் தோட்டத்-தில் நம்மிடம் ராமதாஸின் பேச்சில் அனல் பறந்தது. ( நன்றி: விகடன் )



‘‘அ.தி.மு.க- தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி அமைத்து இன்னும் எத்தனை காலத்துக்குத்-தான் அரசியல் செய்யப்-போகிறீர்கள்? தனித்து அரசியல் பண்ணும் எண்ணமே இல்-லையா?’’

‘‘ஒரு பொறுப்பான எதிர்க்-கட்சிதான் ஆளும் கட்சியாகும் தகுதி பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏனென்றால், ஆளும் கட்சியின் இலக்க-ணத்தை அது எதிர்க்-கட்சியாக இருந்தபோது எப்படிச் செயல் பட்டது என்பதை வைத்து-தான் அளவிட முடியும். அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த போதும் நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்தோம். எங்கள் அளவுக்கு வேறு யாரும் தவறுகளைச் சுட்டிக்-காட்ட-வில்லை. எதிர்க் கட்சிக்கான இலக்க-ணத்தை அப்போ தும் செய்திருக்கி-றோம்; இப்போ தும் செய்து வருகிறோம்.

இப்போது அ.தி.மு.க-வுக்கு எங்களை -விட அதிகமான எண்ணிக்-கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தா-லும், எதிர்க்கட்சியாகச் செயல்படுகிற பொறுமையும் தகுதி-யும் அங்கே இல்லை. ஆளுங்கட்சி-யின் கூட்டணிக்குள் இருந்தாலும், தமிழகத்தில் இப்போதைய ஒரே எதிர்க்கட்சி நாங்கள்தான். உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். ஐந்து ஆண்டு காலமும் உறுதியாக தி.மு.க-வை ஆதரிப்போம். ஆனால், சுட்டிக்காட்ட வேண்டிய, தட்டிக் கேட்க வேண்டிய இடங்களில் அதையும் திருத்தமாகச் செய்வோம்.

இப்போது தமிழகத்தில் பா.ம.க. ஒரு புதிய மாற்றுக் கட்சியாக உருவாகி-யிருக்கிறது. அரசியல் அதிகாரத்தை மக்களின் ஆதரவோடு வெல்வோம். 2011-ல் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ-கத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

கடந்த நாற்பதாண்டு கால தி.மு.க- அ.தி.மு.க. ஆட்சியில் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்துவிட்டார்கள். இந்த வீட்டில் உட்கார்ந்த காக்காய் கூட அந்த வீட்டில் போய் உட்காரக் கூடாது என்கிற அளவுக்குச் சகிப்புத் தன்மையே இல்லாமல் போய்விட்டது. சமூகம், பண்பாடு, மொழி என்று எல்லாமட்டத்திலும் சீரழிவைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டு இளைஞர் களை இரண்டு இடங்களில் அதிக மாகப் பார்க்க முடிகிறது... ஒன்று, சாராயக் கடை. இன்னொன்று, சினிமா கொட்டகை. இதையெல்லாம் மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும்!’’

‘‘மதுரை இடைத் தேர்தல் களத்தில் நடந்-தவை பற்றி..?’’

‘‘தேர்தல் என்றாலே காசு கொடுத்து ஓட்டு வாங்கும் வியாபாரமாக வாக்காளர்களைப் பழக்கி-விட்டார்கள். நான் எல்லாக் கட்சிகளையும் சேர்த்துத்தான் சொல்-கிறேன். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்-பட்ட சுய உதவிக் குழுக்-களையும், தேர்தல் நேரத்-தில் காசு கொடுத்துக் கெடுத்துவிட்டோம்.

50 ரூபாய், 100 ரூபாய் என்று ஆரம்பித்து வளர்ந்து... ஆயிரத்தைத் தொட்டு... மிக்ஸி, கிரைண்டர் என வீட்டுக்குத் தேவையான பொருட்களை அளிக்கிற அளவுக்கு வாக்காளர்களையும் மாற்றிவிட்டார்கள். இதன் உச்சகட்டம் மதுரை இடைத்தேர்தல். என்னைக் கேட்டால், இடைத் தேர்தலே தேவையில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தி, பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதோ அந்தக் கட்சிக்கே அந்த ஐந்து ஆண்டுகளும் அந்தத் தொகுதியில் பணியாற்றுகிற வாய்ப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்பேன்.’’

‘‘இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத பரபரப்பு ரஜினிக்கும், ‘சிவாஜி’ படத்துக்கும் கொடுக்கப்படுகிறது, பார்த்தீர்களா?’’

‘‘சினிமாக்காரர்கள் தமிழகத்தை எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்! மாநில முதல்வர், முன்னாள் முதல்வர்கள் முன்கூட்டிப் பார்த்து படத்துக்கு விளம்பரச் சான்றிதழ் வழங்குகிற கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது. பாண்டிச்சேரி முதல்வரோ, ஒரு படி மேலே போய் ஒரு நடிகையோடு சேர்ந்து அந்தத் திரைப்படத்தின் முதல் சினிமா டிக்கெட் விற்பனையைத் துவக்கிவைக்கிறார்! அதேபோல், இன்னொரு நடிகருக்குப் பிறந்த நாள் விழாவாம்... அதற்காக, பாண்டிச்சேரியில் இருந்து ஒரு ரசிகன் சென்னை வரை பின்னோக்கி நடக்கி றானாம்! அந்தப் பயணத்தை புதுவை முதல்வர் துவக்கிவைக்கிறார். சீரழிவின் உச்சகட்டமல்லவா இது!

பல மாதங்களாக உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு போய் பாலும் பீரும் வாங்கி நடிகரின் கட்-அவுட்டுகளுக்கு ஊற்றுகிறார்கள். 20 ரூபாய் டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாய் வரை விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர் களுக்குப் பின்னால் அலையும் ஒவ்வொரு ரசிகனும், ‘நான் ஒரு முட்டாளுங்க! ஏன்னா, நான் ரசிகர் மன்றத்தில் இருக்கேனுங்க’ என்று தன் நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாக அலைகிறான்.

எந்தவிதக் கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத ஒருவர் அரிதாரம் பூசிக்கொண்டு சினிமாவில் நடித்துவிட்டு, வயதான பிறகு நடிக்க முடியாமல் அரசியலைத் தொழிலாகச் செய்யலாம் என்று வருகிற கொடுமையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நடிகர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது? மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? திரைப்படங்களில் இவர்கள் பேசுகிற வசனங்களுக்கும் கதை களுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?’’

‘‘உங்கள் நண்பர் திருமாவளவனும் இப்போது சினிமாவில் நடிக்கிறாரே?’’

‘‘திருமாவளவனைப் பொறுத்தவரை, திரைப்படம் வெகு மக்கள் ஊடகம். அதன் மூலமாகவும் செய்திகள் சொல்ல -முடியும் என்று அவர் நினைத்திருக்-கக்கூடும். அது பற்றி விமர்சிக்க நான் விரும்ப வில்லை.’’

‘‘கேபிள் டி.வி-யை அரசு நடத்த வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க. அந்த மசோதாவைக் கொண்டுவந்தபோது அதை எதிர்த்தீர்களே?’’

‘‘அ.தி.மு.க-வின் நோக்கம் - தி.மு.க- வுக்கு ஆதரவானவர்களை நெருக்கடிக்கு ஆளாக்குவது மட்டுமே! அதனால், அன்று அதை எதிர்த்தேன். நான் சொல்வதெல்லாம்... தனியாரும் கேபிள் டி.வி. நடத்தட்டும்; அரசாங் கமும் நடத்தட்டும். மக்களுக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக்கொள் ளட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க நியாய விலைக் கடைகளை அரசே நடத்துகிற மாதிரி கேபிள் டி.வி. தொழிலையும் நடத்தும்-போது வேலைவாய்ப்பு பெருகும்.’’

‘‘துணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்றவற்றில் உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?’’

‘‘மத்திய அமைச்சராக இருந்த ஒருவரை இப்போது நீக்கியிருக்கிறார்களே, அவரால் வந்த வினைகள் தான் இவை எல்லாமே! 140 கிராமங்களைக் கையகப்படுத்தி, 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தோடு என்னை வந்து பார்த்தார் அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன். ஒரு மணிநேரம் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘தம்பி, இது உங்கள் தாத்தாவுக்கும் தமிழக அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். ஆனால், அவர் எப்படியோ கலைஞரை நிர்ப்பந்தித்து, துணை நகர திட்டத்துக்குச் சம்மதிக்க வைத்தார். நான் மக்களைத் திரட்டிப் போராடியதன் விளைவாக, அந்தத் திட்டத்தை கலைஞர் கைவிட்டார்.

இவ்வாறு அந்த முன்னாள் அமைச்சர் எந்தெந்த விவகாரமான திட்டங்களையெல்லாம் கொண்டு வந்தாரோ, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது கலைஞருக்கே அது மனவேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், கலைஞரின் குடும்பத்தைக் குழப்பி, அவரது நாற்காலியையே பறிக்கும் திட்டம் அம்பலம் ஆனதும் கலைஞர் விழித்துக்கொண்டார். அந்த வகையில் கலைஞரை நான் காப்பாற்றியிருக்கிறேன்! நிஜமாகவே தி.மு.க-வும் தமிழ்நாடும் தப்பிப் பிழைத்திருக்கிறது!

மக்களின் வளர்ச்சி என்கிற பெயரால் செயல்படுத்தப்படுகிற எந்த ஒரு திட்டமும் மக்களை, குறிப்பாக விவசாயிகளை பாதிக்கக் கூடாது. இதில் நான் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன்.’’

‘‘அடுத்த தலைமுறை அரசியல் வாதிகளில் நம்பிக்கை தருகிற மாதிரி ஐந்து பேரைச் சொல்ல முடியுமா?’’

‘‘அப்படி யாரையும் எனக்குத் தெரியவில்லை. இளம் அரசியல் வாதிகளுக்கு மக்களின் பசியும் வலியும் தெரிய வேண்டும். தெரிய வில்லையே! நம்பிக்கை தருகிற மாதிரி யாருமே இல்லை!’’

Read More...

உண்மையான காதலன் எப்படி இருப்பான் ?

உண்மையான காதலன் எப்படி இருப்பான் என்று இங்கே பார்த்து தெரிந்துக்கொள்ளவும் :-)

Read More...

மதுரை மேற்கு யாருக்கு ?

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
துணை ராணுவ பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முன்னணி நிலவரம் காலை 8.30 மணி முதல் தெரியவரும்.

* காங்கிரஸ் 1300 ஓட்டுகள் முன்னிலை
* காங்கிரஸ் 3542, அதிமுக - 2295
* காங்கிரஸ் 31672, அதிமுக - 17636, தேமுதிக- 10783

* காங்கிரஸ் 48871, அதிமுக - 23952, தேமுதிக- 16535


காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி


வாக்கு நிலவரம்
மொத்த வாக்குகள் 1,56,182
பதிவானவை 1,17,666
கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்) 60,933
செல்லூர் ராஜு (அதிமுக) 29,818
சிவமுத்துக்குமரன் (தேமுதிக) 21,272

Read More...

Wednesday, June 27, 2007

பிரதீபா பட்டீல் ஆவியுடன் பேசினார்

"நான் உயர் பதவியில் அமர்வேன் என்று எனக்கு அருள்வாக்கு கிடைத்தது" என்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பட்டீல் கூறினார்.

தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் :

நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.



பலே, முதலில் காங்கிரஸ் கட்சி இத்தாலிய பேயிடம் மாட்டிக்கொண்டது, நமது இந்திய ஜனாதிபதி பேயிடம் அருள் வாக்கு கேக்கிறார். 'பெண் என்றால் பேயும் இறங்கும்' என்று சும்மாவா சொன்னார்கள் ?

இதற்கு காங்கிரஸ் மவுனமாக இருக்கிறது, கலைஞர் என்ன சொல்லுவார் பாவம். காங்கிரஸ் கட்சி, இடது சாரிகள் வாக்கு கிடைக்கிறதோ இல்லையோ, பேயிடம் அருள்வாக்கு கிடைத்துள்ளது!.
CNN-IBN Video

Read More...

நெரிபடுகிறது நீதியின் குரல்வளை

கல்கியில் சி.பி.ஐ பற்றி வந்த தலையங்கம். மற்ற பத்திரிகைகள் ஜனாதிபதி தேர்தலில் பிஸியாக இருப்பதால் இதை கண்டுகொள்ளவில்லை.
( முன்பு நான் எழுதிய கட்டுரை: நம்முடைய பணம் )

ஆர்ஜன்டீனா தேசத்து நீதிபதி, நமது சி.பி.ஐ.க்கு வைத்துள்ள குட்டு நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல, நடுநிலையான, அரசு சாரா அமைப்பாக இயங்க வேண்டிய சி.பி.ஐ.யை இனி எந்த விஷயத்துக்குமே நம்ப முடியாது என்கிற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

போ·பர்ஸ் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
ஒட்டாவியோ குவாட்ரோச்சியை முதலில் தப்பவிட்டது சி.பி.ஐ. அவரது மேல்நாட்டு வங்கிக் கணக்கை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஓசைப்படாமல் நீக்கி, அத்தனை பணத்தையும் அவர் வேறு தேசத்துக்குக் கொண்டு செல்ல சௌகா¢யம் செய்து கொடுத்தார் ஒரு மத்திய அமைச்சர்! அரசின் கவனத்துக்குக் கொண்டு வராமல் அமைச்சர் தன்னிச்சையாக இயங்கிவிட்டதாகத் தொ¢வித்தார்
பிரதமர்! சர்வதேச போலீஸ் குவாட்ரோச்சிக்கு வலை வி¡¢த்ததன் அடிப்படையில் ஆர்ஜன்டீனாவில் அவரை போலீஸ் கைது செய்து இந்தியாவுக்குத் தகவல் தந்தது. இதன் பிறகே வேறு வழியின்றி அவரை விசாரணைக்கு அழைத்து வர சி.பி.ஐ. மனு செய்தது! அந்த முயற்சியில் படுதோல்வியும் அடைந்திருக்கிறது!

