பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

சன் டிவிக்கு அழகிரி வக்கீல் நோட்டீஸ்

* அழகிரி பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை சன் டிவி வெளியிட்டதால் சன் டிவி இயக்குனர் கலாநிதி மாறனுக்கு அழகிரி வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கில் பொன் முத்துராமலிங்கம் அழகிரி சார்பாக இந்த நோட்டீஸை அனுப்பினார்.அழகிரி மோல் சன் டிவி சொல்லியிருக்கும் குற்றத்தை உண்மைக்கு புறம்பானது என்று சொல்லியிருக்கிறார். ( ஜெயா டிவி பாருங்க )

* தொடர்ந்து சன் டிவி அழகிரி பற்றி (சிறப்பு பார்வை?) நியூஸ் சொல்லிக்கொண்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை என்று சொல்லியிருக்கார். ( நேற்று நடந்தது போல என்று நினைக்கிறேன் )

* சன் டிவி சொல்லுவது போல் CMP கவுன்சிலர் லீலாவது கொலை, தினமலர் அலுவலகம் சூரையாடல் போன்றவற்றுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை. சன் டிவி வேண்டும் என்றே இது போல செய்திகளை சொல்லுகிறது ( முதல் தடவை சன் டிவி உண்மை சொல்லியிருக்கிறது)

2 Comments:

Anonymous said...

இந்த விவகாரத்தில் செய்திகளை உடனுக்குடன் போஸ்ட் செய்யும் இட்லிவடைக்கு மனமார்ந்த நன்றி.

Anonymous said...

இதற்கு தானே அவர் அம்மாவிடம் கூலி வாங்குகிறார்