தோல்விக்குக் காரணம் சி.பி.ஐ.யின் திறமையின்மை என்பதைக் காட்டிலும் திட்டமிட்ட முயற்சியின்மை என்றே கூற வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக ஒரு மனு தயா¡¢த்தளித்து, ஆர்ஜன்டீனா
நீதிபதியின் வன்மையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது சி.பி.ஐ. நீதிபதி, கண்டனம் தொ¢வித்ததோடல்லாமல், எதிர்த்தரப்புக்கு வீண் செலவு ஏற்படுத்தியதற்காக நஷ்ட ஈடும் அபராதமும் விதித்திருக்கிறார்.

வா¢ செலுத்தும் அப்பாவி இந்திய குடிமக்கள், போ·பர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குவாட்ரோச்சி முறைகேடு செய்து கோடிகோடியாக
சம்பாதித்ததைச் சகித்துக் கொண்டதோடு, இப்போது சி.பி.ஐ.யின் மோசடி காரணமாக விளைந்துள்ள அபராதச் செலவையும் குவாட்ரோச்சிக்குக் கொடுத்து அழ வேண்டும்!

ராஜீவ்காந்திக்கும் போ·பர்ஸ் ஊழலுக்கும் தொடர்பு இருப்பதை
ஊர்ஜிதப்படுத்தக் கூடிய விசாரணைகள் அனைத்துமே அரசியல் செல்வாக்கினால் தடைபடுத்தப்பட்டு வந்துள்ளன; அல்லது பூசி மெழுகப்பட்டு வருகின்றன. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிட்டது சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பெற்ற அரசியல்வாதி அல்லது அவரது கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், வழக்குகள் உடனே வாபஸ் பெறப்படுகின்றன; அல்லது கிடப்பில் போடப்படுகின்றன. தப்பித் தவறி வழக்கை எடுத்து நடத்தினாலும், குற்றவாளி தப்புவதற்கு வசதியான
விதத்தில் அது நடத்தப்படுகிறது. எதிர்கட்சியினர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. விசாரணை ஆரம்பமாகிறது!

இப்படி எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட சி.பி.ஐ.தான் மதுரை
தினகரன் அலுவலகத் தாக்குதல் வழக்கையும் விசா¡¢த்துக் கொண்டிருக்கிறது; ஜெயலலிதா போ¢ல் உள்ள குற்றச்சாட்டுகளையும் விசா¡¢த்துக் கொண்டிருக்கிறது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததுமே ‘தாஜ் கா¡¢டார்’ வழக்கு கிடப்பில் போடப்படுகிறது. முலாயம் சிங் போ¢ல்
விசாரணை தொடங்க ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

நீதித்துறையைக் கடைசி நம்பிக்கையாக நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் கண்துடைப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டால் நீதி ஜெயிப்பதற்குப் பதிலாக அதன் குரல்வளை நொ¢க்கப்படுகிறது. வஞ்சகம்தான் ஜெயிக்கிறது.

Read More...

Tuesday, June 26, 2007

ஒளிப்பதிவாளர், டைரக்டர் ஜீவா மரணம்

ஒளிப்பதிவு செய்த படங்கள்: ஜீவா ஜென்டில்மேன், காதலன், இந்தியன், வாலி, சினேகிதியே, உல்லாசம
இயக்கிய படங்கள்: 12பி(முதல் படம்), உள்ளம் கேட்குமே , உன்னாலே உன்னாலே


பிரபல ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான ஜீவா தற்போது "தாம்தூம்'' படத்தை இயக்கி வந்தார். ஜெயம்ரவி இதில் கதாநாயகனாக நடிக் கிறார்.

ரஷ்யாவில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செயிண்ட் பீட்டர்ஸ் பார்க்கில் உள்ள ஜோலோமால் ஓட்டலில் ஜீவா தங்கி இருந்தார். படப்பிடிப்பு நேற்றுடன் முடி ந்தது.

இன்று காலை ஜீவா ஜெயம்ரவி மற்றும் படக்குழுவினர் 30 பேர் சென்னை புறப்படத்தயாரானார்கள். அப்போது ஜீவா நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த தயாரிப்பாளர் ஜெயக் குமாரிடம் கூறினார். உடனே ஓட்டலில் இருந்த டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் ஜீவாவுக்கு தீவிரசிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி காலை 7.30 மணிக்கு ஜீவா மரணம் அடைந்தார். அவருக்கு வயது44. அவர் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது.

மரணம் அடைந்த ஜீவா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வந்தார். இவருக்கு அனிஸ் என்ற மனைவியும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அனிஸ் சினிமாவில் காஸ்ட்ïம் டிசைனராக உள்ளார்.

ஜீவா ஜென்டில்மேன், காதலன், இந்தியன், வாலி, சினேகிதியே, உல்லாசம் உள்பட பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 78 விளம்பர படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

ஜீவா இயக்கிய முதல் படம் 12பி, பின்னர் உள்ளம் கேட்குமே என்ற படத்தை டைரக்டு செய்தார். தற்போது அவர் இயக்கத்தில் ரிலீஸ்ஆன `உன்னாலே உன்னாலே' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப் படத் துக்கு அவரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
( படம் உதவி: தட்ஸ் தமிழ் )

Read More...

ஓட்டா...? இதுவரை போட்டது போதாதா?



ஓட்டா...? இதுவரை போட்டது போதாதா? இன்னிக்குத் தேர்தல் வன்முறை ஏதும் இல்லாமல் நடந்தாலே போதும்னு வாக்குப்பதிவு முடியறவரை கோயிலுக்குள்ளேயே இருக்கறதா வந்திருக்கேன்பா! வாக்காளருக்குப் பணம்ன்றாங்க, தேர்தல் கமிஷனுக்கு மிரட்டல்ன்றாங்க, வன்முறை வெடிக்கும்ன்றாங்க... ஜனநாயகத்து மேல இருக்கற நம்பிக்கையே போயிடுச்சுப்பா..! எந்தக் கட்சிக்காரனும் இந்த நாட்டைக் காப்பாத்தறதுக்கு வரலை; பணம் சம்பாதிக்கத்தான் வர்றான்னு எல்லோருமே பேசிக்கறாங்க. சுதந்திரம் வாங்கி 60 வருஷம் ஆச்சு,

நாளுக்கு நாள் லஞ்சமும் ஊழலும் வன்முறையும் வளர்ந்துகிட்டேதான் போகுது! தபஞ ஆபிஸ், ரெஜிஸ்டர் ஆபிஸ், தாசில்தார் ஆபிஸ்...னு முக்கால்வாசி அரசு அலுவலகங்கள்ள காசு இல்லாம காரியமே ஆகாதுன்ற நிலை! இதையெல்லாம் ஒழிச்சுக்கட்டி நாடு "சூப்பர் பவர்' ஆகப்போகுதுன்னு சினிமாக்காரன் படம் எடுத்து கோடிகோடியா சம்பாதிக்கறான். அந்தப்பணத்துல கறுப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவுன்னு எவனும் கேட்கப் போறதும் இல்லை. அவனும் காட்டப்போறதும் இல்லை. எந்த ஆட்சி வந்தாலும் சரி, மதுக்கடைகளை திறந்து தன்னால் முடிஞ்சவரை எல்லோருக்கும் குடிக்கிற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கறான்.

எல்லோர் வீட்லேயும் பகவத்கீதையும் குர்ரானும் பைபிளும் இருக்குதோ இல்லையோ நிச்சயமாக டி.வி. இருக்குது! அப்படியே இருந்தாலும் அதுல உள்ள போதனைகள்படி எத்தனை சதவிகிதம் பேர் நடக்கறாங்கன்னு தெரியலை! வீட்டம்மா டி.வி. சீரியல் பார்த்துட்டு அது முன்னாடியே கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கா. அதுல காண்பிக்கறது முழுக்க வக்கிரம். புருஷனுக்கும் கள்ளக்காதல், பெண்டாட்டிக்கும் கள்ளக்காதல் இல்லாத சீரியலே கிடையாது. பெண்டாட்டியே புருஷனை ஆள்வெச்சுக் கொல்லறா! சரி, இளைஞர் சமுதாயமாவது திருந்துமான்னு பார்த்தா பிரிட்டிஷ்காரன்கிட்ட சுதந்திரம் வாங்கினபிறகும் அவன் கண்டுபிடிச்ச கிரிக்கெட்டுக்கு அடிமையாகி கிடக்கிறான். இந்தக் கண்றாவி எல்லாத்தையும் தட்டிக்கேட்க வேண்டிய பத்திரிகைக்காரனோ இது எல்லாத்தையும் ஊதி பெரிசுபடுத்தி, தன் பங்குக்கு சுருதி ஏத்தி, வதந்திகலந்து நல்லாவே காசு பண்ணறான்.

ஒட்டுமொத்தத்துல இந்த 60 வருஷத்துல பொதுஜனம் அத்தனைபேரும் (என்னையும் சேர்த்துதான்பா சொல்றேன்) மழைல நனையற எருமைமாடு மாதிரி ஆயிட்டோம்! ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு மனுஷன் நடக்க முடியாத அளவுக்கு எங்க பார்த்தாலும் கட்சித்

தலைவர்கள் கட்அவுட், போஸ்டர்! எவனாவது மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் "கட்அவுட்' வெச்சு பார்த்திருக்கோமா? காந்தியும், விவேகானந்தரும், பாரதியாரும், காமராஜரும் பிறந்த நாடு மாதிரியாய்யா இருக்குது? போதுமப்பா போதும். கடவுளைத் தவிர இந்த நாட்டைக் காப்பாற்ற வேறு யாராலும் முடியாதுன்ற முடிவுக்கு வந்திட்டேன்..!

( நன்றி: தினமணி )

Read More...

Monday, June 25, 2007

நோ கமெண்ட்ஸ்




( நன்றி: செல்வன் பதிவு )

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-06-07

நான் எழுதிய கடிதத்திற்கு ஸ்ரீபாடிகாட் முனீஸ்வரன் பதில் போட்டிருக்கிறார். அது கீழே...

சிரஞ்சீவி இட்லிவடைக்கு,

பாடிகாட் முனீஸ்வரன் எழுதிக்கொண்டது. என்னிடமிருந்து கடிதம் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நீ போர் அடிக்கிறது என்று வலைப்பதிவு எழுதுவதில்லையா அதே போல் எனக்கு போர் அடிக்கிறது அதனால் பதில் போடுகிறேன். அதுவும் இல்லாமல் எனக்கு பூலோகத்தை பற்றி தெரிந்துக்கொள்ள ரொம்ப ஆவல் அதுவும் தமிழ் நாட்டு அரசியல் பற்றி.

தமிழ்வலைப்பதிவுகளில் நிறைய சட்னி, சாம்பார் என்று பதிவுகள் பாக்கிறேன், அவைகள் உன்னுடைய டுபிளிகேட்டா, படித்தவுடன் அஜீரனம் ஆகிறது.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து 'பாடிகாட் ரோடு' என்ற பெயரில் வழங்கி வந்த சாலையில் நான் இருப்பதால் பாடிகாட் என்று பெயர் வந்தது. இதற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நீ ஏதோ உனக்கு நான் பாடிகார்டாக இருக்க போவதாக நினைத்தால். வெரி சாரி.


நீ எழுதிய சில பதிவுகளை பார்த்தேன்.பெண்களிடத்தில் உனக்கு ஏன் இந்த வீண் பொல்லாப்பு. 'அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!' என்று நான் சொல்லவில்லை, பாரதிதாசன் சொல்லியிருக்கார். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அடுத்து வரும் ஜனாதிபதியும் அதற்கு அடுத்து திமுகவிலிருந்து வரப்போகும் அமைச்சரும் பெண்கள் என்பதையும் மறந்துவிடாதே. . ஜனாதிபதி தேர்தல் செய்திகளை உன் பதிவில் பார்த்தேன். ராஷ்டிரபதிபவனை ராஷ்டிர பார்ட்டி பவன் என்று மாற்றிவிடலாம் போல தோன்றுகிறது.

மதுரையில் தேர்தல் நடக்கும் சமயம் அங்கு போகாமல் இருப்பது உனக்கு நல்லது.நீ ஏதோ பதிவர் சந்திப்புக்கு போவது போல அங்கு போனால் நான் உன்னை காப்பாத்த முடியாது. மதுரை தேர்தலில் திண்டிவனம் ராமமூர்த்தி "மதுரை மேற்கு தொகுதியில் எங்கள் கட்சியை மதித்து எந்தக்கட்சி ஆதரவு கேட்கிறதோ அந்தக் கட்சியை ஆதரிப்போம். மதிக்காத கட்சியை ஆதரிக்க மாட்டோம்." என்று சொல்லியுள்ளார். இந்த முக்கியமான அறிக்கையை ஏன் இட்லிவடையில் போடவில்லை.

சிவாஜி படம் பார்த்தாய் என்று கேள்விபட்டேன். நல்லா சிரிச்சு, கைத்தட்டிவிட்டு,ஷ்ரேயாவை பார்த்து ஜொள்ளுவிட்டுவிட்டு பெரிய நடுநிலமைவாதி மாதிரி என்ன விமர்சனம். இதெல்லாம் சின்ன புள்ளத்தனமா இல்லை. பார்த்தவர்கள் எல்லாம் வசனம் கேட்கவில்லை என்று இரண்டாவது தடவை பார்க்கிறார்கள். நீ என்னடானா .. பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல் என்ற பாட்டை கேட்டாயா, அல்லது ஷரேயாவின் .. பார்த்துக்கொண்டிருந்தாயா ? அதில் வரும் பூ பெயர் எல்லாம் சங்ககால பூக்களின் பெயர்கள். இதெல்லாம் ஏன் விமர்சனத்தில் எழுதவில்லை ?

கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார். அதற்கு டி.ஆர்.பாலு அப்படி எல்லாம் முதல்வர் சொல்லவில்லை என்று பதில் அறிக்கை. இதில் எது உண்மை என்று தெரியலை என்று சிவன் என்னை பார்த்த போது உன்னை கேட்க சொன்னார் ? உனக்கு தெரியுமா ? அப்புறம் கலைஞருக்கு "டெல்லி கொண்டான்'' என்ற ஒரு விருதினை கொடுத்துள்ளார்கள். அதை பற்றியும் கொஞ்சம் எழுது.

இன்னொரு நியூஸ் நீ படித்தாயா என்று தெரியவில்லை. அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் பெண்களுக்கு பேச்சுரிமை இல்லை என்று குஷ்பு சொன்னதை கேட்டுவிட்டு பா.ம.க திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு குஷ்புவை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு பெண் வெளிபடையாக பேசமுடியாமல் இருக்கிறார்கள். பெண்கள் வாய்க்கு பர்தா அணிந்துக்கொண்டுதான் போகனும் போல.

மத்திய அரசு நிறுவனமான Hindustan Latex Ltd, புதிய "வைப்ரேட்டிங்' காண்டம இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை 'செக்ஸ் டாய்' என மத்திய பிரதேச பொதுப் பணித் துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், ஆனால் அன்புமணி இந்த அதிரும் ஆணுறையை வரவேற்றிருக்கிறார்.

இந்த ஆணுறையை கைலாசத்தில் இருக்கும் இந்திரன் வாங்கிவிட்டான். "போட்டுகிட்டா...சும்மா அதிருதில்ல.." என்று ரஜினி ஸ்டைலில் பேசுகிறார். எனக்கும் ஒரு டப்பா வாங்கி அனுப்பவும். ( இத்துடன் ரூ100/= அட்டாச்மெண்டில் அனுப்பியுள்ளேன்).


இப்படிக்கு கூவம் நதிக்கு பக்கத்தில் நாத்ததை ரொம்ப நாளாக சுவாசிக்கும்,
பாடிகாட் முனீஸ்வரன்.

Read More...

Saturday, June 23, 2007

தரை இறங்கியது அட்லாண்டிஸ் விண்கலம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அட்லாண்டிஸ் விண்கலம் வெற்றிகரமாக கலிபோர்னியாவில் உள்ள விமான தளத்தில் தரைஇறங்கியது. கடும் மழை பெய்யும் போதும், வேகமாக காற்று வீசும் போதும் தரை இறங்கினால் வெப்ப தடுப்பு தகடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், அட்லாண்டிஸ் விண்கலம் தரையிறங்குவது ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டது. விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடனான இணைப்பை துண்டித்துக் கொண்டு கடந்த 19ம் தேதி அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட்டது. திட்டமிட்டபடி 21ம் தேதி பூமியில் அது தரையிறங்கி இருக்க வேண்டும். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் கேப் கெனவெரல் என்ற இடத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் விண்கலம் தரையிறங்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், கென்னடி ஆய்வு மையப் பகுதியில் வானிலை மிக மோசமாக இருந்ததால், விண்கலம் தரை இறங்குவது இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. விண்கலம் தரை இறங்கும் போது, ஆய்வு மையத்தை ஒட்டி 55 கி.மீ., சுற்றளவுக்கு மழை இருக்கக் கூடாது. மழை மேகங்கள் சூழ்ந்து இருந்தாலும், அந்த மேகங்கள் எட்டாயிரம் அடி உயரத்தில் இருக்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கக் கூடாது என்று நாசா சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கடும் மழை பெய்யும் போது விண்கலம் தரை இறங்கினால், அதன் மேற்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெப்ப தடுப்பு தகடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். அந்த விண்கலத்தை மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் உருவாகி விடும். எனவே தான், இது போன்ற கடுமையான விதிமுறைகளை நாசா கூறியது. இதன் காரணமாகவே, கடந்த 21ம் தேதி நாசா விண்கலம் தரை இறங்கவில்லை. இதை தொடர்ந்து, கென்னடி ஆய்வு மையத்திலேயே இந்திய நேரப்படி நேற்றிரவு ( வெள்ளிக்கிழமை ) 10.44 மணி, 12.20 மணி, மணி என மூன்று வாய்ப்புகளில் விண்கலத்தை தரையிறக்கச் செய்ய வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இந்த சூழல் ஒத்து வராததால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து வானிலை சீரடையவில்லை. எனவே கலிபோர்னியா மாகாணத்திலுள்ள எட்வர்டு விமானப்படை தளத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 1.19 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது.

Read More...

Friday, June 22, 2007

குடியரசு துணைத் தலைவர் - அன்பழகன்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக பொதுச்செயலாளரும் தமிழக நிதியமைச்சருமான அன்பழகன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.


கடந்த மே மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சென்னை வந்தபோது குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக அவர்களிடம் திமுக தரப்பில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாகவும் அதற்குப் பதிலாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில் அடுத்து நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) வேட்பாளராக அன்பழகன் போட்டியிடுகிறார்.

84 வயதான அன்பழகன் இதற்கு முன் நான்கு முறை திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். தற்போது நிதியமைச்சராக உள்ள இவர் ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்தவர். திமுக துவங்கப்பட்ட நாளில் அக்கட்சியில் இணைந்தார்.

Read More...

சிவாஜி விமர்சனம் - குமுதம்

குமுதத்தில் வந்த சிவாஜி விமர்சனம்.

"பேரைச் சொன்னாலே அதிருதுல" _ சிவாஜியில் ரஜினி அடிக்கடி சொல்லும் டயலாக் இது. உண்மைதான். தியேட்டர் அதிர வேண்டுமென்றே ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். நோக்கம் நிறைவேறியிருக்கிறது.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்டாக சம்பாதித்த கோடிகளுடன் இந்தியா திரும்பும் ரஜினி, அந்தப் பணத்தைக் கொண்டு இலவசக் கல்வி கொடுக்க விரும்புகிறார். அரசாங்க அனுமதி வாங்கி, சம்பாதித்த பணம் முழுவதையும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார். ஆனால், ஊழல்வாதிகள் அவரை வளரவிட மறுக்கிறார்கள். அவரை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். வில்லன் அவர் கையில் ஒரு ரூபாய் பிச்சை போட்டு ‘பிழைத்துக் கொள்’ என்று சொல்லிப் போகிறான். அந்த ஒரு ரூபாயைக் கொண்டு மீண்டும் கல்வி, வேலை, மருத்துவம் என்று தன் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார். இதை எப்படிச் சாதிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

கதை, திரைக்கதையெல்லாம் படத்தில் முக்கியமில்லை. ஒரே ஒரு விஷயத்தைத்தான் இயக்குநர் நம்பியிருக்கிறார். ரஜினி. நம்பிக்கை வீண் போகவில்லை.

ரஜினியின் சுறுசுறுப்பும் விறு விறுப்பும் பிரமிக்க வைக்கிறது. ஆடுகிறார், பாடுகிறார், அடிக் கிறார், அசத்துகிறார். கண்களின் காந்த சக்தி இன்னும் அப்ப டியே. உதட்டோர காதல் சிரிப்பும் ஆக்ரோஷ அதிரடிச் சிரிப்பும் ரஜினி ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. அதுவும் அந்த மொட்டைத் தலையில் அவர் காட்டும் ஸ்டைல் கலக்கல். சுயிங்கத்தை கையில் தட்டி வாயில் போடுவதும், நாணயத்தை அப்படி சுண்டி இப்படி சுண்டி பாக்கெட்டில் போடுவதும் விசிலடிக்க வைக்கின்றன.

முதல் பாதியில் வரும் காமெடி கலந்த காதல் காட்சிகள் நிறைய சிரிக்க வைக்கின்றன. அவ்வப்போது அபத்தத்தின் எல்லையையும் தொட்டுவிட்டு வருகின்றன. காதலையும் தன் மாற்றி யோசிக்கும் ஃபார்முலாபடி சொல்லியிருக்கிறார் ஷங்கர். வழக்க மாய் ஹீரோயின்தான் ரஜினியைத் துரத்தித் துரத்தி காதலிப்பார். இங்கே ரஜினி, ஸ்ரேயாவைத் துரத்துகிறார்.

முதல் பாதி காதல் காமெடி என்றால், இரண்டாவது பாதி ஆக்ஷன் அதிரடி.

கார்கள் சீறுகின்றன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பண மூட்டைகள் மாறுகின்றன. ஒரு ரூபாய் கோடி ரூபாய்களாய் குவிகிறது. கிராஃபிக்ஸில் கட்டடங்கள் எழும்புகின்றன. சட்சட்டென்று ஹெலிகாப்டர்கள் இறங்குகின்றன. கிங்காங் வாய்க்குள் ஜீப் பறந்து போய் நுழைகிறது. வில்லன்கள் சுழன்று சுழன்று விழுகிறார்கள். சிவாஜி _ எம்.ஜி.ஆர். ஆகிறார். ஸ்டைல் முடி மொட்டை ஆகிறது. பண நோட்டுக்கள் பறக்கின்றன. கறுப்புப் பணக்காரர்கள் (அது என்ன, கறுப்புப் பணம் என்றாலே, அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தானா? சினிமாகாரர்கள் கிடையாதா?) பணம் கட்டுக்கட்டாய் வெளியே வருகிறது.

நமது காதுகளில் சுற்றப்படும் பூக்களைக் கூட கவனிக்க விடாமல் படம் படுவேகமாக நகருகிறது. தியேட்டருக்கு வெளியே வந்து யோசிக்கும்போதுதான் காதுல பூ சமாச்சாரம் தெரிகிறது.

‘‘கூல்’’ இதுவும் படத்தில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. அதனால் டென்ஷனாக வேண்டாம். கூல். இது லாஜிக் பார்க்க வேண்டிய படமல்ல. பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்களைத்தான். ரஜினியின் ஸ்டைல், ஷங்கரின் பிரமாண்டம். இரண்டும் பிரமாதமாய் இருக்கின்றன.

‘ஒரு கூடை சன்லைட்’ பாடல் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். காமிரா கோணங்கள், எடிட்டிங், சூழல், ரஜினி_ஸ்ரேயாவின் ஆட்டம் என மலைக்க வைக்கிறது. வழக்கமாய் முதலிரவுக் காட்சிகளில் பாலும் பழமும் வைத்து டூயட் பாடுவார்கள். இங்கும் ஷங்கர் மாற்றி யோசித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் ‘ப்ளட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ ஜாடையில் ரஹ்மான் பாடியிருக்கும் ‘தீ தீ’ பாடலுக்கு ‘டெஸ்பரடோ’ பட துப்பாக்கி வில்லன்கள் ஸ்டைலில் காட்சியமைத்திருக்கிறார் ஷங்கர். அது ஒரு கிராஃபிக்ஸ் அற்புதம். ஷங்கர் இந்தப் படத்தில் புகுத்தியிருக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம். ஷங்கருக்கும், துணிந்து செலவு செய்த தயாரிப்பாளருக்கும் சபாஷ்.

பிரமாண்ட பாடல் காட்சிகளுடன் போட்டி போடுகின்றன பாடல் வரிகள். ‘தீ,தீ’ வாலியின் இளமை அதிரடி. ‘சாஹானா’ வைரமுத்துவின் காதல் சரவெடி, ‘ஒரு கூடை சன்லைட்’ பா.விஜய்யின் ஃபாரின் வெடி. ‘பல்லேலக்கா’ நா.முத்துக்குமாரின் இயற்கை வெடி.

வெள்ளை வேட்டி சட்டையில் மீசையில்லாமல் வரும் சுமன் படத்தின் இன்னொரு அதிசயம் ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தேகம் கொண்டு அதிகம் பேசாமல் மிரட்டுகிறார். இனி தமிழ்ப் படங்களில் இவரை நிறைய பார்க்கலாம்.

ஸ்ரேயா ஒரு ஆச்சரியம். பொதுவாய் தமிழ் சினிமா ஹீரோயின்கள் அழகாயிருப்பார்கள். இவர் நடிக்கவும் செய்கிறார். பாடல் காட்சிகளுக்கு அத்தனை செலவு செய்தவர்கள், ரசிகர்கள் மனமறிந்து ஸ்ரேயாவின் மேலாடைக்கு அதிகம் செலவழிக்கவில்லை.

ரஜினியின் வலது கரமாய் விவேக். அவர்தான் படத்தின் காமெடிக்கரம். உதவிக்கரங்களாய் மணிவண்ணன், பட்டிமன்ற பேச்சாளர்கள் சாலமன் பாப்பையா, ராஜா.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆர்ப்பாட்டமான இசை, சுஜாதாவின் புத்திசாலித்தனமான வசனங்கள், கே.வி.ஆனந்தின் அட்டகாச ஒளிப்பதிவு, ஆண்டனியின் அதிவேக எடிட்டிங், தோட்டாதரணியின் பிரமாண்ட அரங்குகள்... என சிவாஜியின் டாப் டென் லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.

படத்தில் இத்தனை ப்ளஸ்கள். ஆனால் ஒரே ஒரு மைனஸ், திரைக்கதை. படத்தைப் பார்க்குபோது ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் என பல படங்கள் நினைவுக்கு வருவது திரைக்கதையின் பலவீனம். மாத்தி யோசிங்க, ஷங்கர்.

சிவாஜி_நோ லாஜிக், ஒன்லி ரஜினி மேஜிக்.
(நன்றி: குமுதம்)

Read More...

காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பேன் - கலைஞர்

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைத்தாலோ, ரத்து செய்தாலோ அதைக் கண்டித்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.


மதுரை இடைத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையர்களுடன் விவாதிப்பதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா நேற்று மாலை டெல்லி சென்றார். இதற்கிடையே, மதுரை தேர்தலை தள்ளி வைத்தால், அதைக் கண்டித்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இருப்பினும் மதுரை இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக ஜூலை 4ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

கோமாளிதனமான அறிக்கை. யாரை மிரட்டுகிறார் என்று தெரிந்திருக்கும் :-). எது எப்படியோ நமக்கு எல்லாம் நிச்ச்யம் ஒரு கவிதை கியாரண்டி.

CNN-IBN செய்தி

தற்போது வந்த செய்தி: மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைத்தால் டில்லி தலைமை தேர்தல் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதனை தி.மு.க. மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மறுத்துள்ளார். டில்லியில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லவில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற தவறான செய்தி, என்றார்.


Read More...

அப்துல்கலாமை சந்திக்க ஜெயலலிதா திடீர் டெல்லி பயணம்

3-வது அணி ஜனாதிபதி அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் கடுமையாக போறாடி வருகிறது. மதுரையில் நேற்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா இரவே தனி விமானத்தில் சென்னை திரும்பினார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி சென்றார்.




திரிணாமுல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் அப்துல் கலாமை ஆதரிக்க முன் வந்துள்ளன. ஆனால் அப்துல்கலாமை ஆதரிக்க முடியாது என்று காங்கிரஸ் கூட்டணியும், இடது சாரி கட்சிகளும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி ஆதரவைப் பெற 3-வது அணி தலைவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 3-வது அணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், சவுதாலா நேற்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்துப் பேசினார்கள். அப்போது பா.ஜ.க. தலைவர்கள், "அப்துல்கலாம் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவாராப ஒரு வேளை அவர் போட்டியிட மறுத்து விட்டால் செகாவத்துக்கு 3-வது அணி ஆதரவு கொடுக்குமாப'' என்று கேட்டனர்.

இதைக் கேட்டதும் 3-வது அணி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே இந்த விஷயத்தில் அப்துல்கலாமிடம் உறுதியான ஒரு நிலைப்பாட்டை பெற அவர்கள் தீர்மானித்தனர்.

இதைத் தொடர்ந்து மீண்டும் சந்தித்துப் பேச அனுமதி தாருங்கள் என்று ஜனாதிபதி அப்துல்கலாமிடம் 3-வது அணி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று (வெள்ளி) சந்தித்து பேச சம்மதித்தார்.

3-வது அணி தலைவர்களின் இந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா டெல்லி செல்ல முடிவு செய்தார். மதுரையில் நேற்று பிரச்சாரம் செய்த ஜெயலலிதா இரவே தனி விமானத்தில் சென்னை திரும்பினார். இன்று காலை 10.30 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி சென்றார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் இன்று காலை டெல்லி சென்றார். இன்று பிற்பகல் அவர்கள் 3-வது அணி தலைவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி அப்துல்கலாமை சந்திக்கிறார்கள்.

அப்போது பா.ஜ.க. விதித்துள்ள நிபந்தனை தொடர்பாக அப்துல்கலாமிடம் 3-வது அணி தலைவர்கள் விவாதிப்பார்கள். தேர்தலில் போட்டியிட அப்துல்கலாமை அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல்கலாம் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்துத்தான் 3-வது அணி தலைவர்களின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இருக்கும். தேர்தலில் போட்டியிட அப்துல்கலாம் மறுத்து விட்டால் 3-வது அணி பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

அப்படி இல்லாமல் அப்துல் கலாம் தேர்தலில் நிற்க சம்மதித்தால், பா.ஜ.க. எத்தகைய முடிவை மேற்கொள்ளும் என்று தெரியவில்லை. இத்தகைய எதிர் பார்ப்புகளுக்கு இன்று பிற்பகல் விடை கிடைத்து விடும்.

Read More...

சிவாஜி விமர்சனம் - விகடன்

விகடனின் சிவாஜி படத்தின் விமர்சனம்.

எல்லாம் இழந்து... பின்-பாதியில் அனைத்தையும் அடையும் அண்ணா மலை, படையப்பா பாணி கதை. முழுக்க முழுக்க ரசிகர்களைக் குறி-வைத்து ஷங்கர் விட்டிருக்கும் ரஜினி ராக்கெட்!

அமெரிக்க ரிட்டர்ன் ரஜினி மக்க-ளுக்கு இலவச கல்வி, மருத்துவ சேவைகள் வழங்கத் திட்டமிடுகிறார். அதனால் தனது கல்வி வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கிறார் சுமன். ரஜினியைச் சுத்தலில் விட்டு வேடிக்கை பார்க்-கிறார். இந்த இழுபறி-யில் தனது சொத்து முழுவதையும் ரஜினி பணயம் வைக்க, அது மொத்த-மாகப் பறிபோகிறது. ‘பிச்சையெடுத்து பொழச்-சுக்கோ. இந்தா என்னோட முதல் போணி!’ என்று சுமன் போடும் ஒரு ரூபாயைத் தொடக்கமாக வைத்து, ‘பிளாக் மணி பிஸினஸ் மேக்னட்’-களிடம் ராபின் ஹூட் பாணியில் ரஜினி பண்ணுகிற அதிரடிதான் ‘சிவாஜி - தி பாஸ்.’

அட, ரஜினியா இது! பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே துறுதுறு, சுறுசுறு ரஜினி! இத்-தனை பாலி-ஷாக அவரைக் காட்டியதற்கு கே.வி.ஆனந்த் கேமராவுக்கும் கிராஃபிக்ஸ் குழுவுக்கும் ஸ்பெஷல் பாராட்டு!

ஸ்ரேயாவுடன் ‘பழகிப் பழகி’ காதல் செய்யும் ரொமான்ஸ் ஆகட்டும், முல்தானி மிட்டியில் மூழ்கிக் குளித்து ‘சிவப்’பாக முயற்சிக்கும் கலாட்டாவா-கட்-டும், சட்டைக் காலரை கடித்தபடி ‘தி பாஸ்’ என்று பிஸினஸ் புள்ளிகளை மிரட்டுவதாகட்டும் சிக்கிய இடத்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார் ரஜினி.

‘மொட்டை பாஸ்’ ஆக மறுஜென்மம் எடுத்து வரும்போது ஆக்ஷனிலும் அடி பின்னுகிறார்.

ரஜினியைத் தவிர்த்து கவனத்தை கொஞ்சம் போலத் திருடுபவர்கள் விவேக், ஸ்ரேயா மட்டுமே! ரஜினி அடிக்க வேண்டிய பன்ச்களை ‘விவேக் மாமா’வை விட்டே விளாசியதும் ஒரு டெக்னிக்தான்!

ஹீரோவை - அதிலும் சூப்பர் ஸ்டாரை சாய்க்க வில்லன் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும்..! ஆனால், சுமனோ சும்மாச்சுக்கும் சுற்றித் திரிவதோடு சரி!

‘தமிழ் கலாசார குத்து விளக்’ காக அறிமுகமாகும் ஸ்ரேயாவை, டூயட் களில் எல்லாம் ‘அந்நிய கலாசார’ மாக்கி மிச்சம் வைக்காமல் ஆட விட்டிருக்கி-றார்கள்.

ஷங்கரின் பிரமாண்ட பிரதிநிதியாக செயல்பட்டு இருக்கிறார் கலை இயக்குநர் தோட்டா தரணி. ‘பூம்பாவாய்’, ‘சஹானா’ செட்டுகளில் அழகான கனவுலகத்தைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். ரஜினி-யைப் பொறுத்தவரை, ‘ஒரு கூடை சன் லைட்’டிலும், ‘அதிரடிக்கார’-னிலும் விசில் வேட்டை! ரசிகர்களின் குறிப்-பறிந்து ரஹ்மானும் மெட்டு கட்டி யிருக்கிறார்.

‘சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாயிடும்’ போன்ற இடங்-களில் சுஜாதா தெரி-கிறார். வில்லனுக்கு சவால் விடும்போது, விவேக்கின் ஒரு சொல் பிரயோகத்தை ரஜினியே பாய்ந்து தடுக்க வேண்டி-யிருக்கிறது!

கதையும் இயக்குநர் ஷங்கர்தான். ‘ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன்’ என்று அவர் பட வரிசையின் வாச-னையே பல இடங்களில் பலமாக வீசு கிறது. தேசத்திலிருக்கிற எல்லா கறுப்புப் பண முதலைகளின் பணத்தையும் வெளியே கொண்டு வர ரஜினி கையாளும் டெக்னிக்கில் ஆரம்-பித்து... ஆடிட்டர்களை அள்ளி வந்து அடி உதை பின்னுவது வரை சாத்தியமே இல்லாத ‘லாஜிக் மேஜிக்’!

கோடிக்கணக்கான ரூபாய்களை கடலை மிட்டாய் திருடுவது போல அபேஸ் செய்வது, கரன்ட் ஷாக் அடித்து இறந்து(?) போன ரஜினியை ‘ஜஸ்ட் லைக் தட்’ உயிர் பிழைக்க வைப்பது என்று ஓசோன் ஓட்டையாக விரிகிறது லாஜிக் பொத்தல்!

ரஜினியைப் பொறுத்தவரை, தனக்குக் கிடைத்த வாய்ப்பில் மற்றுமொரு முறை தன்னை நிரூபித்துவிட்டார். ஷங்கருக்குத்தான் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
( நன்றி: விகடன் )

Read More...

"ஆவியை நேரில் பார்த்தேன்'' - மும்தாஜ்

"ஆவிகள் இருப்பது உண்மைதான். நான் லண்டன் போய் இருந்தபோது, ஒரு பேயை நேரில் பார்த்தேன்'' என்று நடிகை மும்தாஜ் கூறினார்

நடிகை முந்தாஜ் `திக்...திக்...' என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இது, ஒரு திகில் படம் ஆகும். ஆவி கதை. இந்த படத்தில், மும்தாஜ் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு இடைவேளையில், நடிகை மும்தாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ``பேய் படத்தில் நடிக்கும் நீங்கள் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா?'' என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

"நான் ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் போய் இருந்தபோது, அங்குள்ள `நீத்ரோ' என்ற ஓட்டலில் தங்கியிருந்தேன். இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீர் என்று எனக்கு விழிப்பு வந்தது.

என் தலைக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், வெள்ளையாக ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. குலை நடுங்கிப்போனேன். என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. பயத்தில், வார்த்தைகள் வெளிவரவில்லை.

அது, பேய்தான் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் ஆண் பேயா, பெண் பேயா? என்று தெரியவில்லை. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். மீண்டும் மெதுவாக கண் திறந்து பார்த்தபோது, அந்த உருவத்தை காணவில்லை.

மறுநாள் எனக்கு பயங்கர காய்ச்சல் வந்து விட்டது. உடனடியாக அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு, வேறு ஓட்டலுக்கு போய்விட்டேன். என் வாழ்க்கையில், பேயை நேரில் பார்த்த முதல் அனுபவம் அதுதான்"

பிகு: மும்தாஜ் நம்ம டி.ராஜேந்தருடன் சில படங்களை நடித்துள்ளார்.

Read More...

Thursday, June 21, 2007

கேபிள் டிவி பற்றி ராமதாஸ்

கேபிள் டிவி,ஜனாதிபதி தேர்தல், பற்றி மருத்துவர்.

கேபிள் டி.வி. இணைப்பு நிர்வாகத்தை மாநில அரசே கையகப்படுத்தும் சட்ட மசோதா கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார். கேபிள் டி.வி. இணைப்பு நிர்வாகம் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இல்லை என்றார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற முடிவு செய்தது. கேபிள் டி.வி. நடத்துவோரிடம் இருந்து அந்த நிர்வாகத்தை அரசே ஏற்பதுதான் அ.தி.மு.க.வின் நோக்கமாக இருந்தது. கேபிள் டி.வி. நடத்துபவர்களை பற்றி ஏராளமான புகார்கள் வந்தன. ஒருசில `சேனல்கள்' தெளிவற்ற முறையில் ஒளி பரப்பப்படுவதற்கு காரணம் கேபிள் டி.வி. அமைப்பு முறையை ஏக போகமாக ஒரு சிலர் வைத்திருப்பதுதான்.

தமிழ்நாட்டில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகள் உள்ளன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்கள் இருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு மிக்க உள்ளூர் தாதாக்கள் தான் இதை நடத்தி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். மக்களை அச்சுறுத்தி சுரண்டுகிறார்கள்.

எனவே கேபிள் டி.வி. இணைப்பு நிர்வாகத்தில் மாநில அரசு தலையிட வேண்டும். இப்போது நடத்துபவர்கள் நடத்தட்டும். மாநில அரசும் தனியாக கேபிள் டி.வி. தொழிலை தொடங்க வேண்டும். இதனால் மக்கள் விருப்பம் நிறைவேறும் கட்டண கொள்ளையும் குறையும். மாநில அரசுக்கு வருமானமும் அதிகரிக்கும்.

டி.ஆர்.பி. ரேட்டில் நடக்கும் முறைகேடும் தடுக்கப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கும் கடிதம் எழுதுவோம்.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல்கலாம் முதலிலேயே கூறிவிட்டார்.

அந்த முடிவில் இருந்து பின்வாங்கமாட்டார் என்று கருதுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீலை நிறுத்தி ஆதரவு திரட்டி வருகிறோம். அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட்டாலும் ஆதரிக்க மாட்டோம்.

2011-ல் பா.ம.க. தலைமையில் ஆன கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் அதுவே எங்கள் லட்சியம். ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் 2020-ல் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஊட்டி பிரகடனத்தில் கூறப்பட்டு இருக்கும் சமூக பொருளாதார மாற்றத்தை நிறைவேற்றுவோம்.

Read More...

Wednesday, June 20, 2007

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு

மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சில வன்முறை சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக் கூடும் என்பதால் அத்தொகுதியில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வந்தது. தற்போது வந்த செய்தி மதுரை மேற்கு தொகுதி தேர்தல் தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம்கொடுப்பதாகவும், பொதுமக்களை மிரட்டுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. கலெக்டர், போலீஸ் கமிஷனரிடம் அதை தீவிரமாக கண்காணிக்க கூறியுள்ளேன். மேற்கு தொகுதியில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய திமுக முயற்சி செய்யும் என்று தெரிகிறது. நாளை செய்தித்தாளை பார்த்தால் தான் தெரியும்.

Read More...

கோட்டிதனம் செய்யும் சிங்கங்கள்

பார்த்த பதிவு ஒன்று : "ரசிகர்களைத் திட்டிய ரஜனி"

படித்த பின்னூட்டங்கள் இரண்டு :

1. பொன்ஸ்~~Poorna said...

...ஒரு மேட்டர் கண்டுகினீங்களா அண்ணாச்சி? இப்படி பீராபிஷேகம், பாலாபிஷேகம், முதல் நாள் முதல் திரையிடுகைன்னு கெட்டுப் போறவனெல்லாம், 'ன்' தான்.. 'ள்' எல்லாம் தெளிவா நிம்மதியா கலைஞர் தொலைக்காட்சியில் வரட்டும்னு கால் நீட்டி காத்திருக்காங்க பாருங்க ;) எப்பவும் எங்காளுங்க தெளிவு தான் ;)

2. ramachandranusha said...

ஆஹா, பொன்ஸ் :-))) இந்த கோட்டிதனங்களை எல்லாம் நாம செய்வோமா?????


ரசித்த படம் ஒன்று ( கீழே )

( எச்சரிக்கை: கிளிக் செஞ்சா பெரிசா தெரியும் )

ரஜினி ரசிகனின் பஞ்ச்: சிங்கங்கள் என்றாலே 'ள்'லில் தான் முடியும் :-)

( நன்றி: இடம் கொடுத்த ஆசிப் மீரானுக்கும், கொடுத்தா இடத்தில் பின்னூட்டம் போட்டவர்களுக்கும் நன்றி )

Read More...

ரஜினிக்கு ஒரு கடிதம்!

ஜூவியில் ரஜினிக்கு ஒரு கடிதம்! என்ற தலைப்பில் வந்த கடிதம். இதை எழுதியது ஞாநி என்று நினைத்தேன். கடைசியில் தான் தெரிந்தது இதை எழுதியது ஜென்ராம் என்று.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கங்கள்!

உலகம் முழுவதும் உங்கள் ரசிகர்களிடத்தில் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சிவாஜி’ திரைக்கு வந்து விட்டது; பொதுமக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது. உங்களுக்குள் இருந்த மெல்லிய பதற்றம், இப்போது அறவே இல்லாமல் போயிருக்கும். "ஊடகங்கள் மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கி விட்டன. இப்போது மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்த பிறகு சந்தோஷமாக இருக்கிறது" என்று நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.

ஊடகங்களின் பரபரப்பு தவிர நீங்கள் புதிய வியாபார உத்திகளையும் கையாண்டிருக்கிறீர்கள். தொலைக்காட்சி களில் படங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமா பார்த்துவிட்டு வெளியில் வரும் சாதாரண மக்களிடம் கருத்துக் கேட்கப்படும். இன்னும் சில படங்களுக்கான நிகழ்ச்சிகளில் ‘சிறப்பு’ காட்சிகளுக்கு வந்து படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் சில நடிகர்கள் மற்றும் நடிகை களிடம் கருத்துக் கேட்பார்கள். பெரும்பாலும் படம் நன்றாக இருக்கிறது என்பதே பதிலாக இருக்கும்.

ஆனால், நீங்கள் தமிழகத்தின் மிகப் பெரிய இரு வி.ஐ.பி--க்களை இதற்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள். அதனால் செய்திகளிலேயே ‘சிவாஜி’ குறித்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் கருணாநிதி, ‘படம் நன்றாக இருந்தது’ என்று சொல்லியிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவும் ‘படம் சிறப்பாக இருக்கிறது’ என்று பாராட்டி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘மொழி’ திரைப்படத்தை வி.ஐ.பி-க்கள் பார்த்ததற்கும் தற்போது ‘சிவாஜி’-யைப் பார்த்துப் பாராட்டியதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. ‘மொழி’ ரிலீஸாகி பொதுமக்களிடம் ஆதரவைக் குவித்தபிறகு வி.ஐ.பி-க்கள் அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் சிவாஜியின் கதை வேறு!

இந்தப் படத்திற்காக செய்யப்பட்ட முதலீட்டைப் போல இதுவரை இந்தியாவில் எந்தப் படத்துக்கும் செலவு செய்யப்பட்டதில்லை என்பதும் விநியோகஸ்தர்கள் ‘ஏரியா’க்களுக்குக் கொடுத்த விலையும், இதுவரை இல்லாத சாதனை என்பதும் சினிமா வட்டாரத் தகவல். எனவே, படம் வெளியாவதிலும் தொடர்ந்து திரையிடப்படுவதிலும் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்பது உங்கள் விருப்ப மாக இருந்திருக்கும். ‘பாபா’வின் அனுபவம் உங்களுக்குள் எச்சரிக்கை மணியை அடித்திருக்கலாம். எனவே, உங்களுக்குப் பாதுகாப்பு அரணாக அந்த இரு பெரும் தலைவர்களையும் முன்னிறுத்திக் கொண்டீர்கள்.

அதிலும், ‘உங்கள் வழி தனி வழி’ என்று நிரூபித்து விட்டீர்கள்! அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் அந்த இரு தலைவர்களுக்கு இடையில் மிகவும் கடுமையான வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் ‘சிவாஜி’ நன்றாகவும் சிறப்பாகவும் இருப்பதாக இருவரும் கூறியிருக்கிறார்கள். ஒருவர் ஆதரித்த விஷயத்தையே இன்னொருவரும் ஆதரிப்பது என்ற அபூர்வமான அரசியல் காட்சியை ‘சிவாஜி’ மூலம் நீங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள்!

‘சிவாஜி’ படம் பரபரப்பான சூழலில் வெளியாகி இருக்கிறது என்று சில ஊடகங்கள் கூறுகின்றன. ‘பாபா’ வெளியான சூழலைப் பரபரப்பானது என்றால் புரிந்து கொள்ள முடிகிறது.

1973-ம் வருடம் மே மாதம் 11-ம் தேதி பரபரப்பான சூழ்நிலை இருந்தது. எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரையிடப் படுமா, திரையிடும் தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா என்றெல்லாம் பரபரப்பு நிலவியது.

ஆனால், ‘சிவாஜி’ வெளியாகும் சூழலில் அப்படி எந்த சூழலும் இல்லை. ‘பாபா’வில் தரையில் விழுந்து ‘சந்திரமுகி’யில் வீறுகொண்டு எழுந்த குதிரை, ‘சிவாஜி’-யில் இன்னும் எவ்வளவு உயரம் தாண்டிக்குதிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பே அதிகம் இருந்தது. அதுவும் குதிரையின் ஜாக்கியாக ஷங்கர் என்னும் இயக்குநரும் சேர்ந்துகொள்ள எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அவ்வளவுதான்!

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நேரத்தில் உங்களை வருந்தச் செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், வியாபார நோக்கம் காரணமாக நீங்கள் மெளனமாக இருக்கிறீர்கள். ஏனென்றால், அரசியல் தலைவர்கள் தவறு என்று உறுதியாக நம்பும் பல சம்பவங்களைக்கூட ‘ஓட்டுக் கணக்கு’ காரணமாகக் கண்டிக்க மறுக்கிறார்கள்.

அவர்களைப் போலவேதான் இந்த சம்பவங்களை யெல்லாம் நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

வருத்தமூட்டும் அந்த சம்பவங்களில் ஹீரோக்களாக இருப் பவர்கள் உங்கள் ரசிகர்கள். விண்ணை முட்டும் அளவுக்கு அவர்கள் உங்களுக்கு ‘கட்-அவுட்’ வைக்கிறார்கள். அந்த ‘கட்-அவுட்’டுக்கு அவர்கள் பாலாபிஷேகம் செய்கிறார்கள்; பீர் முழுக்கு செய்கிறார்கள்; கற்பூரம் காட்டுகிறார்கள்; தேங்காய் உடைக்கிறார்கள்; பூசணிக்காய் சுற்றி நடு ரோட் டில் உடைக்கிறார்கள்; ஆடு பலியிடுகிறார்கள்; தியேட்டர் வாசலில் கூடிநின்று பரவசப்படுகிறார்கள்.

‘‘வேலைக்குப் போ; குடும்பத்தைக் கவனி’’ என்று நீங்களும் பல வருடங்களாகச் சொல்லிப் பார்க்கிறீர்கள். ஆனாலும், அவர்கள் கேட்பதாக இல்லை. இந்த நிலைமையை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். அந்தப் பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருப்பதை நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.

‘நேற்று திரையில் முளைத்தவர்களின்’ ரசிகர்களே இப்படியெல்லாம் நடந்து கொள்ளும்போது, சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் செய்தால் என்ன என்ற வாதத்தை மட்டும் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளாதீர்கள். நாம் சரிசெய்ய வேண்டிய விஷயங்களை நாம்தான் பொறுப்பேற்று சரிசெய்ய வேண்டும். மாறாக, மற்றவர்களுடைய தவறுகளுடன் ஒப்பிட்டு, நம் தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பது சராசரி அரசியல்வாதிகளின் பண்பு. நீங்கள் அந்த வகையில் சேராமல் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

வகுப்பில் ஆசிரியர் ஒரு மாணவனிடம், ‘‘அறியா மைக்கும் பொறுப்பின்மைக்கும் என்ன வித்தியாசம்?’’ என்று கேட்டார். அவன், ‘‘எனக்குத் தெரியாது. இதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு அக்கறையும் இல்லை’’ என்றான். அவனுடைய அந்தப் பதிலுக்கு ஆசிரியர் பரிசைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அந்த மாண வனுடைய பொறுப்பற்ற திமிரான பதிலே அந்தக் கேள்விக்கான சரியான விடையாக தற்செயலாக அமைந்துவிட்டது.

ஆனால், உங்களுக்குத் தமிழக மக்கள் அளித்துவரும் ஆதரவு, அந்த மாணவனுக்குக் கிடைத்த பரிசைப் போல தற்செயலானதல்ல. உங்கள் பெயரைக் கேட்டாலே இங்கு அதிரத்தான் செய்கிறது. ஆம்! ‘ரஜனி’ அல்லது ‘ரஜினி’ என்ற பெயர் எனக்குள்ளும் பலவிதமான அதிர் வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என் ‘தலை முதல் கால் வரை தவிக்கின்ற தூரத்தை’ ரஜனி பாமி தத், ரஜினி கோத்தாரி என்ற பெயர்கள் ஒருகாலத்தில் ஆக்கிரமித்து நின்றன.

ரஜனி பாமி தத், பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர். இவருடைய அப்பா ஒரு மருத்துவர்; இந்தியர். அம்மா ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வர். ஸ்வீடன் நாட்டின் பிரதமராக இருந்த ஒலாஃப் பாமி என்பவருக்கு நெருக்கமான உறவினரும்கூட; இவர் ஸ்வீடன் நாட்டின் பிரதமராக இருக்கும்போது எந்தவித பாதுகாப்புமின்றி சினிமா பார்த்துவிட்டு மனைவியுடன் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். ரஜனி பாமி தத் ‘கம்யூனிஸ்ட் அகிலத்தின்’ சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சில ஆண்டுகள் வழிகாட்டியாக இருந்தவர்.

ரஜினி கோத்தாரி ஓர் அரசியல் அறிஞர்; போராளி. மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட பல அமைப் புகளில் பங்கேற்ற பேராசிரியர்.

இதற்குப் பொருள் நீங்கள் என்னை அதிரச் செய்ய வில்லை என்பதல்ல; உங்கள் பெயரால் ஏற்பட்ட அதிர்வு தான் இன்று இந்த ‘சிந்தனை’ பகுதியின் வடிவத்தைக் கடிதமாக மாற்றி இருக்கிறது! இந்தக் கடிதம் மூலம் உங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறிதளவேனும் மாற்றம் இருக்குமானால், அதுவே இந்தக் கடிதத்துக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்வேன்.

வாழ்த்துக்களுடன்,

ஜென்ராம்
( நன்றி: ஜூவி )

Read More...

வழக்கம் போல் ஜெயலலிதா டில்லி பயணம் திடீர் ரத்து

வழக்கம் போல் ஜெயலலிதா டில்லி பயணத்தை திடீர் என்று ரத்து செய்துள்ளார். இன்று டெல்லி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு கட்சி தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணியினர் கலாமிடம் சம்மதம் பெறுவதற்காக இன்று மாலை டில்லி செல்ல உள்ளனர். ஜெயலலிதாவும் டில்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது டில்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட மறுத்துவிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து பேசுகிறார்கள்.

அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை, மலைச்சாமி ஆகியோர் டில்லி செல்வார்கள் என்று தெரிகிறது

Read More...

வாய்ச்சொல்லில் வீரரடி

சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் நேற்று முன்தினம் குஷ்பு கலந்து கொண்டு பேசினார். தான் ஏற்கனவே கூறிய கருத்துக்கள் பற்றியும், தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதையும், வழக்குகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்து பேசினார். இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்பது துளிகூட கிடையாது. அதிலும் கருத்துச் சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து பாமக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையேல் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், பா.ம.க. வக்கீல் பிரிவு தலைவர் நடிகை குஷ்புவுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.


இவர் பேசிய பேச்சு கோர்ட்டை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் பிரிவு தலைவர் வக்கீல் ஏ.முருகன், நடிகை குஷ்புவுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வதாகவும், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூறிய கருத்தை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

எனது கட்சிக்காரரும், மேட்டூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார். மேட்டூர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியும் நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜரானீர்கள். மேட்டூர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை ரத்து செய்யும்போது வழக்கு நிலுவையில் உள்ள காலம் வரை வழக்கு தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று 11.6.2005-ம் ஆண்டு தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழ் பெண்களை இழிவுபடுத்தியது போன்று நீதித்துறையையும், பதவியில் உள்ளோர்களுக்கு தான் நீதி கிடைக்கிறது என்றும், என்னுடைய வழக்கில் நீதி விலை கொடுத்து வாங்கப்பட்டது என்றும், தனக்கு நீதிமன்றம் தேவையில்லாமல் பிடியாணை பிறப்பித்தது என்றும், நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கில் பேசியதாக செய்திகள் வந்துள்ளன.

இது நீதிமன்ற அவமதிப்பிற்கு உட்பட்ட செயலாகும். என்னுடைய வழக்கில் நீதி விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். நீதியை யார் விலை கொடுத்து வாங்கினார்கள்? யார் விற்றார்கள்?

இந்த நீதிமன்ற அவமதிப்பு கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இதனால் ஏற்படும் சங்கடங்களுக்கும், விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.


Read More...

Tuesday, June 19, 2007

3-வது அணி ஜோக்கர் அணி - கலைஞர்

ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பாட்டீலை நிறுத் துவது என்பது சோனியாவின் சிந்தனையில் உதித்த ஜோக் என்று கமெண்ட் அடித்த ஜெயலலிதாவிற்கு கலைஞர் 3-வது அணி ஜோக்கர் அணி பிரதீபாபட்டீலை ஜோக்கர் என்பதா? என்று அறிக்கை:

அவர் ஒரு பெண்மணி கல்வித்தகுதி எம்.ஏ., எல்.எல்.பி., சமூகசேவகி, வழக்கறிஞராகத் தொழில் புரிந்தவர். 1967 முதல் 1985 வரை மராட்டிய மாநிலத்து சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். 1967 முதல் 1972 வரை மராட்டிய மாநில அரசாங்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மதுவிலக்குத்துறை, சுற்றுலாத் துறை, வீட்டுவசதித்துறை ஆகிய வற்றின் துணை அமைச்சராகப் பணியாற்றியவர்.

1972 முதல் 1974 வரையில் மராட்டிய மாநில அரசின் சமூகநலத்துறை அமைச்சர், 1974-1975 வரை மராட்டிய மாநில அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் 1975 முதல் 1976 வரையில் மராட்டிய மாநிலத்தில் மதுவிலக்கு, கலைபண்பாட்டுத்துறை அமைச்சர். 1977 முதல் 1978 வரையில் மராட்டிய மாநிலத்தின் கல்வி அமைச்சர், 1979 முதல் 1980-ல் மராட்டிய மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர், 1982 முதல் 1985 வரையில் மராட்டிய மாநில வீட்டுவசதிதுறை அமைச்சர் 1983 முதல் 1985 மராட்டிய மாநில சமூகநலத்துறை அமைச்சர், 1985 முதல் 1990 மாநிலங்களவை உறுப்பினர், 1986 முதல் 1988 வரை மாநிலங்களவை துணைத்தலைவர், 2004 நவம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர். இத்தனை பதவிகளில் அமர்ந்து பணியாற்றியவர் என்பதுடன், மும்பையிலும், டெல்லியிலும் பெண்களுக்கென தனி விடுதிகளை ஏற்படுத்தியவர்.

கிராமப்புற இளைஞர்களுக் காக ஜல்கோனில் பொறியியல் கல்லூரி ஒன்றியை தோற்று வித்தவர்.

"ஷ்ரம்சாதனா'' அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தவர். அரசு சார்புள்ள மகிள விகாஸ் மகாமண்டல் என்ற நிறுவனத்தை தோற்று வித்தவர்.

பார்வையற்றோருக்கென ஒரு தொழில் பயிற்சிப்பள்ளியையும், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியையும் தோற்று வித்து நடத்தி வருபவர்.

பெண்களுக்கென ஒரு கூட்டுறவு வங்கியையே உருவாக்கி யவர். நைரோ பியிலும், போர்ட்டோரி கோவிலிலும் நடைபெற்ற சர்வதேச சமூகநல மாநாடு களில் கலந்து கொண்டவர். பெண்களின் நிலை பற்றி ஆஸ்திரியாவில் நடைபெற்ற மாநாட்டுக்கு பெண்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச்சென்றவர். அதைப்போலவே பல் கேரியாவில் நடைபெற்ற மாநாட்டிற்கும் அழைத்துச் சென்றவர்.

பீஜிங்கில் நடைபெற்ற உலகமகளிர் மாநாட்டில் கலந்து கொண்டவர். பெண்கள் மட்டுமே பங்கெடுத்துக்கொள்ளும் ஊர்காவல் படையை அமைத்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிகளை உருவாக்கியவர்.

ஆகிய இத்தனை பொதுநலம் சார்ந்த பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றியவர். அவரைத்தான் தியாகத் திருவிளக்கு சோனியாவும், இந்தியப்பிரதமர் மன் மோகன்சிங்கும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும், தி.மு.க.வின் தலைவராகிய நானும், மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் டெல்லியில் கூடிக்கூடி விவாதித்து இந்தியாவின் குடியரசுத்தலைவராக இது வரை ஒரு பெண்மணி அமையாத குறையை இந்த முறை நீக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு, குடியரசுத்தலைவர் பொறுப்பு வகிப்பதற்கான வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.

அவரைத் தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திரத்தில் மகளிர்க் குரிய சுதந்திரத்தை நிலை நாட்ட வேண்டுமென்று இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமை படைத்தவர்கள் அனை வரையும் மிகப்பணிவன்புடன் கேட்டுக்கொள்கிற நேரத்தில் தேர்தல் களத்தில் நிற்கிற ஷெகாவத் மீது நமக்குள்ள மரியாதையும், மதிப்பையும் நிறைவிற்கொள்கிறோம். போட்டி வேட்பாளர் என்பதற் காக அவரது அறிவாற்றலை அலட்சியப் படுத்தி, விமர்சிக்க மாட்டோம்.

ஆனால் சென்னையில் மூன்றாவது அணி என்ற பெயரால் ஒரு அணி கூடியது. அப்படிக்கூடுவது அவர்கள் உரிமை. அந்தஅணி, ஒரு வேட்பாளரை அறிவிப் பதும் அதன் உரிமை. ஆனால் அதை விடுத்து, பிரதீபாபட்டீலை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பது "நல்ல நகைச்சுவை''-"ஜோக்'' என்று அந்த மூன்றாவது அணியினர் கேலி செய்திருப்பது, அந்த அணியிலே உள்ள மூலவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்கக் கூடியதாகும்.

பெரியவர்கள் கூடி "பிள்ளையார் பிடிப்பார்கள்'' என்று எதிர்பார்த்தால், அவர் கள் பிடித்தது பிள்ளையாராக இல்லைப என்பதுதான் ஏமாற்றம் தரும் செய்தியாகும்.

பிரதீபாபட்டீல் வேட்பாள ராக தேர்வு செய்யப்பட்டி ருப்பது "நகைக்சுவை என்றால், அப்படிச்சொன்னவர்கள், ஒன்பான் சுவைகளின் ஒரு சுவையும் அறியாதவர்கள் என்றே கருதவேண்டியுள்ளது. இலையிலிட்ட உண்டியின் அறுசுவை மட்டும் அறிந்தவர்கள் போலும்என வருந்திடவும் வேண்டியுள்ளது. குடியரசுத்தலைவர் வேட்பாளர் அறிவிப்பை "ஜோக்'' எனமொழிந்து மூன்றாம் அணிக்கே "ஜோக்கர்'' அணி என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது நமது தாழ்மையானகருத்து.

Read More...

khushhhh... ....bo

இந்தியாவில் தனி மனித சுதந்திரம் என்பது துளிகூட கிடையாது. அதிலும் கருத்துச் சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை என்று நடிகை குஷ்பு ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் (ஃபிக்கி) மகளிர் பிரிவு "நீதி -உரிமையா அல்லது சலுகையா?' என்ற தலைப்பில் கருத்தரங்கை திங்கள்கிழமை நடத்தியது. இதில் பங்கேற்று நடிகை குஷ்பு பேசியது



""நீதி என்பது உரிமையா? அல்லது சலுகையா? என்று கேட்டால் அது சாதாரண மக்களுக்கு உரிமை, அதேசமயம் பதவியில் உள்ளவர்களுக்கு சலுகை என்றே கூற வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் இந்தியாவில் உண்டு என்றால், எனது கருத்தைத் தெரிவித்ததற்காக என்மீது 32 வழக்குகள் போடப்பட்டுள்ளதே, அது ஏன்? இவற்றில் 8 வழக்குகள் மட்டுமே முடிவுற்றுள்ளன. எஞ்சியுள்ள 24 வழக்குகள் எப்போது முடிவடையும் என்றே தெரியாது.

கொலைக் குற்றவாளிக்கு பிறப்பிக்கப்படுவதைப் போல ஜாமீனில் வெளிவர முடியாத (என்பிடபிள்யூ) வாரண்ட் எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை மாலை.

எவ்வித அறிவிப்பும் இன்றி திங்கள்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜரானபோது, செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகுமாறு என்னிடம் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றம் வந்தபோது, அங்கு கூடியிருந்த போதையிலிருந்த அரசியல்வாதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஆத்திரத்தோடு செருப்புகளையும் முட்டைகளையும் தக்காளியையும் என் மீது வீசினர். போலீஸார்தான் என்னை அவர்களிடமிருந்து காத்தனர்.

ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 8 ஆண்டு காலம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இது சாதாரண பாமரனுக்கு சாத்தியமா?.

எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவாக உள்ள வட மாவட்டங்களில்தான் தொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் பெண்களுக்கெதிரான பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எது சரி, எது தவறு என்று அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பிகாரில் 2 வயது சிறுவனுக்கெதிரான வழக்கு. அவன் 26 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த வழக்கு. 6 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இப்போது 8 வயதாகும் அச்சிறுவன் தொடர்ந்து நீதிமன்றம் முன் ஆஜராகிறான், தன் மீது எத்தகைய வழக்கு சுமத்தப்பட்டுள்ளது என்றே அவனுக்குத் தெரியவில்லை. பிகாரில் மட்டும் அல்ல, பல இடங்களில் இதுதான் நிலை. இந்த நிலை தொடரும்போது இந்தியா எப்படி வளர்ச்சி அடையும்'' என்று கேட்டார் குஷ்பு.

Read More...

கலாமை ஆதரிக்க தயார் - பாஜக!


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால் அவரையே ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பாஜக இன்று திடீர் பல்டி அடித்துள்ளது.

மீண்டும் போட்டியிட கலாம் தயார் என்றால் அவரை ஆதரிக்க நாங்களும் தயார். அவர் போட்டியிட ஒப்புக் கொண்டால் எங்கள் கூட்டணி ஒரு மனதாக அவரை ஆதரிக்கும் -
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாலை அப்துல்கலாமை, மன்மோகன் சிங் சந்திக்க உள்ளார். இதில் தன் நிலையை எடுத்துகூறுவார் என்று தெரிகிறது.

3 வது அணி தன் பெயரை பரிந்துரைத்தது கலாமிற்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

இன்னும் என்ன கூத்துக்கள் நடக்க போகிறதோ :-). சைடில இருக்கும் ஓட்டு பெட்டியில் உங்க ஓட்டை போடுங்க

Read More...

சர்ச்சைகள் நிறைந்த ஜனாதிபதி தேர்தல்கள்!

நாட்டின் ஜனாதிபதியாக வரக் கூடியவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக இருக்க வேண்டும். என்றாலும், அப்படி ஒரு தலைவரை தேர்வு செய்யும் போது கட்சிகளுக்குள் ஏற்படும் "சர்ச்சைகள்' தவிர்க்க முடியாதது.

மிக உயரிய பதவியாகக் கருதப்படும் ஜனாதிபதி பதவிக்கு உரியவரை தேர்வு செய்வதில், இதற்கு முன்பும் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளும், இடது சாரிகளும் ஒருமனதாக ஜனாதிபதி வேட்பாளராக பிரதீபா பாட்டீலை அறிவிக்கும் வரையில் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்தது. சிவராஜ் பாட்டீல், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே உள்ளிட்டோர் பெயர் கள் அப்பதவிக்கு பரிசீலிக்கப்பட் டன. என்றாலும், பெண் வேட் பாளர் என்ற காரணத்தின் அடிப் படையில் இடதுசாரிகள் பிரதீபாவை ஆதரிக்க முன் வந்தனர்.


1952ம் ஆண்டில் முதல் ஜனாதிபதியை தேர்வு செய்த போது, இதுபோன்று கட்சிகளுக்குள் பிரச்னைகள் எழவில்லை. கோல் கட்டாவில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ராஜேந்திர பிரசாத்தை ஜனாதிபதியாகவும் ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாகவும் ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தனர். பிரச்னை அத்தோடு முடிந்துவிட்டது.

1957ம் ஆண்டில் இரண்டாவது ஜனாதிபதி தேர்தலின் போது, மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ராஜேந்திர பிரசாத் ஆசைப்பட்டார். ஆனால், பிரதமர் நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், துணை ஜனாதிபதியாக இருக்கும் ராதாகிருஷ்ணனை ஜனாதிபதியாக்கலாம் என்று நேரு ஆலோசித்தார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், ராஜேந்திர பிரசாத் தனது ஆசைப்படியே இரண்டாம் முறை பதவி வகிக்கட்டும் என் றனர். கட்சியில் எழுந் துள்ள இந்த பிரச்னையால் தனது, எண் ணத்தை நேரு மாற்றிக் கொண் டார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், துணை ஜனாதிபதி ராதாகிருஷ் ணன் தேர்வு செய்யப்பட்டனர்.

1962ம் ஆண்டு நடந்த மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஜாகீர் உசேன் துணை ஜனாதிபதியானார். அப்போதும் ராஜேந்திர பிரசாத் மூன்றாம் முறையாக பதவியில் அமர ஆசைப்பட்டார். எனவே சில ராஜ்ய சபா உறுப்பினர்கள் கூட, ஒருவர் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாகக்கூடாது என்று சட்டம் இயற்றலாமா என்றுகூட ஆலோசித்தனர்.

1967ம் ஆண்டில் ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் முடியும் போது, காங்கிரஸ் இண்டிகேட் (இந்திரா) மற்றும் சிண்டிகேட் (நிஜலிங்கப்பா, காமராஜர் உள்ளிட்டோர்) என இருபிரிவாக செயல்பட்டது.

ராதாகிருஷ்ணனுக்கு இரண் டாவது முறையாகவும் ஜனாதிபதி வாய்ப்புத் தர வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். ஆனால் அப்போது, "துணை ஜனாதிபதியாக உள்ள ஜாகீர் உசேனுக்கு என்ன பதில் சொல்வது' என்று இந்திரா அவர்களிடம் கூறிவிட்டார். இதனால் நான்காவது ஜனாதிபதி தேர்தலில் ஜாகீர் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்துதான், ஒருவருக்கு ஒருமுறைக்கும் மேல் ஜனாதிபதி பதவி தொடர அனுமதிப்பதில்லை என்ற மரபு உருவாகத் தொடங்கியது.

1969ம் ஆண்டில் ஜாகீர் உசேன் மறைந்துவிட்டதால், ஐந் தாவது முறையாக ஜனாதிபதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சிண்டிகேட் தலைவர்கள் தங்கள் வேட்பாளராக சஞ்சீவரெட்டியை முன் நிறுத்த முடிவு செய் தார்கள். சஞ்சீவ ரெட்டியை காங்., வேட்பாளராக இந்திராவும் ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அப்போது தற்காலிக ஜனாதிபதி பொறுப்பிலும் இருந்துவந்தார். அவரும் போட்டியிட விரும்பினார். ஆகவே சுயேச்சையாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக, துணை ஜனாதிபதி வி.வி.கிரியை ஆதரிக்கும்படி இந்திரா தெரிவித்துவிட்டார்.

அதாவது தங்கள் மனசாட்சிப் படி ஓட்டுப் போடலாம் என்று கூறிவிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின், சிண்டிகேட் தலைவர்கள் இந்திராவை ஓரம் கட்ட நினைத்திருந்ததை அறிந்து இவ் வாறு இந்திரா செயல்பட்டார். இதனால் இந்திரா நினைத்த வி.வி. கிரி கடைசியாக இடதுசாரிகளின் ஆதரவுடன் ஜனாதிபதியானார்.

வி.வி.கிரி பதவிக்காலம் முடிந்தவுடன் இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்படுவதை அவரே விரும்பவில்லை. இதனால், 1974ம் ஆண்டில் நடந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முன்வரவில்லை. இந்த தேர்தலில்தான் முதன்முறையாக துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இந்நிலையில் பக்ருதீன் அலி அகமதை இந்திரா ஜனாதிபதியாக்கினார்.

பக்ருதீன் 1977 பிப்ரவரியில் மறைந்தார். எமர் ஜென்சி எதிர்ப்பு அலையில் அப்போது பார்லிமென்ட்டுக்கு தேர்தல் நடந்த நேரம். அத்தேர் தல் முடிவு காங்கிரசுக்கு எதிராக அமைந்தது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு சார்பில், ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் நின்ற வேட்பாளர் சஞ்சீவரெட்டி போட்டியின்றி வெற்றி பெற்றார். அத்தேர்தலில் வேறு வழியின்றி சஞ்சீவ ரெட்டியை இந்திரா ஆதரிக்க வேண்டியதாயிற்று.

1982ம் ஆண்டில் நடந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் போது, இந்திராவின் கை ஓங்கியிருந்ததால், அவருடைய வேட் பாளரான ஜெயில் சிங் எளிதில் வெற்றி பெற்றார். 1987ம் ஆண்டில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கடராமன் ஜனாதிபதியாவதில் எந்த சிக்கலும் இல்லை. வெங்கடராமன் பதவிக்காலம் 1992ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அவர் இரண்டாம் முறையாக நிற்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். இரண்டாம் முறை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற மரபை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கடைபிடிக்க விரும்பியதால், 10வது ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியானார். சங்கர் தயாள் சர்மாவின், பதவிக்காலம் 1997ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்று அவர் விரும்பினார். என்றாலும் அப் போது பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு, கூட்டணிக் கட்சிகளின் விருப் பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என் பதாலும், இரண் டாம் முறை வாய்ப்பு வழங் கப்படுவதில்லை என்ற காரணத்தினாலும், முதன்முறையாக ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கலாம் என்ற கருத்து எழுந்தது. துணை ஜனாதிபதியாக இருந்த நாராயணன் ஜனாதிபதியானார். சுயேச்சையாக போட்டியிட்ட டி.என். சேஷனுக்கு சிவசேனா ஆதரவு மட்டுமே இருந்தது.

நாராயணனின் பதவிக்காலம் 2002ம் ஆண்டில் முடிவுக்கு வந்த போது, அவரும் இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்படுவதை விரும்பினார். என்றாலும் அப்போது ஆட்சியிலிருந்து பா.ஜ., அரசு, அதற்கு விருப்பம் இல்லை என்பதையும் அவரிடம் தெளிவாக கூறிவிட்டது. அப்துல்கலாமை வேட்பாளராக அப்போதைய பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது. பி.சி. அலெக்சாண்டரை வேட் பாளராக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.கலாம் வேட்பாளர் என்பதால் காங்கிரஸ் மனதை மாற்றிக் கொண்டது. இடதுசாரிகள் லட்சுமி சேகலை வேட்பாளராக நிறுத்தினார்கள். என்றாலும் கலாம் வெற்றி பெறுவது தவிர்க்க முடியாததானது.
( தகவல் உதவி: தினமலர் )

Read More...

பர்தா

உதய்ப்பூரில் நடந்த 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேவார் மன்னர் மகாராணா பிரதாப்பின் 468-வது பிறந்தநாள் விழாவில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்து காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் கூறிய கருத்துக்கு முஸ்லிம்கள் மற்றும் வரலாற்று வல்லுனர்கள் இடையே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


"பர்தா அணியும் பழக்கம் முகலாயர் ஆட்சி காலத்தில் தான் ஏற்பட்டது. நம் நாட்டில் படையெடுத்து வந்த முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கவே முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தொடங்கினர். பெண்கள் ஏன் இன்னமும் பர்தா அணிந்து பூட்டிய வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும்.

பர்தா அணிவதை பெண்கள் கைவிட வேண்டும். சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆகியும் ஏன் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். காலத்துக்கு ஏற்ப பெண்கள் மாற வேண்டும்."


- பிரதீபா பட்டீல்

இதற்கு முஸ்லீம்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல சரித்திர நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Read More...

Monday, June 18, 2007

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-6-2007

இது புதிய பகுதி.


சென்னை பெரியார் பாலத்திலிருந்து நேராக சென்ட்ரல் நோக்கிச் சென்றால் மத்திய சிறைச்சாலை மற்றும் கல்லறைகள் முன் இருக்கும் மைடியர் 'ஸ்ரீ பாடிகாட் முனீஸ்வரனே!'. வணக்கம்.

உனக்கு எதற்கு கடிதம் எழுதுகிறேன் என்று வியப்பாக இருக்கலாம். எல்லோரையும் காக்கும் நீ என்னையும் (குறிப்பாக தமிழ் வலைப்பதிவர்களிடமிருந்து) மற்றவர்களையும் காக்க மாட்டயா என்ற நப்பாசைதான்.

இனி உனக்கு அடிக்கடி கடிதம் எழுதி தொந்தரவு செய்ய போறேன். அதற்கு மன்னிக்கவும்.

பெண் வேட்பாளர் பிரதீபா பட்டீல் என்று சோனியா காந்தி அதிரடியாக (வேறு வழியில்லாமல்) முடிவு எடுத்து, 'பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்குரிய விஷயம்' என்று அறிக்கை ஜல்லியை படித்தாயா ?. கலைஞர் 'பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது தான் மகளிருக்கான 33 சதவீத ஒதுக்கீட்டுக்கு தொடக்கம்.ஆத்திக மொழியிலே சொல்ல வேண்டுமானால், பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது' என்ற பேத்தல் போன்றவற்றிலிருந்து எங்களை நீதான் காத்து அருள் புரிய வேண்டும்.

பூச்சாண்டி @ தமிழ்மணம்.காம் என்று ஒரு பதிவர் எழுதியிருக்கார். அதில் தன் நண்பரின் குழந்தை சாய்பாபாவின் தலைமயிரை பாத்து பயந்துவிட்டது என்று எழுதியிருக்கார். என் பக்கத்துவீட்டு குழந்தை தாடி காரரை பார்த்தால் பயந்துவிடும். என்ன செய்வது குழந்தைகள் என்றாலே இப்படி தான் எதையாவது மிரண்டு விடும். இந்த மாதிரி குழந்தைகளுக்கு நீங்க தான் தைரியம் கொடுக்க வேண்டும்.

முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் என்ன ஆனார் என்று உனக்கு தெரியுமா ? காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தால் அவரும் ஜானாதிபதி வேட்பாளர் என்று சொல்லியிருப்பார்கள். அவர் எங்கு இருக்கார் என்று தெரிந்தால் எனக்கு பதில் போடவும்.

திரும்பவும் எல்லா இடத்திலும் சிக்குன்குனியா வந்துவிட்டது அந்த மக்களை காக்க வேண்டும். அதேன் போல் மதுரை மேற்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் என்பதால் எல்லா கட்சியும் அங்கே பிரச்சாரம் செய்கிறார்கள் அவர்களிடமிருந்தும் மக்களை காக்க வேண்டும்.

கலைஞர் டிவியில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவிகித பங்குகளும், புதிய சேனலின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் சரத்குமாருக்கு மீதம் 20 சதவிகித பங்குகளும் இருப்பதாகக் கூறுகின்றன. ஆக ‘‘ராஜ் டி.வி-க்கு ‘கலைஞர் டி.வி.’ மீது எந்தவிதமான உரிமையும் கிடையாது! ராஜ் டிவியை சீக்கிரம் ஓரம் கட்டிவிடுவார்கள். ராஜ் சகோதரர்களுக்கு நீ அருள் புரிய வேண்டும்.

இந்த இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமீதா ஷெட்டி. இவரும் நடிகைதான். அக்கா மட்டும் அகில உலகப் புகழ் பெற்று விட்ட நிலையில், நாம் மட்டும் சும்மா இருப்பதா? என்று ஷமீதா நினைத்தாரோ என்னவோ! சரியான சர்ச்சை ஒன்றில் சிக்கி விட்டார். ‘‘அண்மையில் பாலிவுட் படவிழா ஒன்றில் பிரபல படத்தயாரிப்பாளர் மகேஷ்பட்டுடன் ஷமீதாஷெட்டியும் கலந்து கொண்டார். கண்ணைப் பறிக்கும் கருப்பு நிற ஆடையுடன் அந்தப் படவிழாவில் பங்கேற்ற ஷமீதா, பாவம் உள்ளாடையை அணியாமல் விழாவுக்கு வந்து விட்டதுதான் பெரிய பரிதாபம்.இவரது எதிரே நின்ற புகைப்படக்காரர் சும்மா இருப்பாரா ? காமிராவை கிளிக் செய்ய.. மேல் விவரங்கள் வேண்டாம். உள்ளாடை கூட ஒழுங்காக அணியாமல் நடிகைகள் உலா வந்து விட்டு, இது போன்ற பப்பராஸிகளைக் குற்றம் சாட்டுவது என்ன நியாயம்? நீயே சொல் யார் மீது தப்பு என்று ?

சிவாஜி படத்தில் விவேக் 'சின்ன பசங்களெல்லாம் விரல் காட்டி பஞ்ச் வசனம் பேசுகிறார்கள்' என்று விவேக் சிம்புவை குறிவைத்து பேசுவதாக உள்ளது என்று அவரிடம் கேட்டதற்கு தனுஷும் `சுள்ளான் சூடானால் சுழுக்கு எடுத்துடுவேன்' என்று பேசியுள்ளார் என்று பதில் சொல்லியுள்ளார். இது எப்படி இருக்கு ?.

கடைசியாக மூன்றாவது அணி என்று ஒரு காமெடி நடந்துகிட்டு இருக்கு. உன் பவர் எல்லாவற்றையும் யூஸ் பண்ணி எப்படியாவது அழித்திவிடவும். உன்னால் முடியவில்லை என்றால் எப்படியாவது ரஜினியை அதில் சேர்த்துவிடு. நன்றி.


அன்பன்
இட்லிவடை

Read More...

Sunday, June 17, 2007

ஸ்ரீகாந்த் வந்தனா - விஜய் டிவி!

* "மனைவியாக ஏற்கும் வரை வெளியேற மாட்டேன்" ஸ்ரீகாந்த் வீட்டில் 5-வது நாளாக போராடும் வந்தனா

* வந்தனாவை விட்டு சட்டப்படி பிரிவதற்காக ஸ்ரீகாந்த் ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முறைப் படி விவாகரத்து வழக்கு தொடர்கிறார். காலையில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கை தொடரும் அவர் அதன் பிறகு போலீசார் முன்பு ஆஜராகிறார்.


விஜய் டிவியில் "நீயா நானா" என்ற நிகழ்ச்சியில் "என்னுடைய கனவு தேவதை எப்படி இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். நோ கமெண்ட்ஸ்!

Read More...

Friday, June 15, 2007

சிவாஜி - குற்றப்பத்திரிக்கை

சிவாஜி படத்தின் FIR போட தாமதமானதற்கு மன்னிக்கவும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் :-).

முதல் பஞ்ச் : டிரைலரில் இருந்த இம்பாக்ட் முழுபடத்தில் இல்லை.



கதை: ரஜினி பட கதை.

ரஜினி: மேக்கபில் அழகாக இருக்கிறார், ஆனால் வயது தெரிகிறது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் சண்டை எல்லாம் போடுகிறார் சபாஷ். மொட்டை தலை ரஜினி கலகல. ( சிவாஜி, எம்.ஜி.ஆர் வசனம் நல்லாவே இருந்தது) மொட்டைக்கு யூஸ் செய்த கத்தியை கொஞ்சம் அந்த காட்சிகளுக்கும் யூஸ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நிச்சயம் ஒரு வாரத்தில் தியேட்டர் காரர்கள் செய்துவிடுவார்கள். பபிள் கம், காசை சுண்டி போடுகிறார் விதவிதமாக பிடிக்கிறார்.

ஸ்ரேயா: தமிழ்செல்வி என்று பெயர் வைத்துக்கொண்டு அக்மார்க் தமிழ் பெண்ணாக வருகிறார். தமிழ் பெண்கள் இவ்வளவு அழகா ? என்று அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார் . எல்லா பாடல் கட்சிகளிலும் ஒரே மாதிரி அசைவுகளை தருகிறார். அழகாக இருப்பதால் இவரை பற்றி அதிகம் குறை சொல்ல மனசு இல்லை. பட்டிமன்ற புகழ் ராஜா இவருக்கு அப்பா. அப்பப்பா

சுமன்: வெள்ளை வேட்டி, சட்டையில் வரும் காட்சிகளில் ரஜினியுடன் மோதுகிறார். ரஜினியை பார்க்கும் போது எல்லாம் கண்ணாடியை கழட்டி போடுகிறார். பழைய ஸ்டைல் புது வில்லன். ராம்ராஜ் வேட்டி சட்டை விளம்பரத்துக்கு நிச்சயம் நல்ல தேர்வாக இருப்பார்.

சங்கர்: சங்கரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது.. Money Laundering பற்றி சொல்லியிருக்கிறார். ஆழமாக சொல்லியிருக்கலாம். நிறைய இடத்தில் சங்கர் படமா, ரஜினி படமா என்று குழம்பி போயிருக்கார் மனுஷன். கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று சொல்லி கொடுத்திருக்கிறார். கொஞ்சம் சொதப்பியிருந்தால், ரஜினி ரசிகர்களிடம் அடி வாங்கியிருப்பார். Just Missed.

சுஜாதா: சண்டை காட்சிகளில் கூட்டமாக வரும் அடியாட்களை பார்த்து "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" என்று ரஜினி படத்துக்கும் வசனம் எழுதியிருக்கிறார். ( இந்த பன்றிக்கும், பன்றிக்கு நன்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )

விவேக்: ஸ்ரேயா, ரஜினி முதல் இரவு காட்சியை தவிர்த்து ரஜினி கூடவே எப்போதும் இருக்கிறார். பன்ச் டையலாக் இவர் தான் பேசுகிறார்.

பாடல்கள், இசை, கலை, மேக்கப்..எடிட்டிங்... : பாடல் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பல்லேலக்கா அறிமுகப்பாடலில் சில காட்சிகளை பூனாவில் எடுத்திருக்கிறார்கள். :-). நயந்தாரா நல்லாவே ஆடியிருக்கிறார். தீ தீ ஜெக ஜோதி ஜோதி ஜோதி பாடல் நல்லா ஸ்பிடாக இருக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான், பஞ்சு இல்லாத காரணத்தால் சில காட்சிகளில் பாப்கார்னை எடுத்து காதில் அடைத்துக்கொண்டேன். கொடுத்த காசுக்கு மேக்கப் நன்றாக போட்டிருக்கிறார்கள். எடிட்டிங் இன்னும் வேலை இருக்கு(முதல் 30 நிமிடம், ரஜினியின் ஓப்பனிங் சீன் எல்லாம் .. என்ன ஆச்சு நாம ரஜினி படத்திற்கு ?). தோட்டா தரணி - சூப்பர் தரணி

பஞ்ச்: ஒவ்வொரு காட்சியையும் தனியாக பார்த்தால் அவுட்புட் இருக்கிறது, ஆனால் ஒன்றாக கோர்த்தால் ரஜினி பட இம்பாக்டும் இல்லை சங்கர் பட இம்பாக்டும் இல்லை. Cool!, நான் தியேட்டர் ஏசியை சொன்னேன்.

( சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல் போல ஒரு பாடல் காட்சியில் வரும் போது, தியேட்டரில் செம ரகளை )

[ இயக்கம் - 6/10
வசனம்: 7/10
திரைக்கதை: 6/10
கலை : 9/10
பாடல், இசை : 8/10
எடிட்டிங்: 6/10

மொத்தம்: 7]


Read More...

Wednesday, June 13, 2007

EXCLUSIVE: சிவாஜி படத்தின் விமர்சனம்

சில பத்திரிக்கை நண்பர்களிடம் டிக்கெட்டுக்கு சொல்லி வைத்துள்ளேன். நாளை ராத்திரி ஸ்பெஷல் ஷோ (அல்லது 15 காலை ரசிகர் ஷோ) பார்த்துவிடுவேன்.

இட்லிவடையில் உடனே சுட சுட விமர்சனம் வரவிருக்கிறது.
ஜூன் 15 காலை இந்திய நேரம் 2-3 மணிக்குள் சிவாஜி FIR வந்துவிடும் :-)

( கலைஞருடன் பார்த்தவர் படம் சூப்பரோ சூப்பர் என்கிறார். )

Read More...

ஜனாதிபதி தேர்தல் கட்சிகள் வாரியாக ஓட்டுகள் விவரம்

ஜனாதிபதி தேர்தலில் நாடு முவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க் களின் மொத்த ஒட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள ஓட்டுகள் (ஓட்டு மதிப்பு) விவரம் வருமாறு:-


ஐக்கிய முற்போக்கு கூட்டணி

காங்கிரஸ் -2,85,516
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு -94,753
பகுஜன் சமாஜ் -58,300
ராஷ்ட்ரீய லோக் தளம் -30,822
தி.மு.க. -29,898
தேசியவாத காங்கிரஸ் -24,007
பா.ம.க. -8,150
புரட்சிக்கர சோசலிஸ்ட்,பார்வர்டுபிளாக் -13,343
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி -7,428
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -6,452
லோக் ஜனசக்தி -4,594
மக்கள் ஜனநாயக கட்சி -2,584
முஸ்லீம் லீக் -716
ஏ.ஐ.எம்.ஐ.எம் -1,456
கே.இ.சி. -1,324
இந்திய குடியரசு கட்சி (ஏ) -716
ஏ.பி.எல்.டி.சி. -208

தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதீய ஜனதா- -2,46,593
எஸ்.எச்.எஸ். -21,590
பிஜ× ஜனதா தளம் -19,829
ஜனதா தளம் (எஸ்) -11,938
அகாலி தளம் -12,728
திரிணாமுல் காங்கிரஸ் -7,243
தேசிய மாநாட்டு கட்சி -4,164
எஸ்.டி.எப். -1,656
என்.பி.எப். -1,603
எம்.என்.எப். -1,600
எஸ்.ஜே.பி. -716

மூன்றாவது அணி மற்றும் இதர கட்சிகள்:

அ.தி.மு.க. -19,328
ம.தி.மு.க. -3,920
சமாஜ்வாடி -59,757
தெலுங்கு தேசம் -14,116
இந்திய தேசிய லோக் தளம் -4,944
அசாம் கணபரிசத் -4,216
தே.மு.தி.க. -176

Read More...

இதெல்லாம் இல்லாமல் ரஜினி படமா ?

சிவாஜி பட ரசிகர் காட்சிக்கு அனுமதி அளிக்க ரஜினி ரசிகர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.

* தியேட்டர்களில் சீட்டுகளில் ஏறி நின்று ஆடக்கூடாது.
* திரைக்கு சேதம் விளைவிக்கும் வகையில் திரையில் முத்தமிடக்கூடாது.
* பூக்கள், காகிதங்களை வாரி இறைக்க கூடாது.
* திரை முன்பு கற்பூரம் ஏற்றக்கூடாது.
* திரையிடப்பட்ட காட்சிகளை மீண்டும்... மீண்டும் திரையிடுமாறு (ஒன்ஸ்மோர்) கேட்ககூடாது.
* கட்- அவுட்டுகளுக்கு பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்யக்கூடாது.
* மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டால் அதற்கு ரசிகர் மன்றம் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பயப்படாதீர்கள். இவை எல்லாம் புதுவையில்.
சென்னையில் வழக்கம் போல ஜாலிதான்.

Read More...

Tuesday, June 12, 2007

தே.மு.தி.க.வுக்கு "முரசு" சின்னம்

இடைத்தேர்தல் நடைபெறும் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் களத்தில் 28 வேட்பாளர்கள் உள்ளனர். தேமுதிக வேட்பாளருக்கு கொட்டும் முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர் து.சந்திரசேகரன் தமது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். கொட்டும் முரசு சின்னம் வழங்க 10 வேட்பாளர்கள் கோரினர். தேமுதிக தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியாக இல்லாவிட்டாலும், பதிவு பெற்ற அரசியல் கட்சி என்பதால் அக்கட்சியின் வேட்பாளருக்கு முரசு சின்னம் வழங்கப்பட்டது.

இறுதி வேட்பாளர் பட்டியலையும், வேட்பாளர்களுக்கு ஒதுக்கிய சின்னங்களையும் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான அ.நாராயணமூர்த்தி நேற்று அறிவித்தார். பிரதான வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னம் விவரம்: செல்லூர் கே.ராஜு (அதிமுக) இரட்டை இலை. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்.) கை. சசிராமன் (பிஜேபி) தாமரை. து.சிவமுத்துக்குமரன் (தேமுதிக) முரசு. மகாலிங்கம் என்ற வெ.சிற்றரசு (புதிய தமிழகம்) மோதிரம்.

Read More...

சீதையாக ஷில்பா ஷெட்டி ! அனுமாராக ?



ராமாயண கதை `அனுமான்' என்ற பெயரில் ஆங்கில படமாக தயாராகிறது. ராமர் வேடத்தில் பிரபல ஆலிவுட் நடிகர் கீனு ரீவ்சும், சீதை வேடத்தில் ஷில்பா ஷெட்டியும் நடிக்கிறார்கள.

அனுமாராக யார் நடிக்கிறார் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா ? தெரியவில்லை என்றால் யார் பொருத்தமாக இருப்பார்கள் ?

( படம் : சும்மா எப்படி இருப்பார்கள் என்று நம்ம கற்பனை )

Read More...

To elect the First Servant of India ...

இந்திய ஜனாதிபதியை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். அவர்களது ஓட்டுக்கு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்பமாறுபடும். எப்போதும் இல்லாமல் இந்த முறை மீடியாவின் தயவினால் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்று பல்வேறு யூகங்கள் வர தொடங்கியது.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி, சோம்நாத் சட்டர்ஜி, அமிதாபச்சன், அன்பழகன் என்று பல பெயர்கள் அடிப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதுவரை ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்ந்து எடுப்பது தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கூட்டணி- பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் போட்டி உறுதியாகி விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் தற்போதைய துணை ஜனாதிபதி செகாவத் சுயேச்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பெயர் தற்போது முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லபடுகிறது.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை இரவு தில்லி வருகிறார். வெள்ளிக்கிழமை வரை இங்கு தங்கியிருக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவரை சமாளிப்பது, மாயாவதியை சமாளிப்பது என்று காங்கிரஸுக்கு பெரிய சவால்களாக இருக்கிறது.

பேரம் 1: திமுகவிற்கு ஒரு எஸ்டிரா மத்திய மந்திரி பதவி ( கனிமொழிக்கு ?)

பேரம் 2: உத்தரபிரதேச மாநிலத்துக்கு வளர்ச்சிப்பணிகளை மேற் கொள்ள மத்திய அரசு ரூ. 70 ஆயிரம் கோடி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. (உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாயாவதியின் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மொத்த ஓட்டு மதிப்பு 58 ஆயிரம் ஆகும்.)

பேரம் 3: முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது, குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான்

பேரம் 4: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க சோம்நாத் சட்டர்ஜியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ( உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மோஷினாகித்வாய் பெயரை துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.)

முதலில் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் பேரம் முடித்த பின் மற்ற கட்சிகளுடனும் காங்கிரஸ் பேச வேண்டும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஷெகாவத்தை சுயேச்சையாக போட்டியிட வைக்கும் முயற்சிகளில் மூன்றாவது அணியின் அதிகாரபூர்வமற்ற தலைவராக செயல்பட்டு வரும் ஜெயலலிதா முனைப்போடு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ( நல்ல தமாஷ் ). உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியுடன் ஜெயலலிதா தொலைபேசியில் பேசியதை கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அதேவேளையில் அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசினார்களா என்பதை உறுதிப்படுத்தவில்லை.

உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மோஷினாகித்வாய் பெயரை துணை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தார்.

அரசியல் கட்சி தலைவர்கள் இவ்வளவு பாடுபடுவது எதற்கு தெரியுமா ? - To Elect the first servant of India.

Read More...